ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2020

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை நீக்குவதே… “நம்முடைய பழக்க வழக்கமாக” இருக்க வேண்டும்


குருநாதர் சொர்க்கம் அடைந்த வைகுண்ட ஏகாதசி நாளில் அவர் நினைவின் தன்மை கொண்டு வரும் பொழுது
1.அவர் எப்படி எல்லாம் பேரன்பைப் பெற்றாரோ பேரொளியாக ஆனாரோ
2.அதைப் போல நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள்.. இச்சா சக்தி…!

“தீமையை நீக்கிய குருவின் உணர்வில்…” இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டு அது கிரியையாகும். அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் செயலாக்குகின்றது.

பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி. அந்த ஞானத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் கொஞ்சம் பழகிக் கொண்டால் போதும்…!

உதாணமாக… சில விளையாட்டுகளை விளையாடுகின்றார்கள். கேரம் போர்ட் விளையாட்டில் அதற்கென்று ஒரு காயை வைத்துக் குறி பார்த்துத் தள்ளி மற்ற காய்களைத் தள்ளுகின்றார்கள்.

அது எல்லாம் அனுபவம் தான்…!

பழகாத நாம் அதைத் தட்டினால் எங்கேயோ போகின்றது. ஆனால் பழகியவர்கள் தட்டினால் ஒர் காயை வைத்து மூன்று நான்கு காயைக் கூடத் தள்ளிக் கொண்டு போகின்றது. ஏனென்றால் அவர்களுடைய அனுபவம் இது.

இதைப் போல்.. நம் அனுபவத்திலே எதைக் கொண்டு வர வேண்டும்…?

1.நாம் பல தவறுகள் செய்தாலும் அந்தத் தவறுகளைத் தள்ளி விட்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நல்ல ஞானத்தைப் பெருக்க வேண்டும்.

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் சிறிது காலம் அனுபவித்துப் பாருங்கள்.

சாமி செய்ய முடியாததை…
சாமியார் செய்ய முடியாததை..
கடவுள் செய்ய முடியாததை..
“உங்களுக்குள் கடவுளாக நின்று..” தீமைகளை அகற்றும் அருள் சக்தியாக இது விளையும்.

ஜோதிடம் செய்யாததை…
ஜாதகம் செய்யாததை… இதை எல்லாம்
இந்த உணர்வு உங்களுக்குள் செய்யும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் தீமையை நீக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

கஷ்டம் என்ற உணர்வை உங்களுக்குள் விடாதீர்கள்…!