ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2018

“வெறும் சொல்லாக…” நான் சொல்வதாக யாரும் எண்ணாதீர்கள்…! மெய் ஞானம் பெறுவதை நீங்கள் உணரவும் முடியும்… பார்க்கவும் முடியும்…!

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரிக்கும் போது அது உங்கள் ஆன்மாவின் முன்னாடி நின்று தீமைகளை அகற்றும் நிலையாக மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக உருப்பெறுகின்றது. ஆன்மா சுத்தமாகின்றது.

இதையே கூட்டமைப்பாக அனைவரும் ஒன்று கூடி அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் போது பூமியில் தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.

அப்பொழுது இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

January 28, 2018

“அகஸ்தியன் ரூபத்தையும்” அவர் கண்ட பேருண்மைகளையும் காணலாம்

அன்று அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையும் இன்று அவர்கள் எடுத்த நிலைகளில் இதே போன்றுதான் தான் கண்டுணர்ந்த உணர்வும்

மனிதனுக்குகந்த உணவு வகைகளை தாவர இனங்களை எடுத்து “சோளம் கம்பு ராகி பயிர்களும் கொய்யா…,” போன்ற கனி வர்க்கங்களையும் அகஸ்தியனால் அன்று உருவாக்கப்பட்டது.

காடுகளில் இதெல்லாம் நிறைய உண்டு.

 தான் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் எதை எதையெல்லாம்  இணைத்து உண்மைகளைத் தனக்குள் உணர்ந்தான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

முதலில் துருவன் என்ற நிலைகள் வரப்போகும் போது
1.அந்தப் புவியின் நிலைகளை எப்படி வளர்கின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி வளர்கின்றது…?
3.இயற்கையிலே அகஸ்தியன் இணைத்துக் காட்டுகின்றான்.

அகஸ்தியர் உடலிலே விளைந்ததும் அவன் இணைத்த ரூபங்களையும் பார்க்கின்றேன். அந்த அலைகளை… எப்படி அந்த உணர்ச்சிகளை இயக்கி அகஸ்தியர் காணுகின்றார் என்ற நிலையும் பார்க்க முடிந்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று அந்த அலைகளை நுகரும்படிச் செய்து நேரடியாகவே காண்பிக்கின்றார்.

நான் இங்கே இப்பொழுது சொல்வது போல் இதே மாதிரி சொல்லாகச் சொல்லி இந்த உணர்வுகளை இயக்கச் செய்து அதன் வழியில் சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டில் உள்ள உணர்வுகளை எடுத்துப் பார்க்கும் போது
1.அகஸ்தியருடைய ரூபமும்
2.அவர் கண்டுணர்ந்த உணர்வும்
3.அந்த உணர்வின் ஒலிகளையும் நான் காண முடிந்தது.

அகஸ்தியர் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்

ஆனால் நீங்கள் எதை எண்ணிக் கொண்டு இங்கே வருகின்றீர்கள்?

சாமியிடம் கேட்டுத் தலை வலி நீங்கினால் போதும். தொழில் வந்தால் போதும் என்ற நிலையில் தான் வருகின்றீர்கள்.

அந்த மெய் ஞானி உணர்வுகளை நுகர்ந்தால் வந்தால் இந்தத் தீமைகளை எல்லாம் அகற்றிவிடும். மெய்ப் பொருளை வளர்க்க முடியும். தீமையற்ற நிலையாக வாழ முடியும் என்று சொல்கிறோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை. இந்த உடல் நிலையானதில்லை. ஆனால் இந்த உயிர் என்றும் நிலையானது.

அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….! 

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

இரவில் எருக்கஞ்செடி மின்னுவதைப் பார்த்துப் “பேயைக் கண்டேன்…!” என்று சொன்னாலும் அது மெய்யா…?

ஒரு எருக்கஞ்செடி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

இரவில் நிலா வெளிச்சம் படப்படும் பொழுது அல்லது நிலா வெளிச்சம் இல்லை என்றாலும் இருட்டிலே கூட அதில் இருக்கக்கூடிய கோடுகள் பளீர் பளீர் என்று மின்னும்.

அதைப் பார்க்கும் ஒருவன் நான் “பேயைப் பார்த்தேன்…!” என்று அடுத்தவனிடம் சொல்லுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனும் இதைப் பதிவு செய்கின்றான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தருகிறதென்றால் அங்கே போனபின் இவன் காண்பித்த கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கஞ் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.“அதோ பார் பேய் ஆடுகிறது பார்…!” என்று இவனுக்கு
3.முதலாமவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகளை இவன் பார்க்கப்படும் பொழுது “முதலாமவன் பார்த்தது எருக்கஞ் செடி…!” ஆனால் அவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் பொழுது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். அவன் வேறு பக்கம் போகின்றான்.

