உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து
அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின்
வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.
1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.
மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த
வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை
உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.
ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் - இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.
இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம்
எப்படி முயற்சிக்க வேண்டும்…?
அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்
கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை
போன்றும் இருத்தல் வேண்டும்.
ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான்
காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.
ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.
அது மட்டுமல்ல…!
1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை
(ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள
வேண்டும்.