ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2026

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்

குரு காட்டும் நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்


உங்களுக்குள் தெளிவான நிலைகள் உபதேசித்து வந்தாலும் இதை ஏற்றுக் கொண்ட சீடர்கள் அந்த ஒருக்கிணைந்த உணர்வின் தன்மை இணைத்து இந்த நிலைகள் கொண்டால் “நிலை கொண்டதாக” மாறும்.
 
இன்றைய நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அவரவர்கள் சுயநலங்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது
1.குருவைப் பற்றிப் பார்க்கும் பொழுது குருவின் பெயரைச் சொல்லித் தவறுகள் செய்து கொண்டிருப்போர் பலர்.
2.தான் தவறு செய்தே பிழைக்க வேண்டும் என்று எப்படி ஆனாலும் தான் வாழ வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள்
3.அந்தத் தவறு செய்வோரின் நிலை வேறு.
 
தான் தவறு செய்து… எப்படியும் வாழ வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அதே குருவின் நாமத்தைச் சொல்லப்படும் பொழுது
1.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்னும் பொழுது
2.தவறு செய்தே… தான் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் ஒன்று சேரும்.
3.அதைப் போற்றும் நிலைகளே வரும்…. இப்படி இணை சேரும் நிலைகள் இது.
 
ஆனால் அப்படி இல்லாது குரு காட்டிய நெறியில் நாம் செல்வோம் என்றால் தீமைகளைப் பிளந்திடும் நிலைகளும் தீமைகளை அடக்கி ஒளியின் அறிவாக நாம் வாழ்வதும் ஆக ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் என்றும் நிலை கொண்ட நிலைகள் நாம் பெற முடியும்.
 
ஓர் விஷத்தின் தாக்குதல் ஏற்படும் பொழுது தான் வெப்பத்தின் தன்மையாகி வெப்பத்தின் தன்மை வரும் போது தான் மற்ற உணர்வுகள் சேர்த்து அது படைக்கும் சக்தியாக மாறுகின்றது.
 
ஆகவே விஷத்தின் தன்மை கொண்டாலும் விஷ உலகை இன்று மனிதனிலிருந்து இயக்கும் நிலைகள் பெற்றாலும் அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு இதை அடக்கி மனிதனின் உணர்வலைகளைத் தெளிந்ததாக மாற்ற முடியும்.
 
1.நம் குரு வழியில் குரு காட்டிய அறநெறிகளை நாம் கடைப்பிடிக்கும் பொழுது தான்
2.தக்க நேரத்தில் இந்த உபதேசித்த உணர்வுகள் நம்மைக் காக்கும்
3.அந்த உணர்வின் வலுகள் நீங்களும் அதைப் பெற முடியும்.
 
ஏனென்றால் குரு வழியில் நாம் செல்லப்படும் பொழுது நமக்குள் தீமையை அடக்கி விடுவதும்… நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகள் இயக்கினாலும் அதை அடக்கிடும் நிலைகள் வரவேண்டும்.
 
அதே சமயத்தில் நாம் வெளிப்படுத்தும் உணர்வின் தன்மையைச் சூரியனின் காந்த சக்தி இது கவர்ந்திருந்தாலும்
1இந்த உணர்வலைகள் தீமையற்றதாக மாற்றும் நிலைகள் மோதுண்டு மோதுண்டு மோதுண்டு ஒவ்வொன்றையும் அடக்கிடும் உணர்வுகளாக
2.இந்தக் காற்று மண்டலமும் இந்தப் பிரபஞ்சமும் மாற்றிடும் நிலையாக வர வேண்டும்.
 
ஏனென்றால் இத்தகைய நிலைகள் நமக்குள் அந்த ஞானியின் உணர்வுகளாக மலரப்படும் பொழுது அதர்வண…! தீமைகளை அடக்கி சாம…! இசையின் தன்மைகள் மாற்றப்பட்டு.. ஒளியின் தன்மை கொண்டு விண்ணில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.
 
இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… இந்த உடல் நமக்குச் சதம் அல்ல.