இதையே அஞ்சிய உணர்வுகள் இவனுக்குள் வளர்த்ததை தன் நண்பனிடம் சொல்லும் பொழுது அந்த நண்பன் போகும் பொழுது
1,அவன் சொன்னது உண்மை என்று
2.அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்து
3.அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது. அந்தப் உணர்வின் தன்மை இவனுக்குள் இங்கே ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

அதனால் தான் கீதையிலே “நீ எதை எண்ணுகிறாயோ…, அதுவாகின்றாய்…!” என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் மீண்டும் மீண்டும் அந்த பயந்த உணர்வுகளை எண்ணும் பொழுது பயத்தின் உணர்வுகளையே உருவாக்குகின்றது. அதுவாகவே ஆகின்றோம்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலின் தன்மை அவனுக்குள் பெருகினாலும் அவன் பூமியின் துருவப் பகுதியை உற்று நோக்கி துருவத்தின் வழியாகப் புவிக்குள் வருவதை அந்த உண்மையின் உணர்வின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாய் கருவில் இருக்கும் பொழுது அவன் பெற்ற பூர்வ புண்ணியத்தால் உண்மை எது? அதை அறிய வேண்டும் என்று விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

முதலில் சொன்ன மாதிரி எருக்கஞ்செடியைப் பார்த்துப் பயந்த நிலைகள் வரப்படும் பொழுது அப்படி எண்ணி அறிகின்றோம்.

விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் அவர்கள் கணக்கின் பிரகாரம் நம் பூமி தட்டை என்றார்கள். ஆனால் அக்காலத்தில் உள்ளவர்கள் இது தான் உண்மை என்றார்கள்.

பின்னாடி அதை மறுக்கப்படும் பொழுது அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றார்கள். அவர்கள் எல்லாம் பூமி உருண்டை என்றார்கள்.

அவருக்கு பின் வந்தவர்கள் பூமி முட்டை வடிவம் என்றார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் பதிவு செய்து இவன் கணக்குக்குக் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது பூமியின் இயற்கையை அறிகின்றான்.

அந்த நுண்ணிய அலையின் அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவு வளர்கின்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடைந்தது இப்படித்தான்…! இவன் கண்டுணர்ந்த உணர்வின் இயக்கம் மனிதனுக்கு எப்படி இயக்க வேண்டும் என்று விஞ்ஞான அறிவைக் காணுகின்றான்.

ஆனால் மெய் ஞானியான அகஸ்தியனுடைய நிலைகள் இளமைப் பருவத்தில் வளர்ந்தது அந்த மெய் உணர்வைக் காணும் நிலைகளே வருகின்றது. அவன் மெய் ஞான அறிவைக் கொண்டு செல்கின்றான்.

1.எப்படி அணுவானது கோளானது நட்சத்திரமானது சூரியனானது என்றும்
2.பின் சூரியன் ஆனபின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மையும்
3.மற்ற கல்லையும் பாறையும் மற்ற தாவர இனங்களையும் உருவாக்க உதவியது என்றும்
4,அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது என்றும் அறிகின்றான் அகஸ்தியன் அகஸ்தியன் துருவனாகி துருவத்தின் நிலைகளைக் காணுகின்றான்.

அதாவது துருவப் பகுதியில் வருவதையும் வானியலின் தத்துவத்தை அதை அறியப்படும் பொழுது “துருவன்…” என்று காரணப் பெயரைப் பின் வந்த ஞானிகள் வைக்கின்றார்கள்.

உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் மெய்யைக் காண முடியும்.

இந்த மாய வாழ்விலிருந்து விடுபட்டு நிலைத்த வாழ்க்கையாக என்றுமே விண்ணிலே வாழலாம்.

விண் செல்வதைக் காட்டினார் குருநாதர்

எமது குருநாதர் தன் உடலை விட்டு வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அவர் உயிராத்மா எப்படி ஒளியானது
2.இந்த உடல் எப்படி ஒளியாக மாறியது என்பதை நேரடியாகக் காட்டினார்.

அதை யாம் (ஞானகுரு) கண்டுணர்ந்தோம்.

அதை அவர் நேரடியாகக் காட்டிய முறை கொண்டு யாம் கற்றுணர்ந்ததை நீகளும் பெறவேண்டும் என்ற ஆசையினாலே தான் இதைச் சொல்கின்றோம்.

எமது குருநாதர் அவர் எப்படி அந்த ஒளியின் தன்மை பெற்றாரோ அந்தக் குருவின் தன்மை எல்லோருடைய உள்ளங்களிலும் வளர்ந்து உங்களுக்குள் இருள் நீங்கி ஒளி பெறும் அந்த சக்தி பெறவேண்டும் என்று வேண்டுகின்றேன்.

உங்கள் சங்கடங்கள் நீங்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து உங்களுடைய துன்பத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலிலே அனைத்தையும் ஒளியாக மாற்றி உங்கள் பேச்சும் மூச்சும் புனிதம் பெற்று அதைக் கேட்போர் துன்பங்களும் நீங்கி உயர்ந்த எண்ணங்கள் தோற்றுவிக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஆகவே மெய் ஒளியை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பௌர்ணமி அன்று கூட்டுத் தியானங்கள் அமைத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யுங்கள்.

1.இப்படி அவர்களை இணைக்கச் செய்தால்
2.அவர்கள் முன் செல்ல நாம் பின்னால் செல்ல முடியும்.
3.கூட்டுத் தியானத்தில் நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உந்திச் செலுத்தப்படும் பொழுது எளிதில் விண் செல்கின்றார்கள்.

