ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2014

"ஈஸ்வரா..," என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகளைத் தடுக்க வேண்டும்

இராமாயணத்தில் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான். எப்படி? குகை மேலே இருக்கக்கூடிய பாறையைத் தள்ளி மூடிவிடுகிறான். அதனால் வாலி இராமனுக்கு இடையூறு செய்ய முடியவில்லை.

புலி ஒரு மனிதனைத் தாக்க வந்தால் என்ன செய்கின்றார்கள்? ஒரு கூண்டு கட்டி, புலி சாப்பிட ஒரு ஆட்டைக் .கட்டுகின்றான். ஆடு “மே..,” என்று கத்தும் பொழுது, புலி வேகமாக வந்து நுழைந்ததும் கூண்டின் கதவை மூடி பிடித்துக் கொள்கிறான்.

அந்த ஆட்டையும் காப்பாற்றுகிறோம். புலி மற்றவர்க்ளுக்கு இடையூறு செய்யாமல் தடுத்து மனிதனான நிலையில் காக்கிறோம்.

இதைப் போன்று கொடூரமான உணர்வு வரப்படும் பொழுது, அது நம்மைத் தாக்காதவண்ணம் நாம் என்ன செய்யவேண்டும்?

ஈஸ்வரா என்று உடனே உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி எண்ணுகிறோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் புருவ மத்தியைத் தாண்டித்தான் போக வேண்டும்.
ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
தீமை செய்யும் உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.

உதாரணமாக, கோபமாக இருக்கும் போது ஒருவர் நல்லது சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? வேதனையாக இருக்கும் போது சிரித்து ஆடி சந்தோசப்படலாம் என்று ஒருவர் வந்தால் எப்படி இருக்கும்?

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். சந்தோசப்பட வேண்டும் என்ற நிலையில் உங்கள் முன்னாடி ஒருவர் வந்து ஆடினால் என்ன செய்வீர்கள்?

நம்மைக் கிண்டல் செய்கிறார், கேலி செய்கிறார் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கின்றார் என்று உதைக்கத்தான் வருவீர்களே தவிர நல்லதை விடுவோமா?

நம் கண்கள் அந்த உணர்வின் தன்மையை வலிமை பெறச் செய்துவிடுகின்றது.

ஆகவே, இதைத் தடைப்படுத்தி ஈஸ்வரா என்று அருள் உணர்வுகளை நமக்குள் எடுக்கப்படும் போது அதன் வழி உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

சிறிது நேரம் இழுத்தவுடனே ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவினைச் செலுத்தி அவனிடமே வேண்டுதல் வேண்டும். ஏனென்றால், அவன் தான் நாம் நினைப்பதையெல்லாம் உருவாக்குகின்றான்.

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நாம் உணர்வை உந்தப்படும் போது உள்ளுக்குள் இழுக்காது தடைப்படுத்தப்படுகிறது.

இந்த உணர்வின் தன்மை வலிமையான பின் இங்கே நிற்பதற்கு வழி இல்லை. தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது.