ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2015

விஷ்ணு தனுசை எடுத்துத்தான் தீமைகளை அடக்க வேண்டும்

விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி, பெண்களிடம் அதிகமாக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப் பின் எந்த ரூபம் பெற்றாலும் பெண்ணாகத் தான் மாற்றும்.

விஞ்ஞானிகள் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலுக்குள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகிறது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகிறது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர்.

விஞ்ஞானிகள் செய்கிறார்கள் இல்லையா?

நமது நுகரும் உணர்வுகள் உறுப்புகளையே மாற்றக்கூடிய சக்தி வரும்போது, ஒருவனின் தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றிய உடனேயே உடல்களிலே உறுப்புகள் மாறுகின்றது.

உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும் செயல் மாறுகின்றது. வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

ன்றாக திடகாத்திரமாக இருக்கின்றவர்கள், பலருடன் பழகப்படும்பொழுது, சில உணர்வுகளை எடுத்தபின், இந்த அணுக்கள் மாற்றமடைந்தபின் உறுப்புகளே சுருங்கிப் போகின்றது.

ஆகையால் நம் உடலுக்குள் தீமையான உணர்வுகள் போகாமல் தடுக்க வேண்டும் இல்லையா? அதற்கு “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் இத்தகைய நிலைகள் எதுவானாலும், அடுத்த நிமிடம், அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழகவேண்டும்.

இல்லையெனில், நமது உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும்.

சக்திவாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் சுவாசித்து நமக்குள் சேர்த்து அதைத் தடைபடுத்த வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவின் ரூபத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர்.

ஆனால், மெய்ஞானிகள் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலின் உணர்வின் மாற்றமும் அடுத்த பிறவியும், ரூபங்கள் எப்படி மாறுகின்றது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நாம் குருநாதருடன் ஆயுள் மெம்பராக இருக்கின்றேன். அவர் ஒளியானார். அவர் வழியைப் பின்பற்றுகின்றேன், நான் ஒளியாகின்றேன். அதே உணர்வை உங்களிடம் சேர்த்து அவருடன் சேர்த்து ஆயுள் மெம்பராக வருகின்றீர்கள்.

ஆயுள்காலம் என்றால் இந்த உயிரின் கடைசி நிலை.

இதைத்தான் இராமாயணத்தில், எண்ணங்களைப் பற்றிச் சொல்வார்கள். நாம் வேதனை என்ற உணர்வை உடலில் பெற்றபின் சிவ தனுசு.

உடலாகி இந்த உணர்வுகள் வலுப் பெற்றுவிட்டால் நல்லதை எடுக்க விடுகின்றதோ? எடுக்க விடவில்லை.

நமது உயிர் விஷ்ணு, துருவ நட்சத்திரம் இந்த உயிருடன் ஒன்றி, உணர்வை ஒளியாக மாற்றியது. பல தீமைகளை வெல்லக்கூடிய சக்தி பெற்றது.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இங்கே புருவ மத்தியில் அனுப்பும் பொழுது, இந்த உணர்வுகளை எடுத்து ஒளியாகின்றது. இதற்குப் பெயர் விஷ்ணு தனுசு.

இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் இரத்தத்தில் கலந்த உடனே, தீமையான உணர்வின் அணுக்களைச் செயலற்றதாக ஆக்குகின்றது.

ஆகையால், வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால், ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இணைத்துவிட வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று சொல்கிற பொழுது, இது விஷ்ணு தனுசு.

பையன் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது நம்மையும் வேதனைப்படும்படி செய்வதைப் போன்று குடும்பத்தில் இப்படி நிலை வருகிறதென்றால், இது சிவ தனுசு.

எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மைதான் சொல்லாக வருகின்றது. நாம் கேட்டவுடனே என்ன செய்கிறது? இதே உடலைத்தான் இயக்குகிறது.

ஆனால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, உடலுக்குள் படரவேண்டும் என்கிற பொழுது, அந்த விஷ்ணு தனுசு என்ன செய்கின்றது? சிவ தனுசை அடக்குகின்றது.

இவ்வாறு உயிரின் இயக்கத்தால் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமாக ஆனான் என்று தெரிந்தபின், தெரிந்தும் அதை விட்டுவிட்டால் என்ன ஆகும்?

எனவே, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மை செய்யப்படும்பொழுது,
அந்த வலுவைக் கூட்டிய பின்,
அவன் அறியாமை நீங்க வேண்டும்
அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும் என்று அவனை எண்ணி
இதை எடுத்தோமென்றால் இதைப் பெருக்கிக் கொள்கின்றோம்.

