
பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது
நாம் தவறே செய்ய
வேண்டியதில்லை.
கோப உணர்வு கொண்டு ஒருவன் மற்றவனைத் தாக்குகிறான் என்றால் அதைக் கண்ணுற்றுப்
பார்க்க நேர்ந்தால் அவன் உடலிலே விளைந்த தாக்கும் உணர்வுகள் அந்தக் கார
உணர்ச்சிகள் வெளிப்படுவதை அவன் உடலிலிருந்து வெளி வந்த அந்த
உணர்வலைகளைக் கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
1.உற்றுப்
பார்த்த இந்த உணர்வின் சத்தைக் கண்கள் ஊழ்வினையாக நமக்குள்
பதிவு செய்கின்றது.
2.பதிந்த
உணர்வுகளை நாம் ஈர்க்கப்படும் பொழுது உடலுக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உயிருக்குள் படும் பொழுது எரிச்சலும் வேதனையும் வருகிறது.
நல்ல குணம்
கொண்டு பார்ப்பதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.
உதாரணமாக ஒரு “சப்” என்று இருக்கும் பொருளுக்குள் காரத்தை இணைத்து விட்டால் “காரத்தின் சுவையே” முன்னாடி வரும்.
இதை போலத்
தான் தவறு செய்வோரை உற்றுப் பார்த்து வேகமாக “இப்படிச் செய்கிறானே…” என்று அந்தக் கொடூர உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வை நம் கண்
கவர்ந்து உடலுக்குள் பதிவு செய்ததை உடலுக்குள் விளையும்
தன்மையாக மாற்றி விடுகின்றது.
நாம் எண்ணிய உணர்வுகள்
அது ஆன்மாவாக வருகின்றது… சுவாசித்த பின் உயிரிலே ஒன்றுகின்றது. நல்ல
குணங்களுடன் அது கலக்கப்படும் பொழுது அவன் செய்த தவறின் உணர்வாக உடலுக்குள் வேகமாக
இயங்குகின்றது.
1.கோபமான
அந்த உணர்வலைகள் நம் சாப்பிட்ட உணவுடன் கலந்து இரத்தமாக
மாறுகின்றது.
2.இப்படி
அந்த வேகமான நிலைகள் இரத்தமாக மாறி வரும் பொழுது இருதய வால்வுகளில்
எரிச்சலும் வேதனையும் வருகின்றது.
3.எரிச்சலான
உணர்வுகள் உடலுக்குள் வடிகட்டப்படும் பொழுது உடலெல்லாம் எரிச்சலும்
4.நம்
சொல்லிலே எரிச்சலும்… எந்த ஒரு பொருளைப்
பார்த்தாலும் எரிச்சலும் நமக்குள் உருவாகத் தொடங்குகிறது.
நம்மைப்
பார்ப்போர் ஆன்மாவில் இது பட்ட பின் நம்மை அறியாமலே அவர்களும் எரிந்து விழுவார்கள்…
நம்மை வெறுப்பார்கள். ஆனால் நாம் தவறு
செய்யவில்லை.
சண்டையிடுவதை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது “இரத்தக் கொதிப்பை
உருவாக்கும் செல்கள்” அதிகமாக விளைந்து விடுகின்றது. நாம் மகிழ்ந்து உணர்ந்த உணர்வுகள் இனிப்பு… இதிலே
கலக்காது பிரிந்து சென்று விடுகின்றது.
இனிமை கொண்ட
நண்பர்களிடத்திலே பழகினால் அடிக்கடி அங்கே கோபப்படும் பொழுது “இவன் கோபக்காரன்…” என்று அவர் நம்மிடமிருந்து விலகுவது போல
1.சுவை
மிக்க உணர்வை உருவாக்கி அந்தச் சுவையை அறிவிக்கும் உணர்வுகள்
இரத்தத்தில் கலந்திருப்பினும்
2.காரத்தின்
நிலைகள் எல்லை கடந்து சென்ற பின் இந்தச் சுவையான நிலைகள் பிரிந்து விடுகின்றது.
3.அதனால்
ஜீரணிக்கும் சக்தி இழக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்தாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு
4.சர்க்கரைச்
சத்து வரும் பொழுது இரத்தத்தில் அது அதிகரிக்க நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையச்
செய்கின்றது.
அதே சமயம்
இறுகிய உணர்வு கொண்ட இந்தக் காரத்தின் உணர்ச்சிகள் சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது கண்கள்
சிவப்பதும்… இரத்தக் கொதிப்பு ஆவதும் இது இரண்டுமே
எதிர்மறையாகும் பொழுது “மயக்கங்கள்”
வருகின்றது.
மனிதனுடைய
சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது… மனிதன் கீழே விழுந்து விடுகின்றான்.
சர்க்கரைச்
சத்தும் இரத்தக் கொதிப்பும் இரண்டும் வந்தாலும் சர்க்கரைச் சத்திற்கு மருந்து
கொடுத்தால் இரத்தக் கொதிப்பிற்கு ஒத்துக் கொள்ளாது. இரத்தக்
கொதிப்பிற்கு மருந்து கொடுத்தால் சர்க்கரைச் சத்திற்கு ஒத்துக் கொள்ளாது.
நெகட்டிவ்
பாசிட்டிவ் என்ற நிலைகளில் இயங்கும் பொழுது
1.சுவாசப்
பையிலே சளிகள் உருவாகத் தொடங்கும்… மூச்சு இறைக்கவும் தொடங்குகிறது.
