ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2024

மூலச்சக்கரம்

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்றுத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை… அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

February 15, 2024

மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்

இந்த உலகம் விஷத்தன்மை வாய்ந்ததாகப் போய்க் கொண்டிருப்பதால்… எத்தகைய துயரமோ சங்கடமோ சலிப்போ பயமோ போன்ற நிலைகளைப் பார்க்க நேர்ந்தால்… அதை நுகர நேர்ந்தால்… அடுத்த கணம்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின்படி ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.உங்கள் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யுங்கள்
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.கவலையோ மற்ற எதுவாக இருந்தாலும் அதை மாற்றிப் பழகுங்கள்.

அங்குசபாசவா…! மனிதனான பின் இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றுகிறது. நஞ்சைக் கழிக்கும் சக்தியான கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வலுப்பெற்றால் நம் எண்ணங்கள் அனைத்தும் பழுதாகிவிடும்… நம் உடலும் பழுதாகிவிடும்… நம் செயலும் பழுதாகிவிடும். அவ்வாறு பழுதாகாதபடி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் சிறிது காலம் தான் இந்த உடலில் நாம் வாழுகின்றோம். அதற்குள் நல் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும். அதற்காகத் தான் இராமேஸ்வரத்தில் “இராமன் மனதைக் குவித்து ஒன்றாக்கினான்…” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

வாழும் காலத்தில்…
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…
2.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.பிறர் மேல் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்றாக்கினால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றுகின்றது.

ஆனால் எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்களே… சும்மா விடுவதா…? என்று எண்ணினால் மனம் இருண்டு விடுகின்றது. மீண்டும் புவியின் பற்றுக்குத் தான் வந்து விடுகின்றோம்.

ஆகவே வாழக்கூடிய குறுகிய காலத்தில் பகைமைகளை மறந்து அருள் ஞானத்தைப் பெருக்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வர வேண்டும்.

இதற்குத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் குவித்தான் என்று காட்டினார்கள். ஆனால் அந்த உண்மையின் இயக்கங்களை அறிய முடியாதபடி போய்விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேரருளும் அவன் துருவனாகித் துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்
2.அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை உங்கள் இருப்பிடமாக்க வேண்டும்..

தாய் சக்தி

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட... தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக... பரிவு என்ற இரக்க குணம் காட்டி... பாசம் கொண்ட செயல் மூலம்...!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்...!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்...!

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்...?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை...”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்...! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்... நல்லெண்ணம் கொண்ட... நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

February 14, 2024

“மூகம்...” (ஃ) என்ற உயிரின் சக்தி

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ...ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லு(ள்ளு)ம்...!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்... ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்...!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்...!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்...” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்...! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக... மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது...?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக... அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்... என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்...! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்... அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட... “மனித குலம்...”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன...? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்...!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு...!

புனித தேசத்தை உருவாக்குங்கள்

வீட்டில் கர்ப்பமுற்றார்கள் என்று தெரிந்தால் அந்தக் கருவில் வளரும் குழந்தை அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அந்த அகஸ்தியன் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று தியானித்து… உருவாகும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்க வேண்டும்.

அந்தப் பத்து மாதம் இவ்வாறு நீங்கள் ஒத்துழைத்து ஞானிகளைக் கருவிலேயே உருவாக்குங்கள். விஞ்ஞான அறிவால் இனி வரக்கூடிய பேரழிவுகளில் இருந்து உங்களைக் காக்கத் தாய் கருவில் வளரும் அந்த ஞானிகள் உதவுவார்கள்..
1.ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்த முடியும்
2.நம்மைக் காப்பது அவனாகத்தான் இருக்க முடியுமே தவிர “வேறு எந்தக் கடவுளும் நம்மை காக்கப் போவதில்லை… முடியாது…”
3.ஆகவே நாமே கடவுளாக இருந்து… ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கிடல் வேண்டும்.

