ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2022

தியானம் என்பது தனித்துச் செய்ய வேண்டிய ஒன்றல்ல… அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அது…! - ஈஸ்வரபட்டர்

 

கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட...
1.நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி
2.அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து
3.அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான்
4.நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா…! என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது...?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட “ஜெபம்” என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும்.
1.நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து
2.அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள்… பல கைகள்… இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்றுத் தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு...” “வைரத்தை வைரத்தால் அறு...” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்...?

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலை கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்...!

உலக சக்தியும்... சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கவிட்டு நல்சக்தி பெற்று விட்டால் “அனைத்துச் சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்...!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்… வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான்… இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

March 13, 2022

காது - அதிர்வு... கண் - ஆண்டெனா... இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

 

இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கப்படும் போது பிறருடைய செயலையும் உலகம் இயக்கும் இயக்கங்களையும் உற்று நோக்கும் போது நம்மை அறியாமலே தீமைகள் வரத் தொடங்குகிறது.

காரணம்... அரக்கத்தனமாகத் தானும் தற்கொலை செய்து பல ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வு வரப்படும் போது அதே உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உணர்வின் இயக்கமும் மாறிவிடும்.

இன்றைய உலகம் போகும் போக்கிலே...
1,எத்தகைய அசம்பாவிதங்களைக் காதில் கேட்டாலும்
2.அதற்கு அடுத்த கணம் நம் கண்ணிற்கே தான் வருகின்றது - ஆண்டனா.
3.காதிலே “உணர்வின் அதிர்வுகள்... பட்டதும் எலக்ட்ரானிக்...!”
4.கண் அந்த அதிர்வுகளை நுகர்ந்து உயிரிலே பட்டு உணரச் செய்கின்றது
5.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலந்து விடுகின்றது.
6.அங்கே அந்த இயக்க அணுவாக நமக்குள் மாறி நம்மையும் அதனின் நிலைக்கே மாற்றி விடுகின்றது... விஷத்தின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற கொடுமைகளைக் காதில் கேட்டாலும் உடனே ஈஸ்வரா... என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படும்பொழுது
2.அதைச் சுத்திகரிக்க இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களை கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அப்போது கேட்டறிந்த தீமையான உணர்வை இது தள்ளி விடுகின்றது.

அதற்குப்பின் நாளை நடப்பதெல்லாம்... நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்
2.உலகம் அறியாத இருளிலிருந்து விடுபட்டு
3.தன்னைத் தான் அறிந்து அருள் உணர்வு பெறும் அந்த அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உலக மக்கள் அனைவரது உணர்வுகளும் நமக்குள் உண்டு. பத்திரிகையோ டிவியோ பார்க்கப்படும் பொழுது அதனின் உணர்வின் இயக்கம் நமக்குள் உண்டு. அதை மாற்றி இதனுடைய நிலைகளைச் சீராக்க வேண்டும்.

ஆக மொத்தம்... பிறருடைய பகைமை உணர்வை நமக்குள் வராதபடி அந்த உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்களுக்கு ஆகாரமாகப் போகாதபடி தடுப்பதும்... நமது நல்ல அணுக்களுக்கு அருள் சக்தியைக் கொடுப்பதும் தான் “விரதம்...” என்று சொல்வது.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வளர்ப்பது தான் ஏகாதசி விரதம் என்று சொல்வது.
1.இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் செய்து பழகுதல் வேண்டும்.
2.நம் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
3.ஒரு பதினைந்து நிமிடமாவது அதை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று செய்யும் ஒரு பழக்கம் வந்து விட்டால் வாழ்க்கையில் குறைபாடுகள் வரும் போது அதை ஈர்க்காதபடி சிந்தித்து செயல்படும் வலிமையும் வரும்... ஞானமும் பெருகும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் தான்...! - ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே...! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்...? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் “அனைத்துமே ஆவி தான்...” என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா...!

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்...” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

 

1.தன் உடலில் எது இயக்குகின்றது...? என்று தனக்குத் தானே சிந்தித்து
2.தீமைகள் நம்மை இயக்கவிடாது தடுத்து அருள் உணர்வைப் பெருக்கி
3.இருளை அகற்றி வாழ்க்கையில் செவ்வென வாழ்ந்து
4.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறும் தகுதி பெறும் சந்தர்ப்பம்தான்
5.இங்கே தியானத்தில் யாம் கொடுக்கக்கூடிய பயிற்சி.

ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர... உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்...? என்று எண்ணவில்லை.

அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை.

1.தியானம் இருந்தேன் நல்லதானது...
2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது...! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால்
3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம்.

அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்... எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது... அப்பொழுது வேதனை வருகின்றது.

அப்போது எந்தப் பற்று வருகிறது...? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதுமே... எதிலுமே... உடல் பற்று இல்லாதபடி... உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும்.

அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்...”

1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது...
2.தியானம் செய்தேன் சொத்து வந்தது... அது வந்தது... இது வந்தது... என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்.
3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது.

நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்... அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி... கிரியாசக்தி...!

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும்.

உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும்.
1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும்.
2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம்.

வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்...”

அன்று ஒரு நாள் முழுவதும்... அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்... அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது.

உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்... பத்தாவது நிலை அடைகின்றோம்.... ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது.

ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

1.வைகுண்ட ஏகாதசி...! - எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து
2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது.

சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது... ஜீவாத்மா தூய்மை அடைகிறது... உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது.

இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
1.ஒளி என்ற உடலும்
2.ஒளியான அறிவும்
3.இருளை நீக்கும் ஞானமும்
4.மெய்ப்பொருள் காணும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

March 12, 2022

உடலுக்குள் புகுந்த ஆன்மாவைப் புனிதப்படுத்தத் தான் வேண்டும்… வெளியேற்ற முடியாது - ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்...!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன...?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா...” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய்… பிசாசு… என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே…
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி
2.எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலை கொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்... அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

1.அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு
2.துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால்
3.தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து
4.இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது… பிசாசு பிடித்துள்ளது… ஆவியை ஓட்ட வேண்டும்… என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டிப் பல வித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்...?

அவ்வாவிக்குப் பிற உடலில் ஏறித் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்குச் சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது...?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே...
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்லை. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.

March 11, 2022

நஞ்சை வடிகட்டும் வலுவான உறுப்புகளாக... நம் உடல் உறுப்புகளை உருவாக்க வேண்டும்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் யாம் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் யாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.குருநாதர் கொடுத்த அந்த அருளை ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.கண்ணின் நினைவை அதிலே செலுத்தப்படும் பொழுது கெட்டது போகாமல் உங்களுக்குள் தடுக்கப்படுகின்றது.

அதே நினைவு கொண்டு உள்முகமாக உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்தினால் வீரியமடைகின்றது. உடலுக்குள்ளே வலுவான பின் தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். மீண்டும் அவரை நினைக்கும் பொழுது அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்ச்சி வரப்படும்போது
1.ஒரு பலகாரத்தைச் சுட்டுக் கொண்டிருந்தால் சரியாகச் செயல்பட முடியாது.
2.ஒரு இயந்திரத்தில் வேலை செய்தாலும் அதைச் சீராக இயக்க முடியாது
3.ஒருவர் சந்தோஷமான வார்த்தையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்க முடியாது.

இப்படி ஒரு சமயம் பதிவானது மறுபடியும் இந்த உணர்வு கலக்கப்படும் பொழுது நம்மால் சரியான பதிலும் சொல்ல முடியாது போய்விடுகிறது. அதனால் இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி பழகுதல் வேண்டும்.

சூரியன் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து விஷமான நிலையைக் கொண்டு வரப்படும் பொழுது இது மோதி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

அதிலே...
1.கேது விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.இராகு கருகிய புகைகளை எடுத்துக் கொள்கின்றது
3.ஓடும்போது மின் கதிர்களை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது.
4.மோதலில் வரக்கூடிய சப்தத்தைச் செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது
5.மோதி ஆவியாகப் பிரிந்து செல்வதை சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகளில் எடுக்கின்றது.

சூரியனுக்கு எப்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் இருக்கின்றதோ அதே போன்றுதான் நமக்குள் சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள் உடலில் உள்ள உறுப்புகளில் இயங்குகின்றது.

கல்லீரல் ஓரளவுக்கு விஷத்தைப் பிரித்து வடிகட்டி அனுப்புகின்றது.
1.அங்கு அதிகமான விஷத்தன்மையானால் முடியாது போகிறது... விட்டு விடுகிறது.
2.மண்ணீரலுக்குப் போனாலும் இதே நிலைதான்.
3.அதை இழுத்து நுரையீரலுக்கு வரும் பொழுது அங்கே தேங்கினால் நுரையீரலும் கெட்டு விடுகின்றது.
4.நுரையீரல் கெட்டு அந்த விஷத்தின் தன்மை அனுப்பப்படும் போது சிறுநீரகம் இரத்தத்தில் இருக்கக்கூடிய மாசுகளை பிரிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையோ சர்க்கரைச் சத்தையோ பிரிக்க முடியவில்லை என்றால் அந்தச் சத்துக்கள் எல்லாம் அளவு கூடி விடுகின்றது... வாத நீர்களை உண்டாக்கிவிடுகிறது.... பலவீனமாகி விடுகிறது.

அத்தகைய பலவீனத்தை மாற்ற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சிறுகச் சிறுக... சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வளர்ச்சி அதிகமானால் சர்க்கரை சத்தையும் உப்புச் சத்தையும் குறைக்க முடியும். ஆகவே...
1.உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்து விட்டால்
2.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

கோலமாமகரிஷி ஆட்கொண்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்தால் ஆவிகளிடமிருந்து மீளலாம் - ஈஸ்வரபட்டர்

 

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்...
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்...?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்...?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்...
1.தன் ஜெபத்தை... தான் பெற்ற அருள் செல்வத்தை...
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதிசங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதிசங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்...!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்...
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று... இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்தரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே...!

March 10, 2022

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா...?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா...?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா...? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்...? என்பதை உணர்ந்து... மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்...! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்... நீரையும் ஊற்றி விட்டேன்...
2.அது வளர்ந்து விளைந்துவிடும்... என்று சொன்னால் அது எப்படி விளையும்...?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்... உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்... அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்... துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து... புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்... அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்...
1.உங்களை எது இயக்கியது...?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது...?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது...? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.

புகழுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டுத் தான் இன்றைய உலகம் உள்ளது - ஈஸ்வரபட்டர்

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க... கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்... ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா...?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்...”

“புகழ்…” என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான். மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான். அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது...? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா...? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா...? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது. எடுத்துச் செல்பவன்... தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்...?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்...?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்...!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அர்ப்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

March 9, 2022

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி... அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை... வேதனை... என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது... தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.

பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன...?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா...?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா...?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா...?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை...?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை...!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே...! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்...?

மனித ஜென்மத்திலுருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்...?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

March 8, 2022

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

 

சாதாரணமாக... ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்... அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்... இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்...!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி... அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்... நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்... நம் வாழ்க்கையும் நலமாகின்றது... தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்... அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்... தெய்வீக அருளைப் பெற வேண்டும்... தெய்வீக சக்தி பெற வேண்டும்... தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்... என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்... அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை... வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ... பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்த பின் நம் நிலை… - ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்ட மனிதர்களுக்கெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்... நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு...
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக்குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்...
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதே போல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன...?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே... ஷாஜஹான் என்னும் ஆவியும்...!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை… மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே...!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

March 7, 2022

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்...?

 

சிவன் ராத்திரி அன்று நீ விழித்திரு... பசித்திரு... தனித்திரு... என்று சொல்வார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் தனக்குள் புகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தனித்திரு... விழித்திரு. ஆனால் அதைப் பெற வேண்டும் என்று பசித்திரு

அதாவது...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் பசித்திரு
2.தீமைகள் உன்னைப் பற்றிடாது தனித்திரு...!
3.தீமைகள் புகாது விழித்திரு...!

கஷ்டம் என்று வந்தால்... விழித்திருந்து நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். ஆக... அதைப் பெற வேண்டுமென்று பசித்திருக்கும் போது தீமைகளைப் பற்றிடாது தனித்திருக்க முடியும்.

அதை எல்லாம் உங்களால் பெற முடியும்.

தனித்திரு என்றால் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டுச் சாமியாராகப் போவதல்ல... அது எல்லாம் அறியாமை...!

ஆகவே... மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற்று... தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழும் நிலையும் உடலில் அமைதியும் சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்து இந்த உடலுக்குப்பின் பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.
1.இந்த மனித உடலில் இப்போது இதை பெறத் தவறினால்
2.இனி அடுத்து மனித உடல் துரிதமாகக் கிடைக்குமா... என்பது சந்தேகமே...!

காரணம் உலகம் விஞ்ஞான அறிவால் மாசுபடும் நிலை வந்துவிட்டது.

கடவுளின் அவதாரத்தில் வராகன்... சாக்கடையிலிருந்து எப்படி நல்லதை நுகர்ந்ததோ... இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அதற்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுக்கப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவைத் துரித நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வருவதை உயிர் வழி கவர்ந்து உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்யுங்கள்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அந்த வீரியத் தன்மையைச் செருகேற்றிக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி... சிந்தித்து செயல்படும் ஆற்றல் பெற்று அமைதியான வாழ்க்கையும் அருள் ஞானத்துடன் வாழ்ந்தும் சாந்தமும் விவேகத்துடன் இந்த வாழ்க்கை வாழும் அருள் சக்தி பெறுங்கள்.

இதைப் படிப்போர் அனைவரும் இந்த உடலுக்குப்பின் ஏகாந்த நிலை பெற்று... எதிர்ப்பே இல்லாது ஒளியின் உணர்வாக மாறி... என்றும் ஏகாந்த நிலை பெற எனது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.அருள் வழியில் இருளை அகற்றி... மெய் ஞான உலகுடன் நீங்கள் ஒன்றி நீங்களும் வளர்ந்து உலக இருளை நீக்கி...
2.அனைவரையும் மெய் ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞான அன்பர்களாக நீங்கள் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

“பூதம் காத்த புதையல்” - ஈஸ்வரபட்டர்

 

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்...? ஒவ்வொரு உயிரினங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன...? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை...” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது...? பேய் பிசாசு என்பது என்ன...? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன...?

