ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2016

அதிர்வு கொண்டு அறியும் விஞ்ஞானியின் செயல்

இன்று பார்க்கின்றோம், விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றனர்.

பூமியிலிருந்து எதிர் அலைகள் (ECHO) எகோ வருவதை அதாவது கம்யூட்டர் சாதனத்தில் விஷத்தின் உணர்வை ஒலி அலைகளைப் பதிவாக்கும் நாடக்களை வைத்து அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகளை உற்று பூமியை நோக்கிக் காட்டுகின்றார்கள்.

அப்படிக் காட்டப்படும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி
அந்த எலக்ட்ரிக் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
அதன் நிலையில் மணமும் அதன் உணர்ச்சியின் வேகமும் கண்டறிந்து
நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

இப்போது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மிருகங்களின் உணர்வுகள் இந்த மண்ணுக்குள் மறைந்திருக்கிறது. மறைந்து பாறைகளாகக் கூட ஆகிவிட்டது என்று இதைக் கண்டுணர்கின்றார்கள்.

பின், அங்கே தேடிச்சென்று மேல் பரப்பை மாற்றிவிட்டு குறைந்தது 100 அடிக்குக்  கீழ் அது அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தை எடுக்கின்றான் விஞ்ஞானி.

அந்த உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். சேர்த்துக் கொண்ட பின் இதே கம்ப்யூட்டரால் அதிலிருந்து வரும் அலைகளை எடுத்து
இதன் தசையின் உடல் அமைப்பும்
இதன் உணர்ச்சியின் செயலும்
இது எதை உணவாக உட்கொண்டது என்றும் பார்க்கின்றான்.

உணர்வின் அதிர்வுகளைக் கண்டு
இன்று அந்த மிருகத்தின் உருவத்தையே
இந்தக் கம்யூட்டர் காட்டுகின்றது.

இதை நாம் விஞ்ஞான உலகில் இதை நாம் பார்க்கின்றோம். நிரூபிக்கின்றான்.

முன்பு கை ரேகை பட்டால், திருடன் ஒரே ரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு திருடனைப் பிடிப்பார்கள். ரேகையை வைத்து “ஓகோ இவன் தான்..,” என்று பிடிப்பார்கள்.

இப்பொழுது அதுவெல்லாம்  இல்லை.

எலக்ட்ரிக் எலக்டரானிக் என்ற நிலை வரும் போது அந்த ரேகைப்பட்டால்  இவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது.

கம்யூட்டரில் அந்த அதிர்வுகளைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டி  இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் அதில் மோதப்படும் போது
இந்த மனிதன் இவன் எப்படி ரூபமானான்?
இவனுடைய குணங்கள் என்ன?
இவன் எப்படி இருந்தான்? என்று அவனது ரூபத்தையே காட்டுகின்றது.

இப்படி இந்த விஞ்ஞான அறிவு காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழுகிறோம் என்றால் இன்னும் அறியாமையில் நாம் வாடுகின்றோம்.

ஆக மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வுகள் தான் வருகிறதே தவிர
மனிதனைக் காக்க வேண்டும்,
தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள்
இங்கே இம்மியளவும் வரவில்லை.

எந்திரத்தின் துணை கொண்டு 
எந்திரம் கூட ஒன்றைக் கன்ட்ரோல் செய்கின்றது.

ஆனால் மனிதன் தன் மனைதை நிலைப்படுத்தித் திருத்த முடியாதபடி உணர்ச்சியின் தன்மை கொண்டு
தவறுகள் செய்வதும் கொலைகள் செய்வதும்
தன் இச்சைக்கு இன்பத்தைப் பெறுவதற்குத் துன்பத்தை ஊட்டுவதும்
இத்தகைய நிலைகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த உலகில்.

March 11, 2016

எலக்ட்ரானிக்கில் பூசப்படும் கெமிக்கல் முலாமும், ஊனுக்குள் யாம் பதிவாக்கும் அருள் ஞானிகளின் முலாமும்

விஞ்ஞானி நிரூபிக்கின்றான். ஒரு காந்தப்புலனறிவில் பல கெமிக்கல் கலந்த நிலைகளை ஏற்றிவிடுகின்றான். பின், அதனுடைய சுருதிகளை அங்கே அதைத் தட்டி எழுப்பப்படும்போது அந்த உணர்வு வருகின்றது.

ஏனென்றால் மனிதனுக்குள்ளும் எலக்ட்ரான்தான், ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரான். அந்த உணர்வின் அறிவாகும்போது
அவன் எண்ணிய உணர்வு அதிர்வுகளாகின்றது. 
அதிர்வுக்குத்தக்க இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.

