ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2017

ஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக” வாழ முடியும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

தீமைகளை நீக்கிடும் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கியபின்
1.ஒருவரை நீங்கள் பார்த்த உடனே அவர் பிணிகள் ஓட வேண்டும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும்.
3.அந்த ஆனந்த நிலைகள் பெறும் தகுதி பெறவேண்டும்.

எத்தனையோ வகையில் சந்தர்ப்பத்தால் நுகரும் ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.

நுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது.  அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.

இராட்சனாக ஆவதும் அசுர உணர்வு கொள்வதும் தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும் தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும். ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால் மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.

தீமை செய்கின்றான் என்று அவனைப் பற்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.

அத்தகையை தீமையின் நிலைகளைச் செய்தால்… நாம் பார்த்தால்…, அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
2.பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று
3.அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன்
4.இதைக் கலக்கின்றோம்.
5.நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம்.
6.அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…!
7.அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.

தனித்து ஒரு மிளகாய் காரமாக இருக்கின்றது. இதைப் போன்று மற்ற கடுகு இஞ்சி மிளகு எல்லாமே தனித்த நிலையில் காரமாக இருக்கின்றது. ஆனால், மற்ற பொருள்களுடன் இவைகளைக் கலக்கப்படும் பொழுது சுவையான நிலைகள் வருகின்றது.

இதைப் போலத்தான்
1.பிறிதொரு தீமையான உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும்
2.”அது தனித்து விளையாதபடி”
3.அருள் ஞானிகளின் உணர்வு கொண்டு எடுத்து
4.அதை உள்ளடக்குதல் வேண்டும்.

அதன் உணர்வின் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.

திருமணமானவர்கள் கணவனுக்கு அந்தச் சக்தியும் மனைவிக்கு அந்தச் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும். இதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணுவதை “மறந்துவிடக் கூடாது”.

ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ண மறந்துவிட்டால் போய்விடும். இதை மறக்காத நிலைகளில் எடுக்க வேண்டும். கணவனோ மனைவியோ முந்தி உடலை விட்டுச் சென்றிருந்தாலும் இதை எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு. அப்பொழுது அந்த அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று “இணைத்தே…” வாழ்தல் வேண்டும்.

நமக்குள் அதைப் பெறப்படும் பொழுது அதன் வழி இருவருமே அங்கே இணைய முடியும்.


உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விட்டால் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் “ஒன்றி வாழும்” நிலைகள் பெறுகின்றது. 

தொழில் செய்யும் போது “கொடுக்கல் வாங்கலில்” வரும் சிக்கல்கள்

1. “கௌரவரம் குறைந்துவிடுமே” என்று எண்ணி வேதனைப்படுகின்றோம்
நமது கண்  காது  மூக்கு வாய் உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். “நமது கௌரவம் குறைந்து விடுமே…” என்ற உணர்வு வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும், பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது.

பஞ்ச பாண்டவர்கள்தான் நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது கௌரவர்கள்.

ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதை காதால் நாம் கேட்கப்படும் பொழுது நமக்குள் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

அப்போது “கௌரவப் பிரச்சினை” வந்து “இப்படி நம்மைச் சொல்லிவிட்டானே”என்று நமது கௌரவம் குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம். இப்படி வேதனை என்ற நிலைகள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.

நமது கண் காது மூக்கு வாய் உடல் இவை ஆட்சி புரிந்தாலும் கௌரவப் பிரச்சினை என்று வரப்படும்பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதைக்  காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

2. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் வரும் கடுமையான நிலைகள்
1.நமக்குப் பணம் தர வேண்டியவர் தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை
2.நாம் தருகிறோம் என்று கூறியவருக்குத் தரவில்லை என்றால் கௌரவம் போய்விடுமே என்று ஒரு பக்கம் வேதனை
3.நமக்குத் தரவேண்டியவன் தருகிறேன் என்று சொல்லித்“தரவில்லையே” என்று கோபமும்
4.ஏமாற்றிவிட்டானே” என்ற  வேதனையும் சேர்ந்து எலிப்பொறியில் சிக்கியது போன்று ஆகிவிடுகின்றது.
5.இதனின் வேதனைகளாகும் பொழுது அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி அவன் நமக்கு “நன்மை செய்தான்” என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது.

அவன் நமக்குத் “தீமைகள் செய்தான்”என்று எண்ணினால் அவனுக்கு புரையேற்படுகிறது

இதைப் போன்று நாம் நமக்குத் தர வேண்டியவனிடம் எனக்குப் பணம் தராமல் இருந்துவிட்டானே என்று உற்று நோக்கும்பொழுது அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.

