ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2014

அமாவாசை அன்று நம் முன்னோர்களை சாப்பாடு வைத்துக் கூப்பிட்டால் என்ன ஆகும்...?

1. முன்னோரின் ஆன்மாக்களைக் குட்டிச்சாத்தானாக மாற்றி விடுவார்கள்
பொதுவாக இங்கே என்ன செய்வார்கள்? அமாவாசை என்றால் வீட்டில் நினைவு நாளாக வருடத்திற்கு ஒரு நாள் சாப்பாட்டை வைத்துக் கூப்பிடுவார்கள்.

ஆக, மகாளய அமாவாசை அன்று மந்திரவாதிகள் எல்லாம் அங்கங்கே படையெடுத்துவிடுவார்கள். எந்தெந்த வீட்டில் ஆகவில்லையோ, அந்த வீட்டிலிருந்து மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மந்திரங்கள் செய்யக்கூடிய ஜோதிடம், நட்சத்திரம், அவர்கள் எந்தப் பக்கத்திலே இருக்கின்றார்களோ அதையெல்லாம் எடுத்து குறித்து வைத்துக் கொள்வார்கள்.

பின், அவர்கள் வீட்டில் தலை முடி ஒன்றையும், கிழிந்த துணி ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை வைத்து மந்திரங்களை ஓதுவார்கள்.

அப்பொழுது, இவர்கள் இங்கே வீட்டில் சாப்பாடை வைத்து தாத்தா, பாட்டி, அம்மா அப்பாவைக் கூப்பிடுவார்கள். செத்தவர்களை என்ன செய்யும்?

இந்த நேரத்தில் ஜெபித்தவுடன், ஏனென்றால், இவர்கள் உடலிலிருந்து வலிமை பெற்றது, அதை இழுத்துக் கொள்கிறார்கள் மந்திரவாதிகள்.

இழுத்து என்ன செய்வார்கள் அதைக் குட்டிச்சாத்தானாக மாற்றுவார்கள். மாற்றியபின் என்ன செய்வான்? ஒரு வீட்டில் ஏவல் பண்ணுவார்கள்
2. செய்வினையைப் பற்றிய உண்மை
எப்படி ஏவல் பண்ணுகிறான்?

இந்த உணர்வை எடுத்து மண்ணில் அதை திரும்பவும் ஏற்றி, சில கரு மைகளைத் தடவித் தடவி ஆகாத வீட்டில் விடுகின்றான்.

அங்கே என்ன ஆகின்றது?

இப்படிச் செய்தவுடன், அந்த வீட்டில் ஒரு விதமான கலக்கங்கள் வரும். இந்தக் கலக்கங்கள் வந்தவுடனே ஒருவருக்கொருவர் சண்டை போடுவார்கள்,

சண்டை போடும் பொழுது தன்னையறியாமலே அந்தக் குடும்பத்தை நாஸ்தி பண்ணும். இந்த மண் அந்த வேலையைச் செய்யும். வீட்டில் செய்வினை என்பது இந்த வழியில்தான்.

குடும்பத்தில் சில தோஷங்கள் இருக்கும். சில மந்திரவாதிகள் வந்தவுடனே வீட்டில் இருப்பது எல்லாவற்றையும் சொல்வார்கள். உங்கள் வீட்டில் இந்த இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் அதற்குள் வைத்திருக்கிறார்கள், நீங்கள் தோண்டிப் பாருங்கள் என்பார்கள்.

இப்படிச் சொன்னவுடன் வீட்டில் தோண்டுவார்கள். தோண்டும் பொழுது, நீங்கள் ஒரு ஆட்டையோ, கோழியையோ அறுத்து ரத்தத்தை விட்டு தண்ணீரைப் பிடியுங்கள் என்று மந்திரவாதி சொல்வான்.

இங்கே கிடு கிடு என்று நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். மந்திரவாதியிடம் நீயே வந்து எடுப்பா என்பார்கள்.

இல்லை, நீங்களே தோண்டுங்கள் உங்களுக்கு சக்தி கொடுக்கிறேன் என்பான் மந்திரவாதி. தோண்டிப் பார்த்தால்,
அதற்குள் ஒரு “யந்திரம்” இருக்கும்.
அதை எடுத்துப் பார்க்கும் பொழுது,
அதில் உங்கள் பெயர் எழுதியிருக்கின்றது என்பான்.

ஆக, இவன் எண்ணிய இந்த உணர்வின் தன்மை கொண்டு ஏவியவுடனே, அதைச் சொன்னவுடனே இந்த மண்ணில் இந்த மந்திரவாதி ஏவல் பண்ணியது வரும்.

அப்புறம், “காசு” அதற்கு அடியில் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள் என்பான்.

வீட்டில் இருப்பவர்கள் பணமெல்லாம் போய்விட்டதே, நஷ்டமாகிவிட்டதே என்பார்கள்.

மறுபடியும் அதைச் சொல்லி, ஏமாற்றி தோஷத்தை நீக்குகின்றேன் என்று பணத்தை வாங்கிக் கொள்வான் மந்திரவாதி.

May 20, 2014

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

“நல்ல காலம் வருகின்றது,
நல்ல காலம் வருகின்றது” என்று சொல்லி
குடுகுடுப்பையை அடித்துக் கொண்டு நடு இரவு வருவார்கள்

அப்படி வரும் பொழுது, உங்களுக்குச் செய்வினை செய்திருக்கிறார்கள், தோஷம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருவான்.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார்? ஒரு கம்பளித் துணியை என் உடலில் சுற்றிக் கொள்ளச் செய்தார். மரத்தின் மேல் ஏறி நின்று கொள் என்றார்.

“குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது, அப்படியே மரத்திலிருந்து குதிடா” என்றார்.

குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது அதே மாதிரி சொல்லிக் கொண்டு நான் குதித்தேன்.

அவன் என்ன செய்தான்?