பெருக்கியபின், நாமும் அந்த துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் சுடராக அழியா ஒளியின் சரீரம் பெறமுடியும்.

February 27, 2015

நம் உடலில் இருக்கும் அணுக்கள் ஆகாரம் எப்படி எடுத்து வளர்கிறது?

நாம் வேலைக்கு அவசரமாகப் போகவேண்டும் என்று வீட்டிலே நினைப்போம்.

அந்த நேரத்தில் சந்தர்ப்ப பேதத்தால் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம். அப்பொழுது, இன்னும் எழுந்து ஒன்றும் செய்யவில்லை பார்.., என்று கோபத்தை எடுத்தால், அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது நாம் எதற்கு ஊட்டம் கொடுக்கின்றோம்?

அதாவது, நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது. அதற்கு ஆகாரம் தேவை. இந்த சந்தர்ப்பம் பார்த்து ஊடே புகுந்து கொள்ளும்.
நாம் சிந்திக்க முடியாத நிலைகளில்
அது சாப்பாடு எடுக்கின்றது.

புலியை 10 நாள் பட்டினி போட்டவுடன் என்ன செய்யும்? ஒரு ஆளைக் கண்டவுடன் தாவி அடிக்கும்.

பூமிக்குள் பதிந்திருக்கும் (மறைந்திருக்கும்) செடி கொடிகள் மழை பெய்தவுடன் கிடு கிடுவென விதைக்காமலேயே முளைக்கத் தொடங்கும். அதிலேயும் விஷ வித்துக்கள் கிடு கிடுவென முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால் சீக்கிரம் முளைக்கின்றதா? அதற்கு வேண்டிய பக்குவ நிலையும் சூழ்நிலையும் உருவாக்கினால்தான் அது விளைகின்றது.

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த மகரிஷிகளின் ஞான வித்துக்களை வளர்த்துப் பழக வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும்போது, பார்த்து நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகின்றது. அதற்குச் சாப்பாடு தேவை.

நம்மை அறியாமலேயே நுகர்ந்து அந்த வெறுப்பின் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்யும். இத்தகைய உணர்வுகளை நீங்கள் சுவாசித்தவுடனே, தொழில் செய்யப் போகும்பொழுது ஒருவனைப் பார்க்கப்படும் பொழுதே அவன் மேல் வெறுப்பு வரும்.

நமக்காக அவன் வேலை செய்யும் பொழுது, இந்த வெறுப்பின் உணர்வுகள் அவன் மேல் பாய்ந்து தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை நாம் கணக்கு எழுதப்படும்பொழுது என்ன செய்கிறது எனில், கணக்கைத் தவறவிட்டு விடுகின்றது. நாம் சீராக கணக்குப் பார்க்க முடியாது.

ஆகவே, நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அதனுடைய உணர்வுக்காக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது வளர்கின்றது.

நம் நல்ல குணங்களை நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியுதோ?

அப்பொழுது நமக்குள் எது நம்மை இயக்குகின்றது?

ரோட்டிலே போகும் பொழுது, ஒருவன்  பிறிதோருவரைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை, பேசவில்லை.

ஆனால், அந்த உணர்வுகள் அவன் உடலைச் சுற்றி அவன் ஆன்மாவில் இருக்கும். நாம் உற்றுப்பார்த்தால் நமக்குள் பதிவாகி நுகரச் செய்கின்றது.

அப்பொழுது இதை எது செய்கிறது? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும்பொழுது, அதைக் கவர்ந்து நம்மை அறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

உதாரணமாக, மாம்பழத்தில் இருந்து வாசனை வருகின்றது. நல்ல பழமாக இருந்தால் “ஆஹா” என்கின்றோம். அதிலே புளிப்பு கலந்தால் புளிப்பாக வருகிறது என்கின்றோம். எதிலே வருகின்றது? காற்றின் நிலைகளிலே வருகின்றது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே, பழம் எது என்று பார்க்கின்றோம்.

ஒரு பூச்செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தவுடன் நன்றாக உள்ளது. பச்சிலையில் இருந்துவரும் மணம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வாந்தி வரும் போல் உள்ளது. நம் உடலில் உள்ள அணுக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வாந்தி வருகிற மாதிரி உள்ளது.

இதையெல்லாம் நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் கலந்தபின் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள்ளும் அந்தத் தீங்கு விளைகின்றது.
அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும்.
அப்பொழுது நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகிறது.

