மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ அல்லது கோபப்படுத்தும் உணர்வுகளையோ கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகளை நுகர்ந்து கொண்டபின் பாடம் கற்பதிலே குறைபாடுகள் ஏற்படுகிறது.
பள்ளிக்குச் சென்று நன்கு படிக்க வேண்டும்… ஞானத்தை வளர்க்க வேண்டும்… ஞான சக்திகளை வளர்க்க வேண்டும்… என்று எண்ணினாலும் கூட யாரைப் பார்த்துக் கோபத்தை வளர்த்தார்களோ அதைச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்ச்சியின் வேகமே கலக்கின்றது.
ஆனால் பள்ளியில் பாட நிலைகளிலோ முக்கிய குறிப்புகள் இருக்கும். இந்தக் கோப உணர்ச்சிகளின் வேகம் இருக்கும் போது அந்தக் குறிப்புகளைப் பற்றிய சிந்தனைகள் வராது… படித்த நிலைதான் வரும்.
ஆகவே அந்தக் கோப உணர்வுடன் படித்த நிலைகள் வரப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.உணர்ச்சி வேகத்தால் படித்து மீண்டும் பாடத்தை நினைவுக்குக் கொண்டு வரலாம்.
2.ஆனால் மீண்டும் அவர்களைக் கண்டபின் உணர்ச்சிவசப்படும் அந்த ஞானம் தான் வரும்.
3.அதோடு சேர்ந்து இந்தக் கோபமும் வரும்
4.அந்தக் கோபத்தால் அவனை எப்படித் திட்டலாம்…? எப்படி விரட்டலாம்…? என்ற உணர்வுதான் வரும்.
அப்படிப்பட்ட உணர்வு வரப்படும் பொழுது
1.நல்லதுக்குள் இது கலந்து நல்லதற்றவையாக அதை மாற்றி…
2.கூர்மையாகச் செயல்படும் அறிவின் ஞானத்தை அந்த ஆயுதத்தை… நல்ல குணங்களை மழுங்கச் செய்து விடுகிறது
3.சிந்தனையற்ற நிலையில் போகின்றது. (புத்தி மழுங்கி விட்டது என்று சொல்கிறோம் அல்லவா..!)
எந்தச் செயலும் சரியாக வேலை செய்வதில்லை அதே சங்கட நிலைகளிலில் யாரிடமாவது ஒரு சொல்லைச் சொன்னாலும் அவர்களையும் அது சங்கடப்படச் செய்யும்.
இதைப் போன்ற நிலைகளை மாற்றிட நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி இந்த உணர்வுகளை எண்ணி எடுத்து உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
நாம் எந்ததெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாகிப் பிரம்மமாக உருவாகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக நம்மை இயக்குகிறது.
அதாவது…
1.எக்குணத்தின் அணுவின் தன்மை நமக்குள் பெறுகின்றதோ
2.அதன் வழிப்படி தான் அந்த அணு வளரத் தொடங்கும்.
ஒரு மரமோ செடியோ எந்த உணர்வின் தன்மை பெற்றதோ அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றினால்… அந்த வித்தின் உணர்வுகள் எதைச் சேர்த்ததோ… அந்த உணர்வுக்கொப்ப
1.மரத்தின் ரூபமும்
2.அதனுடைய மணமும் குணமும்
3.அதனுடைய வளர்ச்சியும் அடைகின்றது.
இதைப் போன்றுதான் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் சேர்க்கப்படும் பொழுது அந்தக் குணத்திற்கொப்ப அணுவின் தன்மை நம் உடலிலே வளர்ச்சி அடைகிறது.
அத்தகைய நல்லவைகளை நுகரப்படும் போது நம் உடல் நன்றாக இருக்கிறது… சந்தோஷமாக இருக்கின்றது… மகிழச் செய்கிறது…! நம் சொல்களும் இனிமையாக வருகின்றது. நம் சொல்லைக் கேட்போருக்கும் மகிழ்ச்சியாகி நம்முடன் இணைந்து வாழும் செயலாக அமைகின்றது.