எனது
தியானமே அனைவரும் இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான
வாழ்க்கை வாழும் அதிலிருந்து மெய் ஞான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தான்
1.இந்த
மனிதனின் கடைசி நிலையாக
2.என்றும்
பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.
இதனின் வழியை
நீங்கள் பெற்றால் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமையை நீக்கும்… இருளை
அகற்றி அருள் ஒளியின் சுடராக்கச் செய்யும். அத்தகைய மகிழ்ந்து வாழும் நிலையை
நீங்கள் உருவாக்க வேண்டும்…! என்று தான் இதை உபதேசிப்பது.
நான் (ஞானகுரு)
ஒருவனே செய்து… “நான் பெரியவன்…” நான் அப்படிப்பட்டவன்…!” என்ற நிலையை இல்லாது
1.நாம்
அனைவரும் சேர்ந்து அந்த உயர்ந்த நிலையைச் செய்ய முடியும்.
2.குரு
அருளைப் பெற்று எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
3.அகண்ட
அண்டத்தின் ஆற்றலைப் பெற்று இருளைப் போக்க முடியும்.
இதன் வழியில்
நீங்கள் எல்லாம் தயாரானால் கடுமையான வெயில் இருந்தாலும் மேகங்களைக் கூடச் செய்து சிறிது
நேரத்தில் இங்கே நிழலாகக் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். மழை வேண்டும் என்றால்
அதையும் வரவழைக்கலாம்.
ஏனென்றால்
அந்தக் காலங்களில் எல்லாம் குடங்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள். காட்டுக்குள்
போனவுடனே “மழை வேண்டும்” என்று வேண்டுவார்கள். திரும்ப வரும் பொழுது மழையை அழைத்து
வருவார்கள்.
இந்தப்
பழக்கம் எல்லாம் இந்தியாவில் உண்டு.
1.நம்பிக்கை
கொண்ட உணர்வுடன் தெய்வீகப் பண்புடன் பற்றுடன் வாழ்ந்த மக்கள்
2.பகைமை
என்ற நிலைகள் அகற்றி மனிதன் என்ற பண்புகள் மதித்து
3.அன்றைய ஞானிகள்
போல மக்களும் வாழ்ந்தனர்.
யதார்த்த
உள்ளத்துடன்… “நாம் வருண பகவானை அழைத்து வருவோம்… இனி நாம் பஞ்சத்தைப் போக்குவோம்…!”
என்று மழை நீர் இல்லை… என்றால் இவ்வாறு செய்வார்கள்.
குடத்தில்
தண்ணீருடன் சென்று வரும் பொழுது மழையை அழைத்து வருவார்கள். ஊர் எல்லைக்குள்
வருவதற்கு முன்னாடி நனைந்து கொண்டே வருவார்கள்.
இத்தகையை
பண்பு பெற்ற நாடு நம் நாடு…!
தென்னாடுடைய
சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று எந்நாட்டவரும் அந்த
அகஸ்தியன் வழியினைப் பின்பற்றினால் அந்த உணர்வின் தன்மையை இரையாக்கி உயிருடன்
ஒன்றிய ஒளியின் நிலையாக உருவாக்க முடியும்.
1.இப்பொழுது
நாம் வாழும் இந்த உடல் நமது அல்ல
2.உயிரால் உருவாக்கப்பட்ட
உடல் என்ற இந்த நிலையை நாம் தெரிந்து கொண்ட பின்
3.ஆறாவது அறிவின்
தன்மை கொண்டு மனித வாழ்க்கையை வென்றிட்ட அருள் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
4.இந்த மனித
வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிட்டு நஞ்சை வெல்லும் உணர்வை நமக்குள் வளர்த்து
5.என்றும் பிறவியில்லா
நிலையை அடைய முடியும்.