ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2022

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்... சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

 

இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்...! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்... அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்... அந்த வீட்டில் திருடினார்கள்... இப்படி ஏமாற்றினார்கள்... பல கொடுமைகள் நடக்கிறது... என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.

இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்...?

காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.

அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு...! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்... “பார்க்கலாம்...!” என்பார்கள்.

பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்...” என்பான். எந்த வகையில் நீ வருவாய்...? பார்ப்போம்...! என்பார்கள்.

இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்... படிக்கின்றோம்.

இப்படி எல்லாம் நடந்தது...! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன... ஏது...? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.

பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.

நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு... நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே...! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.

இதைத்தான் “விழித்திரு...” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்... விழித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்... என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ...
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது... எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை... இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை... இப்படி ஏமாந்து போய்விட்டேன்...! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.

அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்...?

நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட...
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு...!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ... உடனடியாக விழித்து... அதைத் தனக்குள் அடக்க வேண்டும்

ஆகவே...
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.

ஆறைக் கடந்தால்... நிலை ஏழு... “சப்தரிஷி” - ஈஸ்வரபட்டர்

 

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு...
2.வண்ணத்தில் ஏழும்... இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்...
3.“சப்தரிஷிகளின்…” ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான் இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை...” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது... வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்... தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி... ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்... “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்... இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்... ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்... இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

1.இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை...! அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமாசித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்றுத் தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்... தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர... மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு... கேட்டு... நுகர்ந்து... சுவைத்து... உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது... மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை... வளர்ச்சி நிலை...
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை... சிவசக்தி நிலை...
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
4.சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்... சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான... மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும் சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே...
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலைப் பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை... ஆத்மாவின் இனிமையாய்...
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்... மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.

February 13, 2022

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்... ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

 

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்... ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்... ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது... புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது... அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை...!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்... தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்... வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது...
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ... என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ... அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்... அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்...?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்... அது தாயல்லவா...!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்...!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா... அதுதான் விழித்திரு...!

1.“விழித்திரு...” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த... அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ...ம் ஈஸ்வரா... என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து... நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்... மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து...
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

நாம் பெறும் உயர் ஞானம் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது... நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே... தன் உணர்வில்... தன் எண்ணத்தால்... தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும்... உண்மை என்றும்... புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டு பண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

February 12, 2022

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

 

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது... விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்...!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா...!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்...! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியின் ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

கனவு வாழ்க்கை வாழாமல் நிலையாக வாழும் மகரிஷிகளுடன் சங்கமமாக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது... வேகக்கூடிய உஷ்ணமும்... அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்... “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்...” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே... இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ... செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது... நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்... பூக்களானாலும் சரி... காய் கனிகளானாலும் சரி... ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து... தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை... இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப... பிறப்பின் நிலை... ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்... உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்... ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ... அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை...
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது... மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ்எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா...!

அதைப் போன்று...
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு... உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு...
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய... நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்...
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்... தீயவை எதுவாகிலும்...
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை...!”

February 11, 2022

பெருமாள்… பெருமான்… முருகப் பெருமான்…!

 

நம் உயிரின் தன்மை இயக்கும்…
1.அந்த உயிரான குணத்தை நமக்குள் சேர்க்கும் போது
2.தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அது அடக்கி
3.அதிபதியாக நின்று செயல்படுகிறது “பெருமாள்...!”

அதனின் (உயிரின்) உணர்வின் தன்மை கொண்டு பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கி… அறிந்திடும் ஆற்றல் கொண்ட அதிபதியாக… ஆறாவது அறிவின் தன்மையை வினையாகச் சேர்த்துக் கொண்டது.

ஆக.. தீமையை அகற்றிடும் மகிழ்வாகனா…! தீமைகளை அகற்றி மகிழ்ந்திடும் வாகனமாக நமக்குள் அதிபதியாக வீற்றிருப்பது அந்த ஆறாவது ஆறறிவு - முருகப் பெருமானே..!