2.உடலுக்குள்
வரும் உமிழ் நீர்களை இலகுவாக்கி அதனின் தன்மை குறைக்கும் நிலைகளில் ஜீரணிக்கும்
சக்தியையும் இழக்கச் செய்கின்றது.
கோபத்தை
அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அதிகமாக அந்தப்
பித்தத்தைச் சுரக்கின்றது. எவ்வளவு கடினமான பொருளைச் சாப்பிட்டாலும் பித்த சுரப்பி இயங்கி சாப்பிட்ட
ஆகாரத்தை ஜீரணிக்கின்றது.
ஆனால் கார உணர்வுகள்
அதிகமாகும் பொழுது பித்த சுரப்பியின் இயக்கம் அதிகரித்து வேகமாகப் பீய்ச்சப்படும்
பொழுது பசியும் அதிகரிக்கும். பசியினால் அதிகமாகச் சாப்பிடச் சாப்பிட
பித்த சுரபி அதிகமாகச் சுரக்கச் சுரக்க விஷத்தின் தன்மை அதிகரித்து உடலில்
உறுப்பின் இயக்கங்கள் குறைய நேர்கின்றது.
சீராக இயக்க
வேண்டும் என்ற நிலை வரும் பொழுது சர்க்கரையின் தன்மை அதிகமாக இருப்பதால் அதற்கொத்த
செயலைச் செயல்படத் தொடங்குகிறது. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்
பொழுது இதனுடைய செயல் அதிகரிக்கிறது. உறுப்புகள் சோர்வடைகிறது.
அதே சமயத்தில் சிந்திக்கும் போது அதிகக் கோபமும் சுவையான பொருள்களை உட்கொள்ள முடியாத
நிலையும் வரும்.
1.சர்க்கரைச்
சத்து அதிகரிக்கப்படும் பொழுது செவ்வணுக்கள் வளராதபடி
2.நுகர்ந்த
உணர்வுகள் மலங்களாகக் கழிக்கப்படும் பொழுது இரத்தத்தை நீராக மாற்றும் நிலை
ஆகிவிடுகிறது.
3.இதனால்
மற்ற உடலின் எஞ்சிய பாகங்கள் செயலற்றதாகிக் கிருமிகள் உருவாகித் தசைகள் அனைத்தும்
அழுகும் நிலை ஏற்படுகின்றது.
4.விஷங்கள்
அதிகரிக்கப்படும் பொழுது வேதனை அதிகரிக்கின்றது… உறுப்புகள்
பலவீனம் அடைகின்றது.
இதற்கு
மத்தியில் காரத்தின் நிலையும் உச்சகட்டம் அடையப்படும் பொழுது காரத்துடன் விஷத்தின்
தன்மையும் கலந்து விட்டால் சிறு மூளையின் பாகம் தாக்கப்படும் பொழுது நரம்புகளைச்
சுண்ட வைத்து விடும்..
ஒரு மிளகாயை
வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்… வாயிலே உமிழ் நீர் காணாது போய் விடுகின்றது. இது போன்று நஞ்சின் தன்மை சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது “நரம்பியல்களை” அது முடக்கி விடுகின்றது.
உதாரணமாக
கார்களில் பிரேக் இடுவதற்காக பிரேக் ஆயில் கொண்டு அழுத்தி அதன் மூலமாக இயந்திரத்தை
இயக்கி அதை நிறுத்துவார்கள். இது போன்று தான்
1.நம்
நரம்புகளுக்குள் உருவாகும் ஆசிட்டின் தன்மையின் இயக்கங்கள்
2.நாம் எண்ணப்படும்
பொழுது அதிலிருக்கக்கூடிய காந்தப்புலனின் தன்மைகள் ஊடுருவி
3.கை
கால்களை மடக்குவதும் அங்கங்களை இயக்குவதும் செயலாக்குவதும் இதன் வழி தான்.
தீமையான
உணர்வுகளால் (கார உணர்ச்சிகளால்) சிறு மூளை
தாக்கப்பட்ட பின் இரத்தக் கொதிப்பின் அழுத்தம் அதிகரிக்க அங்கே
இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய அலைகள் செயலற்றதாகி விடுகிறது.
1.அதற்குள்
அனுப்பும் ஆசிட் அதனுடைய செயலை இழந்துவிட்டால் கை கால் அங்கங்கள் சுருங்கி விடும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பத்தால்
சண்டையிட்டதை வேடிக்கையாக பார்த்து நுகர்ந்தோம் அதனுடைய வளர்ச்சி தான் இந்த
நிலைக்கு வந்து விடுகின்றது,
இதைப் போன்ற
நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்திகளை
நம் உடலுக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.
காரணம் அந்த
மகரிஷிகள் எத்தகைய நஞ்சினையும் தன் உணர்வின் வலுவால் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு அதை
அடக்கி ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.
அப்படி விண் சென்ற மகரிஷிகள் எத்தனையோ பேர் உண்டு…!
1.அவர்கள்
பெற்ற சக்திகளை நாம் பெற்றோம் என்றால்
2.நமக்குள்
வரும் இத்தகைய தீமைகளை மாற்றி அமைக்க முடியும்… நோய் வராது தடுத்துக் கொள்ள
முடியும்.