தன் நாட்டைக் காக்க தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன...?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல... அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன...”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்...?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா...? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

March 6, 2022

உபதேசத்தைப் பதிவாக்கி நினைவாக்கினால் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகள் தன்னிச்சையாகச் செல்லும்...

 

நாம் எந்தக் காரியத்தை எண்ணினாலும் தாய் தந்தையை நினைத்து “அவர்களை முன்னிலையில் வைத்துச் செயல்பட்டால்...” நம் உயர்வுக்கு அது என்றுமே வழி காட்டும்.

நம் அன்னை தந்தையர் எப்போதுமே நாம் உயர வேண்டும்... நாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்... நாம் அன்பாக இருக்க வேண்டும்... பண்பாக இருக்க வேண்டும்... ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... செல்வச் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.
1.வேறு யாரும் அவ்வாறு எண்ண மாட்டார்கள்...
2.தந்தைக்குக் கூட சில நேரம் வெறுப்பும் கோபம் வந்துவிடும்.
3.தாயின் மனதை எப்பொழுதும் நாம் எண்ணி இருக்க வேண்டும்.

தாய் கருவில் இருக்கும் பொழுது பத்து மாதம் நம்மைச் சுமந்தது. பிறந்த பின் நம்மை வளர்ப்பதற்கு எத்தனையோ கஷ்டப்பட்டது.
1.என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும்... என்று
2.தாய் ஒன்று தான் நம்மை எவ்வாறு எண்ணும்.
3.அவருடைய ஆசை “நாம் உயர வேண்டும்...” என்பது தான்.

அந்தத் தாயின் ஆசையின் துணை கொண்டு தான் தியானத்தில் நாம் சக்தி எடுக்கப் பழக வேண்டும்.

அம்மா அப்பா அருளால்... அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்... கண்களை திறந்தே...!

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதைக் கேட்டு நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள். இந்தப் பதிவின் நினைவினை உங்கள் கண்ணிற்குக் கொண்டு வாருங்கள்.

கண்னின் நினைவுகள்...
1.எதைத் துருவ நட்சத்திரம் என்று சொன்னேனோ
2.அங்கே அழைத்துச் செல்கின்றது உங்களுடைய உணர்வுகளை.
3.இந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கவரும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள், கண்ணின் கருமணியில் இப்பொழுது ஈர்க்கும் சக்தி வரும். கண் கனமாக இருக்கும்.

மெதுவாகக் கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள் கண்ணின் நினைவினை...!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவனைப் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் சக்தியைப் பெறுங்கள். அவ்வாறு ஈர்க்கும் ஆற்றல் பெற்றால்
1.புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு அதிகரிக்க... அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

உயிரின் ஈர்ப்பில் கண்களில் எப்படி முதலில் கனமாக இருந்ததோ புருவ மத்தி வழியாக ஈர்க்கும் சக்தி வரும் போது அங்கேயும் கனமாக இருக்கும். உயிரிலே மோதும் பொழுது வெளிச்சங்கள் வரும்.

உடல் முழுவதும் அந்த ஒளி சக்தி பரவும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும் சக்தி இப்பொழுது பெறுகின்றது.

மெய் உலகிற்கு வாருங்கள் - ஈஸ்வரபட்டர்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்... பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும் அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா...? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்றுப் பிறவி எடுத்திட...!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை “பாக்கியம் பெற்ற வாழ்க்கை…” என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை...!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்...!

March 5, 2022

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

 

இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் “ஆ... இப்படி ஆகிவிட்டதா...?” என்று எண்ணாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்... தொழில் வளம் பெருக வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் அந்தத் தீமையின் உணர்வுகள் இங்கே வருவதில்லை.

சிவன் ராத்திரி அன்று “நீ விழித்திரு...” என்றால்
1.வாழ்க்கையில் எப்பொழுது பிறருடைய துயரங்களைக் கேட்டறிகின்றோமோ
2.அந்த நேரத்தில் எல்லாம் விழித்திருக்க வேண்டும்.

எப்படி...?

ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப்படுத்தி உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் உணர்வுகள் அவர்கள் குடும்பத்தில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணினால்... “அவருடைய தீமைகள் நமக்குள் புகுவது இல்லை...”

