1. மகரிஷிகள் தன் இனமாக மாற்றும் செயல்
குருதேவர் குளவியைக் காட்டுகின்றார்.
குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு
வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கி, தன்
இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள்
இதையெல்லாம் காட்டுகின்றார்.
அதாவது, மகரிஷிகள் ஒளியாதவற்கும்,
தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.
உயிரினங்களில் தன் இனத்தைப்
பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில், இனச் சேர்க்கை வேறு. இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல்
வேறு.
குளவி தனக்குள் எண்ணிய உணர்வின்
தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ்நீரைக் கூடாகக் கட்டி,
அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது, தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.
ஆக, இதற்குள் இருக்கும் விஷத்தின்
தன்மை தாங்காது, புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு, அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது,
அதிலே பதிந்துவிடுகின்றது.
அப்பொழுது, திடீரென்று ஓங்கி
எம்மை அடிக்கிறார் குருநாதர். அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்
பொழுது, குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது.
அந்தக் குளவியைப் பற்றிக்
காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால், புழுவின் மேல் தாக்கப்படும்
பொழுது, புழுவின் நினைவலைகள்,
குளவியால் தாக்கப்பட்ட உணர்வு
கொண்டு,
எவ்வாறு இணைக்கின்றது?
அந்த உணர்வுகள்,
அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு
எவ்வாறு இயக்குகின்றது,
எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது?
அதே சமயத்தில், எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன், அவரைத் திடீரென்று
பார்க்கின்றேன். திடீரென்று திரும்பியவுடன், அவர் உணர்த்திய உணர்வின் அலையை,
அந்த மெய்ஞான உணர்வை எடுத்து,
எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
இழுக்கச் செய்கின்றார்.
இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை, யாம் கவர்ந்து எமக்குள்
இழுத்தவுடன், சிரிக்கின்றார் குருநாதர்.
குளவிக்கும், மனித வாழ்க்கைக்கும்,
எடுத்துச் சொல்லப்படும் பொழுது, சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக, ஒருவனைத்
தாக்கபடும் பொழுது, இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு, அதே நிலைகளில், எதிர்
பதிலாக, ”அவவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. இந்த மூன்றுக்கும் உண்டான
வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.
குருநாதர் எம்மை அடித்தவுடன்,
திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள், அவர் எண்ணத்தால் வெளியிடுவதை,
உடனே உற்றுப் பார்த்தவுடன், அந்த உணர்வுகள் வருகின்றது.
அப்பொழுது, அவர் விளைய வைத்த
உணர்வுகள், அவரை எண்ணியபின், இந்த அடியை மறந்து, குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின், அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு,
குளைவியையே எண்ணுகின்றதோ, அதே மாதிரி
குருநாதருடைய எண்ணத்தை வைத்து, குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,
அப்படி எண்ணப்படும் பொழுது,
அவர், அந்த “மூல உணர்வுகளின்
நிலைகள்”,
அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
இதைப் போன்று, நீங்களும்
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ, உங்கள் நல்ல உணர்வுகள்
மாறுகின்றதோ, உடனடியாக, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி, நினைவச் செலுத்தும் பொழுது, அதிலிருந்து வரக்கூடிய பேரருள்
பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது, பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
அதே சமயத்தில், அந்த அகஸ்தியன்
துருவனாகி, துருவ மகரிஷியாகி, இன்று துருவ நட்சத்திரமாக, நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி, என்றும் பதினாறு என்று
கணவன் மனைவியாக இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டும், தன் இன மக்களை வளர்க்கச் செய்து
கொண்டிருக்கின்றான்.
அப்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
ஆக, அந்த துருவ நட்சத்திரத்தின்
அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது. இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைந்து, அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம்.
4. குளவி, புழுவை எப்படி தன் இனமாக (குளவியாக) மாற்றுகின்றது?
குளவி புழுவைத் தூக்கியபின்,
தன் இனத்தின் நிலைகள் கொண்டு, அது தன் இனமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.
தனக்குள் இன விருத்திக்கான
உமிழ்நீரைச் சுரக்கும் பொழுது, அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப்
பிசையும் பொழுது, ஒரு நிறம் இருக்கிறதென்றால், தனக்குகந்த மண்ணை எடுத்து வந்து, சுண்ணாம்பினால்
அதைக கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது. அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே
அதைப் பாய்ச்சுகின்றது. அதைப் பாய்ச்சி, உருண்டையை எடுத்துவந்து கூடாகக் கட்டுகின்றது.
