ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2023

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…”

உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.

சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது... “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது...”

எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்...
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.

அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.

ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. ஆதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.

உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இட்த்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).

அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

இப்படிச் செய்யும் போது அந்த்த் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.

ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 - மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.