நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், ஒருவனைப் பார்த்து
என்னை இப்படிப் பேசுகிறான்,
அப்படிப் பேசுகிறான்.
இதைச் செய்கிறான். அதைச்
செய்கிறான்
என்று சொல்லிக்கொண்டே
இருந்தால் என்ன ஆகும்?
நம் நல்ல குணங்கள் வளர்வதற்கு மாறாக குடலை
உருவி மாலை போட்டமாதிரி அதை வளரவிடாமல் நல்ல குணங்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் நமது வாழ்க்கையில்
நன்றாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நமக்குள் எதிரி என்ற நிலைகள் அதிகமானால் நம் நல்ல குணங்களை அடிபணிய
வைத்துவிடுகின்றது. நம்
உடலுக்குள் வரும் அந்த எதிரியினுடைய உணர்வை நாம் மாற்ற வேண்டும்.
அதற்கு என்ன செய்யவேண்டும்?
நம் நல்ல குணங்களைக் காக்க நம்
உயிரான ஈசனிடம் வேண்டி, மனிதனாக உருவாக்கிய அந்த நிலைகள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின்
பேரருளைப் பெறவேண்டும், அது காக்கப்பட வேண்டும் என்று அதற்கு வலு ஊட்ட வேண்டும்.
அது காக்கப்படவில்லை என்றால்,
நல்ல குணங்கள் மடியும் நிலை
வரும்போது சிந்தனை குறைகிறது.
ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தவுடன்,
நம் உடலில் எவ்வளவு கெட்ட குணங்கள் இருந்தாலும் அதை திருத்த
உதவுகிறது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் பெறவேண்டும் என்று
இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட்டு
தீமை என்ற உணர்வை உள்ளே
விடாதபடி
தடுத்து நிறுத்திவிட வேண்டும்.
இரத்தத்தில் சேராதபடி தடுத்தவுடன் தீமை என்ற நிலைகளைத் தள்ளிவிடுகின்றது. அந்த உணர்வு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் எண்ணியவுடன்
இதைத் தள்ளி விட்டுவிடுகிறது.
தள்ளி விட்டவுடன் அந்த
மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். யாராவது கோபித்தவர்கள் கோபிக்கும்போது பார்த்தால் அந்த மகரிஷிகளின்
அருள்சக்தி பெறவேண்டும்.
அவர்கள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும்,
தெளிந்த மனம் பெறவேண்டும்.
பிறருக்கு நன்மை செய்யக்கூடிய
அந்த எண்ணங்கள் வரவேண்டும்
என்று அந்த உணர்வுகளை நுகர வேண்டும்.
அப்படி நுகர்ந்தால், மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அது ருசியாகி நம் உணர்ச்சியைத் தூண்டுவது போல, அவர்கள் செயல்கள் முழுவதும் நமக்குள் நல்லதாக மாற்றி விடுகிறது.