மூதாதையர்கள் நமக்காக இன்னல்பட்டுத் துன்பப்பட்ட அந்த உயிராத்மாக்களை இன்னொரு உடல் பெறாத நிலைகளை நாம் தடுப்பதற்கும், அந்த மெய் ஒளியை அவர்கள் பெறச் செய்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவருக்கும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாசி என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
2.நல் வழி காட்டும் சக்தியாக உங்களுக்குள் அமைந்து
3.மகரிஷிகளின் அருள் ஒளி பெறும் சக்தியாக வளர வேண்டும் என்றும்,
4.”அதுவே குருவாக நின்று...!” வளரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

"இராகவேந்திர சாமிகள்" விண் சென்ற நிலைகள்

இராகவேந்திர சுவாமிகளை எடுத்துக் கொண்டால் பக்தியினுடைய நிலைகளில் அவருடைய உணர்வின் சக்தி கொண்டு நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். நல்ல நிலைகளைச் செயல்படுத்தினார்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினார். எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் ராகவேந்திர சுவாமிகள் தன் குடும்பத்தில் தன் மனைவியைத் துறந்து அவரைச் சங்கடப்படுத்திவிட்டுச் சென்றார்.

புவியின் நிலைகள் கொண்டு உயர்ந்த நிலைகளைச் செயல்படுத்தினாலும், மனைவியை விட்டுத் தான் தனித்துப் பெறவெண்டும் என்று சென்றார்.

அதாவது, மனைவியின் சக்தியைத் தன்னுடன் இணைக்காத நிலைகள் கொண்டு தான் இறைவைனின் சக்தியைப் பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று எண்ணினாரே தவிர பக்தியின் மார்க்கத்தில் பிறரை எண்ணவில்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது அந்த ஞானியின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். தன்னை அணுகி உள்ளவரை மறந்துவிட்டார்.

அதனுடைய நிலையை அடைந்த அந்த ஆத்மா தான் முக்தி அடைய வேண்டுமென்று ஜாதக ரீதியில் தன் ஆயுளை நிர்ணயித்து இந்தக் காலத்தில் என் உயிர் போய்விடும்.

அதற்குள் நான் எண்ணிக் கொண்டிருக்கும் அந்த ஆண்டவனின் ராம நாமத்தைப் பாடி உடலின் தன்மையிலிருந்து மெய் ஒளி பெறவேண்டும் என்று அவர் ஒரு குகைக்குள் அடங்கி உணர்வின் சக்தி கொண்டு மூடச் செய்து மூச்சுத் திணறி அதாவது நோய்வாய்ப்படாமலேயே நான் சென்றுவிட்டால் இறைவனை அடைந்துவிடுவேன் என்ற ஏக்கத்தில் அதே ஏக்கத்துடன் இந்த உயிராத்மா சமாதி அடைந்தது.

ஜீவ சமாதி என்று அதற்குப் பெயர் வைத்தனர்.

ஆனால் மனைவியினுடைய நிலையோ தன்னைவிட்டுச் சென்றுவிட்டாரே, நாங்கள் என்ன செய்வோம்? என்று தவித்த நிலைகளில் அவர் அல்லல்படும் நிலைகளில் அவர் எண்ணிய நிலைகள் கை கூடாதபடி அது இழுத்து வைத்துக் கொள்கின்றது.

இராகவேந்திர சுவாமிகள் மெய் ஒளியைப் பெறவேண்டும் என்று எண்ணினார்.

எந்தக் கிருஷ்ண பக்தியினுடைய நிலைகளில் கீதையைத் தனக்குள் வடித்துக் கொண்டாரோ அந்தப் பிரம்மத்தினுடைய நிலைகளில் காயத்ரியினுடைய தன்மைகள் கொண்டு அதைப் பெறவேண்டுமென்று தான் எடுத்துக் கொண்ட படைத்த உணர்வின் தன்மை கொண்டு அவர் உடலின் தன்மை சென்றாலும் அவருடைய ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் ராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெறமுடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக்கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

அரசனுக்கும் டிமிக்கி கொடுத்துத்தான் தான் கண்ட மெய் உணர்வுகளைக் கொடுத்தார்கள் மகரிஷிகள்...!

விநாயகருக்கு அருகம்புல்லைப் போடுகின்றோம். அடுத்து இலை செடிகளைப் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து சாப்பிடுகின்றோம்.

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள்.

விநாயக சதுர்த்தி அன்று களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும் மற்றவைகளும் வைத்து பூஜிக்கின்றோம். நாம் முன் சேர்த்துக் கொண்ட வினையெல்லாம் கரைப்பதற்காக வேண்டி விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி அந்தக் கெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான் இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

கொழுக்கட்டை அவனுக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால் எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான் புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

கல்யாணம் ஆகவேண்டும் என்றால் எருக்கண் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும் அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால் கொடுப்பார் என்பார்கள்.

அர்சையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? அதாவது ஸ்தல விருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு அரசும் வேம்பும் விநாயகனுக்கு வைத்தார்கள்.

இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.

இந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம். கஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கின்றோம். கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன் மாரி…” அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது.

மாரியம்மன் இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்கினிச் சட்டி வைத்திருக்கிறார்கள்? நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதில் இருக்கக்கூடிய விஷத் தன்மையை நீக்கும்.

மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தல விருட்சம் கசப்பு. நெருப்பிலே போட்டுக் கசப்பை நீக்கு என்று பொருள்.

இந்த விநாயகருக்கு அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள். கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து அந்த அரசின் நிலைகளில் நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன் நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது, நாம் புல்லைத் தின்றோம்இலை செடிகளைத் தின்றோம்இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து நமக்கு வேண்டியதைப் படைத்து இந்தச் சரீரத்தைப் பெற்றோம் என்ற இந்த உண்மையை உணர்த்திய அகஸ்தியரை நாம் எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மாரியம்மன் கோவிலில் காட்டியபடி கசப்பின் நிலைகளை நாம் அக்கினியில் போட்டுப் பொசுக்கியது போல் தீமைகளை இப்படிப் போசுக்கச் சொன்னார்கள்.

ஏனென்றால் மெய்ஞானிகள் இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கி விண் சென்றார்கள். அவர்களின் உணர்வை நமக்குள் செலுத்தி வாழ்க்கையொல் வந்த கசப்பைச் சிறுக்கச் செய்தனர் ஞானிகள்.

அரசைப் போன்று அந்த உயர்ந்த எண்ணங்களை மெய் ஞானி எப்படி வளர்த்தானோ தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த அரசாக நமக்குள் ஆட்சி புரிய வேண்டும் என்றுதான் இந்த ஸ்தல விருட்சத்தை வைத்தார்கள்.

வாழ்க்கையில் நல்லவைகளைத் தான் எண்ணினோம். ஆனால் அறியாமல் அழுக்குகள் வந்தால் அந்த அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா.

யார் துடைக்கிறார்கள்? நினைக்கவில்லையே…!

1.கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக
2.அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து சாஸ்திரங்களை எழுதி வைத்து
3.நீ இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளடா...! என்றான்
4.அரசனையும் ஏமாற்றினான் நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி.

நாம் அதை விட்டுவிட்டோம்…!

அதை விட்டுவிட்டு உனக்கு அபிஷேகம் செய்தேன் என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தால் (நமக்குக் கொடுப்பான் என்று) அழுவதைத்தான் நம் உயிரான ஈசன் நமக்குள் படைப்பான்.

போக்கிரித்தனம் செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட என்ன செய்ய வேண்டும்...?

சந்தர்ப்பம் தெருவில் எத்தனையோ பேர் சண்டை போடுவதைப் பார்ப்போம். அதிலே போக்கிரியைப் பார்த்து இருப்போம். கடை வீதியில் அவன் ரௌடித்தனம் செய்து இருப்பான். அதைப் பதிவு செய்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகளெல்லாம் நமக்குள் வந்தவுடனே அந்த ரௌடித்தனம் செய்தவனைப் பார்த்து “இவனையெல்லாம் அடக்க வேண்டும்” என்று நினைத்து வைத்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகள் வரப்படும் போது அடுத்தாற்போல் சாதாரணமாக ஒருவன் ஏதாவது தப்பு செய்தால் நாம் என்ன சொல்வோம்?
1.“உன்னையெல்லாம் உதைத்தால் தான்டா சரி…!” என்று
2.அவன் (ரௌடியின்) உணர்வை இங்கே எடுத்து
3.இவனை உதைக்க வேண்டும் என்று வரும்.
4.தப்பு செய்பவனுக்குப் புத்தி சொல்வதை விட்டு விடுவோம்.

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே (போக்கிரியின்) உணர்வுகள் பதிந்தது மற்றவர்கள் தவறு செய்யப்போகும் போது அவன் தவறு செய்த இந்த உணர்வுகள் நம்மை இயக்கி இவனைக் குற்றவாளியாக ஆக்குகின்றது.

ஆனால் அவன் செய்த தவறைத் திருத்தும் உணர்வுகள் நமக்குள் வராது. இதைப் போன்ற நிலையில் இருந்து தான் தவறு வருகின்றது.

அதற்காகத்தான் ஞானிகள் “சதுர்த்தி…” என்று காட்டியுள்ளார்கள். காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் பார்த்த நிலைகளில் இந்த மாதிரி வினைகள் நமக்குள் வளராது அதைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். சதுர்த்தி என்றால் நிறுத்துதல் என்று பொருள்
1.நம் தெரு முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை வளர வேண்டும்.
3.நம் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
4.நம் தெரு ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.ஒற்றுமையாக வாழும் அந்தக் சக்தி இங்கு படர வேண்டும்.

ஒவ்வொரு ஊரில் இருக்கின்றவர்களும் இந்த மாதிரி எண்ணிப் பாருங்கள். அங்கு மத பேதங்களோ இன பேதங்களோ இது வராது.

ஒருவருக்கொருவர் வெறுப்பான உணர்வுகள் வளர்க்கப்படும் போது ஒருவனை “மிரட்டிப் பழகி விட்டான்” என்றால் அதே நிலை வரும்.

அப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “மிரட்டும் உணர்வுகள்” நமக்குள் வருகின்றது. அப்போது அதே செயலை “நாமும்…” செய்ய ஆரம்பிப்போம்.

ஒரு பாலுக்குள் காரம் பட்டால் காரத்தின் நிலைகள் செயல்படுவது போல நம்முடைய செயலும் உருவாகி விடும்.

ஆகையினாலே நாம் இதிலிருந்து நாம் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நாம் விண்ணுலகின் ஆற்றலை எடுத்து இங்கே பெற வேண்டும் என்று நாம் செலுத்த வேண்டும்.

நம் தெருவும் ஊரும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணா வேண்டும். அந்தக் குற்றவாளியை எண்ணவே வேண்டாம்.

1.ஊரில் வாழ்கின்றவர்கள் எல்லோரும் அந்த மகரிஷிகள் அருள்சக்தி பெற வேண்டும்.
2.அங்கே மகரிஷிகளின் அருள் சக்தியால் நல்ல எண்ணங்கள் வளர வேண்டும்.
3.ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று
நமக்குள் இதைத்தான் பதிவு செய்ய வேண்டும்.

தீமைகளைத் தடுத்து நிறுத்துதல் – சதுர்த்தி செய்ய வேண்டும். அந்த ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

January 27, 2018

மகரிஷிகளுடன் உங்களை எப்படி இணைக்கச் செய்கின்றோம்...?

நான் (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கிறேன் யாரும் என்று எண்ண வேண்டாம்.

1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அதனுடன்
2.ஒன்றோடு ஒன்று இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஆற்றல்மிக சக்தியை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் திரும்பத் திரும்ப சொல்வது.

ஏனென்றால் மனிதனுக்குள் 1008 குணங்கள் உண்டு. ஒரு குணத்தைப் பற்றிச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துடன் இன்னொரு குணம் சேரும் போது என்ன செய்கின்றது?

அந்த இன்னொரு குணத்துடன் சேர்ந்து இயக்கப்படும்போது
1.அதனுடன் எதை இணைத்து
2.அதை எப்படி அடக்குவது என்பதற்காக வேண்டித்தான்
3.அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்கள் குணங்கள் எல்லாவற்றிலும்
4.இணைத்து இணைத்துக் கொடுப்பது…!

 என்ன சாமி…! திரும்பத் திரும்ப அப்போதும் சொன்னார்… இப்போதும் சொல்கிறார்…! என்று எண்ணுவார்கள்.

மிளகாயை மாவிலே போட்டுச் சுட்டால் “வடை” ஒரு பதத்தில் ருசியாக இருக்கும். அதே மாவில் மிளகாய்க்குப் பதில் இனிப்பைப் போட்டு ஊற்றினால் “பனியாரம்” அது ஒரு பக்குவமாக ருசியாக இருக்கும்.

இதே மாதிரித் தான் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை எதிலே கொண்டு போய் இணைத்தாலும் அதைச் சுவையாக ஆக்கி அந்த உணர்வாக இயக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் உங்களை இயக்கினாலும் அந்த நேரம் ஞானிகளின் உணர்ச்சியை உங்களிடம் தூண்டச் செய்து அந்த உணர்வை உங்களுடன் இணைக்கப்படும் போது சந்தர்ப்பத்தால் வந்த தீமையான குணங்களை அடக்கும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.
               
அதற்குத்தான் இந்த விரிவுரைகளைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று இணைத்து இணைத்து அந்த உணர்வின் அணுக்களாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகும் போது ஒரு விஞ்ஞான அறிவோ அல்லது டெக்னிக்கலோ இதைச் சொல்லும் போது அது திரும்பத் திரும்பச் சொல்லி இது இதனுடன் சேர்க்கப்படும் போது இவ்வாறு ஆகும் என்பார்கள்.

ஒவ்வொரு பாட நிலைகளையும் கொடுக்கும் பொழுது செயின் (CHAIN) தொடர் போல ஒவ்வொன்றையும் இணைத்தே தான் சொல்வார்கள்.

இங்கே இயக்கப்படும் போது இதனுடைய சுழற்சி இப்படி வருகின்றது. இந்த இயக்கத்தின் நிலைகள் இது தடைப்பட்டால் மாற்றங்கள் இப்படி ஆகும் என்கின்ற வகையில் அந்தக் குறிப்பைப் பதிவு செய்து கொடுப்பார்கள்.

அதன் பின் தான் நாம் ஒரு இயந்திரத்தையோ அல்லது ஒரு செயலையோ முழுமையாக இயக்க முடிகின்றது.

1.இயக்கத்தை மட்டும் சொல்லிக் கொண்டே போனாலும்
2.இரண்டாவது அதைச் செயலாக்கப்படும் போது இதில் இன்னென்ன பிழைகள் என்ன வரும் என்று
3.இதைச் சொல்லாதபடி இயக்கத்தைப் பற்றிச் சொன்னால் தெரியாது…
4.அறியும் ஆற்றல் வராது.

இன்று பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா…! நேற்றுச் சொன்னதையே அடுத்த நாளும் திருப்பிச் சொல்லி அதனின் தொடர்ச்சியாகக் கொண்டு வருவார்கள்.

இன்ன செயலைச் செய்துவிட்டுத் திருடர்கள் தப்பி விட்டார்கள். அடுத்து அதற்காக இன்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்று பத்திரிக்கையில் நேற்று போட்டிருந்தார்கள் என்றால் அதனின் தொடர்ச்சியாக அதைச் சொல்லித்தான் அடுத்த கட்டம் என்ன ஆகின்றது என்று அடுத்த நாள் சொல்ல முடியும்.

அப்படி மறுபடியும் அதை இன்றைக்குச் சொல்லவில்லை என்றால் அன்றைக்கு இருந்ததை எப்படி நாம் தெரிந்து கொள்வது…? முடியாது.

ஆனாலும் சிலர் என்ன செய்கிறார்கள்… சொல்கிறார்கள்…?

இந்த உபதேசத்தை நேற்றுச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார் என்பார்கள். ஆனால் திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

1.அந்த மாதிரிப் பயனற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்
2.நீங்கள் மறந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுபடுத்தி
3.உங்களை மீண்டும் மீண்டும் எண்ணி எடுக்கும்படி செய்கின்றோம்.

பழனியில் ரசமணிச் சித்தருடன் ஏற்பட்ட சந்திப்பு (சந்தர்ப்பம்) தான் என்னை ஞானம் பெறச் செய்தது...!

குருநாதரைப் பற்றி எவ்வளவோ நாட்கள் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இருந்தாலும் அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் என்னைச் சந்தித்துள்ளார்.

அவரை நான் பித்தன் என்றே தான் எண்ணியிருந்தேன். எதைச் சொன்னாலும் அவரிடம் வெறுப்பு கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் எனது வழக்கமாக இருந்தது.

சந்தர்ப்பவசத்தால் என் மனைவி நோய்வாய்ப்பட்டு அதனால் அவர் வைத்தியத்திலேயும் மீள முடியாத நிலை ஏற்பட்ட இந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியிலேதான் எமது குருநாதர் என்னை அணுகி ரொம்பவும் நெருக்கமாக வந்தார்.

அது சமயம் எனது மனைவி இன்றோ நாளையோ என்ற நிலைகொண்டு இருக்கப்படும்போது என் மனைவியின் தகப்பானாரும் ஒரே பெண் குழந்தையாக இருந்ததனால் தன் பெண்ணின் நிலை மோசமாக இருக்கின்றது என்ற ஏக்கத்தில், அவருடைய உடலைவிட்டு ஜீவன் பிரிந்தது.

அதை அடக்கம் செய்துவிட்டு வந்தபின் என்னை குருநாதர் அணுகி, ரொம்பவும் அசிங்கமான பேச்சுக்களைப் பேசி நீ டீ... குடி...” என்ற மிகவும் நிர்பந்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

அதை மறுத்தவுடன் அவருடைய பேச்சும், ஏச்சும் மிகவும் கடினமாகவும் செவிக் கொண்டு கேட்க முடியாத வார்த்தைகள் கொண்டே என்னை ஏசிப் பேசினார்,

இருந்தாலும் அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி எடுத்தேன் முடியவில்லை,

நீடீகுடித்தால்தான் நீ  இதைவிட்டு நகர முடியும் என்று சொன்னார்.

அதன் அடிப்படையில்தான் நான் டீ கடைக்குச் சென்று டீ குடித்து விட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் இந்த எண்ணத்தில் அவர் கொடுத்த டீ யை வாங்கிக் குடித்தேன்.

இன்று டீ குடித்தாலும் உன்னை நான் விடமாட்டேன் என்று மிகவும் கடினமான நிலைகளில் மீண்டும் பேசத் தொடங்கினார்.

பின் டீ குடித்தபின் அவரை எப்படியும் ஊரை விட்டு எல்லை கடந்து அனுப்பிவிட்டு வரலாமென்று எண்ணி இருந்தேன்.

ஏனென்றால் மாமனார் அவர் இறந்த காலத்தில் எல்லோரும் வந்து குழுமி இருந்தார்கள். அவர்களும் என்னைப் பார்த்து ஏசிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இவரை எப்படியும் கடத்தி ஊருக்கு அப்பால் கொண்டு விட்டுவிட்டு வரலாம் என்று நான் அழைத்துச் சென்றேன்.

அங்கே பழனிக்கு பக்கம் பெரிய நாயகி அம்மன் கோவில் ஒன்று உண்டு. அதன் கீழ் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த தெப்பக்குளத்திற்குள் என்னை அழைத்துச் சென்றார்.

நான் விலகிச் செல்லலாம் என்று எண்ணும்போது அந்த தெப்பகுளத்திற்குள் என்னை அழைத்துச சென்று என் வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தையும் சொல்லி நான் பிறந்ததில் இருந்து அவரைச் சந்திக்கும் வரையிலும் இருந்த நிலைகளைச் சொல்லிவிட்டு மனைவியினுடைய நிலைகளை அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்.

அவர் அவ்வாறு சொல்லும்போது தான்பைத்தியம் இல்லைஎன்ற நிலையை நான் உணர முடிந்ததது.

அதன் பின் பெரும் உண்மைகளைப் பல சொன்னபின் விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும்...” கொடுத்து இதைக் கொண்டு சென்று உன் மனைவிக்குக் கொடு எழுந்து நடப்பார்…! என்று சொன்னார்.

