ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2014

நமக்கு வேண்டியவர்கள் இறந்துவிட்டால் மிகுந்த வேதனைப்படுகின்றோம்...! அதனால் வரும் விளைவுகள் என்ன...?

சொந்தக்காரர் என்று ஒருவர் மேல் ரொம்பவும் பிரியமாக இருப்பார்கள். அப்படி இருக்கப்படும்போது அவர் உடலில் நோய் வந்து வேதனைப்படுகின்றார்.

அந்த வேதனையினாலே, அந்தப் பாசத்தாலே பார்க்கும் பொழுது அவர்படும் வேதனையான உணர்வுகளையெல்லாம் பாசத்தினால் இழுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வேதனையான உணர்வுகள் இவர் உடலிலும் விளைந்து,
அவர் உடலிலே என்னென்ன சத்தின் தன்மைகள் இருந்ததோ
அதெல்லாம் இவர் ஈர்ப்புக்குள் வந்து
பாசத்துடன் இருப்பவருடைய உடலுக்குள் புகுந்துவிடுகிறது.

ஆனால், இவ்வாறு புகுந்து விளைந்தவுடனே அவரை எண்ணியே இவரும் சதா வேதனைப்படுகிறார்.

வேதனை என்பது விஷம். விஷமான சத்துகளை இவ்வாறு வளர்த்து அந்த வேதனை கொண்டு,
“ஐயோ., உனக்கு இப்படி இருக்கிறதே,
எல்லோருக்கும் நல்லது செய்தாயே.,
உனக்கு இப்படி வந்துவிட்டதே” என்று இந்த உணர்வுகள்
இந்தப் பாசத்தை மீண்டும் செலுத்த செலுத்த, இந்தப் பாசத்தினால் வேதனைகளைச் சொன்னபடி அங்கே துக்கம் தாளாதபடி இன்னும் அதிகமாகும்.

இப்படி அதிகமானாலும் வியாதியானவர்களின் உணர்வுகள் இங்கே கலந்திருப்பதால், அவர்கள் உணர்வுகள் இங்கே பட்டு கடுமையாக இருந்ததனால் அந்த உயிராத்மாவை இங்கே இழுத்துக்கொள்ளும்.

அதாவது அந்த உயிராத்மா வெளியில் வந்தவுடன், இந்தப் பாசத்தினாலே எங்கும் செல்லாது இவர் உடலுக்குள் வந்துவிடும்.

வந்தவுடன், அந்த உடலில் என்னென்ன வியாதிகள் இருந்ததோ, அது உருபெறும். வெளியிலே இருக்கும்போது நாம் என்னென்ன வேதனைப்பட்டோமோ அதே எண்ணத்தை அதிகமாகத் தூண்டி அழகையும் சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.

பின், உடலில் விஷத்தை அதிகமாக வளர்த்து அந்த உயிராத்மா இந்த உடலுக்குள் வந்தாலும் குழந்தையாகப் பிறக்காதபடி அதையும் கொன்று
இது விஷத்தின் தன்மை கொண்டு
விஷமான அலைகளைப் பரப்பிச் செல்கின்றது.

இதைப்போல அடிக்கடி நாம் வேதனையான உணர்வுகளை எடுத்தால், பாசமான உயிராத்மா உடலுக்குள் வந்தவுடன் இந்த உடலுக்குள் வேதனையை வளர்த்து, இந்த உயிராத்மாவும் அந்த உடலிலுள்ள உயிராத்மாவும் இரண்டும் கலந்து
இரண்டு ஆத்மாவும் இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
இது இரண்டுமே மிருகமாகத்தான் போய்ப் பிறக்கும்.

ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அந்த குணத்திற்குத்தக்க அந்த வாசனை உண்டு.

ஆக இந்த விஷத்தின் தன்மை வரப்படுபோது, மனிதனுடைய வாசனையை இழக்கச் செய்து, மிருகத்திற்கொப்பான வாசனையை ஏற்கச் செய்துவிடுகின்றது.

பின் நாம் எங்கே போவோம்?

புவியின் ஈர்ப்பினுடைய நிலைகள் மனிதனுடைய அங்கங்களை இழந்து சிந்தனையற்ற நிலைகள் பெற்று, மிருகங்களாகத் தான் பிறக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.