கெட்ட அணுக்கள் எடுக்கும்போது அது வளர்கின்றது. அப்பொழுது நம்மை அறியாமலேயே மயக்கம் வரும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த உணர்வு தூண்டுகிறதென்றால், “ஈஸ்வரா” என்று அந்த நேரத்தில் உடனே நாம் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று  உடல் முழுவதும் சுழற்ற வேண்டும்.

பின், யார் இந்த மாதிரி நடந்தனரோ, அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால், அவன் செய்த செயலும் நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

ஏனென்றால், உயிர் ஒரு நெருப்பு. நாம் நெருப்பை வைத்து ஒரு பாத்திரத்திலே என்ன சரக்கைப் போடுகிறோமோ அதை இரண்டறக் கலக்கச் செய்து ஒரு கலவையாகின்றது.

ஆக, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை இவ்வாறு நமக்குள் இணைக்கும்பொழுது பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள் நமக்குள் இங்கே உருவாகாது.

இதைத்தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்பது.

February 26, 2015

நம் உடலிலுள்ள (ஜீவ) ஆன்மாக்களுக்கு தியானிக்க வேண்டிய முறை

நாம் நுகர்ந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. ஜீவான்மா என்றால் ஒரு கொசுவை நாம் நசுக்கியிருந்தால் அந்தக் கொசுவின் ஆன்மா நம் உடலுக்குள் வந்திருக்கும்.

அதே சமயத்தில், பாசத்தின் தன்மையில் பிற மனிதனின் ஆன்மா நமக்குள் வந்துவிடும். மனிதனான உணர்வுகள் நம்மை எண்ணி பேய், பிசாசு என்று சொல்வார்கள். பக்தி கொண்ட ஆன்மா என்று சொல்வார்கள்.

ஆக, நம்முடன் பழகிய உணர்வுகள் நமக்குள் வந்ததென்றால் அதன் இயக்கம் நம்மை இயக்க ஆரம்பித்துவிடும். உடுக்கை கேட்கிறது, ஜோஸ்யம் பார்க்கிறது இதற்கெல்லாம் போகும்.

இதெல்லாம் ஜீவான்மாவுடன் சேர்ந்தது. ஜீவ அணுக்கள் நாம் நுகர்ந்த பிற்பாடு ஜீவிக்கும் அணுக்களாக வருகின்றது. அதன் மலம் நம் உடலாகின்றது.

அதே சமயத்தில், ஜீவான்மாக்களாக இருப்பது அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டி, அது செய்யும் தவறுகளையெல்லாம் நம்மையும் செய்யத் தூண்டும்.

அப்படிச் செய்தோமென்றால், அது நுகர்ந்து மீண்டும் இரத்தத்திலே கலந்து நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை மாற்றி திசை திருப்பிவிடும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால், நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது, கருவிழி “ருக்மணி”, ஒருவர் படத்தைப் பதிவாக்கி விடுகின்றது.

அவர் செய்கின்ற தவறைக் கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு “சத்யபாமா” இழுத்து (கவர்ந்து) நம் ஆன்மாவாக மாற்றி உயிரிலே இணைக்கச் செய்துவிடுகின்றது.

ஆக, அவர் கஷ்டப்படுகின்றார், வேதனைப்படுகின்றார், தவறு செய்கின்றார், சாபமிடுகின்றார் என்று உண்மையைச் சொல்கின்றது. அதுதான் சத்யபாமா என்பது.

அவன் செயலின் உண்மையை நமக்குள் தெரிவிக்கின்றது. நுகர்ந்த உணர்வோ இரத்தத்திலே கலந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை, இந்த உணர்வுகள் நம் இரத்தங்களிலே கலந்துவிடுகின்றது.

தெருவிலே சாக்கடை இருக்கின்றது. ரொம்பக் கஷ்டமென்றிருந்தால், அந்த சாக்கடை நாற்றத்தை இது சாப்பிடும்.

தியானத்தில் அதிகமாக இருக்கின்றவர்களுக்கு, இந்தச் சாக்கடை நாற்றமே தெரியாது. இந்த உணர்வின் தன்மை நம்மை நுகர்ந்துவிடாது தடுக்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, நாம் மனிதனாகப் பிறந்த பிற்பாடு, குருநாதர் காட்டிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் கொண்டு போகவேண்டும்.

ஆகவே, நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்து
நமக்கு நல்லது செய்யக்கூடிய நிலைகளாக
நாம் மாற்றிக் கொள்ள முடியும். 