“கத்துகின்றான்.., சீ பிசாசு, சீ பிசாசு போ.., போ..,” என்று ஓடுகின்றான். கையிலிருந்த பொருளை எல்லாம் போட்டுவிட்டு
அப்படியே கிடு கிடு என்று நடுக்கமாகி,
கீழே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

அப்புறம் மறுநாள் அதே இடத்திற்குச் செல்லச் சொன்னார் குருநாதர். ஒன்றும் தெரியாத மாதிரி குடுகுடுப்பைக்காரனிடம் “என்னப்பா..,” என்று கேட்டேன்.

“இந்த ஊரில் பெரிய பிசாசு இருக்கின்றது” என்று பிசாசு ஓட்டுபவன் சொல்கின்றான். அதனால், இந்த ஊருக்குள் வருவது மிகவும் ஆபத்தானது. இந்த ஊருக்குள் நான் இனிமேல் வரவே மாட்டேன் என்றான்.

ஆக, குடுகுடுப்பைக்காரனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கு முன்னால் குதிக்கும் பொழுது எதெல்லாம் அவனுக்குள் இயக்குகின்றது? என்ற இந்த உண்மைகளை அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை இந்த வேஷம் போடச் சொன்னார்.

குருநாதர் பிறகு என்ன செய்தார்? இந்த விபூதியைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்து குடுகுடுப்பைக்காரனைக் காப்பாற்றிவிடு, இதே பயம் வந்தது என்றால் செத்துப் போவான், இந்தப் பாவத்தை நீ ஏற்றுக் கொள்ளாதே, கொண்டு போய் கொடுத்து வா என்று எம்மிடம் சொன்னார்.

அதே மாதிரி அவனிடம் சொன்னவுடன், சாமி என்னைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகின்றது என்றான்.

இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் எப்படியெல்லாம் செய்கின்றார்கள்? மனித உடலிலிருந்து மந்திரத்தால் கவர்ந்து என்னென்ன வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.

May 19, 2014

கொலை செய்யப்பட்ட ஆன்மா சாட்சி சொல்கின்றது

ஒரு சமயம், ஒரு கசாப்புக் கடைக்காரர் தன் பெண்ணை ஒருவன் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான் என்று சொல்லிவிட்டு என்ன செய்தார்?

தெரியாமல் இரண்டு பேரையும் வரச் சொல்லி, வெட்டிக் கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டார். அதை மறைப்பதற்கு ஒரு M L A வைத்து நிவர்த்தி செய்து அந்தப் பிரச்னையைச் சரிக்கட்டினார்கள்.

ஆனாலும், இறந்த அந்த ஆன்மா இன்னொரு உடலில் புகுந்து, இந்த மாதிரி என் அப்பா துண்டு துண்டாக எங்களை வெட்டி ஆற்றிலே போட்டார் என்று வந்து சாட்சி சொல்கிறது. இது நடந்த நிகழ்ச்சி. இதை அனுபவபூர்வமாக குருநாதர் எமக்குக் காட்டுகின்றார்.

அப்புறம் எப்படியோ அந்த விஷயத்தை பல நிலைகள் செய்து போலீசுக்கெல்லாம் போய் மடக்கிவிட்டார்கள்.

May 18, 2014

இறந்தவர்களின் மரபணுக்கள் உடலுக்குள் வந்து இயங்கும் நிலைகள்

ஒரு ஆவியின் தன்மை வெறுப்பின் தன்மை கொண்டு வரும் பொழுது, பழி தீர்க்கும் உணர்வாக “பார்., செத்தாலும் உன்னை நான் விட மாட்டேன்” என்ற எண்ணத்தில் ஒரு உடலுக்குள் வருகின்றது.

ஆனால், பழி தீர்த்தாலும்
அந்தக் கஷ்டத்தைத்தான் அதுவும் படுகின்றது.

இதைப் போன்றுதான் ஒரு சாப அலையின் உணர்வு அங்கே தொடர்ந்தால், அந்தக் குடும்பத்தில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைக்குக்கூட இந்த மரபணுக்கள் வந்து வேலை செய்கின்றது.

ஆனால், இவர்கள் தவறு செய்யவில்லை. அந்த மரபணுக்களை மாற்றவேண்டும் என்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து, என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று செய்தால்தான் இந்த சாப அலைகளைத் தடுக்க முடியும்.

ஏனென்றால், மந்திரம் சொல்லியோ,
தந்திரம் செய்தோ யாகத்தைச் செய்தோ
பாவத்தைப் போக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத்தான் அதை மாற்றமுடியும்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஒருவர் இரத்தக் கொதிப்பால் இறந்து போயிருப்பார். அந்த மரபணுக்கள் அடுத்து அவர் வீட்டில் உள்ள வாரிசுகளுக்கும் இரத்தக் கொதிப்பு வருவதைப் பார்க்கலாம்.

இதே மாதிரி சில குழந்தைகளுக்குச் சர்க்கரைச் சத்து வருகின்றது. குழந்தை தவறு செய்யவில்லை. பிறப்பிலிருந்தே இப்படி வருகின்றது. இதே மாதிரி காக்காய் வலிப்பு நோயும் வருகின்றது. இதெல்லாம் அந்த மரபணுக்களின் தொடர் வரிசை தான்.

ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தை ஊமையாகிவிடுகின்றது. அந்த மரபணுக்கள் எந்தக் குடும்பத்திலிருந்து சேர்கின்றதோ, அதே மாதிரி ஊமையான குழந்தைகளே பிறக்கின்றன.

சில சாப அலைகள் அதாவது, உன் குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்று விட்டிருந்தால், பிறக்கும் குழந்தை பேச முடியாது. ஆனால், எச்சில் ஒழுகிக் கொண்டேயிருக்கும். கை கால் வராது. சிந்தனை இருக்காது.

இதன் உணர்வுகள் அங்கே எடுத்துக் கொண்டால், அந்த மரபணுக்கள் அந்தக் குடும்பத்தில் யாராவது ஒருவர் வீட்டில் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு சில குடும்பத்தில் இந்த சாப அலைகளால் இனம் புரியாதபடி வீட்டில் தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும்.
செல்வம் இருக்கும்
ஆனால், நிம்மதி என்பது இருக்காது.