1.இந்தச் சொல்லின் தன்மையை அங்கே சொல்லி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருப்பீர்கள்...! என்று சொல்லப்படும் பொழுது
3.இந்த உதவியை அவருக்குச் செய்கின்றோம்... அவருக்குள் தீமைகள் புகாது தடுக்கின்றோம்
4.அவர்களும் அவ்வாறு எண்ணினால் அவர்களுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது
5.நமக்குள்ளும் தீமைகள் வருவதில்லை... நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

சிவன்ராத்திரி... விழித்திரு...! அன்றைய தினம் முழுவதும் இவ்வாறு நாம் தூய்மைப்படுத்தும் உணர்வாக இருந்தோமென்றால் நம் ஆன்மாவில் உள்ள கெட்ட உணர்வுகள் அப்புறப்படுத்தப்படுகின்றது.

எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்துச் சொல்லும் பொழுது... தீமை செய்யும் உணர்வுகளுக்குப் பூமியில் ஈர்ப்புத் தன்மை இல்லை என்றால்... சூரியன் அவைகளை இழுத்துச் சென்று அதன் உணர்வின் தன்மையைக் கருக்கி... மற்ற பிரபஞ்சத்தில் பரவச் செய்து அந்த விஷத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது.

அதாவது (பொதுவாக)...
1.தான் கவரும் விஷத்தைச் சூரியன் பாதரசத்தால் மோதி வெப்பத்தையும் காந்தத்தையும் உருவாக்குகிறது
2.விஷத்தைப் பலவீனப்படுத்தி அதை அகற்றி விடுகின்றது.
3.நல் உணர்வாக பரவச் செய்து விஷத்தினைக் குறைக்கச் செய்கின்றது.
4.இப்படி மற்றதுடன் கலந்து இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

உதாரணமாக... ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தவர்களுக்கு எல்லாம் மயக்கம் வருகின்றது.

ஆனால்
1.ஆயிரம் குடம் பால் அந்த விஷத்தின் தன்மையில் பட்டால்
2.இந்தப் பாலைக் குடித்தோருக்கெல்லாம் “வீரியத்தன்மை...” கிடைக்கின்றது.

இதைப் போன்றுதான் கடல் அலைகள் போலப் பரவப்படும் பொழுது விஷத்தின் தன்மை அங்கே சேர்க்கப்படும்போது அது பிரபஞ்சத்தில் மற்றதன் நிலைகளை “தீமைகளை நீக்கும்... நல்ல உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தியாக...” அங்கே மாற்றுகின்றது.

ஆகவே எதனின் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதனின் உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.
1.அருள் ஞானிகளின் உணர்வை ஆயிரம் குடம் பாலைப் போன்று ஊற்றினால்
2.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று நாமும் மகரிஷிகளைப் போன்று ஆக முடியும்.

ஒவ்வொரு உயிராத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஞானியாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்துத் தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒலியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளைச் சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும் அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்… அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்… வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்… பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் யானை எதைப் பழக்கப்படுத்தி செய்விக்கும் செயலறிந்து உழைப்பைத் தருகின்றதோ அந்நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன் தன் செயலுக்காக.

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

அதைப் போன்றே மனிதனும்…
1.இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழும் போது…
2.உடலுடன் மடியும் நிலை ஆகி முழுமை இல்லாது போகிறது.

ஆகவே ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தின் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு - வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி “அமைதிப்படுத்தும் ஞானி…” மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீதச் செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவச் செயலுக்காகச் சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்பச் சொந்த பந்தச் செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும்... உணர்வுடன் உடல் சொந்தம்... மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும்… சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய்ப் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை... ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியைக் குற்றம் குறைகளைக் குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்குச் சொந்தமாக்கும் செயலாகப் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

March 4, 2022

பிரணவ மந்திரத்தைத் தகப்பனுக்கே ஓதினான் என்பதன் சூட்சமப் பொருள் என்ன...?

 

மனிதனான பின் அடுத்தவர்கள் செயலைப் பார்த்து... இது தீமை இது பகைமை என்ற நிலைகளை அறிகின்றோம். அறிந்தாலும் மீண்டும் தவறைச் செய்து அவன் கோபிக்கின்றான் என்றால் அந்தக் கோப உணர்வு நமக்குள் வரக்கூடாது.

கோப உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே அவன் உடலில் படர வேண்டும். அந்த அறிவின் தெளிவு அங்கே வர வேண்டும் என்று நாம் எண்ணினால் அவனின் கோப உணர்வுகள் நமக்குள் வராது.

அதைத் தான் விழித்திரு என்று சொல்வது...!

ரோட்டிலே சும்மா போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு பக்கத்திலே ஏதாவது ஒரு புகையைப் போட்டுவிடுகிறார்கள். நாம் போகும் பாதையில் அது வருகிறது.
1.சுவாசித்தவுடனே தலை சுற்றுகிற மாதிரி இருக்கின்றது...
2.எதனால் என்று நமக்குத் தெரிவதில்லை.
3.இருந்தாலும் தலை சுற்றுகிறது என்று மீண்டும் அப்படியே நடந்து செல்வோமா...?

இல்லை...!