1.அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும்.
2.அவருடைய வியாபாரம் குறையும்.
3.அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.

அவரும் எண்ணுவார்,  “அவருக்குக் கொடுக்கவேண்டுமே…,  சரியான காலத்தில் அவருக்குக் கொடுக்கவில்லையே..”  என்று நம்மை எண்ணி எண்ணி வேதனைப்படுவார்.

வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில்  அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது நம்மைப் பற்றிய நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.

3. கடனைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதில் அவர் உயிரான்மா நமக்குள் வந்துவிடுகின்றது
இப்படி நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது.

அவர் நோயுடன் இருக்கும்பொழுது “நீ வேண்டுமென்றே…, எனக்குப் பணம் தரவில்லை”என்று நாம் கடுமையாகப் பேசும்பொழுது அதனின் உணர்வுகள் அவருக்குள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகி விடுகின்றது.

அதுமட்டுமல்லாமல் நம்மைப்பற்றிய நினைவு கொண்டு வேதனையின் உணர்வுகளை வளர்த்து
1.அது அவருள் கடுமையான நோயாக மாறி
2.அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால்
3.அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும்.
4.வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்  உயிராத்மா  நம்முள் வந்துவிடுகின்றது.

அவர் தமக்குள் சேர்த்துக் கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை நம்க்குள் இங்கே உருவாக்கிவிடுகின்றது. 

இது ஒரு பக்கம். அதே சமயம்  “இவர் கேட்டாரே..,  அவருடைய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே”என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் “சாப அலைகளாக” மாறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள்தான் மற்றவருக்குப் பணம் தர வேண்டிய நிலையில் கொடுக்க முடியாத பொழுதும் உருவாகின்றது.

அவருடைய சாப அலைகள் வளர்ச்சி அடைந்தபின் அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து “பேய் மனம்” என்ற நிலையில் நோயின் நிலைகளை  நம்முள் உருவாக்கி விடுகின்றது.

அதன்பின்  நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால்  மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத்தான் “சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன்” என்று சிவதத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதனையின் உணர்வை நுகர நுகர அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ அதன் நிலைகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று  விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேதனையின் உணர்வுகளால், நம்மிடத்தில் விஷத்தின் தன்மையான நரகாசுரன்தான் வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும்.

4. நம்மிடம் தொழில் செய்வோருக்கு வருமானம் அதிகம் வரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்
காலை  4.00  மணிக்கெல்லாம் எழுந்து  “ஈஸ்வரா” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும், துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் “ஈஸ்வரா” என்று எண்ணி ஏங்கி  கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச் செய்தல் வேண்டும்.

அதன்பின் யார் மீது பகைமை கொண்டோமோ அவர்பால் நினைவைச் செலுத்தி துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற்று
1.அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.என்னுடைய பணத்தை அவர் எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.
3.இந்த மாதிரி நாம் தியானிக்கும் பொழுது விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.
4.நமக்கு வர வேண்டிய பணமும் வந்து சேர்கின்றது.

இந்த உடலுக்குப் பின் நாம் எந்தக் கூட்டமைப்பில் சேர வேண்டும்? நம் எல்லை எது?

மதத்தின் அடிப்படையில் காட்டிய சாங்கிய சாஸ்திரங்களின் படி அதில் எடுத்துக்கொண்ட வேதங்களையும் படித்துப் படித்து அதனை உருவாக்கி விட்டால் அந்த மதத்தின் பிடிப்பில் இருந்து நீங்கள் விலகுவது இல்லை.

மதத்தின் தன்மை பிடிப்பாக வரப்போகும்போது அதிலே வரும் நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு அடுத்த மதம் தாவினாலும் அதனின்று
1.“எனக்கு அந்தக் கடவுள் செய்வாரா?” என்ற நிலைகள்தான்
2.இன்று பிரிந்து செல்லும் நிலைகளில் வருகின்றது.

ஜாதகமும், மதங்களால் உருவாக்கப்பட்ட வேதங்களும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு.