ஏனென்றால் இடுப்பிற்கு கீழ் ஒரு விரலும் அசையவில்லை ஆஸ்பத்திரியிலேயே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

இன்றோ நாளையோ என்று மிகவும் கடினமாக நிலைகளில் என் மனைவி இருக்கப்படும்போது குருநாதர் சொன்ன மாதிரிச் செய்தேன்.

என் மனைவி எழுந்து ஒரு மாதத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

அவரிடம் இந்த நற்செய்தியைச் சொல்லலாம் என்று தேடிச் சென்றபோது அவரை எங்கேயும் காண முடியவில்லை. ஏனென்றால் பழனியிலேயே தான் அவர் சுற்றிக் கொண்டிருப்பார்.

பின் எப்படியும் இன்றைக்கு அவரிடம் சொல்லியாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாலாபுறமும் பார்த்து நடந்து கொண்டிருந்தேன்.

அப்படி இருக்கப்படும்போது திடீர் என்றுஎன்னை நீ தேடினாயா...?என்று முதுகு பக்கமாக இருந்து தட்டினார். எப்படி வந்தார்? என்ன செய்தார்? என்றே எனக்குத் தெரியாது.

அவர் தட்டி எழுப்பியபின் நான் திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு, “உங்ககிட்ட சொல்லலாம் என்று இருந்தேன்தேடினேன் காணவில்லை...!என்று சொன்னேன்.

உன் மனைவிநலமுடன் இருக்கிறாளா...?” என்று கேட்டார்.

நலமாக இருக்கிறார்என்று சொன்னேன். “ஆனால் வீட்டிற்கு வரவேயில்லைவெளீயில் இருந்துதான் இது நடக்கின்றது.

இப்பொழுது நான் சொல்வதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். “என்னை நீ நம்புகிறாயாநான் சொல்வதைக் கேட்கின்றாயா?“ என்று கேட்டார்.

நம்புகிறேன்கேட்கின்றேன்...என்று சொன்னேன்.

இதில் நீ மாற மாட்டாய் இல்லையா...? என்று கேட்டார்.

மாற மாட்டேன்என்று சொன்னேன். அதன்பின் அவர் என்னைப் பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்ற பின் அந்த பெரிய நாயகி அம்மனை வணங்கச் செய்தார்.

அதன்பின்கிரிவலம்வந்தோம்.

அங்கேதட்சிணாமூர்த்திசிலை இருக்கின்றது. இந்தச் சிலை எதற்காக வைத்ததிருக்கிறார்கள் என்று கேட்டார்.

எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன். இப்படி ஒவ்வொரு சிலையையும் காட்டி இந்தச் சிலையின் உட்பொருள் என்ன...? என்று எல்லாவற்றையும் காட்டிவிட்டு… “துர்க்கைஎன்ற சிலை சிலைக்குப் பக்கம் அழைத்து வந்தார். “இதனுடைய பொருள் என்ன?” என்று கேட்டார்.

தெரியவில்லைஎன்று சொன்னேன்.

எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்லுகின்றாய் என்று கேட்டுவிட்டு அதன்பின் வெளிய வந்தபின் இங்கே என் பெயரை வைத்து வேணு கோபால விநாயகர்என்று ஒன்று உண்டு. உனக்குத் தெரியுமா...? என்றார்.

எனக்குத் தெரியாது என்றேன்.

அங்கே அழைத்துச் சென்றார்.

அழைத்துச் சென்ற பின் அந்தச் சிலை மீது ஏறி உட்கார்ந்து கொண்டு இதனுடையஉட்பொருள்...என்ன என்று கேட்டார்.

தெரியாது...! என்று சொன்னேன் இதை மீறிப் பேசினால் பேசுவார் என்றே விலகி இருந்தேன்.

அப்புறம் தொடர்ந்து வரப்படும்போது ஒவ்வொரு சிலையையும் காட்டியதை காட்டியபின் எறும்புக்கு யார் சோறு போடுவது...? புழுவிற்கு யார் சோறு போடுவது...? குருவிக்கு யார் சோறு போடுவது...? இங்கே இவர்களுக்கு எல்லாம் யார் சோறு போடுகிறார்கள்...? எப்படி என்கிற நிலைகளிலே கேட்டுக் கொண்டே வந்தார்.

எல்லாம் கடவுள் தான் போடுகிறார் என்றே சொல்லிக் கொண்டுக இருந்தேன்.

கடவுள் யார்?” என்று கேள்வி கேட்டார்.

எனக்குத் தெரியாது என்றேன். “நான் பார்க்கவில்லை...!என்றேன்.

நீ பார்க்காதபடி கடவுள்” என்று எப்படி நீ சொல்லலாம்என்று கேள்வி கேட்டார். இப்படி விதண்டவாதங்கள் நடந்து ஓரளவிற்கு எல்லாம் சுற்றி வந்தபின் அந்த மனிதருடய எண்ணங்கள் எவ்வாறு செல்லுகின்றது என்ற நிலையை காட்டினார்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது...? பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படித் தோன்றியது...? பூமிக்குள் உயிரணு எப்படித் தோன்றியது...? பூமிக்குள் தாவர இனங்கள் எப்படித் தோன்றியது...? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.

