ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2012

இராமாயணம்

1. கல்யாணராமன்
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச் செய்து,  அந்த மகிழ்ச்சியின் தன்மையில், நமது மகிழ்ச்சியின் தன்மையை, நம்மில் வளர்த்திடும் நிலை பெற வேண்டும்.

இராமாயணத்தில் கல்யாண ராமா.... என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ, அவரே சீதையை மணக்கும் தகுதியுடைவர் என்கிற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில்,  காண்டீபத்தில் பொருத்தி எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது.  ஆகவே, துன்புறுத்தும் உணர்வினை வென்றவர் எவரோ, அவரே சீதையைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவர், என்னும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும், வில்லின் வலிமையைத் தான் உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக் கூட அவர்களால் முடியவில்லை. ஆனால் இராமனோ,  தீமை விளைவிக்கும் நிலைகளில் ருந்து, தீமையில்லாத நிலையை விளைவிக்கின்றான், என்பதை உணர்த்தும் பொருட்டு, இராமன் வில்லை தூக்கி நிறுத்தி, வளைத்து, முறித்து விடுகின்றான்.

அதன்பின், சீதையை இராமன் மணந்து கொள்கின்றான் எனக் காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத் தான் கல்யாணராமன் என்று எடுத்துரைத்தனர். இவ்வாறு வளர்ந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ந்த மகரிஷிகள்,  இந்த மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி,  தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள்.  துருவ மகரிஷியை பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் எனும் நிலையை, அடைந்தார்கள்.

காரம், எரிச்சலைத் தருவது என்றும், புளி கூசச் செய்வது என்றும், உப்பு உமட்டலைத் தருவது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், நாம் ஒரு கருணைக் கிழங்கை எடுத்து வேக வைத்து, கிழங்கில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, அதனுடன் காரம், புளி, உப்பு இவைகளை அளவாக இணைத்துக் குழம்பு வைத்து, சுவை மிக்கதாகச் செய்து சாப்பிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். இதைத்தான், நாம் கல்யாணராமன் என்று உணர வேண்டும்.

பல கோடித் தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், அதனை, மகரிஷிகள் தமது அரவணைப்பாக,  தமக்குள் சுவைமிக்க ஒளியாக, மாற்றிக் கொண்டவர்கள். 

துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களைத் தம்முள் வளர்த்திடாது, ஒளி பெறும் உணர்வினைத் தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாற்றியவர்கள். இதுதான் கல்யாணராமா என்பது.
2. கைகேயி -- நம்மையறியாமல் நமக்குள் புகும் தீய வினைகள்
தசரதச் சக்கரவர்த்தி என்பது எது?  பத்தாவது நிலையை அடையக்கூடிய, மனித உடலை உருவாக்கிய உயிருக்குப் பெயர்தான்தசரதச் சக்கரவர்த்தி.  

உதாரணமாக, தசரதச் சக்கரவர்த்தி தாம், மூன்று நாட்டையும் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கொள்கினறார். இந்த சிந்தனை உருவாகின்றது. அதன் வழிப்படி, அவர் திட்டமிடுகின்றார்.

உணர்வின் தன்மையினை, அணுவாகப் பெருக்கிக் கொள்கின்றார். அதன் ஞானம் வருகின்றது. அதன் வழி வியூகத்தை வகுத்து, இந்த நாட்டை, எப்படி ஆட்சி புரிய வேண்டும், என்ற உணர்வின் போர் முறைக்குச் செல்கின்றார்.

எதன் சக்தியைத் தன்னுள் இணைத்துக் கொண்டாரோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, தன்னுள் இணைந்த சக்தியை இயக்கச் செய்து, மூன்று நாட்டையும் வெல்கின்றார்.

அப்படி மூன்று நாட்டையும் வென்ற பின்,
வெற்றி பெற்ற உணர்வு தன்னுள் இருப்பதனால்,
நாம் புரிந்து கொள்வதற்காக,
என்னை வெற்றி பெறச் செய்தாய்,
உனக்கு என்ன வரம் வேண்டும்?
இரண்டு வரத்தைக் கேள்,
என்று, தசரதச் சக்கரவர்த்தி தனது மனைவி கைகேயியிடம் கேட்பதாக, இராமாயணக் காவியம் கூறுகின்றது.

என்ன வரம் வேண்டும்? என்று தசரதச் சக்கரவர்த்தி கேட்கும்பொழுது, நான் சமயம் வரும் பொழுது கேட்கின்றேன் என்று கைகேயியிடமிருந்து பதில் வருகின்றது. ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், உடனே விளைந்து விடுமா? செடி தோன்றிவளர்ந்துபூ பூத்துஅதன்பின் தான் காய் காய்க்கும். 


ஆகவே, தசரதச் சக்கரவர்த்தியின் உடலுக்குள், தான் வெற்றி பெற்றதற்கான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, அவருடைய உடலில், இதன் உணர்வின் தன்மை முழுமை அடைகின்றது.

