பன்றியிலிருந்துதான் மனிதன் தோன்றினான்
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது விஞ்ஞானிகள்
கருத்து.
ஆனால், உணர்வின் இயக்கத் தொடர் கொண்டு
பன்றியின் உயிரான்மாதான்
அடுத்து மனித சரீரத்தை உருவாக்குகின்றது.
பன்றியின் உயிரான்மா நஞ்சான உணர்வுகளைப் பிளந்து நல் உணர்வுகளைத்
தனக்குள் இணைக்கும் நிலையாகத்தான் உணர்வினை வளர்த்து, தனது மறு பிறவியில் மனிதச் சரீரத்தைப்
பெறுகின்றது.
இதுதான், கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரமாகக் காண்பித்து மெய்ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை ஆகும்.
பூர்வ புண்ணியம் என்றால் என்ன?
தாய் எண்ணிய உணர்வுகள் அந்தத் தாயின் கருவில் வளரும் குழந்தைக்கு
நல் உணர்வு ஆகின்றது.
கருப்பையில் இருக்கும் பொழுது பெற்ற நல் உணர்வுகளே அந்தக் குழந்தைக்குப்
பூர்வ புண்ணியம்.
மெய்ஞானியர் அனைவரும்
தாம் பெற்ற பூர்வ புண்ணியத்தினால்தான்
தம்மிடத்தில் மெய்யுணர்வின் தன்மையைப் பெற்றார்கள்.
கொன்றால் பாவம் - தின்றால் போகுமா?
“கொன்றால் பாவம் - தின்றால் போகும்” என்பார்கள். இது தவறு.
எந்த ஜீவனின் மாமிசமோ அதனின் உணர்வின் மணம் தின்றவரின் உடலில் இணைகின்றது.
அதனின் உணர்வின் மணத்தை அவர் தனக்குள் அதிகமாக்கியபின்,
அவருடைய உடலை விட்டுப்பிரியும் உயிரான்மா
நேராக அந்த ஜீவனின்
ஈர்ப்புக்குள் சென்று
அந்த ஜீவனின் ரூபமாக சரீரம் பெறுகின்றது.
இதுதான் உண்மை.
அடுத்த சரீரத்தின் கணக்கு
எதனின் உணர்வை நம்முள் (நம் உடலுக்குள்) அதிகமாக இணைக்கின்றோமோ
அதனின் உணர்வுகளுக்கொப்ப நமது அடுத்த சரீரம் அமைகின்றது.
இதை நமக்கு உணர்த்தும் விதமாக சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன் என்றுரைத்தார்கள் மெய்ஞானிகள்.