ஆனால் கர்ப்பமுற்றிருக்கும் தாய்… சந்தர்ப்பத்தால் நடக்கக்கூடிய சில தவறான செயல்களைப் பார்த்துவிட்டு… “இவன் திருட்டுப் பயலாக இருக்கின்றான்…” என்று திருடனைப் பார்த்து அவன் செயலை நுகர்ந்தால் கருவிலே வளரக்கூடிய குழந்தை “திருடனாகத்தான் பிறப்பான்…”

உலகில் எங்கு பார்த்தாலும் அநியாயம் நடக்கிறது… கொள்ளை அடிக்கின்றார்கள்… வெட்டுகின்றார்கள்… குத்துகின்றார்கள்… கொலை செய்கின்றார்கள்… என்ற அந்த உணர்வை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பெருகி… பிறந்த பின் “அந்த வேலையைத்தான் அவன் செய்வான்…”

ஓரு மனிதன் வெட்டப்பட்டுப் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை கர்ப்பிணித்தாய் நுகர்ந்தால் அந்தக் குழந்தை உடலில் உள்ள உறுப்புகளும் அது போல் “சிதைந்து விடுகின்றது…”

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…!

சில வீடுகளில் பார்த்தால் ஒருவருக்கொருவர் தாக்குவதும்… கலவரம் செய்வதும்… குழந்தை கை கால்கள் ஊனமாவதும் அங்கங்கள் குறைவதும் இது எல்லாம் வருவதற்குக் காரணம்…
1.அந்த கர்ப்பிணித்தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது தான்… அதனால் வரக்கூடிய தீயவினைகள் தான்.
2.யாரையும் நாம் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்கள் எடுக்கும் உணர்வுகள் தான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது. நீங்கள் தான் அந்தக் கடவுளாக இருக்கின்றீர்கள்.
1.கருவிலே வளரக்கூடிய குழந்தைகளை ஞானிகளாகவும் உருவாக்க முடியும்… நோயற்றதாகவும் மாற்ற முடியும்
2.உலக ஞானம் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தி “உங்கள் கையிலே உண்டு…”

அந்த பத்து மாதம் எத்தகைய தீமையும் வராதபடி
1.உங்கள் முகத்தையே நீங்கள் உற்றுப் பார்த்துக் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.கருவில் இருக்கும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.
4.அவன் உங்களைக் காப்பான்… புழு பூச்சியாக உங்களை மாற விட மாட்டான்.

அவன் வளர வளர உங்கள் தெருவிலோ ஊரிலோ தோஷங்களோ தீயவினைகளோ எது இருந்தாலும் அது மாறும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

குடும்ப வம்சத்தையே அருள் வழியில் அழைத்துச் செல்லும் “பெரும் மகரிஷியாகின்றான்…!”

அவன் வளர வளர நீங்கள் அவனைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்… அந்த அருள் உணர்வு உங்களுக்குள் சேரத்தான் போகின்றது. அதன் வழி உங்களை அவன் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்வான்.

இதன்படி செய்து
1.புனித தேசமாக உருவாக்குங்கள்
2.இந்தக் காற்று மண்டலத்தையும் புனிதமாக்குங்கள்
3.அத்தகைய ஞானிகளை உருவாக்குங்கள்…!

இதைத் தவிர இனி வேறு வழியில்லை.

ஆனால் இன்றைய நடைமுறையில் அசுர உணர்வு கொண்டு எத்தனையோ செயல் நடந்து கொண்டுள்ளது. குடும்பத்தில் கருவுற்ற பின் “அது பெண் குழந்தை என்று தெரிந்தால்… எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி ஈவு இரக்கமற்றுக் கொல்கின்றார்கள். குழந்தையை உருவாக்கிய தாயே இதைச் செயல்படுத்துகின்றது

கரு உருவாவதற்கு முன்னே தடைப்படுத்தினால் கூட ஒன்றும் இல்லை.
1.கருவுற்ற பின் அதைக் கொல்வது மிகவும் தவறு.
2.ஏனென்றால் அவ்வாறு கருச்சிதைவு (ABORTION) செய்யப்படும் பொழுது அந்தச் சிசு எத்தனை வேதனைப்படுகிறதோ
3.அந்தத் தாய் நிச்சயம் அது அவஸ்தைப்பட்டே தீரும்… அந்தக் குடும்பமும் அதே நிலையில் சிதைவுண்டு போகும்.

நிறைய இடங்களில் வறுமையும் கொடுமையும் மற்ற நிலைகளும் சேர்ந்து இத்தகைய அசுர உணர்வுகள்… சமுதாயத்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து எல்லாம் மக்கள் அவசியம் மீள வேண்டும்.

February 13, 2024

தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் பருவம் பெற்றவர்கள் தான் நாம்… இதே உயிர் தான்…!

1.அந்த உயிருடன் ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தினால்
2.இந்த வாழ்க்கையில் கண்டறிந்த தீமையான உணர்வுகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த முடியும்.