1.உடனே மூக்கை பொத்திக் கொள்கின்றோம்
2.எப்படியோ ஒரு ஓரத்திலிருந்து அதைச் சமப்படுத்த நிற்கிறோம்.
3.ஒதுங்கிய பின் நம் மனது ஒரு தெளிவாகின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வெறுப்பு என்ற நிலைகள் வந்து நம்மைக் கோப உணர்வு இயக்கிவிட்டால் அடுத்த கணமே...
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலே உயிரை எண்ணி அந்த உணர்வைக் கொண்டு கோபத்தைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினைக் கலந்து நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்

இதைத்தான் விழித்திரு என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவைக் “கார்த்திகேயா... தகப்பன்சாமி...! என்று சொல்வார்கள்.
1.இந்த உடலிலிருந்து உருவானதுதான் இந்த ஒளியின் அறிவு.
2.ஓ...ம் என்ற பிரணவத்தைச் சிவனுக்கு ஓதினான் முருகன்... தகப்பன்சாமி.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஒளியின் உணர்வை இங்கே ஜீவனாக்க (உடலுக்குள்) வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

உடலிலிருந்து வந்த நிலையை
1.செவி வழியில் உணர்வுகளை உந்திக் கண்களின் வழி நினைவாற்றலைப் பெருக்கி
2.உணர்வின் தன்மையை இழுத்துக் கண் வழி கொண்டு தனக்குள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவம் என்பது உடல்... ஆனால் தகப்பன்சாமி...! இந்த உடலிலிருந்து விளைந்தாலும் தகப்பனுக்கே சொல்கின்றான்... மந்திரத்தை ஓதினான் பிரணவத்தை... அதாவது ஜீவன் பெறுவதை...!

1.நாம் எண்ணுவது எதுவோ அதுதான் ஜீவன் ஆகின்றது என்பதை
2.இந்த ஆறாவது அறிவு தான் சுட்டிக் காட்டுகின்றது

நான் (ஞானகுரு) இப்போது பேசுவது எல்லாம் என்னுடன் சிவம் ஆகின்றது.. இத்தனை (உபதேசிப்பதை) அறிவையும் எனக்குள் சொல்வது சிவனுக்குத் தான்.

சிவனுக்குள் ஜீவன் என்ற நிலையில் இருக்கும் பொழுது... சிவனுக்குள் ஜீவ அணுவின் தன்மை இது எப்படி வாழ வேண்டும்...? எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இத்தனை தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

மகா சிவன்ராத்திரி...! பல கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதற்குள் இருள் சூழா நிலைகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஒளியின் உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

உடலான நிலத்தைப் பயன்படுத்தி மெய் ஞானப் பயிரை அதிலே விளைய வைக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி... மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து... அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள... மீண்டும் மழை வர... பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற... இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு... ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்...
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்...! என்று தான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தைப் பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி…
2.இச்சரீரம் மண்ணாக… நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி…
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாக சத்தாகும் அமைப்பாய்…
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து... பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளை பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்... பல கனி வளங்களிலும்... அபூர்வ இயற்கைத் தன்மைகளும்... இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்...
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல...! இயற்கையின் கதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்... ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்... சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்கு செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவிற்கு “உடல்” ஒரு இயக்கக் கோளம். ஆகவே இத்தகைய உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மாக்களே....
1.மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.
2.வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்...
3.என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாகச் செயலாக்கும் செயலுக்கு...
4.மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

March 3, 2022

எந்த நிமிடத்தில் இனி எது வந்தாலும் நம் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

 

பூமிக்குள் விஷக்கதிரியக்கங்கள் அதிகமாகி விட்டது... அதனால் பூமி கரையக்கூடிய நிலைகளும் அதிகமாகி விட்டது.

துருவத்தின் வழியாக விஷத்தின் தன்மைகள் பரவப் பரவ... பூமிக்குள் குழம்பின் நிலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த இயக்கத்தினால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்று கூழாக மாற்றும் தன்மை அதிகரிக்கிறது.
1.கடல் இருக்கும் பக்கங்களில் விஷக் கதிரியக்கங்கள் பாய்ந்தால்
2.கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரங்களை அழிக்கும் தன்மை வருகின்றது.

இயற்கையின் சீற்றங்கள் இப்படி எத்தனையோ வருகின்றது.

ஆனால் மனிதராக வாழும் நாம் எந்த உணர்வின் தன்மையைப் பெற்றோமோ... உடலை விட்டுப் போகும் போது எந்த ஆசையை முன்னணியிலே வைத்திருந்தோமோ
2.உயிரிலே கடைசி நிமிடத்தில் அது தூண்டப்படும்போது
2.இதைக் கவர்ந்து அடுத்த உடலாகப் பெறுகின்றது.

