ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2016

நாம் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் இந்த உடல் நமக்குச் சொந்தமாவதில்லை. ஆனால், அந்தச் செல்வம் சொந்தமாகின்றதா? இல்லை.

அருள் ஞானச் செல்வம் தான் நமக்குள் என்றும் நிலையாக இருக்கின்றது. இந்தச் செல்வத்தைக் காக்கவேண்டும் என்றாலும் இந்த உடலைச் சிறிது காலத்திற்குக் காக்க வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேமித்து வைக்க வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கை இருக்கும் வரையிலும் அந்தச் சேமிக்கும் தன்மை வரும்.

உதாரணமாக ஒரு குடத்தில் நீர் இருந்தால் அதில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டால் நீங்கள் ஊற்ற ஊற்ற வடிந்து கொண்டே இருக்கும். மிச்சம் இருக்காது.

இதைப் போல நமது வாழ்க்கை சிறிது குறை என்ற நிலை இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியின் தன்மை தடையாகி நம்முடைய நிலையே தடுமாறச் செய்துவிடும்.

நாம் ஊற்றும் நன்னீரை அங்கே காண முடியாது. ஓட்டை சிறிது மேலே இருந்தால் அது வரையிலும் கொஞ்சம் தேங்கி இருக்கும்.

அது அடி பாகத்தில் இருந்துவிட்டால் ஊற்றிய பின் திரும்பிப் பார்த்தால் எல்லாமே காணாமல் போய்விடும். மனிதனின் வாழ்க்கையில் சேமித்த உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி உங்களுக்குள் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

எப்படி ஒரு குளவி புழுவைக் கொட்டி தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அதனின் நினைவைக் கொண்டு வந்ததோ அதே போல உங்களுக்குள் திரும்பத் திரும்ப மெய்ஞானிகளைப் பற்றிய நினைவினைக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மிருகமும் தன்னைத் தாக்கி உணவுக்காகத் தேடி மற்ற மிருகங்கள் வந்தாலும் அதனைக் கூர்மையாகப் பார்த்து தான் தப்பிக்கும் நிலையாக அதனின் உணர்வின் தன்மையைத் தன் உடலுக்குள் சேர்த்து அதனின் வலிமையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறது.

அந்த வலிமையத் தனக்குள் வளர்த்து உடலை விட்டு வந்தபின் அந்த அணுவின் மாற்றமாகி பரிணாம வளர்ச்சியில் வலுக் கொண்ட உடல்களாக மாறி அந்த வலுவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் தன்மைகளைச் சேர்த்துச் சேர்த்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதனான பின் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகள் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதன் ஈர்ப்பில் சப்தரிஷி மண்டலமாகவும் வீற்றிருக்கின்றார்கள்.

உங்களின் நினைவாற்றலை உங்கள் உணர்வினை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

உங்களுடைய நினைவின் ஆற்றலை அங்கே துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வை இந்த வாழ்க்கையில் சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தான் நம் உயிரான்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து.

இதை யாரும் அழிக்க முடியாது. இது என்றுமே வளர்ந்து கொண்டேயிருக்கும்.

July 22, 2016

பல கடவுள்கள் இன்று இருக்கின்றது, ஏன்? - விளக்கம்

நாராயணன் என்ற நிலைகள் சூரியன் என்றாலும் சர்வேஸ்வரன் - சர்வத்தையும் உருவாக்கும் உணர்வுகள் அதனின் தொடர் வரிசையாக வருகின்றது.

நமக்குள் உயிர் ஈசனாக இருந்து அதனால் வளர்க்கப்பட்ட நிலைகள் கொண்டு நாம் பேசினாலும் இந்த உணர்வைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது.

என் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை பதிவானாலும் இதன் உணர்வைத் தனக்குள் உணவாக்குவதற்கு சூரியனின் இயக்கமே எனக்குள் அது உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கின்றது.

ஆனால், அதற்குள் என் உயிர் ஈசனாக இருந்து என்னை எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சர்வேஸ்வரன் என்றும் நாராயணன் என்றும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்றும் மனிதனானபின் எப்படி ஈசனாக இருந்து மனிதனாக உருவாக்கி இந்த உணர்வின் தன்மை சர்வத்தையும் அறியும் தன்மை வருகின்றது என்று கண்டவன் அந்த மெய் ஞானி.