உருவத்தின் தன்மையை இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை அந்த எலக்ட்ரான் .எண்ணங்களை எண்ணும் போது அதற்குக்தக்க உருவத்தையே அந்த எலக்ட்ரிக் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகிறான்.

இது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் அந்தக் கெமிக்கலைக் காட்டுகின்றது.

இதே போல அளவுகோலின் உண்மையின் உணர்வின் தன்மையை இவன் எடுக்கப்படும்போது மனிதனுடைய சிந்தனை - எல்லாம் எலக்ட்ரான் என்ற நிலை வரப்படும்போது
அதில் எண்ணும் கூர்மை அதைக் கவர்ந்து
இவனுக்குள் அடிக்கச் செய்து இந்த உணர்வு இதற்குள் பதிந்து
சில தத்துவங்களைக் கொண்டு வருகிறது.
கம்யூட்டருக்குள் இருக்கும் எலக்ட்ரானிக் - பதிவான அந்தக் கெமிக்கல்

நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டபின்  நமக்குள் ஊழ்வினை என்ற இந்தக் கெமிக்கல் உண்டு.

ஆக, உற்றுப் பார்த்த உணர்வைப் பதிவாக்கி மீண்டும் உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் அறிகின்றோம்.

அன்று புலஸ்தியர் புலன் இயக்கத்தை கண்டுணர்ந்த அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவோம் என்று ஊழ்வினையாகப் (ஊழ்வினை என்ற கெமிக்கலுக்குள்) பதிவு செய்து செய்துகொள்ளுங்கள்.

உபதேச வாயிலாக
உங்களுக்குள் பதிவு செய்த உணர்வு ஒவ்வொன்றிலும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்ததனால்
இதுவே உங்களுக்குள் தியானமாகின்றது.

உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் தெரிந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெளிந்த நிலைகள் நடந்திட இது உதவும்.

விஞ்ஞானிகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்து எந்திரத்தை இன்று இயக்குகின்றார்கள்.

அதில் ஒன்று அழுத்தமாகும்போது,
ஒன்றின் அழுத்தம் அதிகமாகும் போது
அதனின் அழுத்தம் அதிகமாகி விட்டால்
அது உடனே மோதி மாற்றி விடுகின்றது.

இதைப் போலத்தான் எலக்ட்ரான் என்ற ஞானியின் உணர்வின் பவரை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

மற்றொரு தீமை உங்களைத் தாக்கப்படும் போது அதை விலக்கி
ஆனால் சிந்தித்து உங்களைச் செயலாக்கும் தன்மைக்குத்தான்
இங்கே கொண்டு வருகின்றோம்.

March 10, 2016

“எனக்குத் தீமை செய்தான் அவனுக்கு நான் எப்படி நன்மை செய்வது?” என்று எண்ணினால் நாம் தீமை தான் செய்வோம்

நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால்
அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து உதவி செய்கின்றோம்.

ஆனால், நண்பன் மேல் சிறிது வெறுப்பாகிவிட்டால் என்ன செய்கிறோம்?

எனக்குத் தீங்கு செய்தான்,
அவனுக்கு எப்படி நன்மை செய்வது?
என்ற உணர்வை எண்ணிவிட்டால்
மீண்டும் நாம் தீமை தான் செய்வோம்.

ஆகவே, தீமை செய்யும் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது நமக்குள் அந்தத் தீமையை விளைவிக்கும் அணுக்கள் உருவாகின்றது.

நண்பன் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.

அந்த உணர்வால் தீமையிலிருந்து விடுபடும் அணுக்கள் உருவாகி நமக்குள் தீமையை நீக்கும் சக்தி உருவாகின்றது.

உதாரணமாக, நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது ஒரு கணக்கைப் பாருங்கள். சரியாகப் பார்க்க முடிகின்றதா? ஒரு துணியையோ மற்ற பொருளின் தரத்தைப் பாருங்கள். அந்தக் கோபமாக இருக்கும் பொழுது பொருளின் தரத்தை உங்களால் நிர்ணயிக்க முடியாது.

கோபமாக இருக்கும் பொழுது நண்பராக இருந்தாலும் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே அவரிடமும் கோபமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். நீ இந்த நேரத்தில் ஏன் வந்து வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்?

அவர் ஒரு நல்லதைச் சொல்வார்.

“அட.., போய்யா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு, ஏனய்யா வம்பு பண்ணுகிறாய்?” என்றுதான் சொல்வோம்.

அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம். இதைத்தான் கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உருவாக்குவது இந்த உயிர். அதை உடலாக்கி மீண்டும் எண்ணும் பொழுது அதைச் செயலாக்குகின்றது அதன் நினைவுகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப் பதிவாக்கி இந்தப் பேருண்மையின் நிலையை நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது உங்களை அறியாது வரும் இருளை நீக்கிவிட்டு
மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
பெறவேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றேன்.

இயற்கையின் நிலைகளைத் தெளிவாக்குவதற்காக எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியத்தில் உள்ள கருத்தினை நாம் நுகரப்படும் பொழுது அந்தக் கருத்தை நமக்குள் அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

ஒருவரை 4 நாட்கள் தமாஷாகக் கேலி செய்து பாருங்கள். அந்த உணர்வுகள் விளைந்து கொண்டே வரும்.

அடுத்து அவருக்குள் என்ன ஆகும்?

நாம் சும்மா இருக்கின்றோம், இவர் பார் தமாஷ் செய்து கொண்டே இருக்கின்றார் என்று நம் மீது வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே வருவார்.

ஒரு நாளைக்கு என்ன ஆகும்?

நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன், பொறுத்துக் கொண்டே இருந்தேன். பார் இப்பொழுது உன்னை என்ன செய்கின்றேன்? என்ற நிலைகள் இயக்கம் ஆகும்.

நாம் சாதாரணமாக இருப்போம்.
இது கடும் விளைவுகளை உண்டாக்கும்.
அது வளர்ச்சி இப்படி முதுமையான நிலைக்குக் கொண்டு வரும்.

அதே மாதிரி நாம் ஒருவர் சண்டை போடுவதை வேடிக்கையாகப் பார்க்கின்றோம். நாளடைவில் நாம் அடுத்தவர்களிடம் “அவர் ஒரு மோசமானவர்” என்று சொல்வோம்.

இந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகிவிட்டால் நம்மையே மோசமான ஆளாக மாற்றக் கூடிய அளவிற்கு அது வளர்ந்து விடும்.

ஆக, எதை மோசம் என்று பெறுகின்றோமோ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நமக்குள் சேர்த்து
என் பார்வை அவர்களை நல்லவராக ஆக்க வேண்டும்.
நல்லதை நுகரும் சக்தி அவருக்குள் வளர வேண்டும் என்று எண்ணவேண்டும்.

ஏனென்றால், அவர் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே பட்டு கண் கருவிழி இங்கே பதிவாக்கிய உணர்வினை நுகரும் பொழுது தான் அறிகின்றோம். அதனுடன் நாம் இந்த நிலையை இணைத்துவிட்டோம் என்றால் அது அடங்குகின்றது. 

நமக்குள் அந்தத் தீமையை வளர்க்கும் தன்மைகளைக் குறைக்கின்றது.

இதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்.

நாம் மனிதனின் வாழ்க்கையில் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

March 8, 2016

தர்மத்தையும் நீதியையும் செய்தேன், எனக்குப் பாவங்கள் வருமா..? என்று கேட்பார்கள்

ஒருவர் கடுமையாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். நாம் இரக்கம் கொண்டு அவரை உற்றுப் பார்த்தோம் என்றால்
அவருக்குள் விளைந்த அந்த வித்து
நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

நாம் இரக்கத்துடன் அவருக்கு உதவி செய்தோம் என்றால் அதிலிருந்து வந்த உயிரான்மா அவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.

நாம் நல்ல எண்ணம் கொண்டு அவருக்கு உதவி செய்தாலும்
அந்த நல்ல எண்ணத்திற்கு அவர் உடலிலே வலு இல்லை.
ஆனால், அவருக்கு எண்ணங்கள் வரும்.

இருந்தாலும் உதவி செய்த நன்றிக்கு யார் உதவி செய்தாரோ அவரின் எண்ணம் கொண்டு இந்த உயிரான்மா வெளி வந்தது என்றால்
யாருடைய உணர்வு தன் உடலில் அதிகமாக இருக்கின்றதோ
அந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து
அந்த உடலில் வந்த நோயும்
அவர் குடும்பத்தில் வந்த கலக்கங்களையும் உண்டாக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் வளரப்படும் பொழுது தன்னைக் காட்டிலும் கொடூர மிருகங்களின் உடல்களுக்கு மாறுகின்றது.

மனிதனானபின் ஒரு மனிதன் உடலில் நோயாகி விட்டால் அந்த நோயின் உணர்வுகள் அது எண்ண வித்தாக இந்த மனித உடலில் உருவாகி அந்த நோயாளி உடலை விட்டு வந்தபின், உதவி செய்த உடலுக்குள் வந்து அதே நோயை உருவாக்குகின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

ஆகவே, மனிதன் நாம் தர்மத்தையும் நீதியையும் செய்யலாம்.
நான் தர்மத்தைச் செய்தேன்
எனக்கு எப்படிப் பாவம் வரும்? என்று கேட்கலாம்.

