ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2016

கடுமையாக ஒருவர் நம்மை ஏசிக் கொண்டிருந்தால் அவரிடம் நாம் சொல்ல வேண்டியது என்ன...?

பிறர் வேதனைப்படுவதைக் கண்டு இரசிக்கக்கூடாது
அரசியலிலோ அல்லது மற்ற மத இனம் என்ற நிலைகளில் இன்று மனிதனுக்கு மனிதன் உதவி செய்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வந்துவிட்டால் செய்த உதவிகளையும் மறக்கச் செய்து தவறுகளைச் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின்படி அவர்கள் உயிர் இயக்குகின்றது.

மற்ற உயிரினங்களிலிருந்து இன்று மனிதனாகப் பிறந்தோம்.

மனிதனான பின் அசுர உணர்வுகள் விளைந்துவிட்டால் மீண்டும் நரகலோகத்திற்குப் போகும் (பாம்பு போன்ற விஷ ஜெந்துக்களாக) உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம். இரக்கமற்று அவர்களுக்குத் தொல்லைகளையும் கொடுக்கலாம். அதே சமயத்தில் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தொல்லைப்படுவதைப் பார்த்து இரசித்துக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால், நாம் எதனை உருவாக்கினோமோ இந்த உணர்வுகளை நுகர நுகர நுகர அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக இங்கே விளையும்.

பின் நமக்குள் அது நோயாக விளையும்போது மனிதனல்லாத உருவாக உருவாக்கும் விஷத் தன்மை கொண்ட நிலைக்கு வந்துவிடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…,” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி இரசித்தோம் எடுத்தால் அது அடுத்து பாம்பினமாக எப்படி உருப் பெறச் செய்கிறது? அந்த அணுக்களின் மாற்றங்களும் அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது? இந்த உடல் எப்படி நலிகின்றது? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது? என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

“அவன் செய்தான்.., அதற்குண்டான தண்டனையை அனுபவிக்கின்றான்..,” என்று நாம் ஏதோ சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால், அப்படி நினைக்கவே கூடாது.

அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?

அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும். அவர் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஏசிப் பேசுபவர்கள் உண்மையை உணரட்டும்
அவன் நம்மை அதிகமாகத் தாக்கிப் பேச வேண்டும் என்றும், நமக்குத் தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டால் அதை நம்மால் தாங்க முடியாது.

அப்பொழுது கோபமும் கொதித்தெழும் உணர்வுகளும் கொண்டு “அவனைத் தாக்க வேண்டும்.., அழித்துவிட வேண்டும்..,” என்ற உணர்வே நமக்குள் தோன்றும்.

நாம் கோபப்படுகின்றோம். ஆனால், தவறு செய்தது அவர்கள். தவறு செய்ததை நாம் நுகர்ந்தறிந்தோம். நம் உயிர் அதை அறியச் செய்கின்றது. அந்த அணுவாகவே மாற்றிவிடுகின்றது.

அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு “நமக்குள் அது உடலுடன் ஒட்டி” அது வினையாக நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

தவறு நாம் செய்யவில்லை.

ஆனால், அவன் நாம் எப்படியும் கெட்டுப் போகவேண்டும் என்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து நமக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் என்றால் அந்த உணர்வை நுகரப்படும் போது அதே உணர்வின் அணுக்களாக உயிர் நமக்குள் உருவாகின்றது.

இப்படி உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கப்படும் போது அந்த உணர்வின் செயலாகவே நம் உடலை இயக்கத் தொடங்கிவிடும்.

சற்று நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்படிக் கடுமையாக ஒருவர் ஏசிப் பேசினார் என்றால் உடனே “ஈஸ்வரா..,” என்று உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சேர்த்துக் கொண்டு அந்தத் தீமையான உணர்வுகள் அணுக்களாக விளையாதபடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அப்பொழுது அவர் சொல்லும் உணர்வும், அதற்குள் இந்த அருள் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் கூடிக் கொண்டே வரும். இதனுடைய நிலைகள் நமக்குள் எடுத்து அவன் அறியாது செய்யும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு மீறியும் அவன் நம்மை வெறுத்துத் தாங்க முடியாத நிலைகளை நமக்குச் செய்தால் “அவன் எதைச் செய்யவேண்டும் என்று எதை நினைக்கின்றானோ, அவனுக்குள் அது விளைந்து அவன் உணரட்டும்…,” என்று மட்டும் சொல்லுங்கள்.

“எனக்கு வேண்டாம்.., நீயே அதை அனுபவித்து நீ உன்னுடைய உணர்வுகளை அறிந்து அதன் வழியாக நீ அனுபவித்துப் பார்..,”

ஏனென்றால் எவர் ஒருவர் அதிகமான நிலைகள் கொண்டு நாம் கெட வேண்டும் நம்மைத் தூஷிக்கின்றனறோ அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்.

“அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…,” என்ற நிலைகளைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது. 

October 24, 2016

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – குலதெய்வங்களுக்குச் செய்ய வேண்டியது

நம் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் பாசத்தால் “ஐயோ..,” இப்படிப் போய்விட்டார்களே என்று எண்ணினால் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இந்த மாதிரி நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும். உடனே நம் உயிரை எண்ணி “ஈஸ்வரா” என்று அவனிடம் வேண்டுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அடுத்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் உந்தித் தள்ள வேண்டும்.

அப்படி உந்தித் தள்ளாமல் “ஐயோ.., இப்படி ஆனதே” என்று எண்ணினால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும். உள்ளே வந்த பின் அவர் பட்ட வேதனையும் கஷ்டங்களும் நோய்களும் நமக்குள்ளும் வந்துவிடும்.

ஆகவே, இதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

நம் மூதாதையர்களோ, சொந்தமோ, பந்தமோ, நண்பர்களோ யாராக இருந்தாலும் சரி, அந்தப் பாசப் பற்றுடன் நாம் கவர்ந்தால் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும். அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும். நமக்குள் அந்தத் தீமைகள் புகுந்துவிடாதவாறு தடைப்படுத்துதல் வேண்டும்.

தடைப்படுத்த வேண்டுமென்றால் எப்படிச் செய்ய வேண்டும்?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உறவினர்களின் உயிராத்மாக்களும், நண்பர்களின் உயிராத்மாக்களும் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் எடை அற்றது. நாம் உடலுடன் இருப்பதால் ஒரு இயந்திரம் போன்று அவர்களை நம்முடைய வலுவான எண்ணத்தால் (ஒரு பந்தைப் போன்று) உந்தித் தள்ள முடியும்.

இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும். மீண்டும் அவர்கள் இன்னொரு உடல் பெறக் கூடாது.

இப்படி அந்த ஆன்மாக்களை உந்திச் செலுத்தி அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கரைத்திட வேண்டும். இதுதான் ஞானிகள் காட்டிய வழி.

ஆக, “ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழும்..,”

அதாவது அவர்களும் பிறவியில்லா நிலை அடைகின்றனர். நீங்களும் நலம் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.  

சில உடல்களில் அறியாது ஆன்மாக்கள் புகுந்திருந்தால் நம்மை அறியாது சில தீமையான உணர்வுகளைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். நம்முடைய செயலாக்கங்களை மாற்றி பாவ வினைகளாக அதன் வழிக்கு நம்மை இயக்கும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்தும் உங்களால் விடுபட முடியும்.

எங்கள் உடல்களில் அறியாது சேர்ந்த ஜீவான்மாக்கள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

அந்த ஜீவான்மாக்கள் மகரிஷிகளின் அருள்வட்டத்தில் வாழ்ந்து எங்கள் உடல்களில் நலம் பெறும் ஜீவான்மாக்களாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அந்த ஆன்மாக்களும் சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலந்து பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்தால் அதனின் செயலாக்கங்கள் தணிந்து நம்மை நலம் பெறச் செய்யும். 

எதிர்பாராது நடக்கும் சில விபத்தான நிலைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். 

October 23, 2016

தியானத்தில் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம் - ஒளிப் பிழம்புகளைக் காணலாம்

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம். அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த உணர்வு உங்களைக் காக்கும்.

அதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தபின் புலனடங்கித் தூங்கும் போது அந்த அதிர்ச்சியின் நிலைகள் வருகின்றது.

அதைப் போன்று தான் அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து கொண்டால் புலனடங்கித் தூங்கும் போது உங்களை வான மண்டலத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணைத்து அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் இணையும்.

சிலருக்கு அந்தக் காட்சிகள் வந்து கொண்டிருக்கும். மிதப்பதைப் போல் இருக்கும். இதன் வழியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒளியின் தன்மை திடீரென்று உடலிலிருந்து மின்னவும் செய்யும்.

தியான வழியில் பெற்றோருக்கு தீமைகளை அகற்றும் நிலைகள் தனக்குள் இந்த உணர்வுகள் அது தெளிவாகத் தெரியும்.

இரவிலே வான மண்டலத்திலே சுழல்வது போலத் தெரியும். முழித்துப் பார்த்தால் உங்கள் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே, நாம் வளர்த்துக் கொண்ட நிலையை அந்தப் பேரருள் பேரொளியை நாம் அறியலாம்.

எப்படி இதை அறிந்து கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கலாம்.

