கணவன் மனைவிக்குள் அன்பு கலந்ததாக இருப்பினும் சில நேரங்களில் கணவர் தொழில் நிமித்தம் கடினமான வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்குள் வரப்படும் பொழுது என்ன நடக்கிறது...?
தொழிலில் சோர்வடைந்த நேரத்தில் மனைவி சிரித்துக் கொண்டு (இதற்கு முன் அன்பாகப் பேசியது போல்) கணவரிடம் பேசினால் ஆது கணவனுக்கு எதிர்மறை ஆகின்றது.
1.நேரம் காலம் தெரியாதபடி சிரிக்கும் நேரம் இது தானா...? என்று
2.இந்தச் சந்தர்ப்பம் அந்த நல்ல குணங்களை வேதனை என்ற உணர்வால் அது மறைக்கப்படுகிறது
3.வேதனை என்ற உணர்வுகள் மறைப்பதால் மனைவி மீது இருக்கக்கூடிய பாசங்கள் அது மறைந்து விடுகின்றது.
ஏனென்றால் கணவனின் சந்தர்ப்பம்... வெளியிலே கஷ்டமான நிலைகளில் வேலை செய்துவிட்டோ… அல்லது மற்றொருவரிடம் தகராறு செய்துவிட்டோ… மிக வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது
1.மனைவி அதற்கு முன் கணவனிடம் சந்தோஷமாக இருந்தாலும்
2.கணவன் வருத்தம் அடைந்த நேரத்தில் அதே சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
3.அங்கே சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் எதிர்மறை ஆகின்றது.
எதிர்மறையாகும் போது மனைவி மீது வெறுப்பு வருகின்றது. நல்ல குணத்தில் இந்த விஷத்தின் தன்மை திரையாக மூடி விடுகின்றது. அவர் மீது இருக்கக்கூடிய அன்பை அது மறைத்து விடுகின்றது.
அன்பை மறைத்து விட்டால் மீண்டும் அதிலிருந்து பகைமை தான் வளர்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்.
கணவன் அங்கே வருத்தத்துடன் இருக்கப்படும் பொழுது அவரை மனைவி உற்றுப் பார்க்கப்படும் பொழுது கண்கள் வழி அதை நுகர நேருகின்றது.
இதை... மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
வெளியில் கணவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை...! அவர் சோகத்துடன் இருக்கின்றார்... வருத்தத்துடன் இருக்கின்றார்... என்ற உணர்வை அறிந்து அவரை மனைவி பார்த்த பின் நுகர நேர்கின்றது... உயிரிலே மோதுகின்றது மூலாதாரத்தில்...!
மூலத்தில் (உயிரிலே) மோதும் பொழுது வேதனை உணர்வுகள் தெரிய வருகின்றது. தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்...?
ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.கணவருக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.சாந்தமும் ஞானமும் அவர் பெற வேண்டும்
3.அவரைப் பார்ப்போருக்கு நல்ல மனம் பெற வேண்டும் என்று
4.மனதால் அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
5.மனைவியும் அந்தச் சமயத்தில் அமைதியாக (பொறுமையாக) இருந்து
6.அவர் பார்த்துச் சொல்லப்படும் பொழுது என்ன விவரத்தை சொல்கிறார் என்று “எதிர்பார்த்து…”
7.நாம் அந்த உயர்ந்த நிலையை அவருக்கு எப்படிக் கொடுப்பது...? என்று மனைவி சிந்தித்து அதைச் சொன்னால்
8.கணவர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது.
ஆனால் காலம் தெரியாதபடி அவர் வருத்தமாக இருக்கும் பொழுது சிரித்து... “ஏன் இப்படி வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றீர்கள்...?” என்று சொன்னால்... இந்த வேதனை உணர்வுகள் அங்கே சோர்வாக இருக்கும் பொழுது எதிர்மறையாகி… நல்ல செயல்கள் அங்கே செயல்படுவதில்லை
இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் சித்திரையாக... சிறு சிறு திரைகள் நம்மை மறைத்து விடுகின்றது… உண்மையின் உணர்வை அறிய முடியாது போகின்றது.
மறைத்து விட்டால் அது என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்போது அந்தப் பொருளின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியுமா...?
1.நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் இப்படித்தான் மறைக்கப்படுகின்றது
2.நல்ல குணங்களை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியாதபடி பகைமை உணர்வு வந்து விடுகிறது.
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாக இத்தகைய உபதேசங்களைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).