ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2014

இராமன், இராமலிங்கம், ஆஞ்சநேயன்

எதுவுமே நமக்கு எதிரியில்லாத நிலையில்
என்றும் ஏகாந்த நிலை பெற்று
இந்த தனுஷ்கோடி என்னும் கோடிக்கரையான (இது நமக்குக் கடைசி உடல்) கடைசி இந்த மனித உடலில் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்திட வேண்டும்.

இராமன் எப்படிக் கூட்டியமைத்து உணர்வின் தன்மை கொண்டு சிவலிங்கத்தைப் பூஜை செய்தானோ இதே மாதிரி நாம் நம் எண்ணத்தின் தன்மை கொண்டு தனுஷ்கோடி என்ற இந்த உணர்வை நாம் கூட்டியமைத்து உயிரான இராமலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும்.

ஏனென்றால், உயிரின் தன்மையை இராமலிங்கம் என்று எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்தார்கள்.

இராமலிங்கம் என்று சொன்னாலே
நம் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.

ஆக, இந்த எண்ணம்தான் இராமன். மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை பெறும் பொழுது இராமன் ஆகிறது. இராமனின் பக்தன் யார்?

ஞ்சநேயன்.

ஆக நாம் எதனை எண்ணுகிறோமோ இந்த சொல்லைச் சொல்லும் பொழுது
நீங்கள் நுகர்ந்தால்
உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.

அதாவது இராமனின் பக்தன் வாயுவின் புத்திரன், அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளை
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் சொல்லும் பொழுது
பிறருடைய உடல்களில் புகுந்து
அவர்களின் அறியாமையை நீக்கச் செய்து
சிந்திக்கச் செயும் தன்மையை ஊட்டுகின்றது.