உதாரணமாக நமது உடலில் கோபம் என்ற உணர்வின் தன்மையை உருவாக்கி விட்டால், கார உணர்ச்சி கொண்ட அணுவாக உருவாகின்றது.  அணுத் தன்மை அடைந்தபின், அது தன் சக்தியாக இயக்கிக் கொண்டு, தன் இனத்தின் தன்மையைப் பெருக்குகின்றது. 

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அது செடியாகி, தன் வித்துகளை உருவாக்குகின்றதோஇதைப் போன்று,
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு,
எண்ணிய உணர்வு, இவருடைய உடலுக்குள் வந்து,
தன் இனமான, குழந்தைகளாக உருவாக்கி விடுகின்றது.

பிறரை, வேதனைப்படுத்தி செயல்பட்டது தான் கைகேயி. ஆகவே, பிறரைத் துன்புறுத்தும் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நாளடைவில் அதன் உணர்வின் எண்ணங்கள் அதிகரித்துஅதிகரித்துத்  தன் உணர்வின் தன்மை வலுவாகின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் தருணம் வருகின்றது. எல்லோரும் அதற்கான காரியங்களைச் செயல்படுத்துகின்றனர். ஆனால், கைகேயி இராமனுக்கு பட்டம் சூட்டிவிட்டால், தான் வேலைக்காரியாகி விடுவேன் என்று எண்ணுகின்றார். அதாவது,
மற்றொன்றின் மீது போர் தன்மை கொண்டு,
வெற்றி பெறச் செய்த உணர்வுகளின்,
உணர்ச்சியின் தன்மை
இந்த உடலுக்குள் நின்று, எப்படிச் செயல்படுகின்றது? என்ற நிலையைத்தான், தசரத சக்கரவர்த்தியின் உடலில், பத்தாவது நிலையை அடையப்படும் பொழுது, இவருடைய உடலில் இருந்த உணர்வின் உணர்ச்சிகள், எப்படிச் செயல்படுகின்றது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றார்கள்.

அது சமயம், தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும், செய்து விடுகின்றார். இதுதான் தருணம் என்று, கைகேயி தசரதச் சக்கரவர்த்தியிடம், போர் காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அந்த இரண்டு வரங்களை இப்பொழுது தருவீர்களா என்று கேட்கின்றார்.

கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எண்ணுகின்றார். தன் மகன் என்றால்,
மற்ற போர் முறைகளில் வென்ற உணர்வுகள். 
அது இவ்வுடலில் என்ன செய்யும்? 
தனது கை ஓங்கி இருக்க வேண்டும், என்ற நிலையைச் செய்யும். 

உணர்வின் உணர்ச்சிகள் எண்ணமாகி, எதன் உணர்ச்சிகள் உடலில்  உருவாகின்றதோ, அதன் தொடர் கொண்டு, நமது உடலில் எத்தனை போர் முறைகள் நடக்கின்றது?

தீமையின் உணர்வுகள், நல்ல குங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது என்பதைத்  தெளிவாக்குகின்றது  இராமாயணம்.

கைகேயி, வரங்களைத் தாருங்கள் என்று கேட்டபின், தசரதச் சக்கரவர்த்தி, தாரளமாகக் கேள், உனக்கில்லாததா? என்று சொல்லுகின்றார். தொடர்ந்து கைகேயி கேட்ட வரங்கள், இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும், பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்பது.

ஆகவே, ன்றைக்குப் போர் முறைகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்த நிலைகளால், தன் உடலுக்குள் நல்லவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி.
பத்தாவது நிலை அடையக் கூடியவர்,
மற்றதை வேதனைப்படுத்தி,
ஜெயித்துக் கொண்டபின்,
தான் நிகரில்லாதவன், என்ற நிலைகளை எண்ணினாலும், உடலுக்குள் தீய வினைகள் வந்து, நல்லதைச் செய்யவிடாதபடி எப்படித் தடுக்கின்றது? என்பதை இங்கே உணர்த்துகின்றது, இராமாயணக் காவியம்.

உதாரணமாக, நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், தீய உணர்வுகள், உங்கள் உடலில் எப்படி நோயை உருவாக்குகின்றது என்பதனையும், பத்தாவது நிலையை அடையும் உயிர், எல்லாவற்றையும் ஆட்சி புரியும் நிலை வந்தாலும், நமக்குள் தீய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்ற நிலையையும், இராமாயணக் காவியம் தெளிவாக உணர்த்துகின்றது.

சட்டப்படி, நான் முதலில், மூத்தவனுக்குப் பட்டம் சூட்டவேண்டும் என்று எண்ணினேன். நீ இடைமறித்து பரதனுக்குப் பட்டம் சூட்ட எண்ணுகின்றாய், பரவாயில்லை. ஆனால், நீ நல்லவனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்லுகின்றாயே? இது உனக்குத் தகுமா? என்று கைகேயியிடம் தசரதச் சக்கரவர்த்தி கேட்கின்றார்.