ஆக, சூரியன் சர்வேஸ்வரனாக இருப்பினும் நமது உணர்வின் தன்மை உயிரின் துணை கொண்டு சர்வத்தையும் உணரும் தன்மை வருகின்றது.

மனிதனான பின் நாம் எண்ணத்தால் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் முழுமையான நிலையில் உருவாக்கும் தன்மை பெற்றவர்கள்.

அப்படி உருவாக்கிய நிலையை உண்மையை அறிந்தபின் தான் அரசர்கள் அவர்கள் இஷ்டத்திற்குத் தக்கவாறு மதங்களை உருவாக்கி விட்டார்கள்.

மதத்தின் நிலை கொண்டு அந்த உணர்வின் நிலையைப் பதியச் செய்து அந்த உணர்வின் வழியிலே நமக்குள் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தச் செய்து அதை நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

பதிந்த உணர்வின் வழிப்படி “இந்த மதம்.., இது தான் எங்கள் கடவுள்..,” நமக்குள் பதிந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கிவிட்டால் “இது எங்கள் கடவுள்.., எங்களுக்குச் சொந்தமாகின்றது”.

அந்த மதத்திற்குள்ளேயே இன்னொருவர் அதாவது ஒரு அரசனின் மக்களில் இரண்டு பேருக்குள் போர் முறைகள் வந்து பிரிந்து கொண்டால் அவர் சொன்ன கடவுள் எனக்குத் துரோகம் செய்துவிட்டது.

என் தந்தை அவர் வணங்கிய கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டார்  இன்னொரு மகனுக்கு அதிகமாகவும் எனக்குத் தாழமையாகவும் கொடுத்தார்.

ஆகையினால் அந்தக் கடவுள் பொய்யான கடவுள் என்று அதிலே சிறிது பிரித்துவிட்டு இந்தச் சட்டத்தை மாற்றி இதற்குள் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிய வைத்து இவர் ஒரு கடவுளை உருவாக்குவார்.

இப்படி மதத்திற்குள் இனமாக இன்றும் ஒவ்வொரு மதத்திலும் நடக்கும் போர் முறைகளைப் பார்க்கலாம்.

ஆக, மனிதனால் உருவாக்கிய உணர்வுகள் தான் கடவுளாக நம் உயிர் உருவாக்கி அந்த உணர்வின் செயலாக எப்படி உருவாக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொண்டால் நல்லது.

நாம் மனிதன் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை நம் உயிர் அந்த இச்சைக்கொப்ப உணர்வை நுகர்ந்து அதன் வழி இந்த உடலை அழைத்துச் செல்கின்றது – மூஷிகவாகனா.

நாம் சுவாசித்த உணர்வுகள் வாகனமாக அமைந்து அந்தந்த வாழ்க்கையிலே அமைக்கின்றது.

இதிலே எந்தெந்த குணங்கள் அதிகமாகச் சந்திக்கும் சந்தர்ப்பமாகி வளர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் உணர்வின் ரூபமாக நம்மை மாற்றுகின்றது என்ற நிலையையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உயிரான ஈசனுக்கு மதமுமில்லை, இனமுமில்லை.

நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தி கடவுள். எந்த குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ அதை நம் உயிர் இயக்கி அந்த உணர்வின் செயலே தெய்வமாக நம்மை இயக்குகின்றது என்பதே ஞானிகள் உணர்த்திய பேருண்மைகள்.

மனிதன் தன்னைத் தான் அறிந்து விண் செல்லும் நிலை பெறச் செய்வதற்கே அன்றைய ஞானிகள் காவியங்களைத் தீட்டி காரணப் பெயர்களைக் கொடுத்தார்கள் சாஸ்திர வடிவில். 

நாம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

July 21, 2016

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் நிம்மதி இல்லை,...! ஏன்...?

இன்று நாம் கோவிலுக்குச் சென்றால் எப்படிச் செல்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். தேங்காய் பழத்தை உடைப்பதிலும், சாமிக்கு அபிஷேகம் செய்வதிலும் தன் குறைகளைச் சொல்லி அழுவதிலும் தான் இருக்கின்றோம்.

நான் அப்படியெல்லாம் அழுக மாட்டேன் என்று சொல்வார்கள். இவர்கள் உணர்வுகள் வீட்டில் நடக்கும் கஷ்டங்களைப் பார்த்தவுடன் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே..,” என்று தன்னாலே இந்த உணர்ச்சி கொண்டு பேசத் தொடங்குவார்கள்.

முதலில் நன்றாக இருப்பார்கள். வீட்டில் கஷ்டம் வந்தவுடன் “என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே.., நான் உன்னை வணங்காத நாள் இல்லையே..,” என்பார்கள்.

ஆக, தன்னை அறியாமல் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? இதைப் போன்ற கடும் தீமைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்? என்பதற்குத்தான் இந்த உபதேசங்களை உங்களுக்குள் இந்த உணர்வினைச் செலுத்தி அருள் ஞானிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அதனைப் பருகும் நிலைகளுக்கு உபதேசிக்கின்றோம்.

உங்களை அறியாது வந்த இருளைப் போக்குவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவினை அங்கே கூர்மையாகச் செலுத்தி அதைப் பெறவேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நீங்கள் தியானியுங்கள்.

இவ்வாறு தியானித்து அதன் வழியில் பேராற்றல்களை நீங்கள் பெறுவீர்கள் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி இனி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அந்த மெய்ஞானிகள் சென்ற பாதையில் நாம் செல்ல முடியும். எத்தகைய கொடுமையான நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

ஒரு புழுவைக் குளவி கொட்டிய பின் புழுவின் ரூபம் இல்லை. கொட்டிய குளவியின் ரூபமே வந்தது.

இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டிய பின் இந்த உணர்வுகள் ஒளியாகத் தான் மாறுன்றது. அதன் உணர்வின் நினைவினைக் கூட்டும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

வேதனைப்படும் உணர்வை நம்முடைய நண்பன் பால் எண்ணி எனக்கு உபகாரம் செய்தான் என்ற எண்ணத்தில் வலு சேர்த்துவிட்டால் அந்த எண்ணத்திற்கு அந்தக் கூட்டிற்குள் அழைத்துச் சென்று நம்முடைய தீமையின் உணர்வைத் தான் அங்கே செலுத்த முடியும்.

ஆகவே, இந்த இயற்கையின் நிலைகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு மீட்ட வேண்டும் என்பதற்குத்தான் கடவுளின் அவதாரம் பத்து என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் உயிர் ஒளியின் தன்மையாக விண்ணிலே உருவானது. அந்த விண்ணிலே தோன்றிய உணர்வுகள் புவியில் வருவதை உணர்வாக நுகர்ந்து உணவாக எடுத்து பல உடல்கள் மாறி இன்று மனித உடலாக நம்மை மாற்றி உள்ளது.

மனித உடலாக மாற்றிய நிலையில் உணர்வின் எண்ணங்களாக இயக்கி அந்த எண்ணத்தின் வலிமை கொண்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் செருகி அந்த உணர்வின் நினைவு கொண்டு தனக்குள் உருமாற்றும் உணர்வை இந்த மனித உடலில்தான் உருவாக்கிக் கொள்ள முடியுமே தவிர மற்ற உடல்களிலிருந்து நாம் உருவாக்க முடியாது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

அதன் வழியில் நாம் சென்றோம் என்றால் நிச்சயம் அந்த ஞானிகள் இருக்கும் எல்லையை அடைய முடியும். இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

கோடிச் செல்வம் இருந்தாலும் இன்று நிம்மதி இல்லை. அதே சமயத்தில் செல்வம் இல்லாதவருக்கும் நிம்மதி இல்லை. செல்வம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை.

நிம்மதி தேட வேண்டுமென்றால் ஒவ்வொரு நிமிடமும் நாம் என்ன செய்யவேண்டும்?

நம் கையில் அழுக்குப் படுகின்றது. அடுத்து நன்னீரை விட்டுக் கழுவுகின்றோம்.

இதைப் போல நமக்குள் ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் குறைகள் வந்து தாக்குகின்றது. நம் நல்ல குணங்கள் மறைகின்றது. அருள்ஞானியின் உணர்வைக் கொண்டு இதைத் துடைக்க வேண்டும். இதைத் தான் நாம் தியானம் என்று சொல்கிறோம்.

அதன் வழி நாம் செயல்பட்டோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபட்டு தீமையற்ற உலகை இந்த உடலுக்குள் உருவாக்கலாம்.

என்றும் தீமையில்லாத உலகாக நமக்குள் உருவாக்கிக் கொள்ளலாம். என்றுமே ஒளியின் சரீரமாக நிலை பெற முடியும்.

July 20, 2016

மெய்ஞானத்தைப் பெறும் தகுதியை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம், பயன்படுத்திக் கொள்ளுங்கள்

“திரும்பத் திரும்பச் சாமி சொல்கிறார்.., எனக்கு அர்த்தமாகவில்லை..,” என்பார்கள். அர்த்தமாவதற்காக வேண்டித் திருப்பிச் சொன்னால் சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பார்கள்.

ஆனால், தெரிந்தார்களா..,? இல்லை.

தெரிந்து கொண்டீர்களா? இல்லை.

“சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார்..,” என்று சொல்பவர்களிடம் திருப்பிக் கேட்டால் தலையைச் சொறிவார்கள். இதைத் தான் தெரியும்.

சொல்லும் பொழுது கேட்பார்கள். அடுத்த கணம் கேட்டால் தெரியவில்லை.

ஆனால், சாமி சொன்னதையே திருப்பிச் சொல்கிறார் என்று சுருக்கத்தில் சொல்லிவிடுவார்கள். சாமி என்ன சொன்னார்..,? என்று கேட்டால் தெரியவில்லை.

எத்தனையோ தடவை திருப்பிச் சொல்கிறேன். ஆனால், இதை லேசாக நினைத்து உடனே சாமி இப்பொழுதுதான் சொன்னார் மீண்டும் திருப்பிச் சொல்கிறார் என்பார்கள்.

இது எதற்கு?

ஒரு பொருளின் (அர்த்தம்) தன்மை தனக்குள் வரவில்லை என்றால் திரும்பப் படித்துத்தான் அதை மீண்டும் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு தடவை படித்துவிட்டேன் என்று வைத்துவிட்டால் நீங்கள் தெரிந்து கொள்வீர்களா? தெரிந்து கொள்ள முடிகின்றதா?

நான் சொன்னதை நானே திருப்பிச் சொல்ல வேண்டும் என்றாலும் கூட சிறிது சங்கடம் தான். சொன்ன பாதையிலேயே மீண்டும் முழுவதும் சொல்ல வேண்டும் என்றால் முடியாது.

நான் சொல்வதை நீங்கள் கேட்டு முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்.., முடியுமா?

ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள். அப்படிச் சொன்னபின் சொன்னதையே மீண்டும் தப்பில்லாமல் நீங்கள் சொல்லிவிடுங்கள்.., பார்க்கலாம்.

முடியுமா..,? என்றால் முடியாது.

அந்த இயற்கையின் உணர்வுகள் நுகரும் பொழுது உணர்வின் எண்ணங்களாகத் தான் அது இயங்குமே தவிர அவ்வப்பொழுது இயக்கும் இயக்கத்தின் உணர்வுகள் நுகரும் பொழுது உயிர் அதன் உணர்வாக நம்மை இயக்கும், அதன் சொல்லாக வெளிப்படும்.

ஒருவர் வேதனைப்படுவோரைப் பற்றிக் கேட்கும் பொழுது அது பதிவாகி மீண்டும் அதை நினைவாக்கி அந்த வேதனை உணர்வு உங்களுக்குள் வளர்ந்த பின் அந்த வேதனையான உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் வந்து புகுந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த வலுவின் தன்மை கொண்டு நம்மை அங்கே அழைத்துச் சென்று அதற்குள் புகுத்திவிடும்.

ஒரு புலி வலிமையாக இருக்கப்படும் பொழுது புலியின் உணர்வுகள் ஒரு மானின் உடலுக்குள் பட்டபின் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் வலிமையாகி மானின் உயிரான்மா அந்தப் புலியின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று மானைப் புலியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கும். ஒளி பெறும் சரீரம் நிச்சயம் பெற முடியும்.

ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குள் அந்த மெய்ஞானத்தைப் பெறும் தகுதிகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

July 19, 2016

உயிர் பிரிந்து செல்லும் பொழுது நம் எண்ணத்தை எங்கே கூர்மையாகச் செலுத்த வேண்டும்....?

ஞானிகள் காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நம் உடலுக்குள் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபடும் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தவில்லை என்றால் நாம் எந்த வேதனை உணர்வை அதிகமாக எடுத்தோமோ அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து மீண்டும் தேய்பிறையாகி எந்த விஷத்திலிருந்து மீண்டு மனிதனாக வந்தோமோ மீண்டும் விஷமான தன்மைக்குச் சென்றுவிடுவோம்.

ஒரு விஷமான பாம்பு தீண்டிவிட்டால் விஷம் நம் உடலுக்குள் பரவிவிட்டால் “ஐயோ.., பாம்பு தீண்டிவிட்டது..,” என்ற எண்ணங்களை எண்ணினால் போதும்.

இந்த உடலைவிட்டுச் சென்றபின் மனிதனின் நினைவலைகள் இழக்கப்படுகின்றது. மயக்கமடைகின்றது. சிந்தனைகள் முழுமையும் மறைகின்றது. பாம்பின் நினைவே கடைசியில் மிஞ்சுகின்றது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை வென்று வென்று தீமைகளை வென்றிடும் உடல் பெற்ற நாம் இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுச் சென்றபின் பாம்பின் உடலுக்குள் சென்று, ஊர்ந்து செல்லும் அந்தப் பாம்பின் நிலையைத் தான் பெற முடியும்.

விஷத்தின் அணுக்கள் நமக்குள் சென்று அதன் மேல் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது இந்த விஷத்தின் தன்மை அதிகமான பின் அதன் வலுவின் துணை கொண்டு விஷமான அந்த உடலுக்குள் அழைத்துச் சென்று மனித உருவையே மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டியுள்ளார்கள்.

ஆக, கீதையைச் சொல்வது யார்? இந்தக் கண்கள் தான்.

இப்பொழுது நாம் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைவினைக் காட்டும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு நமது கண் இங்கே வழி நடத்திச் செல்கின்றது.

“என்னை இப்படிச் செய்தானே பாவி...,” என்று ஒரு மனிதனை எண்ணி எண்ணி அந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் இதே உணர்வின் துணை கொண்டு அந்த மனித உடலுக்குள் அழைத்துச் சென்று அங்கே விஷத்தை ஊட்டுகின்றது.

மீண்டும் இந்த விஷத்தை ஊட்டி மனிதனல்லாத உருவினைத் தான் அங்கே உருவாக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் நல்லது.

நமது எல்லை அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலம் என்று உறுதிப்படுத்தி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையாக நாம் வழி அமைத்துக் கொள்ள வேண்டும்.


எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் எந்தச் சப்தரிஷி மண்டலத்தைக் கூர்மையாக எண்ணினோமோ நாம் அங்கே சென்று பிறவியில்லா நிலை அடைய முடியும்.

July 18, 2016

“உயிரே கடவுள்” என்று சொன்னால் எப்படி ஆகும்? என்று சட்டம் பேசுகிறார்கள்

மனிதனாகப் பிறந்த நாம் (விஞ்ஞானிகள்) பல செடிகளில் உள்ள அணுக்களை எடுத்து ஒவ்வொரு செடிகளிலும் இணைத்துச் செடிகளின் ரூபங்களை மாற்றுகின்றோம். அதில் வரும் மலர்களின் ரூபங்களையும் மாற்றியமைக்கின்றோம்.

இதே போல ஒரு உடலில் உருவாகும் அணுக்களை எடுத்து இன்னொரு உடலில் இந்த அணுக்களைச் செலுத்தப்படும் பொழுது எத்தனயோ விதமான ஆடு, மாடு, நாய் இவைகளைப் பல ரூபங்களை இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் மாற்றியமைக்கின்றோம்.

