ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து தாவர இனச்சத்தில் வீழ்ந்த பின் கண்ணில்லாத புழுவாகத் தான் ஆரம்ப நிலையில் தோன்றுகிறது. பின் உணவுக்காக நகர்ந்து செல்லும் பொழுது அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால்
1.வேதனையான உணர்வுகளை நுகர்கின்றது
2.அந்த வேதனை உணர்வுகளே வலுவாகின்றது.
அப்போது துவாரகா யுகத்தில் உடலுக்குள் வேதனை என்ற உணர்ச்சிகள் தோன்றிய பின் “பார்க்க வேண்டும்…” என்ற புது உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
1.இரண்டு கல்லை எடுத்துத் தட்டினால் எப்படி ஒளிகள் வருகின்றதோ
2.அதே போல இந்த உணர்வுக்குள் ஆன பின் இதுவும் கரண்ட்…
3.எலெக்ட்ரிக் எலக்ட்ரான்… இந்த இரண்டும் எதிர்நிலையாக மோதப்படும் பொழுது
4.உடலுக்குள் உணர்ச்சி என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.
இப்படித் தோன்றும் உணர்வுகள் தான்
1.உயிரிலே மோதும் போது கண்களாக - அதே உணர்வுகள்
2.வெளிப்படும் வெளிச்சத்தை உள்ளுக்குள் சேர்த்து இரத்தத்தில் கலந்து
3.கண்கள் உருவாகும் தன்மைகளைக் கொண்டு வருகின்றது.
ஆக… கண்களால் புறத்திலே பார்க்கின்றோம்… கவர்ந்து உயிரால் நுகரப்படும் பொழுது… உயிரால் உணர்வுகளை அறிகின்றோம். இங்கே பார்க்கின்றோம்… அந்த உணர்வை அறிகின்றோம்.
ஆரம்பத்தில் கண்ணில்லாத பொழுது புழு அது தன் உணர்வால் தான் அறியத் தொடங்குகிறது. அதே உணர்வுகள் மோதப்படும் போது அறிய வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது “இரண்டும் கலந்து…” இந்த உணர்வுக்குள் கருத்தன்மை அடைந்து… உடலை விட்டு உயிரான்மா சென்றாலும் அதிலே உணர்வின் அணுக்கள் சேர்த்துக் கொண்டது கண்களாக உருவாகின்றது.
அதைத் தான் கண்ணன் துவாரகா யுகத்தில் பிறந்தான்…! என்று சாஸ்திரம் கூறுகிறது.
1.வாசுதேவன் - சுவாசித்த நிலைக்கும்
2.தேவகி - தான் பார்க்க வேண்டும் என்று உணர்வுகளுக்கும்
3.அந்த ரெண்டும் கலந்து அந்தத் தேவைக்கொப்பக் கண்கள் உருவாகின்றது.
இது நான்காவது பிரம்மம்…! ஒன்று எதன் வலிமை நமக்குள் வருகின்றதோ அந்த வலிமைக்குத்தக்க இதை மாற்றி அதன் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி உடல்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
உதாரணமாக ஒரு இரத்தக் கொதிப்பு வந்தவரை அடிக்கடி கண்களில் உற்றுப் பார்த்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தால் உடலில் எல்லா நிலைகளும் மாறி… அடுத்தாற்போல் உங்கள் உடலிலும் இரத்தக் கொதிப்பு வரத் தொடங்குகிறது.
ஆனால் “நான் எல்லாருக்கும் நன்மை தானே செய்தேன்…” என்று நாம் சொல்லலாம். ஆனால் நுகர்ந்தது இரத்தத்தில் கலந்த பின் இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது.
1.ஏனென்றால் நம் கண்கள் பிரம்மத்தைச் சார்ந்தது... ஆக உருவாக்கும் தன்மை பெற்றது.
2.எதை உற்றுப் பார்த்து அதைக் கவர்கின்றதோ அதனின் வலிமை இந்த உடலுக்குள் ஆன பின்
3.அதனின் தன்மை நமக்குள் அணுவாக உருவாக்கும் தன்மை பெற்றது.
சாஸ்திர விதிகள் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கடவுள் என்றால் என்ன…?
2.அவன் தனித்து ஒருவனாக இருக்கின்றானா...? இல்லை.
கண்கள் உருப் பெற்றபின் கண்ணின் நினைவைக் கொண்டு ஒன்றின் வலிமையின் உணர்வை நுகர்ந்த பின் உள் நின்று அது கடவுளாக உருவாக்குகின்றது. உள் நின்று அதன் உணர்வுகள் எதுவோ அதன் வழியே அது செயல்படுகின்றது.
1.நம் உயிர் மட்டும் கடவுள் அல்ல…
2.எதை நுகர்கின்றோமோ உள் நின்று அதன் உணர்வை அதுவே அதனதன் நிலைகள் வளர்க்கின்றது.
நமக்குள் எத்தனையோ கோடி கடவுள்கள் உண்டு… ஒருவன் அல்ல கடவுள்… ஒருவனே கடவுள் என்று சொல்வது “பிழை…”
ஆனால் அதே சமயத்தில் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் “அவன் இன்றி அணுவும் அசையாது…” உயிர் உடலில் இல்லை என்றால் உடலில் உள்ள இந்த அணுக்கள் அசையுமோ...? அசைய முடியாது.
உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் உடலான சிவம் சவமாகி விடுகிறது. சவமான பின்
1.இந்த உடலுக்குள் ஏற்கனவே எந்தெந்த வகையில் குணங்களை உருவாக்கிய அணுக்கள் இருக்கின்றதோ
2.அவை அனைத்தும் இந்த உடலையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது… புழுக்களாக மாறுகின்றது
முதலிலே ஜீவ அணுவாக இருக்கின்றது. உயிர் போய்விட்டால் அது எல்லாம் உயிரணுக்களாக மாறுகின்றது. எதன் சுவையோ அதன் உணர்ச்சி கொண்டு அதை உணவாக உட்கொள்ளும் அதன் தன்மை அடைகிறது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகிறது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… காரணம் “நம்மை நாம் அறிதல் வேண்டும்…”