உடனே கைகேயி, சட்டப்படி மூத்தவன் இருக்கும் பொழுது, இளையவனுக்குப் பட்டம் சூட்ட முடியாது, ஆகவே, இராமன் துறவறம் பூண்டால்தான், பரதனுக்குப் பட்டம் சூட்ட முடியும். அதனால்தான் சொல்கின்றேன், பரதனுக்குப் பட்டம் சூட்டினால்தான், நான் அரசியாக இருக்க முடியும், இல்லையென்றால், வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும்.

போர்க்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தேனே, எதற்கு? நான் வேலைக்காரியாக இருப்பதற்காகவா? என்பது போன்ற வினாக்களை கைகேயி எழுப்புகின்றார்.

அதாவது,  விஷ உணர்வுகளை எடுத்துக் கொண்டால் என்னவாகும்? என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

இதனால், வேதனை உணர்வை நுகர்ந்த தசரதச் சக்கரவர்த்தியின் நிலை என்னவென்றால், இப்படி ஆகிவிட்டதே, நல்லவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று எண்ணுகின்றார்.

எத்தனை பேரை வேதனைப்படுத்தி சாம்ராஜ்யத்தைப் பிடித்தாரோ, அதே வேதனை அவருக்குள் எப்படி வருகின்றது?

போர் முறைகளில் வெற்றி பெறும் பொழுது, இரசித்தார். ஆனால், உடலில் ஆட்சி புரியும் தன்மை வரப்படும் பொழுது, நல்லவைகளை ஒதுக்கி, தீமைகளை எப்படி வளர்க்கின்றது என்பதை, இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

ஆகவே, பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்ற நாம், இந்த வாழ்க்கையில், தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ, உடனடியாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து, அந்தத் தீய வினைகள் நமக்குள் வளராமல் தடுக்க வேண்டும்,            

இந்தப் பிறவியில், பிறவி இல்லா நிலை அடையும், அருள் வாழ்க்கை வாழ்வோம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம்.  எமது அருளாசிகள்.
3. இராவணன் – நமக்குள் இருக்கும் அசுர குணங்கள்
மனிதராக உள்ள நாம், இந்த வாழ்க்கையில், கோபமான உணர்வுகளையே நம்முள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருப்போம் என்றால், நமது அடுத்த சரீரம், புலியின் ரூபமாகத்தான் அமையும் என்பதை, இராமாயணத்தில் காண்பித்தார்கள்.

அதாவது  இராவணன்,  தான் மூன்று லோகத்தையும் அடக்கவேண்டும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று, அதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி, விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் இருந்தான், என்று இராமாயணக் காவியம் கூறுகின்றது.

இந்திரலோகம் என்பது, இன்பம் நிறைந்ததாக இருக்கும் லோகம். ஆனால், இராவணன், அரக்கத்தன்மை கொண்டு, தான் அனைத்தையும் அடக்கவேண்டும் என்று,  இந்த உயிரை வைத்துத்தான் எண்ணுகின்றான்.

விஷ்ணுவை நோக்கி, இராவணன் தவம் இருந்தான் என்றார்கள். விஷ்ணு என்பது யார்? விஷ்ணு என்பது நமது உயிர்.  இந்த உடலில், அனைத்தையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது, ஆறாவது அறிவு. இதனைத்தான், கன்னியர்கள் இந்திரலோகத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வைத்திருந்தார்கள், என்றனர் ஞானிகள்.

மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்திரலோகத்தை அடக்கவேண்டும், தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும், என்று எண்ணிய இராவணன் கடுந்தவம் மேற்கொண்டான் என்றும், தனக்குக் கீழ்படியாதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் எண்ணினான்  என்று காவியத்தில் கூறினார்கள்.

நாம், பிறிதொருவரிடம் உள்ள தீய குணங்கள் அகலவேண்டும், என்று எண்ணினால் நல்லது.  ஆனால், தீய குணம் கொண்டவர்களை, அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், நமக்குள் கொல்லும் உணர்வுகள்தான் விளையும்.

இதைத்தான், இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி,  பத்தாவது நிலையை அடையக் கூடிய உயிரும், உயிரால் நுகரப்பட்ட உணர்வுக்கொப்ப உடலும், உடலின் தன்மை பெற்றபின்,  உடலை வளர்க்க உணர்வுகள் என்ன செய்கின்றது? என்றும், நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் வளர்ந்த இராமனும், இராமனிடத்தில் நன்மையை நாடும் உணர்வுகள் எப்படி இயங்குகின்றதென்ற நிலையை, ஞானிகள் காட்டியுள்ளனர், 

அதே சமயத்தில், இராவணனிடத்தில் அசுர குணங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும், மனிதர்கள் பத்தாவது நிலையை அடைவதற்கு, தடைகள் எப்படி வருகின்றது என்பதையும், இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இராவணன், பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரம்மாவும் இராவணனுக்கு வரம் கொடுத்தார். பிரம்மா, விஷ்ணுவின் மகனல்லவா. ஆகவே, பிரம்மாவும், இராவணனின் தவத்திற்கேற்ப நீ அனுபவி என்று வரம் கொடுத்துவிடுகின்றார். இராவணனும் தன் தவத்திற்கேற்ப, இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்தினான்.

உதாரணமாக, நாம் பிறிதொருவரைக் கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும் என்று எண்ணினால், இந்த உணர்வின் தன்மையை உயிரான ஈசன், நமக்குள் இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது. கொல்ல வேண்டும் என்ற உணர்வு நமக்குள் வந்தவுடனே என்னவாகிறதென்றால், இந்திர லோகத்தில், கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு, அணுவாக மாறுகின்றது,  இது பிரம்மா.

கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு விளைந்த அணு, நம்முள், தீமைகளை வளர்த்திடும் சக்தி பெறுகின்றது. நாம் மனிதராக இருக்கக்கூடிய நிலைகளில், மனிதராக உருவாக்கிய நல்ல குணங்களை மாற்றும் தன்மை வந்து, எமலோகமாக மாறுகின்ற பொழுது, மனிதர்கள் என்ன செய்கின்றனரென்றால், சீதா எனும் மகிழ்வான உணர்வைச் சிறைப்பிடித்து விடுகின்றனர்.

அதாவது, மகிழ்ச்சியான உணர்வு வெளியே வராதபடி அடக்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டுமல்லவா? அதைத் தான்,
இராமாயணத்தில், 
உயிரின் இயக்கத்தையும், உடலின் ஆக்கத்தையும்,
பின் விளைவுகள் என்ன? 
என்பதையும் தெளிவுபட எழுதினார்கள்.

சீதாராமா எனும் பொழுது, எந்த குணத்தின் சத்தை எடுக்கின்றோமோ, அதன் உணர்ச்சியின் எண்ணங்களை இயக்கும், அதனின் உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும். உணர்வுக்கொப்ப, உடலின் அமைப்பு வரும், என்னும் நிலையை, தெளிவாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

      ஆகவே,  நாம் தீமையான நிலைகளைக் காணும் பொழுது, அதிலிருந்து மீண்டிடும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்திடல் வேண்டும். நமது உயிரை ஈசன் என்று மதித்திடல் வேண்டும்.

ஈசன் வீற்றிருக்கும், இந்த உடலை ஆலயமாக மதித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, இந்த உடல் முழுவதும் படரச் செய்து, பரிசுத்தமாக்க வேண்டும். நம்மை மனிதனாக உருவாக்கிய, நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும், என்பதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.

இராமாயணம் நமக்குக் கிடைத்த, அரும்பெரும் பொக்கிஷம்.  யாம் இப்பொழுது உரைத்ததன் தொடர் கொண்டு, இராமாயணத்தை நீங்கள் அனைவரும் படிப்பீர்களென்றால், இராமாயணக் காவியத்தின் அர்த்தங்களைத் தெளிவாக அறியமுடியும். 

அதன் வழியில், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும், சர்வத் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி நீங்கள் பெற்று, மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருள் ஆசிகள்.
4. வாலியை, இராமன் மறைந்திருந்து தாக்கினான்

எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு, இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றனர். வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார்  நேரிடையாகப்” போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது,  அவர்களை நேரிடையாகப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால், அந்த உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து, வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும். 

ம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
"பாதி நல்ல குணம்" வலு இழக்கப்படுகின்றது.
வாலி என்ற நஞ்சான செயல்களை,
நாம் பார்க்கப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும்.

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்துநுகர்ந்து அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும். பிறகு,
மகரிஷிகளின் அருள் சக்தி
வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும்,
அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும், என்று
நாம் மறைமுகமாக, 
நம் எண்ண வலுவின் தன்மை கொண்டு
அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான் சீதாராமன்,  வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி, அதைக் காட்டிலும்  சக்தி வாய்ந்த கணையை, மறைந்திருந்து ஏவினான், வாலியின் செயலைத் தடுத்தான்,  என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.

5. சீதாவின் பதிபக்தி
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நமக்குள் சேர்த்து, இன்னொரு உடலின் பிடிப்பிற்குள் சிக்காதபடி, எவருடைய உடலிலும் பதிவாகாதபடி, நமக்குள் அருள் உணர்வை பதிவாக்கப்படும் பொழுது,  இந்த உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா, நேரடியாகவே, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றது,  சொர்க்கமடைகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் கூறுகின்றனர். அதாவது,  இராமனின் மனைவி சீதா, இராவணன் எனும் அரக்கன் கையில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டாலும்,  சீதாவானது, இராமனின் நிலைகளையே எண்ணியது. 

இராவணன் ஒரு அரக்கன். அவனுக்கு மற்றவர்களை அடிமைப்படுத்துவது சுகம். அந்த அரக்கனின் பிடியில் சிக்கிய சீதா, அரக்கனின் உணர்வையும், அரக்கிகள் கொடுக்கும் தொல்லைகளையும் சிறிதளவும் எண்ணத்தில் வைக்கவில்லை.

இராம நாமம், அதாவது  உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு, சீதா பதி பக்தி  என்னும் நிலையில் தன் கணவன் மீதான உணர்வுகளைத் தம்முள் உருவாக்கியது.  இராமன் எப்போது வேண்டுமானாலும் என்னை மீட்டி செல்லும் ஆற்றல் பெற்றவர். தன்னை மீட்டிக் கொண்டு போவார் என்ற எண்ணத்தைத்தான் சீதா கூட்டியது.  அரக்கர்கள் கூட்டி வந்த நிலையிலும் கூட, தன் பதி பக்தியைத்தான் அங்கே எண்ணியது.

ஆக, கணவன், மனைவி என்ற நிலையில்,
தன் பதி என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு,
பதி பக்தியின் தன்மைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டது. 

சீதா எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையே, பதியை (இராமனை) வீரியமாக இயக்கச் செய்கின்றது. இராமனின் உணர்வை வலுப் பெறச் செய்து, சீதாவை மீட்டுச் செல்லும் வலிமையானது இராமனிடத்தில், சீதாவால்தான் உருவாக்கப்படுகின்றது.

இதன் தொடர் கொண்டு, இராமன் கடல் கடந்து, அரக்கர்களுடன் போரிட்டு, அரக்கர்களிடமிருந்து சீதாவை மீட்டி வந்தாலும், அங்கே கூடியுள்ள மக்கள், சீதா அரக்கர்களால் சிறையில் அடைக்கப்பட்டவர், அவருடைய பதி விரதம் எத்தகையது? என்று சந்தேகிக்கின்றனர்.

இதனால், சீதாவினுடைய பதி விரதத்தின் தன்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், மக்களுடைய கூக்குரலுக்காக வேண்டியும், இராமனும் அதன் வழியே, தம் மனைவியை பிறர் மெச்ச வேண்டும் எனும் நோக்கில், உன்னுடைய பதி பக்தி என்ற நிலைக்காக வேண்டி நீ அக்னியில் இறங்கி வரவேண்டும்  என்றுரைத்தார்.

பதியின் சொல் தட்டாத சீதா,  என்னுடைய பதிதான் முக்கியமே தவிர, இந்த அக்னி எனக்குச் சொந்தமல்ல” என்ற நிலையில், சீதா அக்னியைப் பற்றிச் சிறிதும் பயம் கொள்ளவில்லை.

தன் பதியின் உணர்வை தனக்குள் எடுத்து, அக்னியின் இடையே இறங்கி வந்தார். இதனுடைய கருத்து என்ன? பிறர் மீது தீமை என்ற உணர்வையோ, அக்னி தன்னைச் சுட்டுவிடும் என்ற எண்ணத்தையோ, சீதா தன்னிடத்தில் வளர்க்கவில்லை.

சீதா, பதி பக்தியின் தன்மை கொண்டு, அக்னியில் சாதாரணமான நிலையில் வரும் பொழுது, அக்னி அங்கே சுடவில்லை. இதனால், சீதா பரிசுத்தமானவள் என்ற நிலைகள் வருகின்றது. ஆகவே, பதியின் மேல் எற்படுத்திக் கொண்ட அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது என்று இராமாயணத்தில் நிரூபிக்கின்றனர். 

சாதாரணமான மக்களும்,  பதி பக்தியின் தன்மையின் மனதை, எண்ணங்களை, தங்களில் கொண்டு வரப்படும் பொழுது, அதுவே தாங்கள் ஜெயிப்பதற்குக் காரணமாக இருக்கின்றது  என்பதை, இராமாயணக் காவியம் மூலம் காண்பிக்கப்படுகின்றது.

இராமர் என்பது உணர்ச்சியின் இயக்கங்களே. ஆனால், திசை திருப்பப்பட்டு உண்மையின் இயக்கங்களை மறந்து, வெறும் இராம ஜெயத்தை எழுதிக் கொண்டுள்ளார்கள்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால், சூரியனைக் குறிக்கின்றது. அது மற்ற உணர்வின் தன்மைகளை எடுக்கின்றது. மற்ற உயிரணுக்களை வளர்க்கின்றது. எதன் உணர்வின் தன்மை பெற்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, அதனதன் நிலைகளில் எப்படி வளருகின்றது என்பதை உணர்த்துவதற்கு, ஜனக சக்கரவர்த்தி என்று பெயரிட்டு மூலக்கூறுகளைத் தனித்தும், பிரித்தும் காவியங்கள் மூலம் தெளிவாகக் கூறினார்கள் ஞானிகள்.

மண்ணிலிருந்து சீதாவைக் கண்டெடுத்தார், ஜனகச் சக்கரவர்த்தி. மண்ணிலிருந்து வரக்கூடிய, உருவாக்கும் உணர்வின் தன்மை கொண்டு, அதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மையை உருவாக்கும் சக்தி பெற்றது. ஆக, இதுதான் ஜனக சக்கரவர்த்தி என்பது. சூரியன்,
தாவர இனத்தின் தன்மையை எடுத்து,
உயிர்களின் தன்மையை நுகரச்செய்து,
உயிரணு போன்று உணர்வின் தன்மையை இயக்கி,
உணர்வின் தன்மை அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள் வருகின்றது.

இவைகளெல்லாம் திரேதா, உடல்களில் உணர்வு என்றும், சீதா சுவைக்கொப்ப உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? என்பதையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
6. இராமலிங்கம்
இராமாயணக் காவியத்தில், இராமேஸ்வரத்தில், இராமன் ஆஞ்சனேயனை அழைத்து, பூஜை நேரம் வந்துவிட்டது. காலை 4.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும், அருளுணர்வைப் பெறவேண்டும், பருக வேண்டும், லிங்கத்தை எடுத்துவா என்று இராமன் ஆஞ்சனேயனுக்கு கட்டளையிடுகின்றார்.

ஆனால்,   அந்த உணர்வின் எண்ணங்கள் வருவது கால தாமதமாகின்றது. ஆகவே, இராமர் அங்கே ருக்கும் மணலையே கூட்டிச் சேர்த்து சிவலிங்கமாக அமைத்து பூஜிக்கின்றார், என்று இந்த உணர்வின் தன்மையை அங்கே தெளிவாகக்  காண்பிக்கின்றார்கள். அதனால்தான் இராமலிங்கம்  என்று காரணப்பெயர் வைத்தார்கள்.

காலை 4.00 மணியிலிருந்து விண்ணிலிருந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நம் பூமியின் துருவப்  பகுதி வழியாக வந்து, நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அந்த நேரத்தில், நாம் நம்முடைய மனதைக் குவித்து, உயிரோடு ஒன்றி (இராமலிங்கம்), துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க வேண்டும் என்பதைத்தான் காவியத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. 

அதை மனிதர்கள் யாரும் கவரவில்லையென்றால், 6.00 மணிக்கு மேல் சூரியன் அதைக் கவர்ந்து, கடல் பகுதியில் சேர்த்துவிடும். 

ஆஞ்சனேயன் என்பது வாயுபுத்திரன். இப்பொழுது யாம் சொல்லும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு, வாயுவாக மாறுகின்றது. யாம் சொல்லும் உணர்வுகள், சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை, நீங்கள் உங்களுக்குள் நுகரப்படும் பொழுது, உங்களுடைய சரீரத்திற்குள் சென்று, அதனின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அதனால்தான், இராமனின் பக்தன் ஆஞ்சனேயன் என்றும், இராமன் இடும் கட்டளை அனைத்தையும் முழுமையாகச் செயல்படுத்துவான் என்றும், நாம் நுகரும் உணர்வுகள் அதனின் எண்ணங்களை, உணர்ச்சிகளைத் தூண்டி, அதன் உணர்வுக்கொப்ப நமது உடலை எப்படி இயக்குகின்றது என்பதனையும், இராமாயணக் காவியம் கூறுகின்றது.

தனுஷ்கோடி என்று காரணப்பெயரை வைத்து, இராமன் அங்கே மணலை கூட்டி, லிங்கத்தை அமைத்து பூஜித்தார், என்று காவியம் கூறுகின்றது. தனுஷ்கோடி என்றால் கடைசி நிலை, மனிதன் முழுமையடையும் தன்மை பெற்றநிலை என்பதற்காக வேண்டி, தனுஷ்கோடிக்கு இராமன் வந்து, எல்லாவற்றையும் கூட்டி அமைத்து வளர்த்தார் என்று காண்பிக்கின்றார்கள்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்து, கடைசி நிலை பெற்றது தனுசுகோடி.  உயிரின் தன்மை கொண்டு, விஷ்ணுவின் தனுசைப் பெற்றவர்களின், உணர்வு எதுவோ,  அதன் நிலை கொண்டு உயிர் இயக்குகின்றது,

அதன் வழி உணர்வுகள் அனைத்தும் இயக்க நிலை கொண்டு, எண்ணங்கள் கொண்டு, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது,  துருவ நட்சத்திரம்.

இவைகளை எல்லாம், யாம் உங்களுக்கு எதற்காகச் சொல்கின்றோம் என்றால்நாம் தனுஷ்கோடி என்னும் கடைசி நிலையில் இருக்கின்றோம். எல்லாவற்றையும் வென்றிடும் நிலையில் இருக்கிறோம்.

ஆகவே, நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் எதனில் இருக்க வேண்டும்? என்பதை நாம் உணரவேண்டும்.  துருவ நட்சத்திரத்தின் உணர்வை, கோடிக்கரை எனும் இவ்வுடலான நிலையிலிருந்து நாம் எடுத்து, நம்முள் சேர்த்து, பிறவியில்லா நிலை என்ற நிலையினை,  நாம் அடைதல் வேண்டும்.