ஆனால் தூய்மைப்படுத்தத் தவறினால் ஒவ்வொரு குணத்திலும் அழுக்குகள் சேர்ந்து… பூரண நிலா அது பௌர்ணமிக்கு பின் எப்படிச் சிறுகச் சிறுகக் குறைந்து… கடைசியில் முழுமையாக இருட்டாவது போன்று நம் உடலில் அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருள் அடைந்து விடுகின்றது.

இருளடைந்து விட்டால் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு இந்த உயிர் வெளியே சென்று விடுகின்றது. அந்த அடிப்படையில் உயிர் வெளியே சென்றால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு… அதற்குத் தகுந்த உடலாக… “மனிதனல்லாத உடலை” இந்த உயிர் உருவாக்கி விடும்.

மனிதனல்லாத உடலை உருவாக்கி விட்டால் மீண்டும் அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உடலிந் உணர்வுக்கே செல்லும். ஆனால் மனிதனாக வர முடியாது.

நம் பையனை (குழந்தைகளை) நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் எண்ணியபடி குழந்தைகள் சரியாக வரவில்லை என்றால்
1.தவறு செய்கின்றான் என்று ஆவேசமான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது பேய் மனமாக மாறுகின்றது.

முதலில் நல்ல முறையில் வளர்க்கத் துடித்தோம். ஆனால் தவறு செய்கிறான் என்று தெரிந்த பின் பேயைப் போல அவனைத் தாக்கவும்… அறிவை இழக்கச் செய்வதும்… இதைப் போன்ற நிலைகள் வந்து விடுகின்றது.

நமக்குள் வளர்ந்த அறிவினை… “நாமும் நல்ல முறையில் வளர்க்க முடியாது” தடைப்படுத்தும் நிலையாக ஆகிவிடுகின்றது.

பூரண நிலா சிறுகச் சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றி வரக்கூடிய நிலையாகி விடுகின்றது அப்படிச் செயலற்றதாக ஆகிவிட்டால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

ஆகவே… இந்த உடலில் முழுமையான ஒளியாக மாற்றும் நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குப் பயிற்சி கொடுத்து… மகரிஷிகள் ஆற்றலை அருள் வாக்குகளாகக் கொடுக்கின்றோம்

பூரண நிலா போன்று நமது உயிர் என்றும் பரிபூரண நிலையை அடைவதே மனிதனின் முதிர்வு நிலை.
1.இந்தச் சந்தர்ப்பதை இழந்தால்
2.இந்த உடலில் படும் துன்பத்தைக் காட்டிலும் எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி… நல் உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்
1.அதற்குத்தான் நமது தியானமே தவிர
2.சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
3.அருள் ஞான சொத்தை அந்தப் பேரின்பச் சொத்தைத் தான் நாம் தேட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது... அதைப் பயன்படுத்தும் முறை முக்கியமானது

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது...! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்...” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு...!

அதைப் போல் சமமான உணர்வாக... நல்லெண்ணச் சுவாசமாக... உயிரான ஈசனுடன் ஒன்றி... ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே…
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து….”

(ஏனென்றால் நடக்காத... முடியாத... நடைபெறாத ஆசைகளை... முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்...!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை... நடக்க வேண்டியதை... எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை...!”
1.வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது…
2.விவேகமும் ஞானமும் சாந்தமும் அவசியம் தேவை.

February 12, 2024

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் ஆன்மாக்களையும் நண்பர்கள் உறவினர்கள் ஆன்மாக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் கவர்ந்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.
1.காரணம் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால்
2.அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ள முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளி அலைகள் நிலைத்திருக்கும்.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கார்த்திகேயா என்றாலே ஒளி… அனைத்தையும் அறிந்து கொண்ட நிலை. பல கோடிச்ச் சரீரங்களில் வந்த தீமைகளை நீக்கி மனித உடல் பெற்றது.

அத்தகைய ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளினை மாற்றி உணர்வினை ஒளியாகப் பெறச் செய்யும் முறைதான் இப்பொழுது துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி.

மூதாதையர்கள் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அவருடைய உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலையாக நிற்கும்.

அவர்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்து விட்டால்
1.அவர்கள் விண் சென்ற உணர்வை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது
2.அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் பதிவான சில தீமையான உணர்வுகளை மாற்றி விடலாம்.

