அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் எடுத்து, விண்ணிலிருந்து
வந்து மண்ணுக்குள் விளைந்தாலும், விண்ணின் ஆற்றலைத் தன்னுள் பருகினான். அதை
அறியும்
ஆற்றலும்,
சேர்க்கும்
ஆற்றலும்,
பிரிக்கும்
ஆற்றலும்
பெற்ற
முதல் மனிதன் அகஸ்தியன்.
“தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று சொல்லுவோம். தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் கண்டுணர்ந்தவைகளை, எந்நாட்டவரும் பெற
முடியும்.
விண்ணின்
ஆற்றலை
இந்த
மண்ணுலகில் கவரும்
சக்தி பெற்று
அது
வளரப்படும்போது,
விண்ணுக்குப் போகும் நிலை
வருகின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு ராக்கெட்டை உந்து விசை
கொண்டு, காற்றைப் பிளந்து விண்ணுக்கு வேகமாக செல்லும் தன்மையைப் பெற வைக்கின்றான் விஞ்ஞானி.
இதைப் போல, விண்ணிலிருந்து வரக்கூடிய
நட்சத்திரத்தின் உணர்வின் சத்தை, அதே நஞ்சைப் பிளக்கும் உணர்வு வந்தவுடனே, மின்னல் தாக்குகின்றது.
அதைக் கவர்ந்து
தனக்குள் எடுக்கும் போது,
தன் எண்ணத்தை விண்ணிலே பாய்ச்சும்போது,
இதே உணர்வுடன் தொடர்பு கொள்ளுகின்றது.
அகஸ்தியன் தன் 5வது வயதில், விண்ணுலகை ஆற்றலை எவ்வாறு பெற்றான்? என்று காட்டுகின்றார், குருநாதர். அவன் ஐந்து வயதில், தாய் தந்தையர் இறந்து
விடுகின்றார்கள்.
அவன் தாய் கருவிலே இருக்கும்போது எப்படி
சூரியனை வணங்கினார்களோ, அவர்கள் எந்தெந்த தாவர இனங்களை நுகர்ந்தார்களோ, இதெல்லாம் தன்னிச்சையாக எண்ணங்கள் வந்து, அந்த உணர்வு அகஸ்தியனை இயக்குகின்றது..
பரிணாம வளர்ச்சியில், மனிதனக வளர்ந்த அந்த முதல் காலத்தில், இந்த தாவர இனத்தின் உணர்வுகள், அவனுக்குள் தீமையை அகற்றும்
உணர்வின் அணுக்களாக விளைகின்றது.
அன்று அகஸ்தியனில்
விளைந்தது, இன்றும் இருக்கின்றது. அகஸ்தியரைப் பற்றி
அடிக்கடி சொல்லியிருப்பேன். அந்த அணுவின் தன்மையை, அவர்கள் பெற்ற நிலையை, உங்களுக்குப் போதிக்கும் போது, இந்த உணர்வுகள், உங்கள் அனைவருக்குள்ளும் பதிவாகின்றது.
பதிவாகும் அந்த உணர்வுகளை
நீங்கள் எண்ணினால், அதை எளிதில் பெறலாம். அவ்வாறு,
அகஸ்தியன் பெற்ற விண்ணின் ஆற்றல்களை நீங்கள் பெற்று,
அவன் சென்ற எல்லையை அடைய, எமது அருளாசிகள்.