ஆகவே, இதைப் போன்ற மரபணுக்களின் இயக்கங்களிலிருந்து நாம் மீளவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

இதையெல்லாம் வென்றவன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, ஒளி சரீரமாக துருவ நட்சத்திரமாக உள்ளான்.  

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வை நாம் நுகர்ந்து, நம் உடல் முழுவதும் படரச் செய்து, நம் உடலுக்குள் அதை விளையச் செய்ய வேண்டும்

இப்படிச் செய்து பழகிக்கொண்டால்,
வாழ்க்கையில் வரும் தீமைகளை
உடனே அகற்ற இது பயன்படும்.
அந்த நிலையை நீங்கள் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

May 17, 2014

பத்து வயதுப் பையனுக்குள் புகுந்து இயங்கிய ஆன்மாவின் நிலை - ஞானகுரு

ஒரு பையன், அவனுக்கு பத்து வயது இருக்கும். ஒரு நால் இவன் பண்ணாரி மாரியம்மனுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான். அப்பொழுது என்ன நடக்கின்றது?

இவன் போன அதே நேரத்தில், ஒரு பெண் தனக்குக் குழந்தை இல்லாத நிலையில் ஏக்கத்தில் அது ஏங்கிப் போகின்றது. எனக்குக் “குழந்தை இல்லை” என்று எல்லோரும் என்னை எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட்டு அந்த எண்ணத்திலேயே கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றது.

இந்தப் பையனைப் பார்த்தவுடனே, இவன் நன்றாக அழகாக இருந்திருக்கின்றான்.

இவனைப் பார்த்துவிட்டுப் போனவுடனே, இந்த மாதிரி தனக்குக் குழந்தை கிடைத்தது என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்து விட்டுப்போய் அது என்ன செய்கின்றது?

அந்த பண்ணாரி அம்மன் இதில் வந்து அந்த அருளாடுகின்றது. இந்த காவியங்கள் படிக்கின்றது. இந்த பாட்டுகளெல்லாம் படிக்கின்றது. ரொம்ப அழகாகப் படிக்கின்றது.

இத்தனையும் பாடி அந்த பண்ணாரி அம்மன் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே. அப்படி என்று கோபித்துக் கொண்டு அந்த சாமி பெயரைச் சொல்லிக்கொண்டே இறந்துவிட்டது. அதாவது, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது.

அந்த ஆவி இந்த பத்து வயதுப் பையன் உடலில் வந்துவிட்டது. கோவிலுக்குப் போகும் பொழுது பார்த்த இவன் உடலில் புகுந்து விட்டது. ஆனால், இவன் மேல எண்ணம் வந்ததும் இவன் உடலில் வந்துவிட்டது.

அவன் என்ன செய்தான் தெரியுமா? இதே மாதிரி (அந்த ஆன்மா இவன் உடலுக்குள் புகுந்ததால்)
அருள்வாக்கு சொல்லுகின்றான்.
மற்ற நிலைகளையெல்லாம் சொல்லுகின்றான்.

அவர்கள் அப்பாவோ, திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர். சாமியாவது? பூதமாவது? என்று சொல்லக் கூடியவர், அவன் அருளாடிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே நிறையக் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது.

கூட்டம் அதிகமாக வந்ததும், “எங்கடா சாமி வந்திருக்கின்றது?” என்று செருப்பாலே போட்டு தன் பையனை அடித்தார். செருப்பாலே அடித்தவுடனே, அவன் கண்கள் எல்லாம் உள்ளுக்குள் போய்விட்டது. அப்படியே நாக்கு வெளியில் தள்ளி விட்டது.

ஐயோ, நாக்குத் தள்ளிவிட்டதே என்று அவர் அலறுகின்றார். அய்யோ சாமி! இந்த மாதிரி ஆகிவிட்டதே., நான் என்ன செய்வேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார். தன் பையனைக் குணப்படுத்த மந்திரவாதியைத் தேடிக் கொண்டு போகின்றார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நான், “ஒன்றும் இல்லை பேசாமல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு யாரையும் அச்சுறுத்தாதபடி சமநிலைபடுத்தும் போது நாக்கு பழையபடி உள்ளே இழுத்துக்கொண்டது.

அங்கேயிருந்து வீட்டிலே போய் உட்கார்ந்துவிட்டது. உட்கார்ந்தவுடன் என்ன ஆகியது? அவர் அப்பா எங்கெங்கயோ தேடி மந்திரவாதியை கூட்டிக்கொண்டு வருகின்றார்,

வந்தவுடன், ஒரு சாமி வந்தார். உங்கள் பையனுக்கு இந்த மாதிரி நன்றாகிவிட்டது என்றவுடன், மந்திரவாதியைப் பார்த்து, நீ போ என்று சொல்லிவிட்டு, சாமி எங்கு இருக்கின்றார்? என்று என்னைப் பற்றி விசாரிக்கின்றார்.

அந்தக் குழந்தையைச் சொல்லி, என்னுடைய பழனி விலாசத்தை வாங்கிக் கொண்டு எனக்குக் கடிதம் போடுகின்றார். இந்த மாதிரி நான் கேள்விப்பட்டேன், ’’நீ நல்லவரென்று’’.

என் பையனை ஆபத்தான நேரத்தில் காப்பாற்றினீர்கள். என்கிற வகையில் கேள்விப்பட்டேன். நீங்கள் உடனடியாக வந்து அந்தக் குழந்தையை வந்து நீங்கள் முழுவதும் குணப்படுத்த வேண்டும் அவனை எழுப்ப வேண்டும்.