7. மண்ணிலே தோன்றிய நமது உடல் இந்த  மண்ணாகவே ஆகிவிடுகின்றது
இராமன், சீதாவை, இராவணனிடம் இருந்து மீட்டியபின், சாம்ராஜ்யப் பதவியை அடைகின்றனர். அடைந்தபின் சீதா கர்ப்பமுறுகின்றார். அரக்கனிடம் இருந்து மீட்டு வந்ததும், அதற்குள், சீதா எப்படிக் கர்ப்பமுற முடியும்? என்று மக்கள் பேசுகின்றனர்.

இதனால், எங்கே செல்கிறோம், எங்கே செல்லப் போகின்றோம் என்று சீதைக்கே தெரியாதபடி, சீதையை அழைத்துக் கொண்டு போய், காட்டில் அனாதையாக விட்டுவிடுகின்றார், இராமன்.

இராமன் என்பவர் கடவுள்தானே, எல்லோருக்கும் நீதி வழங்குபவராக இருக்கக் கூடியவர், மக்கள் கூறுகின்றார்கள் என்று அநீதி வழங்கி நாம் துன்பப்படுகின்றோமே என்ற நிலை வருகின்றதாதுன்பம் அல்லாதவர்.

ஆனாலும், கர்ப்பிணிப் பெண்ணைக் காட்டில் கொண்டு போய்த் தனியாக விட்டுவிட்டு வந்தால், என்ன செய்யும், எத்தனை அவஸ்தைகளையும், துன்பங்களையும், அனுபவித்திருக்கும்? 

அப்போதும் சீதா என்ன எண்ணுகின்றது. எதற்காக, இப்படித் தன்னைத் தனியாகக் காட்டில் விட்டார் என்று சீதா எண்ணவில்லை.

தன் பதி செய்வதின், உண்மையின் உணர்வுகளை உணர்ந்து,
எங்களில் உயர்ந்த உணர்வுகள் வளரவேண்டும் என்றும்,
அருள் தன்மை எங்களில் வளரவேண்டும் என்றும்,
அவருடைய உணர்வுகளுடன் ஒன்றி வாழவேண்டும்
என்ற உணர்வைத்தான், சீதா எடுத்துக் கொள்கின்றது.

சீதாவிடம், இராமன் தன்னைச் சாம்ராஜ்யத்தை விட்டு, காட்டிற்கு என்னை அனுப்பிவிட்டாரே என்ற நிலை இல்லை. வான்மீகியின் ஆசிரமத்திற்கு சீதா வந்து நிற்கும் பொழுது, வான்மீகி, சீதாவை அறிந்து கொள்கின்றார். சீதா ஆசிரமத்தில் தங்கி வசிப்பதற்கான உதவிகளைச் செய்தார் வான்மீகி.

அப்போது, கர்ப்பிணிப் பெண்ணான சீதாவிற்கு, இராமன், சீதா சரிதத்தை எடுத்துரைக்கின்றார். இராம நாம ஜெபத்தையும், இராமனுடைய நிலைகளையும், அசுர உணர்வுகளின் இயக்கங்களையும், அதிலிருந்து மீட்கப்பட்ட உணர்வுகளையும், சீதாவின் கருவிலே இருக்கக் கூடிய குழந்தைக்கு, வான்மீகி ஓதுகின்றார்.

சீதாவிற்கு குழந்தைகள் பிறந்தபின், அவர்களுக்கு லவ, குசா என்று பெயரிடப்படுகின்றது. அந்தக் குழந்தைகள், இராமனுடைய பிள்ளைகள்தான் நாங்கள் என்றும், தாயார் தவறு செய்யவில்லை என்றும், சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட நிலைகள்தான் என்றும், பாடல்களாகப் பாடி வருகின்றனர்.

சீதாவோ, தம் கணவனின் உணர்வின் தன்மையை எடுத்து, தம் கணவர் மனம் கலங்காமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், அவர் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும், என்ற உணர்வின் தன்மையை எடுத்துத் தவமிருந்தது.

தம் கணவருடன் இணைந்து வாழவேண்டும், மனம் ஒன்றி வாழவேண்டும் என்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டார். எடுத்துக் கொண்ட உணர்வு அனைத்தும், விஷ்ணுவை அடைந்தது. ஆகவே, அங்கே  வேதனையற்ற உணர்வும், தெளிந்த ஞானமும் வருகின்றது.

இராமன் தம் குற்றத்தை உணர்ந்து, சீதாவைத் தம்முடன் அரவணைத்து வாழலாம் , எனும் நோக்கில் வரப்படும் பொழுது,
உடலிலே வளர்த்துக் கொண்ட சுவை, சீதா",
பூமியைப் பிளந்து, 
உடல் அங்கே உள்ளே சென்று விடுகின்றது.