அதாவது… அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட
1.வேதனையோ வெறுப்போ மற்ற நோய்களோ அதிகமாக இருப்பினும்
2.அதன் தொடர் வரிசையில் நமக்குள் வந்திருக்கும் இந்த நோய்களை மாற்றிவிடலாம்.

அல்லது அவர்கள் வாழ்க்கையில் சாப அலைகள் விடப்பட்டிருந்து… அந்த அலைகள் உடலில் இருந்தால் அந்த சாபச் அலைகள் நம்மையும் சாடும். ஆனால் அவர்களை விண் செலுத்தி விட்டால் அதன் உணர்வின் துணை கொண்டு அவர் வழியில் வந்த சாப உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கலாம்.

ஆகவே… யார் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த ஆன்மாக்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். விண் செலுத்தி அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அவர் உடலில் உள்ள நோய்களோ மற்றதுகளோ நமக்குள் வளராது தடுக்க முடியும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… எப்படியும் நாம் பிறருடன் பழகத் தான் செய்கின்றோம். அவருடைய உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமலே வளர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் கரைப்பதற்கு… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பௌர்ணமி அன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்து உடல் பெறற நஞ்சுகளைக் கரைக்கப் பழகிக் கொடுக்கின்றோம்.

அப்படிச் செய்து பழகிவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறைப்படி செய்யப்படும் பொழுது
1.இந்த உடலுக்குப் பின் நாம் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடையலாம்.
2.இல்லையென்றால் மற்றவருடைய பழகிய உணர்வுகளில் புவியின் ஈர்ப்புக்குள் நம்மை அழைத்து வந்துவிடும்

இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்வதற்குப் “பௌர்ணமி தியானத்தைச் சீராக நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்…”

பிடர்தல்

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு...” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு - “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்...!’

“பிடர்தல்...” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.

சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.

சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதைப் போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை
2.ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால்
3.அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.

குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்… நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.

அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.

இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள…
1.காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச்
2.சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

February 11, 2024

“எம்முடைய உபதேசத்தைக் கேட்க விரும்புவோருக்கு” அதனின் பலன் நிச்சயம் கிடைக்கும்

ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்...!

இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.

ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்... ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்... நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.

உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.

எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.

உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.

ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.

அதைப் போன்று தான்... நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.

இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.

அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.

1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை

ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.

1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை...!

அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.

இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது...” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.

ஏழுமலையான்

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களாப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்...? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்... கண்ணில்லையா...? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான்… என்று இப்பொழுது புரிந்ததா...? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.

கடவுள் என்பது யார் என்று புரிந்ததா...?

February 10, 2024

நமக்குத் தெரியாமலே நம்மை இயக்கும் சில சக்திகள்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம் ஒரு அதிர்ச்சியான செயலை… “ஓடும் ரயிலிலே கொள்ளையடித்தான்…” என்று கேள்விப்படுகிறோம். அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

அந்தப் பதிவு என்ன செய்கின்றது...?

அடுத்து ஒரு சந்தர்ப்பம் நாம் ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்… நாம் பதிவு செய்த்து அதிர்வின் தன்மை ஆன உடனே அச்சுறுத்தும் உணர்வாக வருகிறது.

“கொள்ளையன் இங்கே வந்து விடுவானோ…!” என்ற இந்த உணர்வு அச்சுறுத்தினால்… (கொள்ளையடிப்பவன் மற்ற பெட்டிகளுக்கு அநேகமாகச் செல்லவில்லை என்றாலும்)
1.இங்கிருந்து வெளிப்படும் அச்சுறுத்தும் உணர்வலைகள் படரப்படும் போது
2.கொள்ளை அடிப்பவன் இந்தப் பெட்டியிலேயே வந்து கொள்ளையடிப்பான்… இதைப் பார்க்கலாம்.

