ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2021

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

 

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது...!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல... நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி... தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்... நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்...!

உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை... என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது... என் பையன் இப்படி இருக்கின்றானே...! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக... பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.