இன்று காவேரி நதி பிறப்பது
எங்கே? மலை உச்சியிலே. அப்படி நீர்ப் பொங்கி எழும்போது அங்கே வேறு எந்த விதமான நிலையும் கிடையாது.
இப்போது தலைக் காவேரியில், மேலே எடுத்துக் கொண்டால் அந்த
பாகமண்டலத்தில்தான் நீர் உற்பத்தியாகின்றது. அங்கே உற்பத்தியாவது தான் இப்போது நம்
காவேரி நதிக்கு வருகின்றது.
உற்பத்தி ஆகக்கூடிய தன்மை
என்ன?
அங்கே அகஸ்திய மாமகரிஷி ஜெபமிருந்த இடம். அப்போது
அவர் எடுத்துக்கொண்ட அந்த சக்தியின் தன்மையை அங்கே இருக்கக்கூடிய பாறையும் மண்ணும்
இழுத்துக் கொள்கிறது.
அப்படி இழுத்து சேமித்துக்
கொண்ட அந்த சக்தி அகஸ்திய மாமகரிஷியினுடைய அருள்சக்தி எத்தனையோ ஆண்டுகள்
ஆகிவிட்டது.
இப்போதும் அவர்கள் எங்கெல்லாம் அமர்ந்திருந்தார்களோ, அங்கெல்லாம் நீர்
சக்தி இருக்கும்.
காரணம், அவர் உடலிலிருந்த நீர்சக்தி. அங்கெல்லாம்
நீரை இழுக்கக்கூடிய சக்தியினுடைய நிலைகள் அந்த பாறைகளிலே பதிந்து இருக்கின்றது.
பதிந்திருக்கக்கூடிய அந்தச்
சக்திதான் இப்போது வான மண்டலத்தில் மேகங்களாகச் செல்லும்போது அந்த மேகத்தின்
தன்மையை அது தனக்குள் ஈர்த்துக் கவர்ந்து மேகங்களை நீராக மலை
பாகங்களில் அது உற்பத்தி செய்கிறது.
மலையின் உச்சியிலே நீர் வருவதற்கு அதுதான் காரணம். அதிலிருந்து
வடித்துத்தான் கீழ்நோக்கி வருகின்றது.
பூமி நிலம் மலைக்கு கீழே
எவ்வளவோ ஆழத்தில் இருக்கின்றது. எத்தனை ஆழமாக தோண்டினாலும் நீர் நிலை 100, 200,
300 அடி தோண்டினாலும் அங்கே நீர் இருப்பதில்லை.
ஒரு சில பகுதிகளிலேதான்
அவ்வாறு இருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அவ்வாறு இருப்பதில்லை.
காரணம், இதைப்போன்ற ரிஷிகள்
அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றலின் சக்தியை அவர் உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றி
அவர்கள் எங்கிருந்து ஜெபித்தார்களோ அங்கு பூமியின் ஈர்ப்பலைகளுக்குள் அவரின் சக்தியை
அங்கே பதியச் செய்து,
பதிந்த சக்தியினுடைய உணர்வின்
ஆற்றல்தான்
மேகங்களாகப் போவதை தன் வசம் இழுத்து
அந்த மலைப்பாங்கிலே
உராய்ந்தபின்
அதனுடைய நீராக அது வடிகின்றது;
மற்ற பாறைகளில் பார்த்தால்
லேசாக பனித்துளி போலத்தான் இருக்குமே தவிர, அதன் அருகில் பட்டவுடன் அது அத்துடன்
நின்று போய்விடும்.
இந்த மேகக் காலங்களில் சில
இடங்களில் அவ்வாறு இருக்காது. ஆனால் அந்த மகரிஷியினுடைய தன்மையில் எங்கே
அமர்ந்தார்களோ, அதை சுருக்கி நீராக மாற்றும் சக்தி பெற்றது.
இதைப் போன்று அவர்கள் ஆவியாக
இருப்பதை நீராக மாற்றியதைப் போன்று,
அணுக்களாக இருக்கக்கூடிய கடும் விஷத்தையும்
தனக்குள் ஜீவ சக்தியாக மாற்றி
ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் மாமகரிஷிகள்.