இதே போன்று பேருந்துகளில் பயணம் செய்யப்படும் பொழுது “விபத்தில் சிக்கி விடுவோமோ…” என்று அதிர்ச்சி ஆகி அந்தப் பேருந்தின் டிரைவரை எண்ணினால்
1.இந்த உணர்வலைகள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு அவன் வண்டியைத் திருப்பி அங்கே விபத்து ஆகும்.
2.இவன் எண்ணியபடி அந்த வண்டியை அணைத்து… இவன் வண்டிக்குள் இருந்தாலும் இவனை உராய்ந்து அடிபடும் நிலை வரும்.
3.ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
4.இவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப டிரைவரையும் இயக்குகின்றது தன்னையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… நம்மை அறியாது இயக்கும் உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

ஒரு கம்ப்யூட்டரில் ரிமோட் செய்து… அதிலே ஆணையிடும் அழுத்தத்திற்கொப்ப இயக்கச் சக்தியாக எப்படிக் கொண்டு வருகின்றார்களோ அது போன்று
1.நமது உயிரும் ஒரு எலக்ட்ரிக்காக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை (அழுத்தத்திற்கொப்ப) அது எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் வழி தான் இந்த உடலையே அது இயக்குகின்றது என்பதை
4.இன்று நாம் விஞ்ஞான அறிவில் இருப்பதால் அந்த வழிப்படி உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? நம்மை அறியாது தவறுகள் எப்படி வருகிறது…? நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி நோய்க்கு அழைத்துச் செல்கின்றது…? நோயின் தன்மை இந்த உடலை எப்படி நலியச் செய்கின்றது…? என்ற நிலைகளை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றார்கள்.

தெளிவாக்கினாலும் அஞ்ஞான வாழ்க்கையே இன்று வாழ்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அருள் ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வை நுகராது அதை வளர்த்திடாது தணியப்படும் போது… அஞ்ஞான வாழ்க்கையே பக்தி மார்க்கத்திலும் வளர்கின்றது.

ஆலயத்திற்குள் சென்றால் அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?

தீபத்தால் வெளிச்சத்தைக் காட்டிய பின்…
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது மறைந்திருக்கும் பொருள்கள் தெரிகின்றது. அந்த வெளிச்சத்திலே தெய்வத்தைப் பார்க்கின்றோம். “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்” என்று காட்டப்படுகிறது… இது துவைதம்.

தெய்வச் சிலைகலாக உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாகப் படிக்கும் போது (மேலே சொன்ன மாதிரி) பத்திரிக்கையில் படிக்கும் பொழுது அந்த அசம்பாவிதங்களைக் கண்ட பின்… “உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ… அதே போல் அருள் உணர்வுகளை நமக்குள் நம்மை அறியாமலே தூண்டச் செய்வதற்கு” அன்றைய ஞானிகள் இவ்வாறு வழி காட்டிச் சென்றார்கள்.

கொள்ளையர்கள் வந்துவிடுவார்களோ என்ற உணர்ச்சியின் தன்மை “நாளை என்ன செய்வது…?” என்ற அச்சுறுத்தும் உணர்வுகளைத் தூண்டுகின்றது. அப்பொழுது நாம் பயந்தே வாழும் நிலை வருகின்றது.

வாகனங்களில் செல்லப்படும் பொழுது இந்த உணர்வுகளே அதிகமாகத் தோன்றி நாம் நுகரும் உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அது வீரிய உணர்வாக உணவாக ஊட்டி… அச்சுறுத்தும் அணுக்களாக நமக்குள் விளைந்து விடுகிறது.

அதனால் இந்த உடலை நலியச் செய்யும் உணர்வுகளாக ஆகி நல்ல உணர்வுகளை நாம் பறிகொடுத்து விடுகின்றோம். அவன் அங்கே பொருளைப் பறிகொடுத்தான்..
1.ஆனால் பத்திரிக்கையைப் படித்த பின் நுகர்ந்த உணர்வோ இங்கே நமக்குள் நோயாகி
2.இந்த உடலையே பறிகொடுக்கும் நிலையாக வந்து விடுகிறது

இதையெல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டி அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் உணர்வின் துணை கொண்டு… பத்திரிக்கையைப் படித்த அடுத்த கணமே அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவாந்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பின்… நாளை நடப்பதெல்லாம் மகரிஷிகள் காட்டிய வழியில் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அதிர்ச்சியான உணர்வுகள் நமக்குள் புகாதபடி” தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இந்தத் தியானப் பயிற்சியைச் சீராகப் பயன்படுத்தி அருள் வழியில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றித் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றினால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

தீமை என்ற உணர்வுகள் அதிகமாகப் பற்றிவிட்டால் அந்தப் பற்றின் தன்மை கொண்டு மீண்டும் பிறவியின் நிலைக்கே வருகின்றோம். நோயின் உணர்வுகளை நுகர்ந்தால் இந்த மனித உருவை அழிக்கத் தான் அது உதவும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் ஆற்றலை உங்களில் பெருக்கி… அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை அகற்றி அருள் ஞானத்துடன் நீங்கள் வளர்ந்து
3.வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி…
4.அருள் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும் என்று உங்களை வேண்டிப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

சித்தாதி சித்தன்

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே... காப்பவளும் அவளே... அழிப்பவளும் அவளே...!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்... சக்தியின் சுயநிலை... அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்...!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி... காத்து.. அழிக்கும்... நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா...?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்...?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்...?

