நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்
நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்
நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும்
என்று விரும்புகின்றார்.
அதனைத்தான்
செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளில் நீங்கள் பெறவேண்டுமென்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.
அவர் உணர்த்திய உணர்வுகளை
உங்களுக்குள் பதியச் செய்யும்போது அந்த முறைப்படி செய்தால்
அவனுடன் அவனாகி,
அவனின் ஒளியாக நீங்கள் ஆக
முடியும்.
உயிர் நாம் எடுக்கும் உணர்வின்
தன்மையை அறிவாகக் காட்டுகின்றது. ஆக அறிவாகக் காட்டும் பொழுது இருளையும், மணத்தையும்,
மற்றவைகளையும் நுகரும் உணர்வாக நமக்குள் காட்டினாலும் உணர்வின் தன்மை நிலைகொண்டு ஒளியாக
மாற்ற வேண்டும்.
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நமக்குள் சேர்க்கும் பொழுது என்றும் ஒளியான நிலை பெறமுடியும்.
நம் உயிர் அனைத்தையும் உணர்த்துகின்றது.
அதைப் போல அனைத்தையும் உணர்த்தும் ஆற்றலாக
நாம் உணர்வின் ஒளியாக மாறுதல் வேண்டும்.
அப்படி அடைந்து விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள். அதுதான் கல்கி.
தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் என்ஜினியராக ஆகின்றீர்கள்.
விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகின்றீர்கள்.
மருத்துவத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் ஒரு டாக்டராக ஆகின்றீர்கள்.
இதே போன்று மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும்போது நீங்கள் மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் மெய்ஞானி ஆகின்றீர்கள்.