ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2012

பொட்டில் தொட்டுக் காட்டுவது என்றால் என்ன?

படித்தவர்கள் இன்னென்ன கோடிட்டு, இன்னென்ன, என்ற வழிகளில் கொண்டு போகிறார்கள். அதிலே சில குறை வந்துவிட்டதென்றால், அந்தக் குறையாக வளர்ந்துவிடும்.
அந்தக் குறைகள் எதுவாக இருப்பினும்,
குருநாதர் காட்டிய அருள் வழியில்,
அந்தக் குறைகளை மாற்றும் உணர்விக்குத் தக்கவாறு,
எது எது மாற்றமானதோ,
அதே உணர்வை விளையச் செய்துதான், உபதேசமே. கொடுக்கின்றது.

இதற்குமுன் உபதேசித்த நிலைகள் வேறு. அதே கருத்துக்களின் மூலக்கூறுகளைப் பிரித்துத்தான், இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

இதைப் பதிவுச் செய்து விட்டால், “கண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்” என்று சொல்வார்கள். நமக்குள் ஏங்கிப் பெறும் அந்தக் கருவிலே, மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை உங்களுக்குள் எண்ணக் கருவிலே உருவாக்கப்படும்போது அந்த உணர்வின் நினைவலைகள் உங்கள் கண்ணுக்கு வரும்.

இப்பொழுது யாம் சொல்லும்போது, கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
இதே உணர்வுகளை, கருவிழி உங்களுக்குள் பதிவு செய்கின்றது.
யாம் சொல்லக்கூடிய காந்தப்புலன் அறிவுகள்
உள்ளுக்குள் இழுக்கின்றது.

அன்று குருநாதர் சொன்ன உணர்வுகளை, யாம் சொல்லும்போது, அது கண் வழியாகவும், சொல் வழியாகவும் வெளிப்படுகின்றது.

அப்படி வெளிப்படும் இந்த உணர்வுகளைத்தான், அந்த மூலக்கூறுகளை, குருநாதர் எமக்கு எப்படிக் கொடுத்தாரோ, அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றது.

இதைப் படித்துணர்ந்தவர்கள், பல பாகங்களுக்குச் செல்லும்போது, சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம், எங்கே எந்த குறைகளைக் கண்டாலும்,  
அந்த குரு அருளின் தன்மை,
அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் தன்மையாகப் பாயும்.

குறையை அணுக விடாது.
இதை அங்கே பெறச் செய்யும்.
இந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான், இதை பெறச் செய்வது.

ஏனென்றால் ஒருவர் கேவலமாகப் பேசுகின்றார். அப்படிக் கேவலமாகப் பேசும் உணர்வுகள், நமக்குள் பதிவாகிவிட்டால், மீண்டும் அவர்கள் உணர்வுகளை, நமக்குள் கவரத் தொடங்குகின்றது.

அப்படிக் கவரத் தொடங்கும்போது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான்,
அந்தத் தடைகளை விதிப்பதற்கு,
அந்த உணர்வுகள் எழும்போது,
நம்முடைய எண்ணம் கொண்டு,
அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது,
இதைத் தணிக்க வேண்டும்.

அதற்குத்தான், இந்த உணர்வுகளை ஒவ்வொன்றும் விரிவாக்கப்பட்டு, அந்தத் துருவ மகரிஷிகளின் நினைவாற்றலுடன், இணையச் செய்வது. இதுதான், தொட்டுக் காட்டுவது என்பது.

ஒரு மனிதனின் பொட்டில் தொட்டுக் காட்டுவது என்றால், ஒரு உணர்வைத் தொட்டுக் காட்டுபொழுது, அந்த உணர்வு உடலாகின்றது. தொட்டுக் காட்டிய மனிதனுடைய நிலைதான் வரும்.

மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ, இந்த உணர்வின் சக்தியை, அதைத்தான், யாம் உங்கள் ஒவ்வொரு உணர்வோடும், பதிவு செய்கின்றோம்.

நமக்குள், எத்தனையோ கோடி உணர்வுகள்,
எத்தனையோ கோடி குணங்கள் உண்டு.
அவைகளுடன், துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

அப்படி இணைத்தால்தான், உங்களுக்குள் கருவுற்று அந்த உணர்வின் தன்மை, அருள் ஞானிகளின் உணர்வோடு, நீங்கள் வளர்வதற்கு உதவும். எமது அருளாசிகள்.