ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2021

குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

உங்கள் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் வேதனை பகைமை போன்ற உணர்வுகள் எப்பொழுது தோன்றுகிறதோ அப்போதெல்லாம்...
1.“ஈஸ்வரா...” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“கண்களை மூடி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... உங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.இப்படி இரண்டு மூன்று தடவை மீண்டும் மீண்டும் செய்தீர்கள் என்றால்
2.உங்கள் கவலைகள் நீங்கும்... அருள் உணர்வுகள் பெருகும்
3.அதன் வழி உங்களுக்குள் மன வலிமையும் கிடைக்கும்
4.பகைமையை அகற்றும்... சிந்திக்கும் ஆற்றலும் வரும்
5.மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோற்றுவிக்கும்.

இவ்வாறு நீங்கள் தியானிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கும் பொழுது
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.எங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும்...
3.தொழில் வளம் பெற வேண்டும்... எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்
4.எங்கள் குழந்தைகள் தெளிந்த நிலைகள் கொண்டு வளர வேண்டும்
5.கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ வேண்டும்
6.உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டிய முறை இது தான்...! என்று
7.இப்படிச் சொல்லி அவர்களுக்குள் பதிவு செய்யுங்கள்.

வாழ்க்கையில் அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீள...
1.நாம் சொல்லும் முறைகளை அவர்களும் கேட்டால்
2.”நல்லபடியாக நடக்கும்” என்று நீங்கள் சொல்லும் பொழுது அருள் உணர்வின் தன்மை அவர்கள் பெற்று
3.அவர்கள் எதை நாடி வந்தார்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதி கிடைக்கின்றது

ஆனால் சாமியிடம் (ஞானகுரு) சென்றால் எல்லாம் நடக்கும்...! என்று வெறுமனே சொன்னால் அந்த ஆசையின் நிமித்தம் ஆவேசம் கொண்டுதான் வருகின்றார்கள்.

மனோதத்துவ ரீதியில் ஆசையைத் தூண்டும் போது ஆசை தான் மென்மேலும் வளரும். தீமையை நீக்கும் உணர்வுளைப் பெற வேண்டும் என்று நாம் சொல்லக்கூடிய உணர்வுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

1.ஆகவே பண்பட்ட நிலைகள் கொண்டு நாம் செயல்பட்டால்
2.அருள் உணர்வை அவர்களுக்குள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால்
3.உங்களுக்கும் நல்லது... அவர்களுக்கும் நல்லது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி... உயிரை எண்ணி... அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருளைப் பெறுங்கள். உங்களுக்கு அது கிடைக்கும் என்று சொல்லிப் பழகுங்கள்.

உங்கள் வாக்கு அவர்களுக்கு நல்லதாகும். அதே உணர்வை எடுத்து அவர்கள் இயக்கத் தொடங்கும் பொழுது உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றார்கள்... அவர்கள் தீமைகளும் அகலுகிறது.

ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. மிகவும் துரிதமாக மாறிக் கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் தப்ப வேண்டும். அந்த விஷத் தன்மைகளை நீக்கும் உணர்வுகளை நாம் பெற்றுப் பழக வேண்டும்.

1.ஒரு வேப்பமரம் எப்படித் தன் கசப்பின் தன்மை கொண்டு மற்றதை அருகில் விடுவதில்லையோ
2.ஒரு ரோஜாச் செடி தன் நறுமணத்தால் மற்றதை அருகில் விடுவதில்லையோ...
3.இதைப்போல நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் வளர்த்து
4.தீமைகள் புகாது ஒரு பாதுகாப்பு கவசமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5.தீமைகள் வராதபடி அந்த அருளைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

அந்தச் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் “எல்லாம் தெரிந்து...” வரவில்லை. தெரியக்கூடிய ஆற்றலின் தன்மை கொண்டு வரும் பொழுது அதன் அறிவாக நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலையில் நாம் அதன் உணர்வைப் பெறப்படும் பொழுது எதையும் தெரிந்து கொள்ள முடியும். தெளிவான வாழ்க்கை வாழவும் முடியும்.

இந்த உடலுக்குப்பின் நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழ வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பிறவிக்கு வராதபடி தடுக்கும் ஆற்றலைப் பெறுதல் வேண்டும்.

ஆகவே மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று... அனைவருக்கும் பேரின்பம் கிடைக்கச் செய்யும் சக்தியாக நீங்கள் வளருங்கள். உங்களால் முடியும்... அனுபவத்தில் பாருங்கள்.

1.உயர்ந்த சக்தியை நீங்கள் பெறுவதன் மூலம்
2.மற்றவருக்கும் அந்த அருளைப் பாய்ச்சும் போது அவர்களும் அந்த அருளைப் பெற முடியும்.
3.உங்களில் விளைந்த அருள் சக்திகள் அவர்களுக்குள்ளும் விளையைத் தொடங்கும்.