ஆகவே நாம் இப்போதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கிப் பெருக்கி
1.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
2.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
3.அதன் உணர்வு வலுவானால் நம் உயிர் அங்கே செல்கிறது...
4.எத்தகைய நிலையானாலும் உயிருடன் ஒன்றி நாம் அங்கே செல்கிறோம்.

இன்று நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டு “எனக்கு இப்படி ஆகிவிட்டதே...!” என்று பொருளின் பற்று வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு கருகிடும் நிலை வருகின்றது. மீண்டும் உடலின் பற்று கொண்டு பிறவிக்கே வருகின்றது.

ஆனால் கருகிய உணர்வானாலும்...
1.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கும் போது கருகும் தன்மை இழக்கப்படுகிறது
2.உணர்வின் தன்மை ஒளியாகி அங்கே செல்கின்றது.

உங்களுக்குள் இதையெல்லாம் பதிவாக்கி விட்டேன் (ஞானகுரு).

1.உங்கள் நினைவு தான் உங்களைக் காக்க வேண்டும்...
2.வேறு எவரும் காக்க மாட்டார்கள்...!

நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துத் தான் உங்கள் உயிர் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது... உணர்வின் தன்மை உடலாக மாற்றுகின்றது... அதன் வழியே உங்களை ஆளுகின்றது.

இதை எல்லாம் மனித உடலில் இருக்கும் போது தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன் இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால் “பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்...”
1.உடல்கள் மாறும்... உயிர் அழிவதில்லை.
2.அழியாத உயிருடன் உணர்வை அழியாத நிலைகள் கொண்டு செல்வதுதான் நம் குருநாதர் காட்டிய மெய் வழி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் வளர்த்தால் கல்கி என்ற பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதை அடைதல் வேண்டும்...!

அழியும் வாழ்க்கைதான் நிஜமாகத் தெரிகிறது.. அழிவில்லா வாழ்க்கை வேண்டுவோர் இல்லை…! - ஈஸ்வரபட்டர்

 

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார்… உறவினர்… எதிரி… நண்பன்… தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு… என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய் ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்...! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்து தான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று...
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு - ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது
3ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
4.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை...!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்...!”

March 2, 2022

யுத்தங்களைப் பற்றிய செய்திகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது...?

 

இன்று நடக்கக்கூடிய யுத்தங்கள் அனைத்தும் எனக்கா... உனக்கா...? என்று போர் முறை வருகின்றது. போர் முறை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு நாடும் விஷமான குண்டுகளைக் கையில வைத்துள்ளது.
2.எந்த நிமிடமும் அது வெடிக்கலாம்...!

அதனால் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி அதைச் சுவாசித்தவர் அனைவரது உடலுக்குள்ளும் அது அணுக்களாகும் பொழுது இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எங்கே போகின்றோம்...?

விஷத் தன்மை அதிகரித்தால் பாம்பினங்களாகத் தான் பிறக்க நேரும்.

மதத்தின் பால்... இனத்தின் பால்... தெய்வீக பண்பு என்ற நிலைகள் கொண்டு இருந்தாலும்
1.இந்த இடம் எங்களுக்குத்தான்... இது எங்கள் புண்ணிய பூமி...! என்ற உணர்வு கொண்டு
2.விஷத்தின் தன்மை உலகமெங்கும் பரவப்பட்டு தீமையின் விளைவுகள் உலகம் முழுவதும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

மற்ற நாடுகளை அடக்குவதற்காகப் பல அணு ஆயுதங்களைத் தயார் செய்து அத்தகைய விஷ குண்டுகளின் வீரியத்தைக் கண்டுணர்வதற்காக அடிக்கடி பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். அதன் மூலம் விஷ அலைகள் பூமியிலே பரவுகின்றது... பரவிக் கொண்டே உள்ளது.

யுத்தத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். டி.வி. வாயிலாகவும் நேரடியாகக் காணுகின்றோம். அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவான பின் அதே ஆவேச எண்ணங்களைத் தூண்டுகின்றது... அங்கிருந்து பரவும் உணர்வின் தன்மைகளை நேரடியாக நுகர நேருகின்றது.

1.அப்போது நம்மை அறியாதபடியே சிறுகச் சிறுக அந்த விஷத்தன்மை உடலுக்குள் செல்கிறது
2.நம் நல்ல குணங்களை அது மாற்றிக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எத்தகைய விஷத்தன்மைகள் வருகிறதோ உடலுக்குள் பரவி விளைந்த பின் உயிரிலே அது இணைந்து விடுகிறது. உயிரான்மாவில் இணைந்த மணத்திற்கொப்பத் தான் உயிர் அடுத்த உடலை உருவாக்கும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில் அகஸ்தியன் சென்ற பாதையினைக் கைப்பற்ற வேண்டும்.

