தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம்.
செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை
வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?
என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக்
காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள்
திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.
1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக
வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும்
வேதனைதான் அதிகமாகின்றது.
வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம்
எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால்
அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?
செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க
வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள்
நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.
இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக்
கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.
அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த
குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து
நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?
நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்
நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத்
துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க
முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம்
செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.
குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின்
அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,,
அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு
நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த
அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)