ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2014

பித்தப்பையின் இயக்கம்

நமது உடலில் உள்ள பித்தப்பை என்பது கடுமையான விஷம் கொண்டது.

பலகோடி சரீரங்களில் புழுவிலிருந்து எல்லா வகைகளிலும் எடுத்த அந்த பித்தம் கொஞ்சம் இல்லையென்றால் நமக்கு ஜீரண சக்தி குறைந்துவிடும்.

சில பேர் இந்தப் பித்தப்பையை எடுத்துவிட்டு இருப்பார்கள்.

அது சேமிக்கும் தன்மை கொண்டு
அது வடிகட்டும் நிலை இல்லையென்றால்,
மீண்டும் பித்த சுரப்பி சேமிக்கும் நிலை இல்லையென்றால்
அது (விஷம்) நம் உடலிலேயே கலந்துவிடுகின்றது.

இயற்கையின் நிலையில் அந்த விஷம் ஜீரணிக்ககூடிய சக்தியாக இருக்கின்றது. அது சேமித்து அதற்குத்தக்கவாறு சேரும்.

பித்தப்பையில் கல் இருக்கிறது என்று சிலர் பித்தப்பையை நீக்கிவிடுவார்கள். ஏனென்றால் அந்த விஷம் உறைந்து கல்லாகின்றது.

இதே பித்தப்பை அதிக விஷம் கொண்ட பாம்பினங்களுக்கோ வைரக்கல்லாக மாறுகின்றது. இந்தப் பித்தப்பை உள்ள மற்ற உயிரினங்களில் பித்தம் அதிகமானால் அதில் இந்தக் கற்கள் வைரக்கல்லாக மாறுகின்றது. 

ஆக, பித்தம் கூடும் நிலை வரப்படும் பொழுது அந்த உணர்வைச் சேர்த்து விஷம் ஒடுங்கி ஒளியாக மாறும். பாம்பினங்களில் வைரக்கல்லாக மாறுவதைப் பார்க்கலாம்.

இயற்கையின் நிலைகளில் விஷம் தாக்கித்தான், வெப்பத்தின் தன்மை கொண்டு ஒளியாகிறது. இது போன்று விஷத்தின் ஆற்றல் மிக சக்திவாய்ந்தது.

ஆகவே, நாம் புழுவிலிருந்து மனிதனாக வந்த சரித்திரத்தைக் கொஞ்சமாவது இந்த மனித உடலில் ஏற்றுக் கொண்டு
இதையெல்லாம் நீக்கி, மாற்றியமைத்த,
அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும்.

ஏனென்றால், அகஸ்தியரும் அவர் மனைவியும் விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றி கணவனும் மனைவியும் இருவருமே ஒன்றாகி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைத்துக் கொண்டு வரும்பொழுது (இந்த உபதேசத்தின் வாயிலாக) உங்கள் உடலிலுள்ள அணுக்கள் அந்த உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளும்.

உங்கள் உடலில் ஒளியான உணர்வுகள் விளையத் தொடங்கினால் அகஸ்தியன் சென்ற பாதையில் நீங்களும் அழியா ஒளிசரீரம் எளிதில் பெறமுடியும்.