February 23, 2015

குருவுடன் எப்பொழுதும் நாம் இணைந்தே வாழவேண்டும் - ஞானகுரு

இன்றைய மனிதர்கள் மனிதனின் உணர்வின் இயக்கத்துடன் தான் வாழுகின்றார்கள். இருந்தாலும், மிருகத்திலிருந்து மனிதனாக வந்தோம் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒரு குணம் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒரு விஷத்தன்மை உண்டு. இருந்தாலும், ஒன்றிடமிருந்து ஒன்று தப்பிக்க விஷத்தைப் பாய்ச்சி விழுங்குகின்றது பாம்பினங்கள்.

அதே சமயத்தில், பாம்பினங்களையே (தன் இனத்தையே) விழுங்கி வாழும் தன்மையும் உண்டு. மற்ற இனங்களை விழுங்குவது என்று அதற்கொரு குணம் உண்டு.

அதாவது, நாம் மனிதனாக இருக்கின்றோம். இனம் என்ற நிலைகளில் பிரிக்கப்பட்டு மற்றொரு இனத்தைத் தாக்கிக் கொன்று ரசிக்கின்றோம்.

விஷத்தை உட்கொண்டால் எப்படி வேதனைப்படுகின்றோமோ, இதைப் போன்று
ஒருவன் துன்பப்பட்டால், துயரப்பட்டால்,
அந்த உணர்வினை நாம் உற்றுப் பார்த்தால்,
அவன் வேதனைப்படுவதை ரசித்தால்,
அவன் உடலிலிருந்து வரும்
வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நாம் சுவாசித்து
நம் இரத்தங்களிலே கலந்து உடலிலுள்ள அணுக்களில்
வேதனைப்படும் உணர்ச்சிகள் அதிகமாகி
அதையே ரசித்து உணவாக உட்கொள்ளும்.
இதுதான் இன்றைய மனிதர்களுக்குள் இயங்கும் உணர்வின் நிலைகள்.

இந்த வாழ்க்கையில் பித்தரைப் போன்றுதான் இருந்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இந்த உலகமே பித்து நிலையில் இருக்கிறதென்று உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளவர்களுக்கு குருநாதரைப் பார்த்தால் பித்தராகத் தான் தெரியும்.

ஆனால், இந்த உலக மக்கள் பித்துப் பிடித்து பித்தர்களாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கிறேன் என்ற உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் உடலில் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார்.

ஆகையினால், மற்றவர்கள் யார் தவறு செய்கிறார்கள்?
எப்படிச் செய்கிறார்கள்? என்று சிந்திப்பதில்லை.
அவர் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தியான வழியில் இதுவரை தியானம் செய்து வந்தாலும் நாம் தியானத்தில் இருந்தாலும் நம் குழு வழியில் ஆயுள் மெம்பராகச் சேரவேண்டும்.

அதாவது, குரு காட்டிய வழியை நாம் பின்பற்றி குருவுடன் எப்பொழுதும் நாம் இணைந்தே வாழவேண்டும்.

வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகள் உடலுக்குள் சென்று நமக்குள் தீமைகள் செய்யாது தடுத்து நிறுத்துவதுதான் முறை என்று ஆயுள் கால மெம்பர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏனென்றால், குருநாதருடன் நான் ஆயுள் கால மெம்பராகத்தான் இருக்கின்றேன்.

அவர் எதைப் பெற்றாரோ அதன் வழியில் கடைப்பிடித்து அவருடன் இணைந்து அவர் எனக்கு எவ்வாறு போதித்தாரோ, எனக்கு எவ்வாறு உணரச் செய்தாரோ, அதன் வழிதான் கடைப்பிடித்து வருகின்றேன்.

ஆகவே, நான் குருவுடன் ஆயுள் கால மெம்பராக இருக்கின்றேன். உங்களையும் என்னைப் போல அவருடன் இணைய ஆயுள் கால மெம்பராக இணையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

குரு காட்டிய அருள் வழியை உங்களிடம் உபதேசிப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இதைக் கடமையாகக் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்.

கறி சாப்பிட்டுப் பழகியவர்களின் கடைசி நிலை

1. கோழிக் கறியை ஏன் அதிகம் சாப்பிடுகிறார்கள்?
ஒரு பாத்திரத்தில் தேளைப் போட்டபின், அது பாத்திரத்தில் கொட்டினால், அந்தக் கொடுக்கின் நுனி எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்தப் பாத்திரத்தில் ஓட்டை போட்டுவிடும். அதற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது.
ஆனால், கோழியோ இந்தத் தேளைக் கொத்திக் குதறுகிறது.
அந்த முள்ளுடன் விழுங்குகின்றது.
அதற்குள் இருக்ககூடிய அமிலமோ, அந்த விஷத்தை ஒடுக்குகின்றது.

