உணர்வின் இயக்கங்கள் பற்றி உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
விஞ்ஞான நிலைகள் படித்தவர்களோ… அல்லது இஞ்சினியர்களோ அந்த தொழில்நுட்பம் (TECHNIQUES) கொண்டு பாட நிலைகளை உற்றுப் பார்த்துப் பதிவாக்கி அதற்குண்டான இயந்திரங்களில் நினைவச் செலுத்துகின்றனர்.
அதை வைத்துத் தாவர இனங்களுக்குள் சூட்சும நிலைகள் இயக்கும் இந்த உணர்வினை அறிந்து
1.அதை மாற்றி அமைத்தால் என்ன...? இதனுடைய செயலாக்கங்கள் என்ன…? என்ற நிலைகள் விஞ்ஞானி கண்டறிந்து
2.இது மனிதனுக்கு உகந்ததா… இது உகந்ததல்லவா…? என்று இந்த உணர்வின் தன்மை அளவுகோல் சேர்க்கப்படும் பொழுது
3.அந்த உணர்வால் இவனுக்கு இந்த நிலை வருகின்றது.
உணவு உட்கொண்டு மற்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இந்த உணவிற்குச் சத்தை ஏற்றுவதற்கும்… மற்ற தாவர இனச்சத்தை இணை சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி “சத்துள்ள ஆகாரம்…” என்றும் விஞ்ஞானி உருவாக்குகின்றான்.
இதைப் போன்று தான் அன்று மெய் ஞானி பெற்ற உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் கொண்டு நஞ்சினை வென்ற அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகிறது…? என்று ஞானிகள் கண்டதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் அறியாத நிலைகள் கொண்டு அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்
2.மகிழ்ந்து வாழும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகன் விஷத்தின் தன்மை வென்றிடும் நிலைக்காக முருகன் சிலையை உருவாக்கினான்.
கோள்களிலிருந்து வரும் நவபாஷணத்தை எடுத்து… சூரியனிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு தாவர இனங்களையும் அதிலே பாதரசம் கலந்திருப்பதைப் பிரித்து இதனுடன் இணை சேர்த்தான்.
மனிதனுக்குண்டான ஆறாவது அறிவின் ஆற்றலை... அதாவது நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுவது போல… மனிதனின் ஆறாவது உருவைக் கண்டு தீமைகளை அகற்றிடும் பச்சிலைகளை அதிலே சாரணைகளைக் கொடுத்து இணைத்தான்.
சூரியன் எப்படி மற்றதுடன் மோதும் பொழுது தன் வெப்பத்தின் தன்மை கூட்டுகின்றதோ இதைப் போல
1.சிலையின் மேலிருந்து சொட்டு சொட்டாக நீரை ஊற்றப்படும் பொழுது அதிலே எதிர்நிலையாகும்… அதிலே ஒரு விதமான வெப்பம் உருவாகும்.
2.அந்த வெப்பத்தினால் சிலைக்குள் போகன் மருந்துகளாகச் சேர்த்த உணர்வின் ஆவி அலைகள் வரும்
3.கண்களால் அதை உற்றுப் பார்த்து நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
4.போகன் காட்டிய நெறிப் பிரகாரம் சிலையிலிருந்து வெளிவரும் அலைகளை (வாசனைகளை) நுகர்ந்து எடுத்தோம் என்றால்
5.பெரும் குஷ்டரோகமாக இருந்தாலும் சரி… கேன்சராக இருந்தாலும் சரி… அந்தத் தீமைகளை நீக்கிவிடும்.
ஆகவே இயற்கையின் உணர்வுகள் எதைக் கலவையாக எடுத்து நாம் எண்ணுகின்றோமோ அதன் அணுவாக நுகர்ந்து அந்த உணர்வின் செயலாகவே நம்மை மாற்றும்.