வேதனைப்படுவதை கண்ணால் தனக்குள் பதிவு செய்யும் போது
ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிவிடுகின்றது.

எந்த எண்ணத்தைக் கொண்டு அந்த உடலில் நோய் வந்ததோ அதே உணர்வு காற்றிலே படர்கின்றது. மனிதனான உடலுக்குள் இது பதிவான பின் அதை இழுத்து நமக்குள் அந்த நோயின் தன்மை விளைகின்றது.

பின் நமக்கும் இதைப் போன்று பிறர் மேல் அதிக அளவில் அன்பையோ பாசத்தையோ வைத்திருந்தால் அந்த உணர்வுகளை நமக்குள் அதிகமாக விளைய வைத்துவிட்டால் என்ன ஆகும்?

இன்று நம் குழந்தையைப் பாசமாக வளர்க்கின்றோம்.

அவன் நாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
அந்தப் பாசத்தின் உணர்வுகள் உச்சக்கட்டம் அடைந்து
அவன் எதிர்காலம் என்ன ஆகும்?
என்ற வேதனையை எடுக்க நேருகின்றது.

வேதனை என்ற இந்த உணர்வுகள் விஷமாக மாறுகின்றது. வேதனை என்பதே விஷம்.

இப்படி அவனை எண்ணி வேதனையை உருவாக்கி உருவாக்கித் தன் உடலுக்குள்
அவனைக் காத்தருளிய அந்த உடலுக்குள் பட்டபின்
கை கால் குடைச்சல், இருதய நோய் பட படப்பு
இத்தகைய நோய்கள் உருவாகிவிடுகின்றது.

அவ்வாறு உருவாகிவிட்டால் கடைசியில் நமது முதுமையின் காரணமாக அவனின் நினைவு கொண்டே இந்த உடலை விட்டுச் செல்கிறோம்

அவ்வாறு உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அவன் உடலுக்குள் சென்று அவனைக் காப்பதற்குப் பதில்
அவனில் அவனால் விளைந்த
நமது உடலில் விளைந்த இந்த நஞ்சினை
அவன் உடலுக்குள் பாய்ச்சி
அவனைத் துரித நிலைகள் கொண்டு வீழ்த்திவிடுவோம்.

அப்பொழுது சொல்வார்கள். அப்பா அம்மா இருந்த வரையில் அவனைக் காப்பாற்றினார்கள்.

அவன் அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.
இவன் உடலில் இத்தனை நோய்கள் வந்துவிட்டது
இதைக் கேட்போர் யாரும் இல்லை
மடியும் தருணத்திற்கு அவன் வந்துவிட்டான் என்பார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்..

March 7, 2016

ஒளி சரீரம் பெற்ற மகரிஷிகளின் தொடர்பு கிடைத்தது தாய் கருவில் நான் பெற்ற பூர்வ புண்ணியம்தான் - ஞானகுரு

நம் உடலே பெரிய காடு.
நமக்குள் எத்தனையோ குணங்கள் உண்டு.

மனிதனுக்குள் இருக்கும் இந்த உணர்வுகளில் தீமைகளையும் பகைமைகளையும் நீக்கிய அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தினால் அது பகைமைகளை அகற்றும்.

தீமைகளைப் பற்றற்றதாக மாற்றும். மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றச் செய்யும். பற்றுடன் பற்று பற்றற்றதாக இரு என்று நம்மை இருக்கச் செய்யும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வோ
பழி தீர்க்கும் உணர்வோ,
வெறுப்பின் உணர்வோ,
வேதனையின் உணர்வோ
எப்படி வாழ்வேன் என்ற நிலைகளைப் பற்றிடாது என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.

நமக்குள் தீமைகளைப் பற்றற்றதாக இந்த வாழ்க்கையில் மாற்றிடல் வேண்டும். எவர் அதைப் பெறுகின்றனரோ இது கடைசி எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் இன்று அழியலாம். இந்தப் பிரபஞ்சம் அழியலாம்.

ஆனால், இதிலே விளைந்தது உயிரணுக்களாகத் தோன்றி
மனிதனாகி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின்
இந்தப் பிரபஞ்சத்தை விட்டு அகன்று
தன்னுடைய பேரண்டப் பிரபஞ்சத்துடன்
அதில் வாழும் நிலைகளை இது பெறும்.