இந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் தொகுக்கப்பட்டு இந்த மதத்துக்கென்று அரசனாகி அந்த அரசன் வழிகளிலேதான் அந்த நாட்டின் தன்மைகள் வந்தது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் அதிலே விளைந்த உணர்வின் தன்மைதான் இன்று நம்முள் விளையப்பட்டு அவர்கள் செருகிய வித்தின் உணர்வுகள் கொண்டு இன்றும் நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வாக இயக்கிக்கொண்டே உள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை செருகப்பட்ட உணர்வு கொண்டுதான்,
1.அதனதன் மதத்தை இறுக்கிப் பிடித்து,
2.மற்ற மதத்தைப் பழிக்கச் செய்கின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு எவ்வாறு தன் சத்தை அது கவர்ந்து கொள்கின்றதோ தன் உணர்வால் அது கவர்ந்து கொள்கின்றது. தன் மணத்தால் மற்றவைகளை அணுக விடுவதில்லை.

மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும், அதில் ஏற்பட்ட மணம் தான் அது. 
1.மற்றவர்கள் எது சொன்னாலும், அந்த மணம் தடுக்கத்தான் செய்யும்.
2.அந்த மதத்தின் தன்மை கொண்டு மற்ற மதங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி உங்களில் மீண்டும் மீண்டும் அந்த விண் வழி சென்ற இந்த உணர்வின் ஆற்றலை உங்களில் பருகும்படி செய்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் திறனை வளர்த்துக் கொள்ளும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் உரமாக ஊட்டுவது இதற்குத்தான்.

வீண் என்ற பேச்சு இல்லை. விரையமாக்கும் தன்மை இல்லை.

1.அருள்ஞானியின் உணர்வுகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தனரோ
2.அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் இணைத்து இணைத்து
3.இந்த இணைப்பின் வளர்கொண்டு அதை உங்களுக்குள் உரமாக்கச் செய்கின்றோம்.

அப்படி உரமாக்கிய நிலைகள் கொண்டு, அதில் எண்ணத்தால் நீங்கள் வளரும் அந்தப் பருவம் வந்துவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அங்கே செல்கின்றது.

பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.  இதற்குத்தான் இதைச்சொல்வது. ஆகவே
1.ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும்
2.அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகளை நாம் இயங்கிடும் உணர்வுடன் இணைத்து
3.அதன் நினைவினை உற்று நோக்கி அந்த நினைவுடன்
4.அந்த மகரிஷியின் உணர்வை உங்களுக்குள் ஒன்றச்செய்வது தான் யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள்.

கடந்த கால நலன்களும் வாழ்க்கையில் வந்த தீமைகளும் மதத்தால்  ஏற்பட்ட உணர்வுகளும் அதனால் ஏற்பட்ட நாம் அதைக் காத்திடும் உணர்வாக விளைய வைத்த நிலைகளை அது உணர்த்தி அந்த உணர்வின் நினைவைக் கொண்டு மகரிஷியின் அருளுணர்வை இதனுடன் இணைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து தொடர்ந்து சொல்வது.

பெரும்பகுதியானவர்கள் இறந்த பிற்பாடு நமக்கு என்ன எதுவும் தெரியப் போகிறதா என்ற எண்ணத்தில் தான் உள்ளார்கள். ஆனால் தெரிந்து கொள்ளுங்கள்.

“புழுவில் இருந்து மனிதனாக வந்த நாம்..,” இந்தக் கூட்டமைப்பிலிருந்து மீண்டும் எதனுடைய நிலைகளை இன்று எடுத்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையாக
1.”வேதனை” என்ற நிலைகள் வந்தால் பாம்பினக் குழுவில் நாம் சேர்ந்து அதனுடைய கூட்டமைப்பிலேதான் இணைவோம்.
2.“கடு கடுப்பென்ற” நிலையான உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால், நம்முடைய எல்லை எதுவாக வைப்போம் என்றால் “தேள்” இனத்தில் தான் போய் வைப்போம்.
4.மாமிச உணவுகளை கோழியோ, மீனையோ, ஆட்டையோ விரும்பி உணவாக உட்கொண்டிருந்தால் அந்தக் கூட்டமைப்பிலே தான் இணைவோம்.

ஆகவே, எந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துப் பழகியுள்ளோமோ அதனின் கூட்டமைப்பில் தான் சென்று சேர முடியும்.

ஆகவே அதற்கு நாம் தயாரா…! இதைப்போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டுமல்லவா.

அதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கும்படி செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் எல்லாவற்றிலும் இணைத்துக் கொண்டு வந்தபின் உங்களுக்குள் சிந்திக்கும் திறனும் அருள்ஞானிகள் அவர்கள் எப்படி தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவருக்குள் விளைய வைத்தார்களோ அந்த உணர்வை நுகரும் நிலையும், உங்களுக்குள் அதைக் கவர்ந்திடும் நிலைக்குத்தான் இதைச் செயல்படுத்துவது.