யாம் உங்களுக்குள் பதிவாக்கிய நிலைகளைச் சீராக நீங்கள் எடுத்துக் கொண்டால் வான மண்டலத்தில் உங்கள் உணர்வுகள் சஞ்சரிக்கும். உங்களின் உணர்வின் நினைவாற்றல் அங்கே அழைத்துச் செல்லும்.

நீங்கள் பயந்த உணர்வுகளைப் பதிவாக்கினால் இந்த உணர்வுகள் அஞ்சி வாழச் செய்யும் நிலைகளும் இரவில் தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பிக் கதறுவது போன்று தூக்கமின்மையும் பல நிலைகளும் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் தெளிவாக்கி மனிதனுடைய வாழ்க்கையில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்.

இதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நிலைகளையும் போக்கிக் கொள்ள உங்களால் முடியும். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

சாமியார் காப்பாற்றுவார், சாமி காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் என்ற நிலைக்குத்தான் இன்று சென்று கொண்டுள்ளார்கள்.

உங்களுக்குள் பதிவு செய்ததை நீங்கள் நினைவாக்கினால் அதே உணர்வு உங்களைக் காக்கின்றது வழி நடத்துகின்றது. உங்களைச் செயல்படுத்துகின்றது. இதைத் தான் யாம் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

நாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே, அருள் சக்திகளை நீங்கள் பெறும் நிலைகள ஏங்கி எடுக்கும் போது நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றும் நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு இவ்வளவு விளக்கமாகக் கொடுக்கின்றோம்.

October 22, 2016

அகஸ்தியனைப் போன்று மின்னலின் ஆற்றலைப் பெற்று நீங்கள் பேரொளியாக மாறுங்கள்

இந்த உடலை உருவாக்கியது யார்? உயிரான ஈசன் தான். அவனின் பிள்ளை தான் இந்த உடல். இந்தப் பிள்ளை யார் என்று நீ சிந்தித்துப் பார்.

அவன் என்னை உருவாக்கினான். அவனை அறியும் பருவம் பெற்ற இந்த மனித உடலை உருவாக்கினான்.

அவன் ஒளியாக இருக்கின்றான். அவனுடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் உணர்வின் நிலைகளை நீ உனக்குள் எவ்வாறு செய்ய வேண்டும்? என்று இதைத் தெளிவாக உணர்த்தியவன் அகஸ்தியன்.

இந்தப் பூமியில் முதல் முதலில் நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெற்றவன் அகஸ்தியன். வானுலக ஆற்றலை நுகர்ந்தான். அதிலிருந்து வரும் கடும் மின்னல்களை அகஸ்தியன் உற்றுப் பார்த்தான்.

சில நேரங்களில் நாம் மின்னலை உற்றுப் பார்த்தால் நம் கண்களையே பறித்துவிடும். இதைப் போல வானுலக நிலைகளை உற்றுப் பார்க்கும்படி என்னிடம் குருநாதர் சொன்னார்.

மின்னல்கள் தாக்கப்படும் போது அதிலே நஞ்சின் கதிரியக்கப் பொறிகள் எப்படித் தாக்குகின்றது? அதை உற்றுப் பார்த்தால் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது?

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அக்காலங்களில் தாய் கருவிலிருக்கும்போது பெற்ற ஆற்றலால் விஷத்தை ஒடுக்கிடும் நிலை பெற்றான் அகஸ்தியன். அதன் வழி கொண்டு மின்னலின் உணர்வுகளை அவனால் பெற முடிந்தது.

நட்சத்திரங்கள் மின் கதிரின் இயக்கங்கள் கொண்டது. அதே சமயத்தில் விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள் கொண்டது.

ஒரு நட்சத்திரம் வெளிப்படுத்தும் துகளும் மற்றொரு நட்சத்திரம் வெளிப்படுத்தும் துகளும் சந்தர்ப்பத்தால் மோதும் போது தான் பொறிகள் அதிகமாகக் கிளம்பி விரிவடைந்து சிதறுகின்றது.

அந்த மின் துகள்கள் சிதறுண்டு செல்லப்படும் பொழுது அதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அதனதன் துணுக்குகளாக மாற்றுகின்றது.

அது மாற்றி மற்றதோடு மோதி பல பல உணர்வுகளாக எப்படி மாற்றுகின்றது என்பதை அகஸ்தியன் தெளிவாகக் காணுகின்றான். ஏனென்றால் அவன் தாயின் கருவில் இருக்கும் பொழுது நஞ்சை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்றவன்.

வானுலக உணர்வின் தன்மை மின்னலின் கதிரியக்கங்களை நுகர்கின்றான். இந்த மின்னல் எங்கிருந்து உருவாகின்றது என்பதைக் காணுகின்றான்.

பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து கவரும் விஷத் தன்மை கொண்டு அது சுழலும் நிலைகள் தூசிகளாகி ஒன்றுடன் ஒன்றைச் சூரியன் கவர்ந்து இணைக்கப்படும் பொழுது மோதல்கள் எப்படி வருகின்றது?

அதனால் பல சிதைவுகள் எப்படி வருகின்றது? இதனின் அணுக்களின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார். அப்பொழுது “மின்னலைப் பார்..,” என்று சொன்னார் குருநாதர்.

“என் கண்கள் போய்விட்டால் என்ன செய்வது..,?” என்று கேட்டேன்.

அப்புறம் அதற்குண்டான நிலைகளைச் சொல்லித் தெளிவாகக் காட்டினார் குருநாதர். மின்னலுக்குள் இருக்கும் சில அற்புதங்களும் சில நிகழ்ச்சிகளும் எவ்வாறு நிகழ்கிறது என்று காட்டினார்.

குருவின் வலுக் கொண்டு மின்னலை நான் உற்றுப் பார்க்கப்படும்போது என்னை ஒன்றும் அது பாதிக்கவில்லை.

அன்று அகஸ்தியன் இதைப் போன்றுதான் விண்ணை உற்று நோக்கிக் கடும் விஷத் தன்மையை அடக்கினார். அதனை ஒளியின் அணுவாக மாற்றினார். உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியின் கதிர்களாக மாற்றித் “துருவ நட்சத்திரமாக” ஆனார் அகஸ்தியர் என்பதைத் தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

அந்த அகஸ்தியனைப் போன்றே நாமும் ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்பதே குரு காட்டிய அருள் வழி.

October 21, 2016

எம்மை அருள் சேவை செய்யச் சொன்னார் குருநாதர், அதன் மூலம் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்கள்” அதிகரிப்பார்கள் என்றார்

வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்த விஷத்தின் அளவுகோல் அதிகமானால் அது உடலுக்குள் கேன்சராக மாறுகின்றது.

நம் உடலுக்குள் செல்லும் அணுக்களுக்குள் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்து கொண்டால் தன் விழுதுகளைப் பாய்ச்சி நல்ல அணுக்களுக்குப் போகும் விஷத்தை இது கவர்ந்து கொண்டபின் இந்த மனித உடலை உருவாக்கும் அணுக்களெல்லாம் “நீர் சத்தாக” மாறுகின்றது.

நல்ல அணுக்களுக்களின் இயக்கச் சக்தி குறைக்கப்படும் பொழுது இந்த இரத்தத்தின் தன்மை குறைகின்றது. இது இரத்தக் கேன்சராக மாறும் போது இந்த அணுக்களின் தன்மையும் மற்ற அணுக்களுக்குக் கொண்டு போய் இதே வேதனைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதைத் தெளிவாக எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

விஷத்தன்மை நமக்குள் அதிகமாகி கேன்சராக மாறும்போது அதற்கு மருந்து இல்லை. ஆனால், அக்காலங்களில் இந்தக் கேன்சர் என்ற நிலை இல்லை.

புற்று நோய் என்று இருப்பினும் அதற்கு அன்றைய பச்சிலையை எடுத்து அரைத்து அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு துளி எங்கே புற்று நோய் இருக்கின்றதோ அங்கே தடவிவிட்டால் அந்தக் கண்களின் (புற்றின்) வழி கொண்டு அந்தப் புற்றை உருவாக்கிய அணுக்கள் மடிந்துவிடுகின்றது.

இதற்காக வேண்டி எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று சில பச்சிலைகளையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார். இதை வைத்து நீ பிறருக்கு உதவி செய்தாலும் இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள். இந்த உணர்வின் “வாக்காக” நீ அவர்களுக்குள் கொடு.

அதே அணுவின் தன்மை அங்கே விளையும். அவர் தொடர்ந்து எடுத்தார் என்றால் அவர் செய்த பாவ நிலைகளைப் போக்கும் நிலை அங்கே வருகின்றது. அவர் எண்ணியதை அவர் உயிர் உருவாக்குகின்றது. அந்த அணுக்களைப் பெருக்குகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தால் நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அதைப் போல நான் உனக்குக் காட்டியபடி அந்தக் கேன்சர் நோயை நீக்கிடும் உணர்வை நீ நுகர்ந்தாய். அந்த உணர்வின் தன்மை கொண்டு கேன்சர் (விஷ அணுக்கள்) செயலற்றதாக ஆகவேண்டும் என்ற ஒரு வாக்கினைக் கொடு.

யாரொருவர் இந்தப் பதிவினை நினைவு கொண்டு தியானிக்கின்றனரோ நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பெருகும். அப்பொழுது அவருக்குள் இருக்கும் அந்தக் கேனசர் ஒடுங்கும்.