ஒவ்வொரு அண்டத்திலும் நமது பிரபஞ்சத்தைப் போன்று வாழ்ந்த மனிதர்களில் வந்தவர்களும் இதைப் போல ஒளிச் சரீரமாக ஒதுங்கியுள்ளார்கள்.
அதன் உணர்வின் வட்டத்தில் சேர்ந்து
ஒளியின் சரீரமாக என்றென்றும் அது வாழ்வார்கள்.

ஆனால், இந்தச் சூரியன் அழியலாம். மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றும் அழிவில்லாத நிலை அடைந்து என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலைகள் காவியத் தொகுப்புகளில் மகாபாரதத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இதனை யாம் (ஞானகுரு) அறிவதற்கு
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி
எனது தாய் கருவில் விளைந்த பூர்வ புண்ணியம்
என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், நான் படிக்காதவன்.
இதை (மெய் உணர்வை) நான் அளவு கோல் வைத்துச் சொல்ல முடியாது.
அருள் ஞானிகளின் உணர்வுகள் எனக்குக் கிட்டியது.

என் தாயின் கருவிலே வளரப்படும் பொழுது எனக்குள் பதிந்த உணர்வு தான்
இந்த வழிக்கு குருவிடம் எம்மை அழைத்து வந்தது.
அதன் வழியில் அண்டத்தையும் அறியும் தன்மை வந்தது.
எனக்குள் இதைப் பெருக்க முடிந்தது.

20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உண்மையின் உணர்வைத் தெரிந்து கொண்டபின் நீங்கள் ஒவ்வொருவரும் இயற்கையின் பேருண்மைகளை அறிய முடியும்.

தன்னையறியாது வந்த இருளைப் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களுக்கு ஊட்டச் செய்கிறோம். உங்களை நீங்கள் நம்புங்கள்.

March 6, 2016

குரு காணிக்கை எது?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற சக்தியை அதன் வழி எனக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

அந்த ஞானிகளின், மகரிஷிகளின் சப்தரிஷிகளின் உணர்வலைகளையும்,
சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
பெறும் தகுதியை எற்படுத்தினார்.

நான் பெற்றேன், உங்களுக்கும் அதைச் சொல்கிறேன்.

ஒரு வித்தினை விளையை வைத்து அதில் வரும் பல வித்துகளாக உருவாக்கி நாம் நிலத்தில் ஊன்றினால் எந்த வித்தினை உருவாக்கினோமோ அதன் சக்தியைப் பெறுவது போன்று உங்களில் இதைப் பெறவேண்டும் என்ற பேராசையில் தான் நான் இதைச் செய்கின்றேன்.

எமது குரு காட்டிய நிலைகள் இங்கே யாரெல்லாம் வந்தீர்களோ, உபதேசத்தைக் கேட்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

·         எங்கள் குடும்பத்திலிலுள்ளோர் நலமாக இருக்கின்றோம்,
·         குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கின்றது,
·         குடும்பத்தில் சகோதரத்துவம் வளர்ந்திருக்கின்றது என்று
நீங்கள் எல்லாம் எப்பொழுது எம்மிடம் சொல்கின்றீர்களோ அப்பொழுதுதான் எமக்குள்ளும் அந்தப் பேரின்ப உணர்வுகள் வளரும்.

·         எங்கள் குடும்பத்தில் தொழில் வளர்கின்றது.
·         குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்கின்றோம்,
·         மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறுகின்றோம்
·         எங்கள் பார்வையால் தீமைகள் போகின்றது என்று
எப்பொழுது சொல்கின்றீர்களோ அதைத்தான் குரு காணிக்கையாக நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளரப்படும் பொழுது தீமையற்ற நிலைகளை எனக்குள் உருவாக்குகின்றது. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் எனக்குள் பெருகவும் செய்கின்றது.

ஏனென்றால், சூரியன் தனக்குள் மற்ற நட்சத்திரங்களின் நிலையும் விஷத் தன்மை கொண்ட கோளின் உணர்வுகளையும் தனக்குள் எடுத்து
நஞ்சின் தன்மையை மாற்றிவிட்டுத்
தனக்குள் ஒளியின் சுடராகி உலகையே காக்கின்றது.

அதைப் போன்று உங்களுடைய உணர்வுகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று உங்கள் பார்வையால் பேச்சால் மூச்சால்
கேட்போர் உணர்வுகளில் இந்தத் தீமைகளை அகற்றி
அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படும் நிலைகள் என்று பெறுகின்றீர்களோ
அது உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் ஞானம் வளர்ந்து
இனி பிறவியில்லா நிலையை அடைய உதவும்