தன் இனவிருத்தியின் உணர்வின்
நோக்கங்களில், தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வை அது எடுத்துக் கொண்டு, புழுவைத்
தாக்குகின்றது. தாக்கியவுடன், புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி, அது மறைத்துவிடுகின்றது.
முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது.
அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது. அதற்கு அந்தச்
சக்தி இருக்கின்றது.
அப்பொழுது, புழுவின் உடலை உருவாக்கிய உயிரும், உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட,
உடலுக்குண்டான
அணுக்களிலும், இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து, விஷமாக ஆகின்றது.
விஷத்தன்மை பாய்ந்தபின், புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல்தான் அதிகமாகி
வருகின்றது. அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது, அது கொட்டி
சருகாகும் பொழுது, அந்தக் கூட்டின் மேலிருந்து “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.
அந்த உணர்வின் இயக்கமானபின்,
இதே நினைவலையில், அந்த உணர்வின்
செல்கள் மாறிவிடுகின்றது.
இந்தக் கூட்டின் வழியாக,
அந்த உமிழ்நீரைச் சேர்த்தபின்,
அந்த ஒலி அலைகளை எடுக்கின்றது.
நட்சத்திரங்களில் இருந்து
வரக்கூடிய கதிரியக்கங்கள், பூமிக்குள் ஊடுருவி, அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும்.
காந்தம் அதிகமாகும் பொழுது, பூமியின் நடுவிட்டம் ஊடுருவிச் செல்லும். ஊடுருவிச் செல்லும்
பொழுது, மரங்கள் மேல் தாக்கப்பட்டால், மரங்கள் கருகி விடுகின்றது.
அப்படி ஊடுருவும் நிலைகள் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ, அதே போல சில
பாறைகளில் ஊடுருவி, அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது. அது தனக்குள் சேர்த்துக்
கொண்டபின், மொத்தத்தில் வெடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது, அதன்வழி, மாற்றங்களைக்
கொடுக்கின்றது.
பூமியின் செயலாக்கங்களுக்கு,
பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மையை, நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி,
அது உமிழ்த்தும் அலைகளை சூரியனின் காந்த சக்தி, அது தனக்குள் கவர்ந்து கொண்டபின்,
அந்த அலைகளின் வீரியம் வருவதும்,
நம் பூமியின் ஈர்ப்புக்குள்
நுழைந்து கொண்டபின்,
அது ஈர்த்துச் சேமிக்கும்
நிலையான
நடுமையத்தில் கொண்டு போகின்றது.
நாம் சுவாசிக்கும் நிலைகள், உணர்வுகளை நம் உடலுக்குள் பாய்ச்சினாலும்,
உடலில் விளைந்த
உணர்வுளை எல்லாமே, உயிரிடமே கொண்டு வந்து சேர்த்து வைத்துக் கொள்கின்றது.
இந்த உயிரின் இயக்கங்களை
ஊடுருவிச் செய்தாலும் உணர்வின் இயக்கங்களைப் பெருக்கி, அணுக்களைப் பெருக்கி, தன் நினைவுடன்
இயக்கச் செய்து, தன்னுடன் இணைத்து, ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.
இதற்கும் அதற்கும் உண்டான
வித்தியாசத்தைக் காட்டுகின்றார். 27 நட்சத்திரங்களின் நிலைகள் ஒன்று சேர்ந்தபின், கொதிகலனாக
மாறுகின்றது. அதிலிருந்து கலவைகள் ஆவியாக மாறி, இது தனது நிலைக்கு மாற்றிக் கொள்கிறது.
இதைப் போலத்தான்
இந்த விஷத்தன்மை கொண்ட உணர்வுகள்,
புழு, கூட்டுக்குள் அந்த
உணர்வின் வேகங்கள் எடுத்தபின்,
இந்த அணுக்களில் பட்டபின்,
புழுவின் “உயிர்”, இந்த உணர்வுகளை
எடுத்து, இந்த செல்களை மாற்றி, குளவியாக உருவத்தை மாற்றுகின்றது. இது பரிணாம வளர்ச்சி.
5. மெய்ஞானத்தின் மூலக்கூறுகளை அனைவரும் பெறும் தகுதி
“மூலக்கூறினுடைய உணர்வுகளை”, ஓரளவுக்கு இணைத்துக் கொடுக்கின்றோம்.
உங்களுடய உணர்வுகளில்,
“குருநாதருடைய
உணர்வுகளையும், அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும்” இணைத்து வளரச் செய்வதற்குத்தான்
இதை உபதேசிப்பது.
அணுக்களின் நிலைகளை நாம்
தெரிந்து கொள்வோம் என்றால், உங்களில் ஒளியான உணர்வுகள் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.
எமது அருளாசிகள்.