இந்த கடிதத்தை மதிப்பு வைத்து, நீங்கள் வர வேண்டும் என்று அதிகாரத் தோரணையில் எழுதுகின்றார். எனக்கு எல்லா வகையிலும் தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள். உங்களைப்பற்றிய பெருமையை நான் உலகுக்கு எடுத்துச் சொல்வேன். ஆகவே, உடனே புறப்பட்டு வாருங்கள் என்று எனக்குக் கடிதம் எழுதுகின்றார்

அந்த அதிகாரத் தோரணையிலே எழுதியிருந்ததால், நான் என்ன செய்துவிட்டேன். ஒன்றும் சட்டை செய்யவில்லை பேசாமல் விட்டுவிட்டேன்.

விட்டவுடனே இரண்டாவது கடிதம் வருகின்றது. நான் எழுதிய கடிதத்துக்கு ‘’நீ மதிப்பு கொடுப்பாய்’’ என்று சொல்லி எழுதினேன். ஆனால், நீ. இன்னும் இங்கே வரவில்லையே என்று அடுத்த கடிதத்தையும் எழுதுகின்றார்.

அதற்குள் அவருடைய பையன் என்ன செய்துவிட்டான்? இந்தப் பையன் எழுந்து பழனிக்கே, வந்து விட்டான்  அவனுக்கு விலாசம் தெரியாது. ஆனால், எப்படியோ கேட்டு ADDRESS வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். அங்கு வந்து பழனியில் இருந்தான்.

அங்கிருந்த பையன் திடீரென்று இங்கே பழனிக்கு வந்தான் என்றால் உடனே எனக்கு செய்தி கொடுக்க வேண்டும் என்று அந்தப் பையனின் அப்பா சொன்னார்.

அதற்கும் நான் ஒன்றும் பதில் எழுதவில்லை.

உடனே அவர் என்ன செய்தார்? அவருக்குத் தெரிந்த அணை கட்டும் ஒரு ஒரு ENGINEER இருக்கின்றார். அங்கிருந்து அவர் புறப்பட்டு வந்து, அவர் மூலமாக ஒரு இரும்புக் கடையில் உட்கார்ந்து கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த மாதிரி பழனியில் இருந்து ஒரு சாமியார் வந்தாரா?

அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்று கடையில் சொல்கிறார்கள்.

அவரைக் கொஞ்சம் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, கடையில் அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சிகரெட்டை ஊதிக் கொண்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

நான் இங்கிருந்து அங்கே போனேன்.

“ஏனய்யா.., நீயெல்லாம் சாமியாரா?” லெட்டர் போட்டால் மரியாதை கொடுப்பதில்லையா? பையனை இங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்களா? போலீசில் சொல்லி உன் எலுமபை நொறுக்கிவிடுவேன் என்று என்னை மிரட்டுகின்றார்.

இது இப்படியே கேட்கிறார். அப்பொழுது அந்தக் கடைக்காரர் பார்க்கின்றார்

ஐயா., இந்தச் சாமி அப்படிப்பட்டவர் இல்லை. அவர் காந்தியவாதி. நீங்கள் அவரை இந்த மாதிரி மிரட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் சித்து நிலை பெற்றவர். அவரை அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கடைக்காரர் சொல்கின்றார்.

அட.! உங்களுக்குத் தெரியாது. இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவனைக் கொண்டுபோய் இரண்டு தட்டு தட்டினால் எல்லாம் சரியாகிவிடும். உண்மையானவன் என்றால் நான் லெட்டர் போட்டவுடன் வந்திருப்பான் அல்லவா? என்று சொல்கிறார்.

அப்பொழுது நான் என்ன செய்தேன்? அப்படியே பயந்த மாதிரியே இருந்தேன். பயந்த மாதிரியே நடித்துக் கொண்டிருந்தேன்.

அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காலை ஆட்டிக் கொண்டு, சிகரெட்டையும் ஊதிக் கொண்டு, “என்ன, ஸ்டேசனுக்கு வருகின்றாயா..,? அங்கே வைத்து நொறுக்கட்டுமா..,?” என்று கேட்கின்றார்.

அப்புறம் நான் கொஞ்சம் யோசனை பண்ணினேன். கொஞ்ச நேரம் கழித்து, “இறங்குடா கீழே.., இல்லையென்றால் உன்னை இப்பொழுது போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு போய் தட்டி நொறுக்கிவிடுவேன்” என்றேன்.

உன் சம்சாரத்தின் கையை ஒடித்துவிட்டாய்.
உன் பையனையும் இந்த நிலைக்கு ஆக்கிவிட்டாய்.
இப்பொழுது இங்கே வந்து என்னை மிரட்டுகிறாய்.

ஆக, உன் சம்சாரத்தைக் காணோம். நீ தான் உன் மனைவியைக் கொன்று விட்டாய் என்று, உன் பையனே சொல்லப் போகின்றான். உன்னை உள்ளே தள்ளப் போகின்றார்கள்.

யார் எலும்பை இப்பொழுது யார் நொறுக்கப் போகிறார்கள் என்று பார் என்று சொன்னேன்.

அப்படியே மிரண்டு விட்டான். மிரண்டவுடனே அங்கே இருப்பவர்களெல்லாம் சிபாரிசு செய்தார்கள்.

அந்தப் பையன் இங்குதான் இருக்கின்றான். இவனைக் கூட்டிக் கொண்டு போ. ஆனால், இவனுக்கு ஏதாவது விபத்து ஆனதென்றால், நீ கையெழுத்துப் போட வேண்டும்.

அதாவது, இவன் உயிருக்கு ஆபத்து வந்தால் “நான் தான் பொறுப்பு” என்று எழுதி சாட்சிக் கையெழுத்து போடு. அவன் ஏதாவது காணாமல் போனாலும், அல்லது அவன் தாயார் மாதிரி ஏதாவது ஆனாலோ நீ உள்ளே ஜெயிலுக்குள் போய்விடுவாய்.

உன்னை இப்பொழுது கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள். உனக்கு அந்த மந்திரியைத் தெரிந்திருந்தாலும் சரி, சேனாதிபதியைத் தெரிந்திருந்தாலும் சரி. முதலில் இதைச் செய்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று சொன்னேன்.