அந்தக் கோழியை மனிதன் சாப்பிடுகின்றான். அதிலே சேர்ந்த விஷத்தின் தன்மை, மனிதனுடைய உணர்ச்சிகளை அதிகமாக ஊட்டுகின்றது.

ஆகையினாலேதான், பெரும்பகுதியானவர்கள் கோழியை அதிகமாகச் சாப்பிடுகின்றனர். உணர்வின் வேகமும், உணர்ச்சியின் வேகங்களையும் அங்கே கூட்டப்படும்போது, கோழியை நிறையப் பேர் சாப்பிடுவார்கள்.

சேலத்தில் பார்க்கலாம். ஆட்டுக்கறியைக் காட்டிலும், கோழிக் கறிதான் நன்றாக இருக்கிறதென்று முழுதாக விழுங்குவார்கள். கோழி சாகக் கிடக்கும். தீனி கூடக் கொடுக்கமாட்டான்.
2. கோழியை வேதனைப்படுத்தி, இரசித்து, உணவாக உட்கொண்டால் உடலில் இனம் புரியாத வலிகள் ஏற்படும்
பிடித்துக் கொண்டு வருவான். தொங்கவிடுவான். நரகவேதனைப் படுத்துவான். இவன் எடுத்து வந்து, தீனியும் போடமாட்டான். அப்பொழுது அந்த உணர்வுகள், அது இவனை எண்ணினால் என்னவாகும்?

நாம் கோழி என்று நினைக்கிறோம். ஒரு பட்சி தன்னுடன் வந்த அந்த பட்சி துடிப்பதைப் பார்த்தது. தன்னுடைய பாசத்தின் உணர்வுகொண்டு பார்த்தது. ஆனால், வேடுவனின் கண்ணை உற்றுப்பார்த்தது. அவனுக்குள் (வான்மீகி மகரிஷி) ஊடுருவி பாச உணர்ச்சிகளைத் தூண்டியது.

ஆனால், வேதனைப்படும் உணர்வுகள் இங்கே வேதனைப்பட்டு “இப்படிச் செய்கிறானே” என்று அவன் உருவை நிச்சயம் பார்க்கும். இந்த உணர்வின் தன்மை, இவனுக்குள் வேதனைப்படும் உணர்ச்சியைத் தூண்டும்.

அதே மாதிரி தொங்கப் போட்டு, சில பறவை இனங்களைச் சிலர் சாப்பிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கலாம். அடிக்கடி இனம் புரியாது
மூட்டு வலிக்கின்றது,
இடுப்பு வலிக்கின்றது,
இங்கே வலிக்கின்றது,
வயிறு வலிக்கின்றது என்பார்கள்.
ஏன் வலிக்கின்றது? என்பது தெரியாது.
இந்த உணர்வின் அலைகள் பல பாகங்களுக்கு வரும்.

நாம் அதைப் “பட்சி” என்று நினைக்கின்றோம். அதை வேதனைப்படுத்தும் உணர்வின் வழிகளில், அது உருவாக்கப்படும்போது நமக்குள் இத்தனை வேலைகளைச் செய்கிறது இயற்கையின் சில நியதிகள்.

இதைத்தான் வான்மீகி சொல்லுகின்றார். அதாவது, நாராயணன் சீதாலட்சுமியாக மாறுகின்றான். எதை எடுக்கின்றதோ, அந்த சுவையின் உணர்வாக அந்த சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம், காந்தம், விஷம் இதில் கலந்துள்ளது.

காந்தம் சுவையை எடுத்துக் கொள்ளும்போது, இந்த சுவையின் சத்தை அது வளர்த்துக் கொள்கிறது. அதுதான் சீதா - சுவை, இலட்சுமி அதன் வளர்ச்சியாக வளர்கின்றது. இலட்சுமி வளர்ப்பாள். இலட்சுமி என்றால், வளர்க்கும் சக்தி கொண்டது. ஆகவே, சீதாலட்சுமி அந்த சுவையை அரவணைத்து, தனக்குள் வளரும் பருவத்திற்கு வளர்கின்றது.

