காலையிலிருந்து இரவு வரையிலும்
நாம் பார்த்து எண்ணி கவர்ந்து கொண்ட உணர்வின் சக்திகள் அனைத்தும் நமது உடலாகின்றது
என்பதை உணர்த்தும் விதமாக “பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா” என்று சிவ தத்துவத்தில்
தெளிவாக்கியுள்ளார்கள்.
பார்வதி பஜே - பார்த்த உணர்வின் உணர்ச்சிகளை உயிரானது நமது உடலுக்குள் ஊட்டி
ஹரஹரா – அந்த உணர்ச்சிகள்
நம்மை இயக்கி
சம்போ – நாம் பார்த்த
இந்த சந்தர்ப்பம்
மகாதேவா – நாம் பார்த்த
உணர்வுகளையெல்லாம் நமக்குள் உருவாக்கக்கூடியதாக நம் உயிர் இருக்கிறது.
நாம் எதையெல்லாம் பார்த்தோமோ அவை அனைத்தும் நம்முள்
சதாசிவமாக்கிக் கொண்டேயுள்ளது (நம் உடலாக) என்பதை சிவ
தத்துவம் நமக்குத் தெளிவாக்குகின்றது.
வாழ்க்கையில் நாம் நம்மிடத்தில்
அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து, மன உறுதியை மன வலிமையைப் பெருக்கினோம்
என்றால்
நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி
தெளிந்த ஞானமும் மகிழ்ந்து
வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.