அப்புறம் முழித்துக் கொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேசனில் வந்து கையெழுத்து மட்டும் இல்லை, உன் ரேகையையும் வைத்துவிட்டுப் போ. என்றேன். அப்புறம் அங்கு சொல்லிவிட்டுத்தான் அனுப்பி வைத்தார்கள்.

பையனைக் கூட அனுப்பி  வைத்தவுடன் என்ன ஆகிவிட்டது? பழையபடி அவனைக் காணோம். நான்கு நாள் ஆகிவிட்டது போனவன் எங்கேயோ போய்விட்டான்.

நான்கு நாட்களாகப பையனைக் காணவில்லை. காணோம் என்று தெரிந்தவுடன் அவருக்கு என்ன ஆகியது? அங்கிருந்து தபால் எழுதுகின்றார்.

இந்த மாதிரி நான் கூப்பிட்டு வந்தவுடன் என் பையன் காணாமல் போய்விட்டான். நான் என்ன செய்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் அவன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று எனக்குக் கடிதம் எழுதுகின்றார்.

நானும் பதில் தபால் எழுதினேன். இப்பொழுது நீ கொண்டு வந்து உன் பையனை ஒப்படைக்கவில்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய், நீ உன் பையனைக் கொன்றுவிட்டு எதோ தந்திரம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். என்று போலீஸ் ஸ்டேசனிலிருந்து உனக்கு இப்பொழுது ARREST வரப் போகின்றது. நீ மந்திரி மற்ற தெரிந்தவர்களையும் கூட்டிக் கொண்டுவா என்றேன்,

அங்கே என்னாகிவிட்டது என்றால், அவருக்குப் பதறிப்போய் ஆட்டமாகி விட்டது. அவருக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கின்றது. இவர்களை நான் வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்குப் போகின்றேன்.

பையன் என்னா ஆனானோ? தற்கொலை பண்ணிக் கொண்டானோ? ஒன்றும் தெரியவில்லை. நான் கேவலப்படுவதற்குப் பதில் உங்களையும் வெட்டிக் கொன்று விட்டு இரண்டாவது தரம் பார்க்கிறேன். இப்படிச் சொல்லிவிட்டு தன்னுடைய இரண்டு பெண்களை வெட்டப் போயிருக்கிறார்.

அப்படி வெட்டப் போகும் பொழுது, அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு பக்கம் நானும், இன்னொரு பக்கமும் முருகனும் காட்சி தெரிகின்றது.

சாமி எங்கடா? சாமியார் எங்கடா? சொல்லிக் கொண்டிருந்த அந்த ஆளுக்கு தன் பெண்ணின் கண்ணில் அந்தக் காட்சி தெரிகின்றது.

அந்தக் கண்களிலிருந்து ஒளிகள் வருகின்றது. நீ உடனே அங்கே தேடிப் போ. அங்கே உன் பையனைக் கண்டுபிடிக்க முடியும், அங்கே போனால் உனக்கு விடை கிடைக்கும் என்று சொல்கிறது.

உடனே அந்த வெட்டுகிற அரிவாளைப் போட்டுவிட்டு நேராக இங்கே என்னைத் தேடி வந்தார். நான் முருகனையே பார்த்துவிட்டேன். இந்தச் சாமியாரை உன் கண்ணிலேயே பார்த்துவிட்டேன். உன்னிடம் சக்தி இருக்கின்றது.

சக்தி இல்லை என்றவர் விறு விறு என்று வந்தார். வந்தவுடன் நேராக வந்து என்ன செய்தார் தெரியுமா? காலில் வந்து அப்படியே விழுந்தார்.

எல்லாம் பொய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என் பிள்ளை ஒரு கண்ணில் முருகனைப் பார்த்தேன். என் பிள்ளை இன்னொரு கண்ணில் உங்களைப் பார்த்தேன். நீங்கள் பெரிய சக்தி வாய்ந்தவர்.

அப்படிங்களா..,! எனக்குச் சக்தியும் தெரியாது, ஒன்றும் தெரியாது. குருநாதர் எப்படியோ ஆட்டிப் படைக்கின்றார் என்று சொன்னேன்.

இல்லைங்கே, என்னை நீங்கள் காப்பாற்றுகிறேன் என்று சொன்னால்தான் எழுந்திருப்பேன். நிஜமாகவே என் பையனைக் காணோம். அவர்களை வெட்டிக் கொன்று போடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த அரிவாளும் சரியாக வேலை செய்யவில்லை.

அப்பொழுது நான் சொன்னேன். நேராக தேங்காய் பழத்தை எடுத்துக் கொண்டு, பழனி மலையை இருபது தடவை கிரி சுற்று. மேலே சென்று தேங்காய் உடைத்து என் பையன் வரவேண்டும், என் சம்சாரம் வரவேண்டும். இனி இந்தத் தவறெல்லாம் நீங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு வா.

அங்கே அர்ச்சனை சீட்டு இரண்டு வாங்கு. ஒன்றை இங்கே செய்துவிட்டு ஒன்றை இங்கே கொண்டுவா என்றேன்.

அதே மாதிரி செய்துவிட்டு வந்தார். பிறகு அந்தப் பையனும் வந்தான். அவர்கள் அம்மாவும் வந்து விட்டார்கள்.

வந்த பிற்பாடு இயற்கையிலேயே சக்தி இருக்கிறதென்று இன்றைக்குத் தான் நான் உணருகின்றேன்.

இந்த மாதிரி தவறெல்லாம் இனிமேல் நான் செய்ய மாட்டேன் என்று கடைசியில் ஒப்புக்கொண்டு அதில் இருந்து ஒரு பெரிய பக்தர் ஆகிவிட்டார்.

பக்தர் ஆன பிற்பாடு சில நேரங்களில் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார். என் குழந்தை அருள்வாக்கு சொல்லுகின்றது என்று சொன்னார்.

அதெல்லாம் ஆகாது. அந்த உடலில் உள்ள ஆன்மா அருள் ஒளி பெறவேண்டும். ஆக இந்த நிலை மாற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள் என்று நான் சொன்னேன்.