1.நமக்குள் ஆண்டிடும் உயிர் பெருமாளாக இருப்பினும்
2.எல்லாவற்றிற்கும் “ஆறாவது அறிவின் தன்மை - முருகப் பெருமான்…”
3.மாற்றியமைத்திடும் பெருமானாக அமைகின்றான்.

பெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொல்கிறோம்
1.அந்தப் பெருமாள் யார்...? நம் உயிர் தான்
2.முருகப் பெருமான் யார்...? நம் ஆறாவது அறிவு.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் பெருமாளாக இருப்பது உயிரே. ஆனால் இந்த ஆறாவது அறிவின் தன்மை வரப்படும் பொழுது
1.முருகு…! மாற்றி அமைக்கும் அந்தச் சக்தி கொண்டு
2.எல்லாவற்றையும் சீர்படுத்தும் நிலைகளாக முருகப் பெருமான்...!
3.மாற்றிடும் பெருமாளாக நமக்குள் ஆன்மாவாக அமைந்துள்ளது.

மகா சிவன்ராத்திரி என்றாலும்...
1.உடலுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த உணர்வின் குணங்களை...
2.சீர்படுத்தும் அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் சிலையாக வடித்து..
3.நற்குணத்தின் செயல்களை எல்லாம் காவியமாகத் தீட்டி
4.ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள் ஆலயங்களிலே...!

நம் வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வந்தாலும் முருகப் பெருமான்… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் தீமைகளைப் பிளந்து நீக்கிவிட்டு நம்மை ஆளும் ஆண்டவனான பெருமாளுக்கு அது எவ்வாறு...? என்று ஞாபகப்படுத்துவது.

இதைப் பிரித்து அவன் ஆளும் ஆட்சியாக சீரான உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது ஆட்சிபுரியும் நல்ல குணங்களை...
1அது தடையின்றி நமக்குள் நல்லொழுக்கத்தையும்
2.நல் செயலையும் நமக்குள் நயம்படும் உணர்வின் உறுப்புகளையும் அது உருவாக்கும் தன்மையாக
3.உடலிலே நல்ல நிலைகள் வருவது அது தான் மகிழ்வாகனா...!

மகிழச் செய்யும் வாகனமாக இருந்து… முருகு…! மாற்றியமைக்கும் பெருமானாக அது நமக்குள் அமைந்து அவனின் உணர்வை நினைவு கொண்டு மகிழச் செய்யும் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

மாற்றி அமைத்திடும் அந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆண்டிடும் பெருமானாக அந்த உயிருடன் ஒன்றி நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெற வேண்டும்… மலரின் மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.. மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணைந்து வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல் ஒளியாகும் எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்... முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்...” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்...
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறித் தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது...? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது...?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி... காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது...!

அதைப் போன்று... நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி... வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின்… மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

February 10, 2022

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

 

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

அறம் எது…? பொருள் எது..? இன்பம் எது…? - ஈஸ்வரபட்டர்

 

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப... “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்...” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்... இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்...
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை - “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்... பொருள்... இன்பம்...
1.அறம் - நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் - அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் - என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்... மனித உணர்வின் எண்ணம் “நல்லொழுக்கம் பெற்று... அகத்தின் பொருளறிந்து... அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின...”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்... எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று... விதியை மதி கொண்டு... ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்... தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை... “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்...”

உடல் உபாதையையும்... உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு... இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ... அச்செடியாக அது வளர்ந்தாலும்...
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்... செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது...
1.தன்னைத்தானே தான் உணர்ந்து...
2.இச்சரீர உணர்வின் வாசனையை... இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை...
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை... நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை...
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா - உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

February 9, 2022

ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”

 

குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.

நாற்றமான உணர்வுகளை நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.

அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.

காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.

விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.

தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.

ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.

அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான்...
1.நீ யாரைக் கண்டாலும்... எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.

இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது...! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு...? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.

ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.

அது தான் முக்கியம்.

அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.

இதை நாம் செய்து பழக வேண்டும்.

இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது

இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.

இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

மந்திர ஒலியில் நாம் சிக்கிவிடக்கூடாது - ஈஸ்வரபட்டர்

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.

ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு...!

1.யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…?
2.தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…?
3.மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாகமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது..? இறைவன் யார்…? மனிதன் யார்…?

1.மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!
2.இந்தத் தத்துவத்தைத் தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்…
3.கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே
4.மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை வளர்க்கவிடாது இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

February 8, 2022

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை... அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

மனித வித்தின் பலன் உயர் ஞானம் தான் - ஈஸ்வரபட்டர்

 

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக்கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரயமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

February 7, 2022

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

 

பாறைக்குள் இருந்து மலை மீது சில இடங்களில் உச்சியில் நீர் வடிவதைப் பார்க்கலாம். காரணம்...
1.அங்கே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைப் பருகி
2.அதன் அடியில் எந்த மலை இருக்கின்றதோ அதற்குள் ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றது.

இப்படிப்பட்ட சில பகுதிகள் மலைகளில் உண்டு…!

மேகங்கள் மேலே பறந்து சென்றாலும் உச்சிமலையாக இருப்பது தனது காந்தப் புலனால் மேகங்களைக் கவர்ந்து நீராகச் சுரக்கச் செய்கின்றது. மலை உச்சிகளில் நாம் பார்க்கும் நீர்கள் எல்லாம் இப்படித்தான்.

இவைகள் எல்லாம் அந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதனுள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டுதான் அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

1.இந்தப் பாறைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும்
2.அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து அதனின் தன்மை ஆவியாகப் படர்ந்து வரப்படும் பொழுது
3.அதிலே உருப் பெற்ற பல செடிகளின் சத்துக்களும் இது எல்லாம் ஒருக்கிணைந்து
4.அதனின் தன்மை ஒரு செடியாக ஒரு வித்தாக… கருவாக உருவானால்
5.அத்தகைய செடியையோ அல்லது மரத்தையோ வேறு எங்காவது நாம் ஊன்றினோம் என்றால்
6.அந்த மரத்திலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
7.விண்ணிலிருந்து நுண் அணுக்களாகத் துருவப் பகுதியில் கலந்து கொண்டிருப்பதையோ
8.அல்லது கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருந்தால் அதனின் சக்தியையோ
9.அந்தத் தாவர இனம் தனக்குள் குவித்து… மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச் செய்கிறது
10.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

இப்படியும் பல நிலைகள் உண்டு...! இது எல்லாம் இயற்கையில் உள்ள சில நிலைகள்.

பல பல செடிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்பால் புதுப் புது தாவர இனங்களாகப் பூமியிலே விரிவடைந்து வளர்ந்திருந்தாலும் அவை அனைத்தும் வெளிப்படுத்தும் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது.

அவ்வாறு கலந்தவைகளில் உதாரணமாக ஒரு கடலைச் செடியிலே ஒரு உயிரணு விழுந்தால் அந்தச் சத்தினை அது கவர்ந்து உடல் பெற்று சிவமாக மாறுகின்றது.

சிவமாகும் பொழுது அந்தக் கடலைச் செடியின் சத்தை இந்த உயிரணு சுவாசித்து அதிலிருந்து வெளியிடும் நிலைகள் புழுக்களாகத் தோன்றுகிறது. இப்படி எண்ணிலடங்காத செடிகளிலிருந்து வெளி வருகிறது.
1.அவை இடும் மூச்சலைகளிலிருந்து வருவதுதான்
2.மனிதனாக உருப் பெறுவதற்குத் தேவையான ஜீவனுள்ள “பிராணவாயு…” என்று சொல்வார்கள்.
3.தனக்குள் மற்ற நஞ்சின் தன்மையை (கரியமில வாயுவை) மாற்றி இயற்கையின் ஜீவித சக்தியை வளர்க்கும் சக்தி அங்கே பெறுகின்றது.