கோழியைச் சாப்பிட வேண்டும் என்று, அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும்போது அந்த உணர்வுகள் இவனுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அதே சமயத்தில் அவன் உடலுக்குள் வேதனை உணர்வுகள் அங்கே கிளரப்பட்டு, அந்த வேதனை உருக்களை உருவாக்கும். ஆக, இங்கே அந்தக் கோழியின் உணர்வுகள் உடலுக்குள் வேதனையை வளர்க்கும்.

வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் போதும். அவன் உடலுக்குள், வேதனைப்படும் உணர்வுகளுக்கு இது உணவாகின்றது. இந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகும் போது, அவனுக்குத் தெரியாது.
3. கறி சாப்பிட்டால் நீ செத்துவிடுவாய் என்று, கடைசியில் டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்
எந்தக் கோழியைச் சாப்பிட்டானோ, அந்த உணர்வின் தன்மை வளர்ந்தபின் அது வேதனைப்பட்ட உணர்வெல்லாம் முதலில் வீரியமாக இருக்கும். பின் அதனுடைய நிலைகளைப் பார்த்தபின், “அம்மம்மா, சாப்பிட்டேனே” என்று கடைசியில் டாக்டரிடம் சென்றால் என்ன ஆகிறது?

இந்த வேதனை உணர்வுகள் அங்கே சேர்க்கப்படும்போது,
கோழியை அடுத்து சாப்பிட்டால்,
“அது விஷம் நீ செத்துவிடுவாய்” என்று டாக்டர் சொல்வார்.
டாக்டர், “உனக்குக் கோழிக்கறி சேராது” என்பார்.

இதே மாதிரி ஆட்டுக்கறியைச் சாப்பிட, அது வேதனைப்படுவதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதை வேடிக்கை பார்த்தால் அதன் உணர்வின் தன்மைக்குள் வேதனையின் தன்மை வருகின்றது.

அந்த வேதனையின் தன்மை வரப்படும்போது, அதன் உணர்வை மாற்றப்படும்போது,
“அடுத்து ஆட்டுக்கறியைச் சாப்பிட்டால்
உனக்கு ஆகாது” என்று டாக்டர் சிபாரிசு செய்வார்.

அந்த உணர்வின் தன்மை எதிர்மறையாகி, உணர்வின் தன்மை அணுக்களாக மாற்றும். எதனின் தசைகளைப் புசித்தோமோ அதன் உணர்வின் தன்மை இயக்கி, இயற்கை எப்படி மாறுகின்றது? என்ற நிலையைத் தெளிவாக, நமது குருநாதர் காட்சியாகக் காண்பித்தார்.
4. அருள் ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால், மாற்றியமைக்கலாம்
யாரிடமும் யாம் கறி சாப்பிட வேண்டாம் என்று மட்டும் சொல்வதில்லை. அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால், இது தனியாகப் போகும்.

ஆனால், சாப்பிட வேண்டாம் என்று கட்டாயப்படுத்தி நினைத்தீர்கள் என்றால், நிச்சயம் பத்து கிலோ சாப்பிட்ட மாதிரி ஆகிப் போகும்.

ஆகையினாலே, அருள்ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால், அதை “ஈர்க்கும் சக்தி” குறைகின்றது. இப்படித்தான் குறைக்க வேண்டும்.
5. கறி சாப்பிட்டுப் பழகியவர்களின், "கடைசி நிலை"
தடைப்படுத்தினால், “கொடுக்கவில்லை” என்று, அதுவே நோயாக மாறும். அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டும். கறி சாப்பிட்டவர்களைக் கடைசியில் பார்த்தால், உயிர் இழுத்துக் கொண்டிருக்கும்.

சீக்கிரம் உயிர் போக வேண்டும் என்றால், அவர் என்ன அதிகமாகச் சாப்பிட்டாரோ, அதை வேக வைத்து,
அந்த வாசனையை நுகர்ந்தவுடன்
உயிர் உடனே வெளியில் வந்துவிடும்.
இப்பொழுது அது எங்கே போகும்?
ஆட்டிற்கே செல்லும்.

ஆட்டுக்கறியின் மேலே நினைவிருந்தால், அந்த உயிர் மனித இனத்திற்குள் செல்லாது. ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று, அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனாக இருக்கும் பொழுது, ஆட்டுக் கறியைச் சாப்பிட்டார். பின், அங்கே போனவுடன், “மே., மே..” என்று சொல்வார். அடுத்து அங்கேயே அடங்கிவிடும். இதையெல்லாம் அப்படியே நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.