ஏனென்றால், எதன் வழியில் அங்கே இறந்ததோ அந்த ஆன்மா உன் பையன் உடலிலிருந்து பல ஜோசியங்கள் சொன்னாலும்,
இன்னொருவர் உடலின் தன்மை நோயின் தன்மை இழுத்து,
இந்த உடலில் நோய் வந்துவிடும்.

ஆகையினாலே, இது உண்மையிலே தெய்வம் இல்லை. உடலிலிருந்த ஆவியின் தன்மை இந்த மாதிரி வந்தது.
இந்த நிலையில் அது செயல்படுகின்றது என்று சொன்னேன்.
அப்புறம் அதிலிருந்து விட்டுவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி. 

May 16, 2014

கடவுளும் இல்லை... பூதமும் இல்லை...! என்று சொன்னவர் குழந்தைக்கு நடந்தது...!

இப்பொழுது இறந்த பிற்பாடு நாம் என்ன செய்யப்போகின்றோம்? பேய் ஆடுகிறதா? பேய் ஆடுமோ? எப்படி அது வந்துவிடும் பார்க்கலாம், என்றெல்லாம் சொல்வார்கள். பிறகு அவர்களுக்குள் புகுந்தால்தான் தெரியும்.

இப்படித்தான் ஒருவர் சாமியே இல்லை, பூதமே இல்லை என்று எம்மிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் குடும்பத்திற்குள்ளே என்ன ஆகியது? இதே மாதிரி இறந்த ஒரு ஆன்மா அவர் குடும்பத்திற்குள் அவருடைய பிள்ளை மேல் ஆவி வந்து பிடித்துக்கொண்டது.

வந்தவுடனே, என்னமோ கதையெல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றது, என்று சொல்லிக் கொண்டு என்னிடம் அவர் ஓடி வந்தார்.

என்னிடம் கடவுளே இல்லையென்று நீ சொன்னாய் அல்லவா என்றேன்.

அடக் கடவுளே..! என் பிள்ளை அதற்குத் தெரியாத வார்த்தையெல்லாம் பேசுகின்றது. எப்படி என்று தெரியவில்லை என்கிறார்.

அடுத்து அந்தக் குழந்தை தலையிலிருந்து குங்குமம் வருகின்றது. அந்தக் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், தலையிலிருந்து அந்த குங்குமம் வருகின்றது. ஏதாவது, பேசினால், நல்ல நறுமணங்கள் வருகின்றது.

இது என்னப்பா..,? விசித்திரமாக இருக்கின்றது என்கிறார்.

நீ தான் பேயும் இல்லை, பூதமும் இல்லை என்று சொல்கின்றாய். சாமியே இல்லை என்கிறபோது இது எப்படி இருக்கிறது என்று பார்.

ஒரு மனித உடலை இழந்த பின், அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்கின்றது? என்பதை நீ தெரிந்து கொள் என்று அவரிடம் சொன்னேன்.

அப்புறம் தன்னுடைய நாஸ்தீகத்தை எல்லாம் விட்டுவிட்டார்.

நீ மந்திரவாதிகளிடம் எல்லாம் போக வேண்டாம். நீ நான் சொல்லும் வழிகளில் இந்த மாதிரி மகரிஷிகளை எண்ணி தியானம் செய். தியானம் செய்து
மகரிஷிகளின் அருள் சக்தி
என் குழந்தை பெறவேண்டும் என்று பாய்ச்சு.

அந்த குழந்தையின் தன்மைக்குள் செயல்படும் ஆவியின் தன்மைகளை நீ நிறுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

அப்புறம் நான் சொன்ன பிரகாரம் அவர் தன் குழந்தைக்குச் செயல்படுத்தினார். அது சரியாகியது. 

May 15, 2014

உடலைவிட்டுப் போனால் தெரியப் போகிறதா.., என்று எண்ணி என்ன செய்கிறார்கள்?

இன்றைய உலகில் எத்தனையோ பேர், நாம் இந்த உடலை விட்டு இறந்த பிற்பாடு என்னவாக ஆகப் போகிறோம்?

அதைப் பற்றி நமக்கென்ன தெரியப் போகிறது? என்றிருப்பார்கள்.

அதே சமயத்தில், சில பேர் நாம் இப்பொழுது மனிதனாக இருக்கிறோம். இறந்த பிற்பாடு,
மனிதனாகப் பிறக்கின்றோமா?
நாயாகவோ, அல்லது பேயாகவோ பிறக்கிறோமா?
இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு இருக்கப் போகின்றோமா? என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் செய்கின்ற தவறுகளை இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருப்பார்கள்.

ஏனென்றால், இயற்கையின் நிலைகள் காலத்தால் இயற்கை எப்படி இயங்குகின்றது? இறந்த பிறகு என்ன என்ற நிலைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் என்ன? என்ற நிலைகளை அறிந்து கொண்டால் நாம் அடைய வேண்டிய எல்லையை அடையலாம். அதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.

May 14, 2014

பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?

1. பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?
அன்று அருணகிரிநாதர் செல்வந்தர். அவருடைய தாய் தந்தையர் செல்வத்தை நிறையச் சம்பாதித்து வைத்திருந்தனர். அந்தச் செல்வச் செருக்கில் இவர் என்ன செய்தார்?

அந்தக் காசுகளை வைத்து அருணகிரிநாதர் தாசிகள் வீடுகளுக்குச் சென்று செலவழித்தார். செல்வங்களை எல்லாம் அதிலே செலவழித்து விரயம் செய்து, கடைசியில் அவருக்குக் குஷ்டரோகம் நோயே வந்துவிட்டது. இருந்த செல்வம் முழுவதும் மறைந்தது. ஆக, அவர் செய்த தவறுகள் ஏராளம்.