ஏனென்றால் ஆரம்ப நிலையில் தோன்றிய செடிகள் வேறு. இப்பொழுது உருவாகும் செடிகளின் இனங்கள் வேறு.

அத்தகைய செடியின் சத்தைத் தான் நுகர்ந்து இந்த உணர்வின் துணை கொண்டு அது விளைந்த இது இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் படர்கிறது.

ஆகவே ஜீவணுக்கள் உயிரணுக்களில் இருந்து வரக்கூடிய உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் ஜீவிக்கும் தன்மையாக… பிராணவாயுவாகக் கிடைக்கின்றது.

இது எல்லாம் மெய்ஞானப் பாடம்...!

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கத் தான் உபதேசிக்கின்றேன் - ஈஸ்வரபட்டர்

 

மனித உணர்வின் சூட்சுமத்தை... “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்...” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை... இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது...!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்... ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு... நாணம்... முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு... உடை... இருப்பிடம்... ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று... இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை... இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்... இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்...
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று... ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்...”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்...
1.மூவுலக சக்தியான “ஆக்கல்… காத்தல்… மாற்றல்…” என்ற வழித் தன்மையில்...
2.வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்... பால்வெளி மண்டலத்தில்
3.எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்...
4.ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்...
5.அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை...
6.ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி...
7.உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி...
8.அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்...
9.படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்...
10.“அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி - உருப்பெறும் நிலை...!”

இச்சரீரத்தின் உணர்வை... “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை...!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை... ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்... ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு...
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது...?

தன்னில் உள்ள இறைத் தன்மையை... தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

February 6, 2022

உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.

1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.

அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.

காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.

ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்

 

1.என்னுள்ளே நான்... என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி… உயிரை மணியாக்க…
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்...” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே… “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர... “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்…!

தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
1.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவப்படுத்தி
2.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
3.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
4.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

February 5, 2022

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

 

விஷம் எதிலுமே ஊடுருவி இயக்கும் சக்தி பெற்றது. எதனையுமே இயக்கக் கூடியது. விஷத்திற்குள் அடங்கி விட்டால் இருள் சூழ்ந்த நிலையே கடைசியில் வருகின்றது.

விஷத்தை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்தால் ஒளியின் தன்மை அடைகின்றோம்.

ஆனால் மனித உடலில் விஷம் அதிகரித்தால் கலி... மீண்டும் பாம்பினங்களுக்குச் செல்லும் நிலையாகின்றது.

சூரியன் பாதரசத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை எப்படிப் பெற்றதோ அது போல் ஆறாவது அறிவின் தன்மை கொண்ட மனிதன் ஏழாவது நிலையாக உருவாக்கப்படும் போது
1.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
2.அதன் வழி நாம் கல்கி ஆகின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

சூரியன் ஒரு காலம் மடியலாம். ஆனால் அதே சமயத்தில் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் என்றும் ஒளியின் சுடராகப் பொங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.எல்லோரையும் மகிழச் செய்யும் அந்த உயர்ந்த நிலையை மனித உடலில் இருந்து தான் பெற முடியும்
2.ஆறாவது அறிவால் தான் அதை உருவாக்க முடியும்.
3.அதைச் சீராகப் பயன்படுத்தினால் நாம் இந்த உடலுக்குப்பின் ஏகாதசி...!
4.எதிர்ப்பே இல்லாத நிலையாக பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அதை அடையத் தான் ஒவ்வொரு ஞானிகளும் முயற்சித்தனர்.