இல்லையப்பா...!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து... தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா...?
1.தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும்
2.தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

அதாவது… “கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும்” என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல்
1.மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம்… அவர்கள் பெற்ற அருள் எல்லாம்… “ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ… அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்….”

இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது… அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்...!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

February 9, 2024

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.

சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.

அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…

ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”

நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”

அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.

இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.

ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.

இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?

வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.

அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?

நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.

அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.

இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.

இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.

தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.

இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது... அதனால் மடிந்து விட்டான்...! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல...!

பிறப்பும் இறப்பும் “இறைவன் இட்ட பிச்சை” என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது...! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை... மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக...!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து...
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்... ஈசன் அருளைப் பெற்றிடலாம்...! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்...!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்...” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா... எண்ணத்தின் சுற்றலிலே...! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா...?

February 8, 2024

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.

வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?

1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.

மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”

சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.

யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!

கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது

அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.

ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.

பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.

அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.

1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.

ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்... விதை விதைத்தவன் விதையறுப்பான்...! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது “மனிதனின் விதி முறை...!”

வினையின் எண்ணத்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது… வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள “ஒரு உடலை” எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை “எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா….”
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்…
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது… என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்... வினையின் நெஞ்சம் உள்ளவன்...! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா...?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை...” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்...!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை...?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது...
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே...!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே... அவன் எண்ணத்தில்... அவன் விடும் சுவாசத்தில்...
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில்… “ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்...!” என்பது.

February 7, 2024

“தாய் சக்தி.. மனைவி சக்தி...” என்ற ரிஷிபத்தினி சக்தியின் கலப்பு

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்... கோடி வீட்டுப் புருஷன்...!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு... அவர் வேறு...! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்...!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி... வெங்கடேஸ்வரன்... ஸ்ரீனிவாசன்...!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே... நதி மூலம் பார்க்காதே...! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி... சித்தன் முனிவனாகி... பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய... வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து... நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற... பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி.. மனைவி சக்தி... என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்...!

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”

மனிதன் பல கோடிச் சரீரங்களில் தேர்ந்தெடுத்த ஆறாவது அறிவாகப் பெற்ற நிலையில் பிறிதொரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அறிவை அப்போதே அது மறைத்து விடுகின்றது.

1.அந்த வேதனையை நாம் துடைக்க மறுத்து விட்டால்… துடைக்கத் தவறிவிட்டால்…
2.அது சிறுகச் சிறுக நமக்குள் வளரத் தொடங்கி தேய்பிறையாக
3.அமாவாசைக்கு பின் சந்திரன் குறைவது போன்று குறைந்துவிடும் (கண்ணுக்கு புலப்படாது.

ஆகவே உயிரின் தன்மை கொண்டு ஒளி ஒடுங்கி விடுகின்றது மீண்டும் நல்ல உணர்வை நுகர்ந்தால் தான் நல்ல அறிவாகக் (பிரகாசத்தை) காண முடியும்.

உயிரணு தோன்றிய பின் மனிதனாக வரும் பொழுது பூரண சந்திரனைப் போன்று அனைத்தையும் அறிந்திடும் அறிவாகப் பெறுகின்றோம். ஆனாலும்
1.அந்த அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு பிறிதொரு கஷ்டங்களைக் கேட்டறிந்தால்
2.சிறுகச் சிறுக நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும் நஞ்சு கலந்து நாம் தேய்பிறையாக மாறிவிடுகின்றோம்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