முருகன் கோவிலில் எல்லாம் அருணகிரிநாதர் பல பாடல்கள் பாடியுள்ளதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம். முருகனைப் பற்றி நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். எவ்வளவு பெரிய குற்றவாளி? இவருக்கு எப்படி ஆண்டவன் இந்த சக்தியைக் கொடுத்தார்? கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்கள். பார்க்கலாம்.
2. அருணகிரி நல்லவனாக வேண்டும் என்ற பாசம் சகோதரிக்கு
அருணகிரியின் கூடப்பிறந்த சகோதரி தன் தம்பியின் மேல் பாசமாக இருந்தது. ஆனால், அருணகிரியோ காசை வைத்து ஊதாரித்தனமாக நடந்தான். சகோதரிக்குத் திருமணமாகவில்லை.

தன் சகோதரன் அருணகிரி நல்லவனாக வேண்டும்.
அவன் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும்.
அவன் உலக ஞானம் பெறவேண்டும்,
பெரிய அறிவாளியாக அவன் வரவேண்டும் என்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டது சகோதரி

தாய் கருவிலே பெற்ற சக்தி திருஞானசம்பந்தருக்கு, ஆனால், அருணகிரிநாதருக்கு தன் சகோதரி வழியில் சக்தி கிடைக்கின்றது.

அருணகிரியின் சகோதரி திருஞானசம்பந்தரைப் பற்றிய நூல்களை அதிகமாகப் படிக்கின்றது. அவர் எப்படியெல்லாம் விஷத்தைப் போக்கி, விஷமான நிலைகளிலிருந்து மீட்டினார் என்பதைப்பற்றி அவருடைய நூல்களைப் படித்து, பாராயணம் பண்ணி வைக்கின்றது.
3. சகோதரனை எண்ணியே அருள் ஆற்றலை வளர்த்துக் கொண்டது அருணகிரியின் சகோதரி
அதன் வழியில் தன் சகோதரனுக்குள் இருக்கும் அந்த விஷமான உணர்வுகள் நீங்கி, “அவன் திருந்த வேண்டும்” என்று அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

திருஞானசம்பந்தர் எதையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளாரோ, வான இயலின் தத்துவத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார். அந்த உணர்வெல்லாம் தன் சகோதரன் பெறவேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று தன் சகோதரனை எண்ணி, அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது அருணகிரிநாதரின் சகோதரி.

ஆக, இந்த உணர்வுகள் சகோதரியின் உடலுக்குள் விளைகின்றது. விளைந்து வந்தபின்,
தன் சகோதரன் திருந்த வேண்டும், திருந்த வேண்டும்,
அவன் அருள்ஞானம் பெறவேண்டும் என்று எண்ணுகிறது.

பல பல சித்தர்களைப் பற்றியும், அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்திய அந்த உணர்வுகளையும் தான் படித்து, அந்த உணர்வின் தன்மை தன் சகோதரன் பெறவேண்டும் என்ற நிலைகளில் அங்கே செய்துகொண்டே வருகின்றது. தான் படித்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகளில், தன் சகோதரன் மேல் பாசமாக இருக்கின்றது.

சகோதரனை எண்ணியே இந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

அந்த உணர்வெல்லாம் தன் உடலிலே இங்கே வளர்த்துக் கொண்டது. ஆனாலும், அருணகிரியோ அவன் திருந்தினபாடில்லை.
4. அருணகிரியின் பிடிவாதம்
கடைசியில், அருணகிரிநாதருக்குப் பல நிலைகளாகி குஷ்டரோகமாகித் தத்தளிக்கின்றான். பணமெல்லாம் விரயமாகிவிட்டது. சகோதரன் கேட்கும் பொழுதெல்லாம் பணத்தையும் நகைகளையும் கொடுத்தது. பெரும் செல்வந்தராக இருந்த நிலை எல்லாம் மாறி, கடைசியில் எல்லாம் அழிந்துவிட்டது.

இன்று சாப்பாட்டிற்கே தொல்லையாகின்றது. அருணகிரியின் சகோதரி ஒரு இடத்தில் கூலிக்கு வேலை செய்து, பாத்திரம் தேய்த்து அந்த வருமாணத்தை வைத்து உணவை உட்கொள்கின்றது.

அப்பொழுது சகோதரன் வருகின்றான். நான் தாசியிடம் போனேன். அவள் என்னை அவமதித்துவிட்டாள். நான் எப்படியும் அவளை அடைந்தே ஆகவேண்டும். ஆகவே, “எனக்கு அவசியம் நீ காசு கொடுதே ஆகவேண்டும்” என்று தன் சகோதரியிடம் பிடிவாதமாக விடாப்பிடியாகக் கேட்கின்றான்.

சகோதரியோ, என்னிடம் காசு ஏதப்பா? எல்லாவற்றையும் இழந்துவிட்டாய். இனி என் உடல்தான் இருக்கின்றது. நீ அங்கே இச்சையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

ஆகவே, என்னுடைய உடலையே நீ பயன்படுத்திக்கொள் என்று சொல்லி, தன் சகோதரனுடைய நிலைகளை எண்ணி அவனின் இந்தச் செயலைப் பார்த்து மூர்ச்சையாகி, அருணகிரியின் சகோதரி மடிந்து விடுகின்றது.

தன் சகோதரன் மேல் உள்ள எண்ணத்தால், உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் உயிரான்மா அருணகிரியின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றது. புகுந்தபின், அவன் என்ன செய்கின்றான்?
5. தன்னையறியாது வந்த தவறிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றார் அருணகிரி
தனக்கு உதவி செய்த சகோதரியே போய்விட்டது. இனி, எனது வாழ்க்கையில் என்ன இருக்கின்றது என்று எண்ணிய அருணகிரி திருவண்ணாமலை மேல் இருக்கக்கூடிய கிளி கோபுரத்தின் மீது ஏறி, தன் உடலை மாய்த்துக் கொள்ள ஏறுகின்றான்.

அப்படி மடிய வேண்டும் என்ற நிலைகளில் வானை நோக்கி ஏகுகின்றான்.