அவர்கள் எதை எண்ணுகின்றார்களோ அதை “அவர்கள் உயிர் தான்…, இயக்குகின்றது”.

“நான் செய்கின்றேன்…,” என்று நீ இதைச் செய்தால் அவர்கள் செய்யும் உணர்விலிருந்து தீமையிலிருந்து விடுபட மாட்டாய்.

உடல் நல்லதாகிவிட்டால் நல்லதான பின் மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் செய்வார்கள். அந்த வேதனை உணர்வைத்தான் நுகர்வார்கள். மீண்டும் அதே நோய் உருவாகும்.

அவரில் விளைந்த உணர்வுகள் மற்றவர்கள் அவருடன் உறவாடும்போது அங்கே பதியும். பதிந்த உணர்வே மீண்டும் செயலாகும். இதை மாற்றும் நிலை இல்லை.

ஆகவே, இதை மாற்றவேண்டும் என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச் செய். இந்த உணர்வின் தன்மை இருளை மாய்க்கச் செய்.

உணர்வின் துணை கொண்டு பிறவியில்லா நிலை அடையச் செய்யும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.

ஆகவே, அவர்களின் உயிரை நீ ஈசனாக மதி. அந்த உடலைக் கோவிலாக மதி. உடலைச் சிவமாக மதி. அதற்கு “அருள் சேவை” என்ற நிலைகள் கொண்டு அருள் ஞானத்தை வினையாகச் சேர்க்க ஊழ்வினையாக ஊழ்வினை என்ற வித்தாக ஊன்று.

அந்த வித்தினை எவர் வளர்த்துக் கொள்கின்றனரோ அவர் இந்தப் பாவ வினையும் சாப வினையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள். தீய வினைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.

இதை வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை வளர்கின்றது.

ஆகவே, இதை வளர்த்தால் தான் அதைப் பெறமுடியுமே தவிர உன் கையால் பலருக்கு நன்மை செய்தாலும் அடுத்த கணம் நல்லதானாலும் அந்த நேரத்திற்குத்தான் நல்லதை எண்ணுவார்கள்.

அடுத்தால் போல் இவர்கள் என்ன செய்வார்கள்?

பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிவார்கள். நுகர்ந்த உணர்வுகள் அந்த வேதனைப்படுத்தும் சொல்லாக மீண்டும் இவருக்குள் வரும்.

இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவான நிலை மீண்டும் நுகர்ந்து அந்தத் தீய அணுக்களைத்தான் உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போகும்.

சக்தி பெற்ற நிலையை அந்த ஞான வித்தை அங்கே ஊன்றிவிடு. அதை வளர்க்கும் உபாயத்தைக் கூறு. அதன் வழியே அவர்கள் நுகரட்டும். அருள் பெறட்டும். இருளை அகற்றட்டும்.

ஆகவே, மனிதனான பின் இதுதான் விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள்.

ஆகவே நமக்குள் தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை விளைய வைத்துத் தீமைகள் அகன்றிட வேண்டும் என்று நாம் கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த உணர்வுகளைப் பரவச் செய்தோம் என்றால் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும்” அதிகரிப்பர்.

ஆகவே, இதைப் போன்ற உணர்வின் தன்மை விளையப்படும் பொழுது நினைவுகள் அங்கே பயன்படுத்தக் கூடிய நிலைகள் இருக்கும். இதை நீ செய் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.

ஆனால், சில பேர் என்ன நினைக்கின்றார்கள்? சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் சரியாகும் என்று இப்படிக் கீழே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

சாமியின் ஆசீர்வாதம் எது என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் நீங்கள் அருள் உணர்வை நுகர்ந்தால் உங்களுக்குள் தீய வினைகளை மாற்றும் திறன் உங்களுக்குள் நிச்சயம் உண்டு. 

October 20, 2016

தெய்வம் ரொம்பவும் என்னைச் சோதிக்கின்றது என்று வேதனைப்படுகின்றார்கள் சிலர்....!

திட்டியவரை எண்ணியவுடன் புரையேறுகின்றது, திட்டியவரை எண்ணிக் கொண்டேயிருந்தால் அன்றைய காரியங்கள் தடைப்படுகின்றது.

வேதனைப்படுவோரைப் பற்றிச் சொன்னவுடன் வேதனைப்படும் நிலையாகிவிடுகின்றது. அடுத்து நல்ல வேலைகளைச் செய்ய முடியவில்லை. வேதனைப்படும் உணர்வை எடுத்துக் கொண்டால் பெண்கள் சமையல் செய்யும்போது தவறாகப் போய்விடுகின்றது.