உயிரான விஷ்ணுவிடம், பதி பக்தியின் உணர்வின் தன்மை பெற்றபின், தம் பதியின் உணர்வுடன் இணைந்து ஒன்றி, என்றுமே சொர்க்கம் என்ற நிலை அடைகின்றது.

அகஸ்தியர் தம் மனைவியுடன், இரு மனமும் ஒரு மனமாக ஒன்றி, இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றி எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனாரோ,  அதே போன்ற நிலையில், சீதா இங்கே சொர்க்கம் அடைந்தார் என்று இராமாயணத்தில் காண்பிக்கப்பட்டது.

கணவன், மனைவி என்ற நிலைகளில்
விஷ்ணுவை நோக்கி, அங்கே சொர்க்கமடைகின்றது.
உடல் என்ற நிலைகள், பூமியைப் பிளந்து இங்கே செல்கின்றது.

ஆகவே, இந்த உடலில் நாம் எவ்வளவு காலம் தவம் செய்தாலும், இந்த மண்ணில் தோன்றிய உணர்வின் தன்மை, இறுதியில் மண்ணையே சென்றடைகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை,
ஒளியின் அறிவாக இருக்கும் பொழுது,
து, இருளை அகற்றிடும் அருள் உணர்வாக,
நிலைத்த ஒளியின் சரீரம் பெறுகின்றது 
என்று இராமாயணத்தில் உணர்வின் எண்ணங்களைப் பற்றித் தெளிவாக கூறப்படுகின்றது.

8.  விஷ்ணு தனுசு
பரசுராமனுக்கும், சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது. ஏனென்றால், சிவ தனுசு எனும் பொழுது,  உடல் என்ற நிலைகளில் உருவான உணர்வின் தன்மை கொண்டு, இந்த உடலில், வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால், விஷ்ணுதனுசு எனும் பொழுது, தீமைகளை அகற்றி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது. நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்ற பொழுதுதான், விஷ்ணு தனுசிற்கும், சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது.  ஏனென்றால்,
சீதா என்றால் சுவை கொண்டது,
மகிழ்ச்சி கொண்டது,
மகிழ்ந்து வாழக்கூடியது,
மகிழ்வான செயல்களைச் செய்வது.
மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது, மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது. நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும், எந்தெந்த குணங்களை நமக்குள் பெற்றோமோ, அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக,  நாம் கோபப்படுகின்றோம் என்றால்,  அந்தக்  கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிவ தனுசு உதவும்.

நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால், இரு உன்னை நான் பார்க்கிறேன் எனும் எண்ணம்தான், நமக்கு வரும். இது, பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற, நம் உடலில் வளர்த்துக் கொண்ட சிவ தனுசு.

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ, சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால், நம்மில் உருவான தனுசை எடுத்துதான், பயன்படுத்துகின்றோம். நாம், தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவ தனுசைத்தான் பயன்படுத்துகின்றோம்.

உதாரணமாக, நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ, அதற்கொப்பதான், அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால், அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களை புரிந்து கொள்வதில்லை. என் பிள்ளை என்ற நிலையில், இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ, அதனின் உணர்வை பாய்ச்சித்தான், அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில், நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் விஷ்ணு வரம் கொடுத்துவிடுகின்றார். பின், நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, உயிர், நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது. அதே சமயத்தில், உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான்,  இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்தார்கள், ஞானிகள்.

இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு, நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுதுதான், அணுக்கரு வெடிக்கின்றது. அப்படி வெடித்தபின், அதன் உணர்வின் தன்மை எதுவோ, அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.

ஆனால்,  இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அப்பொழுது, உடலில் உருவான இவ்வணு தன் இனத்தை பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து, எந்த இன செடியின் வித்தோ,  அதே இனச் செடியைத்தான் உருவாக்குகின்றது. அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகையினால், ஒரு உணர்வின் தன்மையினை உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது, சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை, நாம் நுகர்ந்தோம் என்றால், அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள், நமக்குள் வரப்படும் பொழுது,  இதற்கும், நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம், நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப்  பாய்ச்சினோம் என்றால், அதனின் உணர்வின் கூட்டமைப்பு, தன்னில் ஒரு படையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது, கோபம் அதிகமாகி, கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற கோப உணர்வு கொண்டு, பிறிதொருவரை தாக்கிக் கொல்கின்றார்.  கோபம் உள்ளவர், சிவ தனுசை தனக்குள் எடுத்துக் கொண்டு, கோப உணர்வுகளை தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

இதே போன்று, வேதனை என்ற நிலை வரும் பொழுது, வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.  பரசுராம், நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ, அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.

உதாரணமாக, ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு. இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது, மனிதர், தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ, அது சிவ தனுசு. அதாவது, உடலை பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான், சிவ தனுசு.

உயிர் என்ற ஒளியின் தன்மையை, என்றும் ஒளியாக வைத்து, இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு".