உதாரணமாக நம்மைக் கோபித்தவனின் உணர்வை நாம் பதிவாக்கினால் அது ஒரு ஸ்டேசனாக அமைகின்றது
1.அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அங்கு இருக்கின்றது... நமது உணர்வும் அவனிடம் இருக்கின்றது.
2.என்னை இப்படி மோசம் செய்தான் என்று அவனை எண்ணினால் அந்த அலைகள் வரும்.
அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
அந்த உணர்ச்சிகள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது நம்மை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பித்து விடுகின்றோம் இதைப் போன்று உலகில் எத்தனையோ உணர்வுகள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் இயக்குகின்றது.
1.ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கின்றோம்… அது ஒரு ஸ்டேஷன் ஆக அமைந்து விடுகின்றது
2.இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… ஆத்திரமாக அது பதிவாகி ஒரு ஸ்டேஷன் ஆகிவிடுகிறது
3.ஒருவன் ஒருவனைக் கடுமையாக மிரட்டிச் செல்கின்றான்… அந்த அலைகள் இங்கே இருக்கின்றது… பதிவாகி ஒரு ஸ்டேஷனாக அமைகின்றது
4அந்த உடலிலிருந்து வந்த அலைகள் இங்கே இருக்கின்றது… அழிவதில்லை.
அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவரிடம் இருந்து வெளிவருகிறது. நமக்குள்ளும் பதிவு இருக்கிறது. அந்த அலைகளை நுகரச் செய்கிறது அது அழிவதில்லை.
ஆனால் அதை அழிக்க வேண்டுமா இல்லையா…!
இது எல்லாம் நமக்குள் இருக்கும் போது என்ன செய்கின்றது…? நாம் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்குகின்றது.
1.திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
2.அந்த நேரத்தில் எதை எடுத்தாலும் அந்த வேகம் வரும்.
பெண்கள் வேலை செய்யும் போது பார்க்கலாம். காயை நறுக்கி மெதுவாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள். சோர்வடைந்த நேரத்திலே காயைத் தூக்கி எறிவார்கள்.
அதே போன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தால் வித்தியாசமான உணர்வுகள் வந்தது என்றால் வடையை சட்டியிலே மெதுவாகப் போடுவதற்கு பதில் டப்… என்று போடுவார்கள்.
எண்ணெய் மேலே தெறித்துவிடும்.
இதை எல்லாம் செய்வது எது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் அதை அடக்கப் பழக வேண்டும் அப்போது அந்த உணர்வுகள் அது நம்மை இயக்காது.
ரேடியோ டிவி ஸ்டேஷன்களில் சந்தோஷமாக பேசியதை ஒலி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.
ஒரு சில நேரங்களில் காரசாரமான உணர்வின் உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் சேர்ந்து வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
ஏரியல் அல்லது ஆண்டென்னா மூலம் தான் வருகின்றது.
அலைவரிசை அதிகமாக வந்து விட்டதென்றால்… வரக்கூடிய அதிர்வு அதிகமான பின் ஜிர்… என்று சத்தம் போடும். அலைவரிசையில் வரும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும்
1.எலக்ட்ரிகல் என்று அந்த உணர்வலைகள் வரும்பொழுது எலக்ட்ரிக்கின் (நம் வீட்டில்) துணை கொண்டு தான் இயங்குகின்றது.
2.அதன் தொடர்புடைய ஏரியலின் நிலைகளில் வந்தாலும் இதனுடன் எர்த் (EARTH) ஆனபின்
3.இன்னொரு ஸ்டேசன் வலுவான நிலைகள் ஆன பின் அதை இழுத்து அந்த அதிர்வுகளையே (கர்… புர்… என்ற சப்தமாக) காட்டுகின்றது.
அதே போல் தான் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயக்கினாலும் ஒரு எதிர் உணர்வான எலக்ட்ரிக்கை அந்த எலக்ட்ரானிக் ஆக (உணர்ச்சியாக) மாற்றப்படும் போது
1.நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.நம்மை அறியாமலே தவறான சொற்களை இயக்கி
3.தவறான செயல்களைச் செய்ய வைக்கிறது… நம்மை இயக்க வைக்கின்றது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!