அதே சமயத்தில் பெண்கள் ஆகாரத்தைச் சரியாகச் செய்தாலும் ஆண்கள் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்துவிட்டு வந்து அந்த உணவை உட்கொண்டால் சுவைகளை மாறுபட்டதாக ஆக்கிவிடுகின்றது.

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டேயுள்ளது. ஆகவே, மனிதனான பின் நாம் இதை மாற்றிக் கொள்ளும் நிலைகளுக்கு எதைச் செய்ய வேண்டும்?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகலோகத்திலிருந்து இன்று சொர்க்கலோகமான இந்த மனித உடலுக்குள் வந்துள்ளோம். இந்தச் சொர்க்கலோகத்திலிருந்து நமக்குச் சொர்க்கவாசலைக் காட்டும் நம் உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஆகவே, இதன் வழி நாம் சென்றோமென்றால் அருள் ஒளி பெற்ற சப்தரிஷி மண்டலங்களுடன் என்றும் ஒன்றி வாழலாம்.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனை கோடிச் செல்வம் இருப்பினும் நாம் எத்தனை நாள் வாழ்கின்றோம்? செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் உடல் நலம் இல்லை என்றால் செல்வத்தால் சந்தோஷப்படுகின்றோமா? இல்லை.., அப்பொழுதும் வேதனைப்படுகின்றோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டோமே என்ற வேதனையில் தான் நாம் வாடுகின்றோம். இனிமேல் என் பையன் என்ன செய்யப் போகின்றானோ..? என்ற இந்த அச்ச உணர்வுகள் வந்துவிடும்.

இப்படி அஞ்சும் உணர்வுகள் வந்துவிட்டால் பையனின் நினைவை எடுத்து வேதனையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

வளர்ந்து விட்டால் இறந்தபின் எந்தப் பையனைக் காக்க வேண்டும் என்ற எண்ணினோமோ இந்த வேதனையான உணர்வு கொண்டு பையனின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது ஆன்மா.

அவன் உடலுக்குள் சென்றபின் இப்பொழுது எதைப் புலம்புகின்றனரோ இதே நிலைகளுக்கு அவன் சிந்தனையைச் சீர்குலையச் செய்து அவனால் சம்பாரித்த சொத்தையும் அவன் பக்குவப்படுத்தும் நிலையில்லாது சிதறச் செய்யும்.

ஆகவே, பையனுக்கு எதைக் கொடுத்தல் வேண்டும்? அருள்ஞானத்தைக் கொடுத்தருளினால் அருள் ஒளி அவன் பெறவேண்டும் என்ற உணர்வை வளர்த்தால் நாம் அவன் உடலுக்குள் செல்ல மாட்டோம்.

அவன் நல்ல குணங்கள் பெறவேண்டும், சிந்திக்கும் திறன் அவனுக்குள் வரவேண்டும், அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவன் வாழ வேண்டும் என்ற இதைப் பருகி அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.

நான் சம்பாரித்தேன், எல்லோருக்கும் நன்மை செய்தேன் எனக்கு இப்படி வந்துவிட்டதே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

நன்மையின் நிலைகள் எளிதானது. ஆனால், ஒருவர் வேதனைப்பட்டு கஷ்டம் நஷ்டம் என்று சொல்லும் போது அது மிகவும் கடினமானது.

ஆனால், அதை நுகர்ந்தறிந்தபின் நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்னதான் உதவி செய்தாலும் பிணியிலிருந்து அவர் விடுபட அவருக்குள் எடுத்துக் கொண்ட நோயின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

நாம் மீண்டும் பாசத்துடன் அவருக்கு உதவி செய்கின்றோம்.

உதவி செய்தாலும் அவர் மடிந்தால் இவரின் எண்ணமே அதிகமாகின்றது. உடலை விட்டு வந்தபின் யார் அவருக்கு உதவி செய்தாரோ அவர் மேல் எண்ணமாகி அவர் உடலுக்குள் வந்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. அப்பொழுது அந்த உடலில் விளைந்த நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் வரத் தொடங்கும். அப்பொழுது நாம் வணங்கும் தெய்வங்களை எப்படி எண்ணுகின்றோம்?

நான் எல்லோருக்கும் நன்மை செய்தேனே. என்னை இப்படி நீ சோதிக்கின்றாயே. வணங்கி வரும் நல்ல குணங்களை நாம் பாதுகாப்பதற்கு மாறாக பழி தீர்க்கும் உணர்வுகளாகத் தான் நாம் மாற்றிவிடுகின்றோம்.

காரணம், நாம் பல நன்மைகள் செய்தாலும் பல கோடிச் சரீரங்களிலிருந்து தீமைகளை வென்று வென்றிடும் சக்தியாக மனித உடலுக்குள் 1008 குணங்கள் உருவாக்கப்பட்டது.