இப்பொழுது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த உணர்வினை நீங்கள் நுகரும்போது
1.ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கி… அருள் உணர்வைக் கருவாக்கி
2.கலி என்ற நிலையை மாற்றி… கல்கியைப் பொங்கச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்து இருளை மாற்றி இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலைக்கு வர வேண்டும். ஒளி உடலாக உருவாக்க வேண்டும் ஒளி உடலாக மாற்ற வேண்டும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை என்ற உணர்வானால் மனிதனல்லாத உருவாகின்றது… கலி. கலியுகத்தில் தான் வாழ்கின்றோம். நாம் கல்கியுகத்திற்குச் செல்ல வேண்டும்.

கலியில் தான்…
1.ஒன்றை நல்லதாகவும் உருவாக்க முடியும்
2.தீமையையும் உருவாக்க முடிகின்றது.
3.கலி கெட்டதும் அல்ல…!

நாம் பல வகைகளில் உருவாக்கினாலும் இந்தக் கலியில் நல்லதை உருவாக்கப்படும் போது கல்கி ஆகின்றோம். ஆகவே உருவாக்குவது என்ற நிலையானால் கல்கியைத் தான் உருவாக்க வேண்டுமே தவிர கலியை அல்ல...!

ஒன்பதாவது நிலையில் இருக்கும் நாம் தீமை புக விடாது தடுப்பது தான் கடவுளின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்…” அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம்.

உடலைப் பயன்படுத்தி உயிராத்மாவின் தரத்தை உயர்த்த வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா... அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா...? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை... ஆத்ம உணர்வை அறியாமல்... எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்...
1.இவர்களுக்கே இந்த நிலை...
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்... நாம் என்ன செய்ய முடியும்...! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு... மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்... தனது...” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு... பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து... அதைத் தன் சக்திக்குகந்தாக்கி... மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று...
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

February 4, 2022

புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்...!” என்ற அசுர உணர்வு வருகிறது.

ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.

அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.

ஆகவே...
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா...?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.

அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது

தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.

தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி...!

தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்... உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்

ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!

ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மனிதனுக்கும்...
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை... உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு... இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது... தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்... புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல...!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும்… பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் “ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை…” ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திரவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி... குளிர்ந்து நீராகி... நீரின் தொடர்பு கொண்டு... தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது... நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக்கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா...!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்...!

February 3, 2022

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் கவரப் பழகிக் கொண்டால் சுகக் கேடுகளை மாற்ற முடியும்

 

இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் வெறுப்படையும் போது மகிழ்ச்சி இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுப்பதில்லை.

அது போல் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான ரண வேதனைகளைப் படுகின்றனர்.. அதனை நாம் நுகரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை.

1.ஆனால் நுகர்ந்து… அதை எல்லாம் அறிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
2.இது எல்லாம் உடலில் சுகக் கேடான விளைவுகளாகின்றது.

ஆகவே நமது சுகங்களைக் கேடாக்கும் இத்தகைய தீய உணர்வின் தன்மைகளை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அந்தச் சுகக் கேடுகளை மாற்றுவதற்கு அருள் உணர்வினைப் பெற்றால் ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்… அறியாது வந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

1.மனித உடலிலிருந்து சுகக் கேடுகளை மாற்றியவன் தான் அகஸ்தியன்
2.அவன் பேச்சை மற்றவர் கேட்டாலும் அல்லது அவன் பார்வை மற்றவர் மீது பட்டாலும்
3.அவர்களின் சுகக் கேடுகளை மாற்றி… அறிவின் தெளிவாக மாற்றிடும் திறனாக வருகிறது.

அவன் வாழ்ந்த காலத்தில் இத்தகைய சுகக் கேடுகளை மாற்றிய உணர்வுகள் அனைத்தும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமக்கு முன் இங்கே அது பரவிக் கொண்டும் இருக்கின்றது.
2.அதை நீங்கள் பெறுவதற்குத் தான் இப்போது பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

சுகக் கேடு என்பது மனிதனுக்கு இருள் சூழும் நிலையே. வேதனையோ வெறுப்போ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் வந்தால் இருள் சூழும் நிலையாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

செயல் குன்றி… வலிமை இழந்து… நல்லதைப் பெற முடியாத நிலையிலும்… மகிழ முடியாத நிலையிலும் வந்து விடுகின்றது.

இதிலிருந்து விடுபடும் ஆற்றலை நாம் பெறுவதற்கே ஞானிகள் “தை பிறந்தால் வழி பிறக்கும்…” என்று தெளிவாக்கியுள்ளார்கள். சூரியனால் வளர்க்கப்பட்டதை எடுத்து அதைச் சுவையாகப் (சமைத்து) படைத்து சூரியனுக்கு அர்ப்பணிப்பதாகக் காட்டினார்கள்.

சூரியனுக்குப் படைக்கச் சொன்னதன் காரணம் என்ன…?

சூரியனின் வெப்ப காந்தங்கள் தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வு எதுவோ… அதனின் உணர்வு வலு கொண்டு அவை அவை கவர்ந்து அதைக் கொண்டு தான் தாவர இனங்கள் எல்லாமே உருவாகின்றது.

அதைப் போன்று…
1.மனிதனான பின் நாம் பலவற்றையும் சேர்த்து சுவைமிக்க உணர்வை... உணவை (பொங்கலை) உருவாக்குகிறோம்
2.அதை ஆவியாக… கலவைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
3.ஆனாலும் அதில் உள்ள சத்தை நாம் உணவாக உட்கொள்கிறோம்… மகிழ்ச்சி தோன்றுகிறது.

பலசரக்குகளைப் போட்டுச் சமையல் செய்யும் பொழுது வெளிப்படும் நல்ல மணங்களை.. அனைத்தும் கலந்த அந்தச் சக்தியின் தன்மைகளச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலை தான்... இருந்தாலும் சூரியன் கவர்ந்து கொள்கிறது. நாம் உணவாகச் சமைத்து நமக்கு வேண்டிய சுவையாக்கி நல்ல உணவாக உட்கொள்ளும் பொழுது அந்தச் சுவையின் உணர்ச்சி (மகிழ்ச்சி) வெளி வருகிறது… சூரியன் அதையும் கவர்கிறது.

1.சூரியன் கவர்ந்த அந்த மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் நமது ஆன்மாவாக மாற்றி
2.நாம் சுவாசித்து உயிரிலே படும் பொழுது மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்ச்சிகளை ஊட்டி
3.எல்லோருக்கும் அந்தச் சந்தோசத்தை ஊட்டுகின்றது.

அத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவதற்குத் தான் சூரியனுக்குப் படைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

மகரிஷிகளின் வம்சமாக நாம் உருவாக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி...” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்... சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்... சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்... பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்... பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்... பூமியும்... பூமியின் வளர்ச்சியும்... பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை... மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க... ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து... வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்...!

அப்படிப்பட்ட வழித் தொடரில்... பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது...? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து... சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்... இந்த நேரத்தில் மழை வரும்...! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்...” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்... மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த... தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...!

February 2, 2022

பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்...!

 

கலி...! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி...!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது...
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது...? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.

1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க...
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
5.ஆக... சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது என்று தெளிவாக்கினார்.

உதாரணமாக... தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற... ஊற்ற... ஊற்ற... அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.

அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட... விட... அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது...? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்... அது தான் தைப் பொங்கல்...!

ஆகவே... பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி... பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.

1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்...” நிச்சயம் உங்களுக்குள் வரும். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

ஒரு ஆடு முன்னாடி போனால் பின்னாடியே மற்ற ஆடுகள் செல்வது போல் தான் இன்றைய அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது - ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு...!” என்பதை அறியவில்லை... உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன் எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
குணங்களிலும்…
செயல்களிலும்…
உருவ மாற்றத்திலும்…
வண்ணத்திலும்…
ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு... மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை...” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து... தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ... அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்...!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்...?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.

