ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2012

மகரிஷிகளின் அருள் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

1. மகரிஷிகளின் அருள் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்
குரு காட்டிய வழிகள்” எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். நான் எண்ணுகின்றபடி எண்ணினால் போதும்.

சக்தி எங்கிருக்கிறது என்றால், இதை நாம் பெற்றோம். இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

நாம் யார் யாரையெல்லாம் பார்க்கின்றோமோ, அவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும். இருள்  நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை, எந்த நிமிடமும் எடுக்கக் கூடிய சக்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. நாம் அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

எந்த நிமிடம் ஆனாலும், எந்தக் குறையைப் பார்த்தாலும், ஈஸ்வரா என்று, அவனிடம் வேண்ட வேண்டும். ஈஸ்வரா என்ற சொல்லை, எப்பொழுதும் மறக்கக் கூடாது.

ஈஸ்வரா என்பது, நம்மை உருவாக்கிய உயிர். ஆகையினால், எத்தகைய நிலை வந்தாலும், அவர்களின் குறையை நீக்கிவிட்டு, “ஈஸ்வரா”, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று, கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக்குக் கொண்டுவர வேண்டும்.

நம் உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவஅணுக்கள் பெற வேண்டுமென்று, இந்த உணர்வைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இது வளர்ந்தவுடன், நம் குறைகளை நீக்கும்.

நம் நினைவு, எப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும், மலரைப் போன்ற மணமும், அனைவரும் பெற வேண்டும். அவர்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். எங்கள் பார்வை, அவர்களை நல்லவராக்க வேண்டும் என்று, இதை வளர்த்துப் பழக வேண்டும்.

இல்லையென்றால், நாம் நியாயத்தை நினைப்போம்.
ஒருவர் குறை சொன்னால்,
அந்தக் குறையை வளர்த்துவிடுவோம்.
இரண்டு முறை சொல்லிவிட்டால்,
அந்த வித்து வளர்ந்துவிடும். அந்தக் குறைதான் வளரும். அப்பொழுது நமக்குள் போராட்டம் வரும். நமக்குள், மனப் போராட்டமே அதிகம் இருக்கும். பின், நாம் போகும் பாதைக்கே இது இருள் சூழும்.
2. நமது எல்லை எது? - மகரிஷிகளின் அருள் வட்டம்தான்
அதனால், நமது எல்லை எது? அந்த மகரிஷிகளின் அருள் வட்டம்தான். அந்த எல்லையை அடைய வேண்டும். அந்த எல்லையை அடைய வேண்டுமென்றால், அவர்கள் உணர்வை, நமக்குள் பெருக்க வேண்டும்.

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். இதை சிறிது நாள்களுக்குச் சொல்லிப் பாருங்கள். நம் பார்வை, அவர்களைத் தப்பிலிருந்து மாற்றும்.

அப்படி அவனே தப்பு செய்கிறான் என்றால்,
அவனிடம் இருள் இருக்கும்.
அதனை விலக்கித் தள்ளிவிட வேண்டும்.
அவன் நம்மிடம் இருந்தாலும், அவன் இருள் நம்மைச் சாராது.

நஞ்சில்லாமல் உலகம் இல்லை. சூரியன் சுழற்சியாகும் பொழுது, எந்த நஞ்சால் அது தாக்கப்பட்டு அது வெப்பமானதோ, அதிலே ஈர்க்கும் காந்தம் உருவாகின்றது. அதிலே வெப்ப காந்தமாக உருவாகும் பொழுது, எதை இந்த காந்தம் இழுக்கின்றதோ, அதிலே கலந்த விஷம் மீண்டும் வெப்பத்தை உருவாக்குகின்றது.

அணுக்களின் தன்மை வெப்பம் அதிகமாகும் பொழுது, விஷத்தைப் பிரிக்கும். இதைப் போலத்தான், மனிதனின் உணர்வின் தன்மை அங்கே வெப்பம். இங்கே, எண்ணத்தின் தன்மை மோதலாகும் பொழுது, தீமைகளைப் பிளக்கும்.

நாம் ஒருவனைக் கடுமையாகச் சொல்லப்படும் பொழுது, விஷம். அது தாக்கப்படும் பொழுது, அவருடைய உணர்வுகள் இருள் சூழும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று, எண்ணத்தைப் பாய்ச்சி, அவன் இருள் நீங்க வேண்டுமென்று, தாக்கப்படும் பொழுது, இருள் விலகுகின்றது. இந்தக் கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டால், அவர்கள் சென்ற பாதையில், நாம் நிச்சயம் போக முடியும்.


துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று, நீங்கள் எப்பொழுதெல்லாம் உயிருடன் ஒன்றுகின்றீர்களோ, அப்பொழுது, நீங்கள் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை, ஏற்படுத்துகின்றோம். அதை விரையமில்லாது, எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.

அதற்குத்தான், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஆழப்பதிவு செய்வது. நீங்கள் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம்,ந்த சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும்,

உங்கள் சொல், பேச்சு, பார்வை, உங்கள் மூச்சலைகள் இந்தக் காற்றிலே பரவினாலும், நீங்கள் யாருக்குப் பார்த்து, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சினாலும், அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது,
தன் இனத்தின் செடி பெருகிவிட்டால்,
குவிந்த சக்தி கொண்டு,
அந்தத் தாவர இனங்கள் செழிப்பாக வளரும்.
களைகள் முளைத்துவிட்டால், அந்த நிலையில் வளர்வதில்லை.

அதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டுமென்றால், நாம் யாரைப் பார்த்தாலும், அவர்கள் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும், அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும், அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும், அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும், அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும் என்று, எண்ண வேண்டும்.

இதைத்தான், கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய். அந்த உணர்வின் சக்தி நமக்குள் வருகின்றது. நாம் எல்லாம் சொல்வோம். நான் எல்லாம் நினைக்கின்றேன், ஆனால், ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றான்”, அந்தப் பழைய பழக்கம் நம்மிடம் வந்துவிடும். ஆனால், அதற்கு நாம் முக்கியத்துவம் இல்லாதபடி செய்வோம்.

நம் உணர்வுகள் அனைத்தையும் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைக்கச் செய்து, நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், உங்கள் சக்தியை அவர்களுக்குப் பரப்பி, அவர்களைச் சந்திப்போர் எல்லாம் அதைப் பெறச் செய்ய வேண்டும். நாம் அதைப் பற்றுடன் பற்றி, எல்லோரையும் பற்ற வைக்க வேண்டும்.

சூரியன் எத்தனையோ விஷத்தன்மையுடைய நிலைகளை எடுத்தாலும், விஷத்தைப் பிரிக்கின்றது. ஒளியின் சுடராக மாற்றுகின்றது. அதில் விளைந்த மகாஞானி, உலகில் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவானாலும், அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டு, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

இந்த மனித உடலில், அவர்கள் பின்பற்றிய அந்த உணர்வைச் சேர்த்தால்தான், என்றும் ஒளியின் சுடராக நிலைக்க முடியும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த நிலையே.
3. பொதுநலத்தில் சுயநலம்
எனக்குச் சுயநலம் அதிகம். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அது எனக்குள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
நீங்கள் எல்லாம், மகிழ்ச்சியாகச் சொல்லும் பொழுது,
மகிழ்ச்சி எனக்குள் விளைகின்றது.
இந்த சுயநலத்தைக் கருதித்தான்,
உங்களுக்குள் இந்தப் பொது நலத்தின் சக்தியைப் பரப்புகின்றது.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, சுயநலமாக எண்ணும் பொழுது, அதுபோல் நீங்களும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்த சுயநலம் - பொது நலமானாலும், சுயநலம்தான். ஆயிரம் பேர் சேர்ந்து, ஒன்றாக இருக்கும் பொழுதுதான் மகிழ்ச்சி.

பல இலட்சக்கணக்கான உணர்வை, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்கள்தான் மகரிஷிகள். பல கோள்களுடைய உணர்வுகளை மாற்றும் பொழுதுதான், சூரியனுடைய ஒளி.

ஆகவே, நமக்குள் இந்த உணர்வின் இயக்கத்தில் வந்தால், உயிரின் ஒளி இதைப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையில்,
நமது ஆறாவது அறிவு கொண்டு,
எப்பொருளையும் அறிந்து,
எப்பொருளையும் கண்டுணர்ந்து,
படைத்திடும் உணர்வு கொண்டு செயல்படுவோம்.

இந்த ஆறாவது அறிவுதான் சரவணபவா, குகா, தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய உடலான குகைக்குள் நின்று, கந்தா வருவதை அறிந்து, கடம்பா உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா. எதனையும் அறிந்து உருவாக்கத் தெரிந்து கொண்டவன். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

இவ்வளவு எளிதில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கியபின், நாம் ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்? முன்னோக்கியே போவோம். அருள் ஞானிகளின் உணர்வோடு செல்வோம். எமது அருளாசிகள்.