இதையெல்லாம் சேர்த்துத்தான் மனிதனாக உருவாகியது. ஆனால், மனிதனாக உருவாக்கிய இந்த நல்ல குணங்களைக் காக்க வேண்டும் அல்லவா..,?

இதற்காகத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நமக்குள் மறைந்த மனிதனாக உருவான நல்ல குணங்களை ஆலயங்களில் சிலையாக வடித்து வைத்தனர் ஞானிகள்.

அந்த நல்ல குணங்களைக் காத்திடும் முறைகளையும் வழிவகுத்து அமைத்தனர். அதை யாரும் சிந்திக்கவில்லை.

அபிஷேகமும் ஆராதனைகளையும் செய்தால் மந்திரங்களைச் சொன்னால் ஆண்டவன் நம்மைக் காப்பான் என்ற உணர்வுகளைத்தான் நமக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நன்மைகள் செய், தர்மத்தையும் தானத்தையும் செய்தால் இந்தத் தெய்வம் உனக்கு வழி காட்டும் என்பார்கள். தர்மங்களையும் தானங்களையும் நாம் செய்தாலும் “நம்முடைய நிதானத்தையே இழந்துவிடும்” நிலைகளைச் செய்துவிடுகின்றது.

ஆகவே, கையிலிருந்த செல்வம் போய்விட்டது. பிறருடைய கஷ்டங்களை எல்லாம் கேட்டறிந்தோம். அந்த உணர்வுகளே நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் நல்ல குணங்களை மாற்றிவிடுகின்றது. நுகர்ந்த உணர்வுகளோ நமக்குள் நோயாக மாறுகின்றது. நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்தத் தெய்வத்தையே சாடும் நிலைகளுக்கு வந்துவிடுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை அற்றுவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்குத்தான் அன்று இதைத் தெளிவாகக் காட்டினான் ஞானி.

ஆகவே, நம்முடைய பற்று எதன் மேல் வரவேண்டும்? மனித உடலிலிருந்து விடுதலையாகி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமான அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஒரு சூரியக் குடும்பம் உருவானபின் அதிலே உயிரணுக்கள் தோன்றினால் மற்ற அணுக்கள் உருவாக்கப்பட்டு மனிதனனான பின் சூரியன் எவ்வாறு ஒளிச்சுடராகின்றதோ மனிதனின் அறிவு அகண்ட அண்டத்தினையும் அறியும் அறிவாக வருகின்றது.

இந்த அறிவின் துணை கொண்டு நாம் இந்த வாழ்க்கையில் அருள் ஞானிகள் சென்ற பாதையில் நமக்குள் அருளாற்றலை வளர்த்தோம் என்றால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம்.

October 19, 2016

அணுக் கதிரியக்கங்களை ஒளிக்கதிராக மாற்றி "ஒளியாக மாறிய அகஸ்தியனின் ஆற்றலை எல்லோருக்கும் கிடைக்கச் செய்" என்றார் குருநாதர்

பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படி நட்சத்திரங்கள் தன் கதிரியக்கப் பொறிகளால் மற்றதை அடக்கித் தன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி அது தனக்குள் எப்படிக் கவர்ந்து கொள்கின்றது…?

நட்சத்திரங்கள் அவ்வாறு வெளிப்படுத்தும் உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வரப்படும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் எதிர்மறையாகத் தாக்கப்படும் பொழுது பூமிக்குள் எவ்வாறு மின்னல்கள் எவ்வாறு மின்னுகின்றது…?

அதே சமயம் இந்த மின்னல் இதனுடைய உணர்வுகள் மற்ற தாவர இனங்களில் இது கலந்திருந்தால் அந்தச் செடியை எப்படித் தாக்குகின்றது…?

அதே மின்னலின் உணர்வுகள் பூமிக்குள் ஊடுருவி நடுமையம் எவ்வாறு அடைகின்றது…? இதையெல்லாம் கண்டுணர்ந்தவன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்.

இப்பொழுது மனிதன் தன் கண்டுபிடிப்பால் இத்தகைய மின்னலின் ஒளிக் கதிர்கள் இந்த மண்ணில் மறைந்திருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு அதிலுள்ள கதிரியக்கப் பொறிகளை அணுவைப் பிளந்து அணுவைக் கூட்டி அணுகுண்டாக அதை உருவாக்கி அதை வெடிக்கச் செய்கின்றான்.

வெடிக்கச் செய்யப்படும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் மற்றொன்றோடு மோதப்படும் பொழுது இந்தக் கல்லுக்குள் இருக்கும் அதே கதிரியக்கப்பொறியுடன் அதனுடன் இணையும் போது இந்தக் கல்லே ஆவியாக மாற்றிவிடுகின்றது.

