கோபத்தின் உணர்ச்சி அதிகமாகி விட்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் கூட அடுத்தவர்கள் செயலைப் பார்த்தவுடனே வெறுக்கும் உணர்வு தான் வரும். மற்ற உணர்வுகள் மோத… மோத… அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தான் நுகருவோம்.
சில பேரைப் பார்த்தோம் என்றால்
1.சந்தோஷமாகச் சொன்னாலே அவருக்கு எரிச்சலாகிக் கொண்டே இருக்கும்... தாங்காது.
2.ஏனென்றால் எதிர்ப்பு உணர்வின் தன்மைகள் அந்த ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடங்களில்
3.இந்தக் கார (கோப) உணர்வின் அணுத் தன்மை… அதிகமாக அந்தப் பாகம் வெடித்து விட்டால்
4.இந்த உணர்வின் அணுக்கள் அங்கே பெருக்கமாகி விடுகின்றது.
5.அப்படிப் பெருக்கமாகி விட்டால் நீங்கள் அடுத்து… நீங்கள் கேட்கும் நிலைகளில் அது மறுக்கப்படுகின்றது
6.மகிழ்ச்சி ஊட்டும் நிலை இழக்கச் செய்து விடுகிறது.
ஆனாலும் அத்தகைய நிலைகள் அதிகமாகி விட்டால் நம் உடல் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் துடிப்பின் தன்மை அதிகரித்துவிடும்.
அப்படி அதிகரித்து விட்டால் காரத்தை வாயில் வைத்தால் ஸ்ஸ்…ஆ… ஸ்ஸ்…ஆ… என்று சொல்வது போல் இந்த உணர்வுகள் அந்த நுரையீரலைச் சீராக இயக்கும் சக்தி இழந்துவிடுகிறது.
அப்போது…
1.நமக்குள் அதிகமான துடிப்பும்
2.ஏதாவது வேலை செய்தால் மிகவும் கடினமாகவும்
3.அதிமாகப் பேசினால் முடியாமலேயும்… போன்ற நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.
ஏனென்றால்… அந்தக் காரமான உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக்கப்படும் போது
1.அந்த அணுவின் கருத்தன்மை இழுத்து உடலுக்குள் உணர்ச்சிகளை உயிருடன் ஒன்றச் செய்து…
2.உணர்வுகளைத் தாங்கி நம் உடலுக்குள் பரப்பச் செய்யும் இடத்தில்
3.அந்த அணுத் தன்மை வெடித்து விட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.
நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா.
ஆகவே… விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்… குறித்த காலம் வரும் போது அணு வெடித்து விட்டால் அதே உணர்ச்சியை ஊட்டும் அணுக்களாக அது மாறுகின்றது. அது தான் பிரம்மா உருவாக்குகின்றான்… விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று சொல்வது.
நாம் நுகர்ந்த உணர்வுகள் காந்தத்தால் (லட்சுமி) ஈர்க்கப்பட்டு அந்த வெப்பத்தால் (விஷ்ணு) இணைக்கப்பட்டு அந்த உணர்வின் தன்மை கருத்தன்மையாக உருவாகும் தன்மை தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று தெளிவாகக் கூறுகின்றனர்.
ஆகவே சிந்திக்கும் இடங்களில் அந்த அணுத் தன்மைகள் வளர்ந்து விட்டால்…
1.நாம் சிந்தனை இழப்பதும்
2.அடிக்கடி நாம் கோபிப்பதும்
3.நம்மை அறியாமலே சிரசில் ஒரு விதமான வலி எடுப்பதும்
4.பிறர் சொல்வது மோதியவுடனே நமக்குத் தாங்க முடியாத நிலை வருவதும்
5.நம்மை அறியாமலே பிறரிடத்தில் கோபிப்பதும் இத்தகைய நிலைகள் உருவாகின்றது.
நாம் ஏதாவது தவறு செய்தோமா… இல்லை…!
கோபமாகப் பேசியவனை உற்று நோக்கினோம். அந்த உணர்வின் தன்மை வலுவாகி அந்த உணர்வின் எண்ண அலைகள் வெளிப்படும் போது அவன் உடலிலிருந்து வரக்கூடியது நமக்குள் வித்தாக மாறுகின்றது.
ஊழ்வினை என்ற வித்தான பின் அந்த உணர்வுகள் நமக்குள் வந்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் அணுத் தன்மைகள் பெருகத் தொடங்குகின்றது.
இது தான் அதில் உள்ள மூலம்.