இதை ஒவ்வொரு நாளும் நீங்கள் நினைவு கொண்டு “நமது எல்லை… எது…? என்ற நிலைக்கு வர வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஒளியின் சரீரம் பெற்று எங்கு சென்றடைந்துள்ளார்களோ
3.அதனுடைய குழுவாக… “கூட்டமாக…,”சப்தரிஷி மண்டலமாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ
4.அதைத்தான் நம் எல்லையாக வைக்க வேண்டும்.

May 27, 2017

அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் நம் பூமியின் துருவத்தின் ஆற்றலை அறிந்தான்.

அவன் செய்யும் அதிசயமான செயல்களைக் கண்டு அவனுடன் வாழ்ந்தவர்கள் “காட்டு ராஜா” என்றே அவனைக் கொண்டாடுகின்றார்கள்.

புவிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது என்று உற்று நோக்குகின்றான். அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அவ்வாறு அவனைச் சிந்திக்கும்படி செய்கின்றது.

வானுலக ஆற்றல் நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக எப்படி வருகின்றது என்பதை அறிகின்றான்.

துருவத்தின் வழியாக வரும் உணர்வுகள் விஷத் தன்மையாக இருந்தாலும் இவன் நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக் கதிர்களை மாற்றுகின்றான்.

இன்றும் நாம் விண்ணிலே “மின்னல்களைப் பார்க்கலாம்”.

அதாவது நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர் நிலையானால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சுக்குநூறாகி அலைகள் மாறும்.

அலைகளாக மாறி வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வரும் பொழுது அதனுடைய கலவைகளில் பல வித்தியாசமாக வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை “மின்னலைப் பாருடா மின்னலைப் பாருடா..,” என்று சொல்வார்.

எனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது

1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.

2.அகஸ்தியன் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்?

3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது? என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.

குருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான் அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.

செடியின் மேல் மின்னல் தாக்கினால் செடி கருகிவிடுகின்றது. அதிலுள்ள சத்தை எடுத்துவிடுகின்றது. இதே போல

1.விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது

2.கதிரியக்கப்பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் இதை ஒடுக்கி

3.அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றுகின்றான்.

4.இதையெல்லாம் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அப்படி மாற்றியமைத்த அவன் உடலில் உருவானதுதான் அகண்ட அண்டத்தில் வரும் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.

அதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான்.

அகஸ்தியன் எப்படி ஒளியாக மாற்றினான் என்ற அந்த உணர்வின் சத்தை உங்களுக்கு ஊட்டுகின்றோம். அதை நீங்கள் பெற்றால் உங்கள் வாழ்க்கையிலும் அவன் நஞ்சை மாற்றி ஒளியாக ஆனது போன்று மாற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

அகஸ்தியன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து வாழலாம்.


அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்குவதற்கே இதைச் சொல்கின்றேன்.

“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே “ஒளியாக வேண்டும்”

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் நமக்குள் வராதபடி ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால் இது விஷ்ணு தனுசாகின்றது”.

1.விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.

2.அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால் இன்னொரு உடல் பெறுவதில்லை.

3.உயிருடன் சேர்த்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது,

4.அதுதான் விஷ்ணு தனுசு.

சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் அழியாது.

இந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். ஆனால், இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.

முதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின் இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.

அது என்றும் ஏகாந்த நிலை.., “பெருவீடு பெரு நிலை” நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.

கூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமி முழுவதும் படருகின்றது. அதே சமயத்தில் இந்த உபதேச உணர்வுகளைப் படிப்போர் அவர்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் மீண்டும் இதை எண்ணும்போது அந்த அருள் உணர்வுகளும் படர்கின்றது.

1.இத்தகைய அருள் உணர்வுகள் ஒவ்வொரு நாளும் கூடக் கூட

2.மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும்.

3.அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.

நம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை.

அந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு. இதைத்தான் அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார்.

1.நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது.

2.இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்.

3.“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய்,

4.என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.

நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.

நீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.

1.பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.

2.பிறருக்கு நல்லது செய்யக் கூடிய உணர்வே எனக்குள் வரவேண்டும்.

3.அந்த “அருட்பிரசாதம்..,” இல்லை… என்று சொல்லாதபடி

4.என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை (சாப்பாட்டுப் பசி அல்ல) அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

5.இருளிலிருந்து விடுபட்டுப் பெரும் ஜோதியாக பேரொளியாக மக்கள் அனைவரும் ஏகாந்த நிலை பெறவேண்டும்.

6.(அதை) யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது.


7.எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளை நான் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.