என் சகோதரி போய்விட்டாள்,
இனி என்னை ஆதரிப்பதற்கு யார் துணை இருக்கிறார்கள்?
ஆகவே, இனி என்னுடைய இந்த உடல் மடிய வேண்டும்.
அடுத்த ஜென்மமாவது நான் புனித நிலைகள் பெறவேண்டும்.

என்னை அறியாது வந்த தவறிலிருந்து நான் மீளவேண்டும்.

இந்த உணர்வை ஓங்கி வளர்த்துக் கொண்டு, அங்கே மடிவதற்குத் தயாராகின்றான். கோபுரத்திலிருந்து விழும் பொழுது இந்த எண்ணமெல்லாம் வந்த பிற்பாடு,
அருணகிரியின் சகோதரி உயிரான்மா
அவன் உடலுக்குள் இருப்பதால்
அவனைக் கீழே விழாதபடி தடுத்து நிறுத்துகின்றது.
6. சகோதரி கற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரின் உணர்வுகள் அருணகிரிக்குள் வந்து, ஞானி ஆகின்றார்
அப்படி தடுத்து நிறுத்தப்படும்போது, அவன் ஏங்கி நிற்கின்றான். அவன் உணர்வுகள் அங்கே ஞானம் வருகின்றது. ஆக மடியவில்லை. தன் சகோதரியின் உணர்வுகள், அதாவது அவள் கற்றுக்கொண்ட உணர்வின் ஞானம் எல்லாம் அங்கே வருகின்றது.

சகோதரி கற்றுக்கொண்டு வந்த உணர்வுகள் (திருஞான சம்பந்தரின் உணர்வுகள்) அந்த அருணகிரிநாதர் உடல்களிலே அது வருகின்றது. அப்பொழுது, அந்த உணர்வின் தன்மை கொண்டு இவன் மடிவதற்கு மாறாக, அவனுக்குள் உணர்வின் ஞானம் அங்கே தோற்றுவிக்கின்றது.

ஏனென்றால், சகோதரியின் உணர்வுகள் அவனுக்குள் இருந்து இந்த உணர்ச்சிகளை இங்கு ஊட்டுகின்றது. அங்கு மடியாத நிலைகள் கொண்டு அங்கு அப்போது தான் பாடுகின்றான்.

‘’நாத விந்துகள் ஆதி நமோ நம
வேத மந்திர சொரூபாய நமோ நம
வெகு கோடி”
என்று அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

ஆக, எதன் வழி கொண்டு அவன் பாடுகின்றான்? சகோதரன் மேல் உள்ள பாசத்தினாலே, சகோதரி அது கற்றுக்கொண்டு வந்த உணர்வின் நிலைகள் அங்கே அவனுக்குள் இயக்குகின்றது.

அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
அவன் உடலிலே பெறப்படும் போது
திருஞானசம்பந்தர் பெற்ற அந்த உணர்வெல்லாம் இவனுக்குள் வருகின்றது.

அவர் பார்வையில் நஞ்சு கலந்த நிலையில் நீக்கும் இந்த உணர்வை சகோதரி படித்துக் கொண்ட நிலையில், தன் சகோதரன் இப்படியெல்லாம் ஆக வேண்டும் என்ற உணர்வை எடுத்துக்கொண்ட இந்த உணர்வுதான் அந்த ஆன்மா உள்ளே சென்றபின், அவனுடைய குஷ்ட ரோகங்கள் எல்லாம் மாறுகின்றது.

ஆக இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றான். ஆறாவது அறிவின் தன்மை பெற்று திருஞானசம்பந்தர் கூறிய உணர்வெல்லாம் அந்த அறிவின் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் ‘’ரா ரா ரா.., டி டி டி.., ரு ரு ரு..,’’ என்ற வகையிலே அவன் பாடுகின்றான்.

அந்தக் காலத்தில் வில்லிபுத்தூரார் அவர் சுற்றுப்பயணம் வரும் போது அவருடன் வாதம் என்ற நிலையில் நடக்கின்றது.

அப்பொழுது, கவிப்புலமைப் பரிசீலிக்க காதிலே துரட்டியைப்போட்டு வைத்துக் கொள்வது, தப்பாகி விட்டால் அவரின் காதை அது அறுத்து விடுவது என்ற இந்த தத்துவமெல்லாம் அந்த அரசர் காலங்களிலே இருந்து வந்தது.

அப்போது அருணகிரிநாதர் என்ன செய்கின்றார்?, ‘’ராராரா டிடிடி ருருரு’’ என்கின்றார்.

ஆக சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் எந்த உணர்வின் தன்மை கொண்டு எடுக்கின்றதோ அந்த உணர்வு உறையப்படும் போது அதன் உணர்வின் நாதங்கள் எப்படி ஆகின்றது?

உணர்வின் தன்மை வரப்படும் போது, இந்த உணர்வின் தன்மை உடலாகும் நிலைகளில் மனிதனானபின் உணர்வுகள் எவ்வாறு ஆகின்றது? என்ற உண்மைகள் இந்த பாடலுக்குள் வருகின்றது.

அப்பொழுது, அந்த வில்லிபாரதத்தை எழுதியவர் வில்லிப்புத்தூரார் இதைக்கண்ட பின் தோற்றுவிடுகின்றார். அதில் சரணமடைகின்றார். ஆனால், அருணகிரிநாதர் படித்திருந்தாரா? இல்லை.

இந்த தத்துவத்தின் நிலைகளை அவருடைய சகோதரி படித்திருந்தது. திருஞான சம்பந்தர் வழியில் கற்றுக்கொண்டது. பல ஞானிகள் கொடுத்த நூல்களைப் படித்துக்கொண்டது. தன் சகோதரன் இந்த நிலைகள் வரவேண்டும் என்றும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டது

ஆனால், அதே சமயத்தில் சகோதரன் மேல் உள்ள ஏக்கத்தால் அவன் செய்த முறை கொண்டு மீளவில்லையே என்று அவனை எண்ணியே அந்த ஆன்மா செல்லுகின்றது. அவன் உடலுக்குள் இது பாய்ந்து தத்துவ ஞானி ஆகின்றது.