
”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று நாம் எண்ணுதல் வேண்டும்
1.இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எது…? தெளிய வேண்டியது எது..?
2.நாம் அறிய வேண்டியது என்ன…? நாம் சேர்க்க வேண்டியது
என்ன…?
இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் அனைவரும் ஒளிச் சரீரம் பெற வேண்டும். முந்தைய செயல் இன்றைய மனித சரீரம்
இன்றைய செயல் நாளைய சரீரம்.
ஆக… பிறவி இல்லா
நிலை அடைதல் வேண்டும்…. ஒளியின் சரீரமாக நாம் மாற்றி அமைக்க
வேண்டும். எல்லோருக்கும் அந்த அருள் ஞானத்தைப் பெறச் செய்ய
வேண்டும்.
1.இன்று உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் மறந்து விடுங்கள்.
2.எப்படி இருந்தாலும் இந்த உடல் இருக்கப் போவதில்லை என்று உறுதியாகத்
தெரிகின்றது.
3.இந்த உடலுக்காக ஏன் கட்டி அழுக வேண்டும்…?
4.இந்த உடலை விட்டு விடலாம்… அடுத்து ஒளியின் உடலாக
நாம் பெற வேண்டும்.
கர்ப்பமுற்றிருக்கும் தாய் தன் குழந்தைக்காக எத்தனையோ வேதனைப்படுகின்றது. ஆனால் குழந்தை பிறக்க வேண்டும் என்று
மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.
அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் இணைக்கப்படும் பொழுது நாம் எப்படிச் செயல்பட
வேண்டும்…?
தன் உடலில் வரக்கூடிய சுமைகளை கர்ப்பிணி எவ்வாறு எண்ணுகின்றதோ அதைப் போன்று
1.அருள் ஒளியை நான் வளர்க்கின்றேன்
2.அருள் ஞானத்தைப் பெறப் போகின்றேன்.
3.அருள் வழியினை நான் பின்பற்றுகின்றேன் என்ற இந்த உணர்வில் மகிழ்ச்சி பெற
வேண்டும்.
குழந்தையின் மேல் உள்ள ஆசையில் கர்ப்பிணித்தாய் என்ன செய்கின்றது…?
தன் கணவனையும் பார்க்க வேண்டும்… குடும்பத்தையும் பார்க்க வேண்டும்…
தன்னையும் பார்க்க வேண்டும்… வீட்டு வேலையும் செய்ய வேண்டும்…! இத்தனை வேலைகளையும் அது செய்து கொண்டிருக்கின்றது. ஆக
மொத்தம் தன் இனமாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றது.
அருள் ஞானிகள் என்ன செய்கின்றார்கள்…?
இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையை ஒளியாகப் பெற்று “எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணுகின்றார்கள். அதை நாமும் நமக்குள் உருவாக்க
வேண்டும்.
கர்ப்பிணி தனக்கு வரக்கூடிய தீமைகளை அது எப்படி எண்ணுவதில்லையோ குழந்தை மீது
பற்று கொண்டு தன் குழந்தையை எண்ணிக் கொண்டிருக்கின்றதோ எத்தனையோ அவஸ்தைகள்
வந்தாலும் அதை எண்ணாமல் குழந்தையை வளர்க்கும் உணர்வையே தனக்குள் பெருக்கிக்
கொள்கின்றது.
அந்தக் கர்ப்பிணியைப் போன்று
1.நாம் அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சுமந்து
2.நமக்குள் வரக்கூடிய நஞ்சினை வளர்த்திடாது
3.நான் அருள் வழியில் வளர்கின்றேன்
4.அருள் ஒளி எனக்குள் உருவாகின்றது
5.அருள் ஞான அணுக்கள் எனக்குள் உருவாகின்றது
6.”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று
இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால் இது போன்று உருவானது தான் அந்தத் துருவ நட்சத்திரம். ரிஷியின் மகன் நாரதன்…! அது ஒளியின் கருவாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் நிலை பெற்றது.
மனிதன் என்ற நிலை அடைந்த பின் இருளை அகற்றும் உணர்வின் தன்மை நாரதனாக
அமைகின்றது ஆகவே அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் தனக்குள் உண்மைகளை உணர்த்தும்
அறிவின் தெளிவாக நமக்குள் ஊட்டும்.
இருளை அகற்றியவன் அவன் அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டப்படும் பொழுது இருள் சூழ்ந்த
நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றிய நிலைகளாக நம் எண்ணங்களுக்குள் வலு சேர்த்து
தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும். ஆகவே அந்த அருள் ஒளியைக் கூட்டும் நிலையை உருவாக்குங்கள்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.அருள் ஞானச் சுடராக அருள் ஒளி பெற்று அனைவரையும் அதைப் பெறச் செய்யக்கூடிய
சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நீங்கள் என்றும் இணைந்து வாழ வேண்டும்.
3.அருள் ஞானச் செல்வம் பெற்று அருள் வழியில் வாழ்க்கை நடந்து
4.அருள் சொல்களைச் சொல்லி அந்தத் தெய்வீகப் பண்புகள் உங்களுக்குள் வளர
வேண்டும் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.