இதையும் நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

ஒரு ஆமை கூர்மையாக விஷம் கொண்ட ஒரு நரியை உற்றுப் பார்த்த பின் அதன் உணர்வைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது தன் உடலுக்குள் இருக்கும் (ஆமையை உருவாக்கிய) அணுக்களில் இது அதிகமாகச் சேர்ந்த பின் நரியின் உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் அதிகமாக வலு சேர்ந்துவிடுகின்றது.

ஆமையோ தன்னை மறந்து நரியின் நினைவாகவே வந்துவிடுகின்றது.

ஆக, இந்த ஆமையின் உடலுக்குள் நரியாக மாற முடியாது. நரியின் உணர்வுகள் ஆமைக்குள் வந்த பின் இந்த உடலை விட்டுப் பிரிந்து நரியின் நினைவாக ஆமையின் உயிரான்மா வெளியில் செல்கின்றது.

அப்படி வெளியில் செல்லப்படும் பொழுது இந்த நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலுள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவரப்படும் பொழுது அதற்குக் காரணப் பெயரைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்து, அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கிறான் என்று காட்டுகின்றார்கள்.

இந்தக் கண் எந்த நரியின் உணர்வை வலுவாக எடுத்து ஆமையின் உடலுக்குள் அந்த வலுவின் தன்மை இணைத்து வலுவாக்கிவிட்டதோ அந்த வலுவிற்குப் பெயர் அர்ச்சுனன் என்று வைக்கின்றனர்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

எந்த நரியின் வலுவான உணர்வை ஆமையின் உணர்வின் அணுக்களுக்குள் சேர்த்ததோ இந்த உடலை விட்டுச் சென்றபின் எதைப் பார்வையாகப் பார்த்ததோ இதுவே சாரதியாக அமைந்து அந்த நரியான உடலின் வியூகத்தைத் தகர்த்து அதன் உடலுக்குள் சென்று “நீ அதுவாகு” என்று உபதேசிக்கின்றான்.

இதை நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்காகக் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் என்று காவியத்தைத் தெளிவாகப் படைத்துள்ளார்கள்.

இப்படி வளர்ந்தது தான் நமது உயிர்.

கடவுளாக நின்று ஒவ்வொரு சரீரத்திலேயும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த எண்ணத்தால் இந்த உடலை இயக்கி நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைகள் செய்தது என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது நமது சாஸ்திரங்கள்.

இன்று உயிரே கடவுள் என்று சொன்னால் எப்படி ஆகும் என்று சட்டம் பேசுகிறார்கள்.

கீதையைப் படித்தவர்களும் மகாபாரதத்தைக் கற்றுக் கொண்டவர்களும் கடவுளின் அவதாரம் பத்து என்று தெரிந்து கொண்டவர்களும் அதைப் படித்தார்களே தவிர மூலக் கூறை அறிந்து கொள்ளவில்லை.

காவியமாகப் படிக்கின்றார்கள், கருத்துக்களை அள்ளி வீசுகின்றார்கள் அவரவர்களின் சந்தர்ப்பத்திற்கொப்ப நிலையைத்தான் பேசுகின்றார்களே தவிர அந்த ஞானிகள் காட்டிய பேருண்மைகளை அறிய முற்படவில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு நிலைகளுக்குக் காரணப் பெயரை வைத்து அவைகளின் இயக்கத்தின் பேருண்மைகளை நாமெல்லாம் அறிந்து இந்த வாழ்க்கையில் நம்மையறியாமல் வரும் தீமைகளிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் காவியத் தொகுப்புகளைத் தெளிவாகக் காட்டினார்கள்.

July 17, 2016

நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம்

காலத்தால் சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டு உண்மையின் உணர்வுகளை சாஸ்திரங்களை மறந்துவிட்டோம். இனியாவது தெரிந்தவர்கள் அந்த ஞானிகள் காட்டும் அருள் வழியில் ஆலயங்களுக்குச் சென்று வணங்குதல் வேண்டும்.

நம் உடலே ஆலயம்.
உயிரே ஈசன்.
உடலே சிவம்.

நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் வினை.
வினைக்கு நாயகனாக இயக்குகின்றது.
எதனின் குணத்தை அதிகமாகச் சேர்த்தோமோ அவை அனைத்தும் கணங்களுக்கு அதிபதியாக இயக்குகின்றது.

கண்களே கண்ணன்.
கண்களின் கருவிழி ருக்மணி.
கண்களுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு சத்தியபாமா, உண்மையை நமக்குள் தெரியப்படுத்துகின்றது.

உயிரே ஈசன்.
அதற்குள் ஏற்படும் வெப்பமே விஷ்ணு.
அதனால் ஈர்க்கும் காந்தமே லட்சுமி.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை உருவாக்கும் அணுவே பிரம்மம்.
அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையே அது.

உணர்வின் சத்து நம் உடலுடன் ஆகப்படும் பொழுது சிவமாகின்றது.
சிவன் அரவணைக்கின்றான் என்று இந்த நிலை பெறுகின்றது.

இதைப் போன்ற பேருண்மைகளைக் காட்டிய அருள் வழியில் நமக்குள் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம். இருள் சூழா நிலைகளில் நம்மைக் காப்போம்.

ஆறாவது அறிவு கொண்டு சேனாதிபதியாக்கி அருள்ஞானிகளின் உணர்வைப் பெறக் கூர்மையாக நினைவினைச் செலுத்துவோம். அதன் வலுவை நமக்குள் வளர்ப்போம்.

பேரின்பப் பெருவாழ்வு வாழும் அந்த அவதாரமாகக் கல்கியாக ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.

July 16, 2016

நம்மை இயக்கும் உயிரைக் கடைசியில் பொய்யாக்கிவிட்டுப் பொய்யான உலகத்திற்குப் போவது சரியா....?

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் பொய் அல்ல. இன்றைய வாழ்க்கையில் சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நாம் உண்மையான சாஸ்திரத்தைப் பொய்யாக்கிவிட்டோம்.

ஆக, பொய்யான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொய்யின் நிலையையே அடைகின்றோம்.

மனிதனின் உணர்வையே இன்றைக்குப் பொய்யாக்குகின்றோம். மனிதனின் நிலையையே பொய்யாக்கப்படும் பொழுது நாம் எந்த உண்மையின் நிலையை அறியப் போகின்றோம்?

“அவன் பொய்யன்..,” என்று உயிரையே பொய்யாக்குகின்றோம். ஆக, இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு மறைக்கப்படும் பொழுது உயிரின் இயக்கத்தை மறைக்கச் செய்கின்றது.

கடவுள் - அவன் எங்கேயோ தனித்திருக்கின்றான் என்ற நிலையில் உயிரையே நாம் பொய் என்று நாம் நினைக்கும் அளவிற்கு வருகின்றது.

எண்ணிய உணர்வை உருவாக்கும் ஈசனாக நம் உயிர் இருந்தாலும் நமக்குள் கடவுளாக உள் நின்று அவன் இயக்குகின்றான்.

அந்த ஞானிகள் காட்டிய நிலை இது. அதையே நாம் பொய்யாக்குகின்றோம்.

நமக்குள் எண்ணிய குணங்கள் எதுவோ நம் உள் நின்று இயக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் கடவுளாகத்தான் இயக்குகின்றான். தனித்து ஒருவன் கடவுளாக இல்லை.

இது ஞானிகள் காட்டிய அருள் நெறிகள்.

உயர்ந்த பண்பின் தன்மை கொண்டு நமக்குள் எதை எடுக்க வேண்டும்? அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எப்படிச் சேர்க்க வேண்டும்? என்று காட்டினார்கள் ஞானிகள்.

அவர்கள் காட்டிய அருள் நெறிப்படி விநாயகரின் நிலையை உருவமாகக் காட்டப்பட்டு அந்த அருவ நிலையை எண்ணத்தால் எண்ணி நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். அப்பொழுது அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலாக்கப்படும் பொழுது துவைதம்.

இந்த உடலிலே தீங்கினை நீக்கி அந்த உணர்வை எவெரொருவர் பற்றுடன் பற்றுகின்றனரோ அவர்கள் அங்கே செல்ல முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டுமென்றால் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று சதா அதைச் சுவாசித்துத் தீமைகளை அகற்றப் பயன்படுத்துங்கள்.

July 15, 2016

"விழுதாக இருந்து" நம்மை மனிதனாக உருவாக்கிய தாய் தந்தையரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்

நம் தாய் தந்தை சூரிய ஒளி போன்று இருந்து நம்மை உருவாக்கினார்கள். ஆகவே, அவர்களால் உருவாக்கப்பட்ட அவருடன் இணைந்து இந்த உணர்வின் உடலை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.

இதைப் போல எண்ணி நாம் இணைந்து வந்தால் இந்த உடலை விட்டுத் தாய் தந்தையரின் உயிரான்மா பிரிந்தால் எளிதில் அவர்களை விண் செலுத்த முடியும்.

ஏனென்றால், அவரின் உணர்வுகள் நாம் எதைக் கொண்டு எண்ணினோமோ இதனின் வலுக் கொண்டு எந்த மகரிஷியின் உணர்வைப் பெற்றோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அங்கே உருவாக்கப்படும் பொழுதுதான் நம்முடைய தாய் தந்தையர்கள் உண்மையான கடவுளாகின்றது.

ஒரு மரத்திற்குச் சரியான நிலையில் விழுது இருந்தால் தான் விளையும், இல்லையென்றால் விளையாது. ஆகவே, அன்னை தந்தையின் உணர்வால் விழுதாக நாம் விளைந்தோம்.

அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கி இந்த முறைப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று அன்று அகஸ்தியன் விநாயத் தத்துவத்தில் தெளிவாகக் காட்டினான்.

அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைப் பெற்று இன்றும் ஒளியின் சுடராக வாழ்கின்றானோ அவனின் உணர்வை நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

இதற்காகத் தான் வழியினை அமைத்தான் உருவத்தை அமைத்தான், உணர்வினைக் காவியமாகப் படைத்தான் அதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்து உணர்வை இயக்கும்படிச் செய்தான் “மூஷிகவாகனா”. 

இந்த வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷியின் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாகனமாக வந்து தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும், தீமைகளைக் கண்டாலும் நமக்குள் வராது தடுக்கும் சக்திகள் வருகின்றது.

July 13, 2016

வாலி (விஷம்), சுக்ரீவன் (ஒளி) இருவரும் “சகோதரர்கள்” விஷத்திற்குப் பின் ஒளி - விளக்கம்

மனித வாழ்க்கையில் அந்தத் தீமைகளை வென்ற வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்காக வேண்டித்தான் “சுக்ரீவன்” என்று காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை (சுக்ரீவன்) நாம் நுகர்ந்து வலிமைமிக்க விஷத்தை அடக்குதல் வேண்டும். ஆகவே, வாலியை அடக்கினான். இதுவும் சீதாலட்சுமி தான்.

மனிதன் வேதனைப்படும் பொழுது அந்த வேதனையின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சீதா லட்சுமி ஆகின்றது.

அதே சமயத்தில் மனிதனில் தீமைகளை வென்றவன் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதையும் சப்தரிஷி மண்டலத்தில் இருந்து அதிலிருந்து விளைந்த உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதை நாம் கவர்ந்து நம் எண்ணத்தால் எண்ணினால் சுக்ரீவன்.

அவன் உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் நுகரும் பொழுது அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி அந்த நஞ்சு கொண்ட உணர்வை அடக்குகின்றது.

அதைத்தான் சுக்ரீவன் துணை கொண்டு வாலியை அடக்கினான். ஏனென்றால், வாலி அண்ணன் சுக்ரீவன் தம்பி.

முதலில் விஷத்தின் இயக்கத்தால் தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன். ஆக மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக்கிய பின் பின்னாடி பிறந்தது தான் ஒளி.

இவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்கள். அதனால்தான் வாலியையும் சுக்ரீவனையும் சகோதரர்கள் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

அவனின் (சுக்ரீவன்) துணை கொண்டு அடக்கப்படும்போது இது இணைந்து தீமைகளை (வாலி) நன்மை செய்யும் சக்தியாக நமக்குள் மாற்றுதல் வேண்டும்.

நம்முடைய காவியத் தொகுப்புகள் இதுதான்.