உலோகங்கள் எதுவானாலும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறியுடன் மோதப்படும் பொழுது தங்கமோ இரும்போ, மற்ற உலோகங்களும் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.

மாற்றிப் புயலைப் போலச் சுழன்று கொண்டு அதனின் உணர்வுகள் எதிலே சேர்கின்றதோ தன் இனத்தின் தன்மையைப் பெருக்கி அது தன் வளர்ச்சியிலே கொண்டு போகின்றது.

அதைப் போன்று அன்று அகஸ்தியன் விஷத்தின் தன்மையை, அணுவின் தன்மையைத் தனக்குள் அடக்கி, இருளைப் பிளந்து அதிலே நஞ்சின் தன்மையை நீக்கிவிட்டு நச்சுத் தன்மை அற்றதைத் தனக்குள் சேர்க்கின்றான்.

விஞ்ஞானியோ கதிரியக்கப்பொறிகள் தனக்குள் வந்தாலும் அதை வேகமாகச் செலுத்தச் செய்து இயந்திரங்களைத் துரித வேகத்தில் இயக்கும்படிச் செய்கின்றான்.

அதிலே வரும் கதிரியக்கப்பொறிகளை அடக்கச் செய்யும் ஹைட்ரஜனைக் கலந்து அதனுடைய வீரியத் தன்மையைக் குறைக்கும்படிச் செய்து இயந்திரங்களை இயக்குகின்றான் விஞ்ஞானி.

மெய்ஞானியான அகஸ்தியனோ தன் (தாய் கருவில்) சந்தர்ப்பத்தால் கிடைத்த இந்த உணர்வினை 27 நட்சத்திரங்கள் ஒளிக் கதிர்கள் வீசிய அந்த இயக்கச் சக்திகளைத் தன் பார்வையால் அதனின் செயலாக்கத்தை மாற்றி தன் உடலுக்குள் கதிரியக்கங்களாக மாற்றினான்.

அதனின் துணை கொண்டுதான் இந்தப் பூமியின் ஈர்ப்பின் நிலையும் அதனின் வளர்ச்சியின் தன்மையையும் தெளிவாக்கினான்.

மனிதன் இந்த உடலைவிட்டு அகன்றபின் இதிலே உள்ள நஞ்சின் தன்மையை ஒளிக் கதிராக மாற்றும் நிலை எது? என்று தன்னில் தான் முதன்முதலில் கண்டுணர்ந்தவன்தான் அகஸ்தியன்.

துருவத்திலிருந்து நம் பூமி கவர்வதை நேரடியாகவே அதனின் விஷத்தை ஒடுக்கினான். ஒளியின் கதிராக மாற்றும் உணர்வின் உடலாக மாற்றினான். அகஸ்தியன் இந்த உடலை விட்டுச் சென்றபின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் தன் வலிமையான எண்ணத்தால் கூர்மையான நிலைகள் கொண்டு விண்ணிலே பார்க்கப்படும் பொழுது தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிக் கதிராக மாற்றினான்.

அகஸ்தியன் பெற்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நான் எனது வலிமை கொண்டு உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து இதைப் பெறச் செய்தேன். பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டு எனக்குள் பெற்ற சக்தியை உனக்குள் கொடுத்து அதை எடுக்கச் செய்கின்றேன்.

நீ இதன் வழியில் இதைப் பெற்றால் உனக்குள் இதனின் நிலைகள் வரும். ஆனாலும், நீ ஒருவனே இந்தப் பலனைப் பெற முடிகின்றது.

ஆகவே, பலரும் இந்தப் பலனைப் பெறவேண்டும் என்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்? என்று உபதேசித்தருளினார்.

ஒவ்வொரு உடல்களிலேயும் நீ கண்ட உணர்வின் அந்த ஞான வித்தை விதைக்கப்படும் பொழுது மெய் உணர்வுகள் அங்கே பெருகி “விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி நீ செய்ய வேண்டும்” என்றார்.

இதை மற்ற மக்கள் மத்தியிலே பதியச் செய்யப்படும் பொழுது அவர்கள் எண்ணங்களிலும் இதைப் பெற ஏதுவாகும்.

அவர்களுக்குள் பதிந்த நிலைகள் வளர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையில் நீ எடுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தும் அவர்கள் பெறவேண்டும் என்று “நீ தவம் இருக்க வேண்டும்” என்றார் குருநாதர்.

நீ துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்கின்றாய்.., உன்னிலே விளைய வைத்தாய்.

ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அந்த வழியில் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நிலையைத் தவமிருக்கும்படிச் சொன்னார்.

அகஸ்தியனைப் போன்ற மெய்ஞானிகளாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகவேண்டும் என்ற ஆசையில் குருநாதர் காட்டிய வழியில் தவமிருப்பதே எனது வேலை.