1.அவன் தாய் கருவிலே எத்தகைய நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றானோ
2.அகண்ட அண்டத்தை எப்படி அறிந்தானோ
3.அறிந்த உணர்வைத் தனக்குள் பெற்றானோ
4.இருண்ட உலகை எப்படி அகற்றினானோ
5.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ
6.முதல் மனிதன் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகிறேன் (ஞானகுரு). துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் எத்தகைய நஞ்சினையும் வெல்ல முடியும். உணர்வுகளை ஒளியாக மாற்றவும் முடியும்.

இன்றைய கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்ப முடியும்...!

அழிவில்லா மகத்துவம் எது…? - ஈஸ்வரபட்டர்

 

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது... “சாந்தம்...” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம்படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு... வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் “கோப நிலையின் காரம்…”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்”.

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து… சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலை உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொள்ள வேண்டும்.

பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை ”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது - இவ்வெண்ணம் தான்...!”

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்... சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக...!”

March 1, 2022

ஒளிச் சரீரம் பெற்றால் அகண்ட அண்டத்தில் “எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்...”

 

மனிதனாக ஆன நிலையில் பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம்...? இந்தச் சரீரத்தில் தீமைகள் நமக்குள் வராதபடி எப்படிப் பாதுகாக்க வேண்டும்...? என்று சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்...
1.பெரும்பகுதி பற்று கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் தான் செல்கிறது.
2.காரணம்... அந்த உடலில் நோயான பின் அவரைச் சார்ந்தோர் பாசமாக எண்ணும் போது
3.இறந்த பின் அந்த உடலுக்குள் அந்த ஆன்மா போகின்றது.
4.அங்கே போய் அதே நோயை அங்கே உருவாக்கி அந்த உடலையும் பலவீனப்படுத்தித் தேய்பிறை ஆகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் சிவன் இராத்திரி என்று நீ தனித்திரு... நீ விழித்திரு...! என்று சொன்னது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் தன் இன மக்கள் அனைவரும் தான் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்று தான் இதை அவன் வெளிப்படுத்தினான்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றனர் பத்தாவது நிலையாக.
1.எந்தத் துருவத்தை உற்று நோக்கினரோ அதே எல்லையில்...
2.துருவ நட்சத்திரமாக உருப்பெற்று இன்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் சூரியன் ஒன்பதாவது நிலைதான். மனிதனாக உருவான பிற்பாடு தான் பத்தாவது நிலை அடைகின்றது. ஒளியின் சரீரமாக என்றும் நிலையான பிறவியில்லா நிலை அடைகின்றது.

அப்படிப்பட்ட நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகி
2.இந்த அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அவர்களுக்கு அழிவில்லை. ஏனென்றால்
1.இந்தப் பிரபஞ்சம் மற்ற பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொண்ட சக்தி இங்கே உண்டு
2.அதன் துணை கொண்டு இது அழிந்தால் அடுத்த நிலைக்குச் செல்லும்.
3.அதன் உணர்வை எடுத்துக் கொண்டு ஒளியாக மாற்றும்
4.இப்படித்தான் பிறவி இல்லாப் பெரு வாழ்வு என்று மனிதனான பின் ஒளியின் தன்மை பெற்றது.

ஒரு வெப்பத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வினை ஒளியாக மாற்றும் சூரியனாக ஆன பின் இதற்குள் உயிரணு தோன்றுகிறது.

தோன்றியபின் நஞ்சினை வடிகட்டும் உணர்வின் தன்மை பெற்றுப் பெற்று... பரிணாம வளர்ச்சியில் மனிதனாகிறது. மனிதனான பின்...
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை வென்றிடும் உணர்வை
2.கணவன் மனைவி இரண்டு பேரும் எடுக்கப்படும் போது அவனைப் போன்றே ஒளியின் தன்மை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் கணவர் பெற வேண்டும். அவர் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும். அவருடைய பார்வை எங்களை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அதையே கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியின் சுடரை எடுத்து யாரெல்லாம் வளர்த்துக் கொள்கின்றனரோ
1.அவர்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் பிளக்கின்றது...
2.இரு உயிரும் ஒன்றாகி சிவசக்தியாக ஒளி நிலை பெறுகின்றனர்.

ஆகவே... இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்...? என்று இவ்வாறு வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும். சிவன் ராத்திரி என்று அதனால்தான் விழித்திரு என்று சொல்வது...!

பிறவா நிலை - ஈஸ்வரபட்டர்

 

இயற்கையின் கதியை இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.

உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி...!”

ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.

பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்... பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.

யானையும் சிங்கங்களும் மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.

இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.

மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.

நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது...? என்பதை அறிந்திடல் வேண்டும்.

இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை...
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2.சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.

வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்...!

ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை... மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ... அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்... ஒளியில்... இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.

பாம்பின் மாணிக்கக்கல் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது...!

இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து... சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்... சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.

1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.