பௌர்ணமியைப் போன்று பூரண ஒளி பெற்ற துருவ நட்சத்திரம் பேரருள் பேரொளியாக நம் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதைப் பின்பற்றிய அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைப் பெறக்கூடிய தகுதிக்கே உங்களுக்குள் இப்போது உபதேசிக்கப்படுகின்றது. உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோம்.
1.யாரெல்லாம் இதை மீண்டும் “கூர்மையாக நினைவுக்குக் கொண்டு வருகின்றார்களோ”
2.”துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்கின்றார்களோ…” அவர்களே அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
3.அவ்வாறு தகுதி பெற்ற பின்… தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்கும் அதே போன்று கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று
4..யாரெல்லாம் இருவரும் ஒன்றிச் செயல்படுகின்றனரோ அவரே தீமைகளை வெல்லும் அருள் சக்தி பெற்றவர்களாகின்றார்கள்.
5.விண்ணின் நிலைகளை யாரெல்லாம் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ அவரே பிறவில்லா நிலை அடைகின்றனர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்காகத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் கிழக்கே பார்த்து அதை விண்ணை நோக்கி எடுக்கும்படி வைத்தனர் அன்றைய ஞானியர்.

இன்று நாம் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து வந்திருந்தாலும் அன்பு பரிவு பாசம் என்று பேரன்பு கொண்ட நிலையில்… பிறருடைய துயரத்தைக் கவர்ந்த பின் அதைத் துடைக்கத் தவறினால்… துடைக்க மறுத்தால்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் தீயவினைகளாகச் சேர்ந்து விடுகின்றது.

1.ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் “அதை நாம் துடைக்க மறுத்து விடுவோம்…” இருக்கட்டும்… அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்போம்.
2,ஒருவர் மீது பாசமாக இருந்து ஏதாவது ஆகிவிட்டால்… அவன் படும் வேதனையைப் பார்த்து
3.அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே… ஆகிவிட்டதே… என்று தான் சொல்வார்கள்… “வேதனைப்பட்டதைத் துடைக்க மறுப்பார்கள்…”

அவரிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள் அதைத் துடைக்க மறுப்பார்கள்…!
1.மறுத்து விட்டால் அல்லது மறந்து விட்டால் அது தீமையின் உணர்வாக விளையத் தொடங்கும்
2.மனிதனின் வளர்ச்சியைத் நம்மைத் தேய்பிறையாக மாற்றிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்கு அருகில் வேம்பை வைத்துக் காட்டினார்கள். அதன் அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் உருவான நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றியவன் துருவ மகரிஷி… அரசைப் போன்று அவன் ஓங்கி வளர்ந்தவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்
1.ஆகவே அதனின்று வரும் அருள் ஒளியின் தன்மை எடுத்தால் எத்தகைய நஞ்சின் தன்மையையும் அது பிளந்து விடும்
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் தகுதி நாம் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான உணர்வை இருவருமே எடுத்து இணைத்துக் கொண்டால்… ஒளியின் அணுக்களாக மாற்றி விட்டால்… நஞ்சினை வென்றிடும் அணுவாக அது விளைகிறது.

அந்த உணர்வின் ஒளியைப் பெருக்க முடியும் அந்தத் தகுதியை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதற்கு தான் விநாயகர் தத்துவமாகக் கொடுத்தது.

அந்தத் தத்துவப் பிராகரம்… சாதாரண மனிதனும் தன் வாழ்க்கையில் தன்னை அறிதல் என்ற நிலைக்குத் தனக்குள் வரும் தீமைகளை… மேல் அழுக்கைப் போக்குவது போல ஆன்மாவில் படும் அழுக்கைப் போக்கி… தன் உடலுக்குள் ஜீவான்மாவை மறைத்திருக்கும் தீமையின் அழுக்குகளையும் நீக்க முடியும்.

ஆகவே அருவ நிலைகள் செயல்படுவதை அறிந்து கொள்ள விநாயகரை உற்றுப் பார்க்கப்படும் போது (அது துவைதம்) ஞானிகள் காட்டிய காவியத்தின் பிரகாரம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அங்கே காட்டப்பட்டிருக்கும் உண்மைப் பொருள்களை நாம் உணர்ந்து அதன் வழியில் நாம் நுகர்ந்தால் அத்வைதம்
2.இந்த உணர்வுகள் உயிரிலே பட்டு உடலில் விளைந்து மீண்டும் நுகந்தறியப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அதன் வழி நாம் விண் சொல்லும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைய அது உதவும்.

February 6, 2024

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.

உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.

“சைவ சித்தாந்தம்” - தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.

“வேதாந்தம்” - உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.

ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.

ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.

உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.

இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.

சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.

காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”

கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!

வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.

இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.

உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.