தெரியாது... தெரியாது...என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். தெரியாது என்று சொல்கிறபோதெல்லாம் ஒவ்வொரு அடி கிடைக்கும். அடி கொடுத்துக் கொண்டே இருந்தார்.

தெரியாது என்றால் நீ எதற்காகக் கேட்கிறாய்...? என்பார்.

நான் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன் என்று சொன்னேன்.

தெரிந்து கொண்ட பின் அடுத்து நீ என்ன சொல்லப் போகின்றாய்...? என்ன செய்யப்போகின்றாய்...? இப்படியே கேட்டுக் கொண்டு என்னைப் பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டே இருந்தார்.

சூரியன் எப்படி அது உண்டானது...?” பிரபஞ்சத்திற்குள் எப்படி ஒரு உயிரணு உண்டானது...? உயிரணு உண்டான பின் என்ன செய்தது...? அன்றைய அரசர்கள் நான் தான் என்ற நிலைகளில் எப்படி இருந்தார்கள்?” அரசர்கள் பல மந்திரங்களை ஏன் செய்தார்கள்..? அரசர்கள் ஏன் கோவில்களைக் கட்டினார்கள்...? ஞானிகள் எப்படி உண்மையினுடைய நிலைகளை உணர்ந்தாரகள்...? அந்த ஞானிகள் சொன்னதை அரசர்கள் எப்படி தன்வசப்படுத்திக் கொண்டார்கள்...? என்றெல்லாம் வினாக்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி. நான் படிக்கவில்லையே என்று சொன்னேன்.

நீ புத்தகத்தைப் படிக்காததனால் தான் உன்னிடம் கேட்கிறேன். படித்திருந்தால் நீ என்னிடம் விதண்டவாதம் பேசுவாய் என்றார். எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இல்லையென்றால் கொச்சையான வார்த்தைகளால் பேசிக் கொண்டே இருந்தார்.

பேரண்டம் இருண்ட நிலைகளில் இருந்தது. விஷமான சக்தி கொண்டது. விஷமான சக்தியால் அணுக்கள் உண்டானது. அணுக்கள் ஒன்றாகச் சேர்த்து ஒரு கோளாக ஒரு பரம்பொருளாக உண்டானது. அதற்கு பெயர்பரம்பொருள்என்றார்.

கோளாக மாறி நட்சத்திரமாக மாறி பின் சூரியனாக மாறியது என்றார். அந்த சூரியனாக மாறியபின், அதனின்று வெளிப்படும் அணுக்கள் ஒரு பிரபஞ்ச நிலைகளாகி அதற்குள் கோள்கள் மீண்டும் உருவாகி பூமிக்குள் உயிரணு தோன்றியது என்றார்.

பூமிக்குள் தாவர இனங்கள் உற்பத்தியாகி தாவர இன மணத்தை ஒரு உயிரணுதான் சுவாசித்து அது உடல் பெற்று அதன் நிலைகள் கொண்டு இந்த உயிரணு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வளர்ந்து மனிதனானது என்று விளக்கினார்.

மனிதனான பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றித் துருவத்தை அடைந்து துருவ மாகரிஷியாகி துருவ நட்சத்திரமானார் அகஸ்தியர் என்றார் குருநாதர்.

அதனின்று வெளிப்பட்ட சக்தியினைக் கவர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து சுழன்று கொண்டு இருக்கிறார்கள் என்று  உணர்த்தினார்.

இதையெல்லாம் நீ காணுவது எப்போது...! நீ எப்போது காணப்போகின்றாய்...? எதை நீ எப்பொழுது அடைய போகின்றாய் என்று இப்படி வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.

இதையெல்லாம் நான் என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்? நான் கடும் தவம் இருக்க முடியாதே…! குழந்தை குட்டியோடு இருக்கின்றேன். மனைவி இப்பொழுது தான் எழுந்து வந்திருக்கிறது. தொழில் செய்து சாப்பாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆகையினால் இதையெல்லாம் நான் பார்க்கும் திறன் இல்லை. இந்த ஆயுள் பத்தாது என்று சொன்னேன்.

ஆயுள் பத்தாது என்று நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்ல சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

ஒருவன் திட்டினால் நீ கூர்ந்து கவனித்து இருடா. நான் பார்க்கிறேன் என்று சண்டைக்குப் போகிறாய். அவனை நினைக்கும்போதெல்லாம் உன் உடல் பதறுகின்றது

அதே மாதிரி நான் சொல்வதை நீ கேட்டுக் கொண்டே வா, அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா. அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும். அதை நீ திரும்பி எண்ணும்போது உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும், நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று சொன்னார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இதைத்தான் அன்றுகடவுளின் அவதாரம் பத்துஎன்றார்கள் ஞானிகள். கடவுளின் அவதாரம் என்றால் கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்வதற்கு பதில் உயிரைக் கடவுளாக வைத்துப் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று இந்த உயிர் தான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிகல்கியாகஎப்படிச் சென்றடைந்தது என்று தெளிவாகச் சொன்னார் குருநாதர்.