நாம் கோபமோ ஆத்திரமோ படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த வேதனையான நிலைகளில் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கடினமான ஒரு பொருளை அந்த வேதனையுடன் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அப்பொழுது சுவாசிக்கும் இந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் பாய்ந்தவுடன்
2.இந்த உடலை மடக்கிய நிலைகள் கொண்டு பிராணவாயு செல்லும் பொழுது இங்கே தேங்கிச் செல்லும்.
மூட்டிற்கு மூட்டு அது தேங்கிச் செல்லும் பொழுது அந்த மூட்டினுடைய நிலைகளில் அவயங்கள் வேலை செய்யும் பொழுது, அந்த வேதனையான நிலைகள் வந்தவுடன் அந்த வேதனையான விஷமான உணர்வுகள் அங்கங்கே தேங்கிவிடும்.
1.அது சுவாசத்திற்குள் சென்று கரைக்கும் நிலையை இழந்து
2.அது ஓடிச் சென்று வெளியிலே வரும் முன்பாகவே - நாம் சுவாசிப்பது உள் செல்வதனாலே,
3.இது ஒவ்வொரு இடத்திலும் தேங்கிக் கொள்ளும்.
இதனால்தான் சிலருக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது.
சிலருக்குத் தொழில் நிலைகளில் வேலைகள் செய்யும் சந்தர்ப்பத்தில் எல்லம் இந்த வேதனையை எடுத்தார்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி மூட்டுகளில் வலி வரும்.
நமது பூமி சுழலும் பொழுது விண்வெளிகளிலே இருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது. இதைப் போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்டு எண்ணங்களாக இயங்குகின்றது.
அப்படி இயக்கினாலும் அந்த வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து அது நம் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த வேளைகளில் கூர்ந்து செயல்படும் பொழுது கவன நிலைகளில் எடுக்கப்படும் பொழுது கண் குத்தல்... மண்டைக் குத்தல்... போன்ற நிலைகள் வரும்.
அதைப் போன்று சுவாசத்தினுடைய நிலைகள் சிந்தனையினுடைய நிலைகளை அதிகமாகச் சேர்த்தால் மூக்கு துவாரத்திற்குள் சில நிலைகள் வரும்.
அடிக்கடி சிந்தனை செய்து கொண்டு குனிந்திருந்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தால் மடக்கிய நிலைகள் கொண்டு பிடரியில் பிடரி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
சில நேரங்களில்... ஒரு புறம் சாய்ந்திருந்து இடைஞ்சலான நிலைகளில் நாம் இருந்தால் நாம் சுவாசிக்கும் பிராணவாயு செல்லும் பொழுது சப்பைகள் மூட்டுகளிலே போய் இந்த வேதனையைக் கொடுக்கும். சாதாரணமாக இதை நிவர்த்தி பண்ண வேண்டுமென்றால், வைத்தியர்களால் கொஞ்சம் சிரமம்தான்.
ஏனென்றால்...
1.நரம்பியல்களிலே இருக்கக்கூடிய நிலைகள்
2.எலும்புகளிலே ஒட்டியிருக்கக் கூடிய காந்தத்தினுடைய சக்தி
3.நாம் எடுக்கக்கூடிய இந்த அமிலத்தின் தன்மை (ACID POWER) நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது
4.அதே சமயத்தில் நாம் பிராண வாயுக்களை எடுத்து அதன் ஓரத்திலே இயக்கித்தான்
5.அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களை இயக்கச் செய்து நரம்பியலின் தன்மைகளை இயக்க வேண்டும்.
அப்பொழுது அந்த நரம்புகளில் விஷத் தன்மைகள் பாய்ந்து விட்டால் அதே இடத்தில் அது துடித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் அது வேலை செய்யும். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
சில பேர் கவலைப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தால் வேதனையை அதிகமாக உண்டாக்கும். கை நிமிர்த்துவதே கஷ்டம்... பிடரியில் அதிகம் வலி ஏற்படும்.
எந்த அளவிற்குக் குனிந்து கொண்டிருந்தார்களோ அதற்குத்தகுந்த மாதிரி விஷங்கள் படர்ந்திருக்கும். நிமிர்ந்தவுடன் வலி அதிகமாக இருக்கும்.
வேதனையும் கவலையும் கூடிய நிலையில் நாம் சுவாசித்து அந்த பிராண வாயுக்கள் செல்லும் பொழுது...
1.அதற்குள் நாம் சுவாசித்த உணர்வின் விஷத்தன்மைகள்
2.நம் உடலில் எல்லா இடங்களுக்கும் போய்,
3.எல்லா இடத்திலும் பாய்ச்சி அவற்றை இயங்கச் செய்யும்.
இதையெல்லாம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதை நாம் வெல்ல வேண்டுமென்றால் நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.
1.ஓ...ம் ஈஸ்வரா... என்று அழுத்தமாக நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,
2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை
3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.
ஆத்ம சுத்தி செய்துவிட்டு நமக்கு எங்கெல்லாம் நோவு இருக்கின்றதோ அந்த இடத்தில் “கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி” மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் படரச் செய்யுங்கள்.
அந்த வேதனையை உண்டாக்கும் உணர்வின் சக்திகள் மறைந்து எங்கள் உடலிலே மகரிஷிகளின் அருள் ஒளி வளர வேண்டும் என்று சிறிது நேரம் நீங்கள் தியானித்தால் போதும்.
உங்கள் உணர்வின் சக்தியைக் கொண்டு நீங்கள் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று உடலில் நோவு வரும் இடங்களில் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த நோவின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தி அந்த இடத்திலே அதைக் கரைக்கும்.
இவ்வாறு தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து வந்தால்... வாத நோயோ ஆஸ்த்மாவோ குஷ்ட ரோகமோ கேன்சர் நோயோ இருந்தாலும் அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்.