ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2014

விஞ்ஞான அறிவில் ELECTRONIC உணர்ச்சிகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்

இன்றைய விஞ்ஞான அறிவில் இயற்கையில் விளைந்த சூரியனின் ஒளிக்கதிர்களில் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற உணர்வுகளை மாற்றி அமைத்து அதே உணர்வுகளை T.V திரைகளில் பார்க்கச் செய்து, அந்த எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற உணர்ச்சிகள் நம்மை இயக்கச் செய்து, இதையே நம்முள் விளையச் செய்து,
இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மையை மாற்றி,
செயற்கையில் விளைந்த உணர்வுகள்
நம்மை இயக்கும்படி செய்கிறார்கள்.

இப்போது நாம் மிளகாயை வறுக்கிறோம் என்றால் நெடி வருகின்றது. இந்த செயல். அந்த உணர்வின் தன்மை ஆனபின் நமக்குத் தொல்லை வருகிறது.

ஆகவே, மனிதன் நாம் மகிழ்ச்சி பெறும் திரைக் கதைகளைக் காட்டினாலும், அந்த உணர்வு விஷத்தன்மையுடன் கலந்த உணர்வே நாம் சுவாசிக்கின்றோம்.

அருள் உணர்வைப் பெற்ற அருள்ஞானியின் உணர்வை நாம் பெற்றிருந்தாலும், திரைப்பட நிலைகளிலோ மற்ற நாடாக்களில் நாம் பார்க்கும்போது,
அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி,
விஷத்தன்மை கொண்ட
உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வலைகளைப் பரப்பி,
அதை நுகரப்படும்போது அதன் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது.

மனிதனுக்குள் மகிழ்ச்சி பெறும் அந்த உணர்வின் தன்மை தனித்தன்மை வாய்ந்தது. அது செவிகளில் வரப்படும்போது செவிகளின் தசைகளில் சேர்ந்துவிடுகின்றது.

ஆக மகிழ்ச்சியானாலும், விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தன்மைகள் அதன் உணர்வுகளில் சேர்ந்து பெருகி விடுகின்றது.

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். இவற்றையெல்லாம் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. உணர்வுகள் படர்ந்துள்ளதால் அதன்வழி வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

ஆனாலும், இவை நம்மை இயக்காத நிலைகளில் அருள் ஒளி என்ற உணர்வினை நமது குரு காட்டிய வழியில் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை நினைக்கும் பொழுதெல்லாம் அது நமக்குக் கிடைக்கும்.

தொலைக்காட்சி அலைகளை நாம் எப்படி ஒளிபரப்பு செய்கின்றோம்? அதில் நாம் எந்தச் சேனல் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்கின்றோம்.

அதே மாதிரி ஒரு சேனல் அழுத்தம் அதிகமாகி, விஷத்தன்மை கொண்ட நிலைகளில், அடுத்த சேனல் ஒளிபரப்பு செய்யும்போது அதைத் தெளிவாக வைக்க முடியாது.

யுத்த காலங்களில் அடுத்தவர் சொல்வது கேட்காதபடி எதிர்மறையான அலைகளைப் பரப்பி விடுவார்கள்.

அதாவது, ஒளிபரப்பும் போது யுத்த நிலைகளில் சில உணர்வுகளை எடுத்து அவன் நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து, எதிர்மறையான அலைகளைப் பரப்பி அவனுடைய செய்திகளை மற்றவர்கள் அறிய முடியாதபடி இதை மாற்றி விடுகிறார்கள்.

இதைப் போல, விஞ்ஞான அறிவால் உலகைக் காக்கவேண்டும் என்ற நிலை இல்லாமல்,
தன்னைக் காக்க, தன் நாட்டைக் காக்க என்று
பிழை கொண்ட உணர்வுகளைத்தான்  இன்று செய்கின்றார்கள்.

ஆகவே, இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும், நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும், நாம் நல்லதை எண்ணும் போது, இதனுடைய (விஷத் தன்மைகளின்) அழுத்தம்
நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ,
நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது, நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளை தூண்டும் அந்த அணுக்களின் தன்மையை தடைபடுத்தும். 

இதை மாற்ற வேண்டுமென்றால், திசை திருப்புவது போல சக்தி வாய்ந்த நிலைகளில் நமது குருநாதர் எமக்கு கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை  அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறோம்.

ஆகவே, ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் இதை வளர்த்து தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.