February 1, 2022

சூரியனுக்கும்… உயிருக்கும்… துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான தனித் தனி செயலாக்கங்கள்

 

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே பொங்கச் செய்கின்றது அதனதன் வாழ்விற்கு அதனதன் நிலையைக் கொடுக்கின்றது. ஆனால் மனிதன் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் செலுத்தி வாழ்க்கையில் வரும் இருளை நீக்குதல் வேண்டும்.

1.சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குகின்றது
2.நமது உயிரோ மற்ற அணுக்களின் தன்மையை அறிவாக இயக்கச் செய்கின்றது
3.துருவ நட்சத்திரமோ இருளை வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

நம் உடலில் தெரிந்தோ தெரியாமலோ தீமையான அணுக்கள் உருவானால் அந்த அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி அதனின் வீரிய உணர்வு பெற வேண்டும் என்று செலுத்தினால் அது ஒளியின் தன்மை பெறும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நல்ல மருந்தினை உருவாக்கி நோயுற்ற உடலில் செலுத்தப்படும் பொழுது அது இரத்த நாளங்களில் கலந்து மற்றவையுடன் சேர்த்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகரும் உணர்வுகள் நம் சிரசு பாகம் இருக்கும் உயிருடன் கலந்தால் அது ஈஸ்வரலோகம். உயர்ந்த குணத்தை உருவாக்கி அந்த அணுவின் கருவாக நம் இரத்த நாளங்களில் சேர்க்கின்றது… இந்திரலோகமாக மாறுகிறது.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளில் இணையப்படும் போது பிரம்மலோகமாக மாறுகிறது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ இந்த உணர்வின் இயக்கமாக அது இயக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அதன் வழி கொண்டு நமது வாழ்க்கையில் தெளிந்த மனதையும் உயர்ந்த உணர்வுகளையும் உருவாக்கி பேரின்பப்பெரு வாழ்வு வாழச் செய்யும் அருள் உணர்வுகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.

1.உலகில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

காரணம் உலக மக்கள் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு.

எல்லோருடைய உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்… கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்பது போல்
1.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருளொளி நமக்குள் பெற வேண்டும் என்றும் நாம் எண்ணும் பொழுது
3.நமக்குள் இருக்கும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றுகின்றது.

அரிசியையும் பருப்பையும் சர்க்கரையும் பாதாமையும் முந்திரியையும் போட்டுச் சுவையாகப் பொங்கலை உருவாக்குவது போன்று நமக்குள் பல சரக்குகள் இருந்தாலும்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு எல்லோரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நுகர்ந்தால்
2.அதுவே நமக்குள் சுவையாக உருவாகின்றது... பொங்கல்…!
3.இது தான் தை… “இணைத்தல்” என்று நமக்குள் சேர்க்கின்றது.

ஆகவே… எந்த உணர்வின் தன்மையை இணைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்ட நிலையில்… உலக மக்கள் அருள் ஞானம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளை நீக்கி மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற தியானிப்போம்… நம் உடலுக்குள் அதை உருவாக்குவோம்
2.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… மகிழ்ந்து வாழும் சக்தியை நம் உடலில் உருவாக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் பிறரை மகிழச் செய்யும் நிலையாக நமக்குள் உருவாக்குவோம்.
4.உலக மக்கள் அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வளர “குரு அருளை” நமக்குள் பெருக்குவோம்
5.குரு அருளைத் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம்
6.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறத் தியானிப்போம்… தவம் இருப்போம்.
7.அந்தத் தவத்தின் பலனாக அனைத்து மக்களும் உடல் நலம் பெற… நம் உடலில் உள்ள அணுக்களும் நலம் பெற
8.நம் சொல் கேட்போர் உணர்வுகளை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தியாக ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுத்துவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

கருகும் நிலையில் உள்ள கலியை மாற்றிடவே மகரிஷிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது - ஈஸ்வரபட்டர்

 

அன்றைய மெய் ஞானிகளின் செயலால்... மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சியாக இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று... இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை...
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை...!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்... மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி... மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்... அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்... குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்...
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்... உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு...
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்... அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.