அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை, தன் தாய் கருவிலேயே
பெற்றதால், அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக்கி, உயிருடன் ஒன்றச் செய்த
அலைகள் இன்றும் உண்டு.
அவைகளை நாம் நுகர்ந்தால்,
அந்த எண்ணம் வரப்படும்போது, நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு, எமனாக ஆகின்றது. தீயவைகளைக்
கொல்லக்கூடிய, நரசிம்ம அவதாரம் ஆகின்றது.
நாராயணன் ஒளியின் சுடராக,
இருளைப் பிளக்கின்றான். அந்த அருள்ஞானியின் உணர்வின் தன்மை வரும் பொழுது, மகரிஷிகளின்
உணர்வை நமக்குள் சேர்த்தபின், நம் சிந்தனையை இருள் சூழச் செய்யும் நிலையை இது பிளக்கின்றது.
இதுதான் நரசிம்ம அவதாரம்.
இரண்யன் என்பது, இருள் சூழச்
செய்யும் உணர்வு. மடிமீது வைத்து, வாசல்படி மேல் அமர்ந்து, இரண்யனைப் பிளந்தான் நர
நாராயணன். நர நாராயணன் என்றால், நம் உயிர்.
அந்த ஒளியின் சுடராக, நம்
எண்ணத்தை வளர்க்கப்படும்போது, ஒவ்வொரு நொடியிலும் இதை வளர்க்கப்படும்பொழுது, நம்மை
இருளச் செய்யும் ஆன்மாவைப் பிளக்கும்.
ஆறாவது அறிவு கார்த்திகேயா
என்பது, வெளிச்சம். மனிதனான பின், தெளிந்திடும் உணர்வு பெற்றவன். முருகு - தீமையின்
நிலைகளை மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவன்.
நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள்
நமக்குள் வந்து, அதை நாம் அறிந்து கொண்டாலும், தீமை என்று அறிந்தபின், மகரிஷிகளின்
அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து, அதைப் பிளத்தல் வேண்டும்.
ஆனால், இதைப் பிளப்பதற்கு, “நுகரும் ஆற்றல்” அந்த சக்தி வேண்டும். அந்த சக்தி இல்லையென்றால்,
நாம் நுகர முடியாது.
ஒருவர் மிகவும் மோசமானவர்.
வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக, மகிழ்ச்சியான நிலைகளில் அவர் பேசுவதை நாம்
பதிவு செய்து கொள்கின்றோம்.
அவர் ஏமாற்றுவதை, இன்னொருவர்
தெரிந்து வைத்திருக்கிறார்.
“ஏன் அவர் வலையில் போய் சிக்குகின்றீர்கள்.
உங்களை அவர் ஏமாற்றிவிடுவார்”
என்று நம்மிடம் சொல்கின்றார்.
முதலில் சொன்னவர் உணர்வு
வந்தபின், இவர் என்ன சொன்னாலும், “ஏமாற்றுவதற்குத்தான் சொல்கின்றார்” என்று எண்ணுகின்றோம்.
இரண்டாவது சொல்பவர் அனுபவப்பட்டவர்,
நம்மிடம் வந்து, சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை. அதற்குப் பதில், அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.
“பார், அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால், பிடிக்காத
நிலைகளில் இப்படிச் சொல்கிறார்” என்று எண்ணுகின்றோம்.
நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும்,
அவரிடம், உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்? என்று சொல்லி விடுகின்றோம்.
ஆனால், சொல்லி ஏற்றுக் கொண்டு,
சிந்தித்துப் பார்க்கின்றோமா? என்றால் இல்லை.
அந்த உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.
அவர்களுக்குள், தீமை செய்யும்
உணர்வுகளே விளைந்து இருக்கின்றது. ஆக, இப்படி நாம் தவறே செய்வதில்லை.
ஆனால், அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், “பின்னாடிதான்”,
அதிலே சிக்கிவிட்டோம் போல் இருக்கிறது என்று தெரிகின்றது.
ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது
என்று, வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன், அமைதி கொண்டதாகவே இருக்கின்றது.
தன்னருகிலே இருப்பதை, உற்றுப் பார்ப்பதில்லை.
வெகுதூரத்தில் இருப்பதை, புலி குறி வைக்கிறது. அதைப் பதிவு செய்துவிட்டதென்றால்,
அதன் மேல் எண்ணம் வருகின்றது.
ஆனால், பக்கத்திலிருப்பதை
நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது,
அது ஓட ஆரம்பிக்கின்றது.
மானிற்கு இந்த உணர்வின் ஒலி
பட்டபின்,
உணர்வின் அறிவு உன்னைக் குறி
வைக்கின்றது
என்று உணர்த்துகின்றது. உடனே
அது ஓட ஆரம்பிக்கின்றது.
புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி, தூரத்தில் இருப்பதைத்
துரத்திச் செல்கின்றது. அந்த உணர்வின் வலு எதுவோ, அதனைத்தான் துரத்துகின்றது.
இதைப் போலத்தான், நாம் எதனைப்
பதிவு செய்கின்றோமோ, அந்த உணர்வின் நினைவாற்றல்தான், நம்மை இயக்குகின்றது.
ஆகையினால், நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, அந்த மகரிஷிகளின் உணர்வை
நமக்குள் எடுத்துக் கொண்டால், இது நம்மை ஒன்றும் பாதிக்காது.
அந்த உணர்வின் சத்தை நுகர்வதற்கு
என்ன வழியோ,
அதைத்தான் உங்களிடம் யாம்
பதிவு செய்வது.
குருநாதர் எமக்கு அப்படித்தான் சொன்னார். சொல்லி அதைப் பதிவு
செய்தார். அது மாதிரிதான் உங்களிடம் பதிவு செய்கின்றேன். யாம் பதிவு
செய்வதை, நீங்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.