ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2021

ஆத்ம சுத்தி மூலம் நாம் சக்தி பெறும் மார்க்கம்

 

ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று

1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகி விட்டால்
2.நமக்கு மட்டுமல்ல… மற்றவர்களுக்கும் சேர்கிறது.

ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.

இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.

இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி…! என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி… அங்கே விஷமாகி… அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.

நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம். எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.

அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியுட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.

கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும்… நன்றாக ஆகவேண்டும்…” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.

இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.

ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.

இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

1.“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள்
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்
3.திரும்பத் திரும்ப மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற நினைவுடன் ஏங்கி இருங்கள்
4.நினைக்கும் பொழுதெல்லாம்… “அந்த அலைகள் இழுக்கும்…”

மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மெதுவாகக் கண்களை மூடிக் கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

கண்ணுக்குள் இருந்து மெதுவாக உங்கள் உடலுக்குள் முழுமையாகச் செலுத்திக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினையுங்கள்.

இதுதான் ஆத்ம சுத்தி.