ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2020

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உடலான காட்டிற்குள் செலுத்தி அதைத் தபோவனமாக மாற்றுங்கள்…!


தன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி முதல் மனிதனாக ஒளியாக ஆனான்.

அவனைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் சக்த்யினை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

ஏனென்றால் அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அந்தச் சக்திகளை எப்படிப் பெற்றார்கள்..? என்று குரு எனக்கு உபதேசித்தார்.

சாதாரணமாக இல்லை…! நேரடிப் பார்வையில் அவர்களின் உணர்வின் இயக்கங்கள் எப்படி என்றும் உணர்வுகள் ஒளியாக மாறுவதையும் அதனுடைய வளர்ச்சிகளையும் காணும்படிச் செய்தார்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவான நிலையில் எத்தகையை தீமை வந்தாலும்
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவருங்கள்.
3.கவர்ந்ததை உங்கள் இரத்தநாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.
4.பகைமை ஊட்டும் உணர்ச்சிகள் அனைத்தும் அது ஒடுங்கும்.

இராமன் காட்டுக்குள் செல்லப்படும் பொழுது குகனை நட்பாக்கினான் என்று காவியத்திலே உண்டு. அதனுடைய விளக்கம் என்ன…?

நம் உடலுக்குள் பலவிதமான உணர்வுகள் உண்டு. நம் உடலே பெரும் காடு தான்.

காடுகளில் விளைந்ததை உணவாக உட்கொண்ட உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்று… ஒன்றின் உணர்வுகள் ஒன்றி…. ஒன்றின் நிலைகள் மாறி மாறிப் பல உடல்கள் பெற்று இன்று மனிதனாக உருவாக்கிய காடு தான் இது…!

இதற்குள் விஷப் பாம்புகளும் உண்டு தேளும் உண்டு மற்ற எத்தனையோ இனங்கள் உண்டு. ஆனால் இதிலே எதனை வளர்க்கின்றோமோ அதனின் நிலைகள் இங்கே ஓங்கி வளர்ந்து விடுகின்றது.

1.இப்படி இந்த உடல் என்ற காட்டுக்குள் ஏற்படும் பகைமைகளிலிருந்து
2.எடுத்துக் கொண்ட உனர்வுகள் விஷத் தன்மை கொண்டால்
3.நம் உறுப்புகளைச் சீரழிக்கின்றது… நம்மை மாற்றுகின்றது… மற்றதையும் அழிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
1.உடலுக்குள் இருக்கும் (காட்டுக்குள்) இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஓட்டங்கள் செல்லும் பொழுது
3.”விஷத் தன்மை கொண்ட உணர்வுகள்” இதை நுகர்ந்த பின் அது அனைத்துமே ஒடுங்குகின்றது.

ஆகவே மாறுபட்ட உணர்ச்சியைத் தூண்டும் நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கி அதைப் பெறுங்கள். உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த உணர்வின் துணை கொண்டு
2.நீங்கள் ஈர்க்கும் பக்குவத்திற்கு வாருங்கள்.

ஏனென்றால் அவர் எனக்கு உபதேசித்தார் அந்த அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தை உற்று நோக்கும்படி செய்தார்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தேன். எனக்குள் இணைத்தேன்…. வளர்த்துக் கொண்டேன்…!

அதன் உணர்வின் துணை கொண்டு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன். பதிவு செய்தை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். தீமைகளை வென்றிட்ட அருள் ஞானிகளின்ன் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையே இது தான் தியானம் என்பது.

சகஜ வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ. பகைமை கொண்ட உனர்வுகளை நுகர்கின்றோம். பகைமை என்று அறிகின்றோம்…! ஆனால்
1.அதை எல்லாம் நம் உயிரோ அந்த உணர்வை எல்லாம்
2.உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது ஓம் நமச்சிவாய என்று...!

இரத்தத்தில் கலக்கும் அதனின் வீரியத்தைக் குறைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று “துரித நிலைகளில் கொண்டு” செலுத்தப் பழகுங்கள். தீமைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

1.தீமையைச் செயலாக்கும் அந்த உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி
2.இந்த வீரியம் அதை அடக்கி உயிருடன் கலந்து
3.வீரியமாக இருக்கும் நஞ்சை வளர்க்கும் அந்த அணுக்களைத் தடைப்படுத்துகின்றது.

இரத்தநாளங்களில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளை இப்படித் தடைப்படுத்தினால்
1.உங்கள் உடலில் உள்ள அனைத்து நிலைகளையும் நண்பனாக்கும் நிலையும்
2.பகைமையற்ற உடலாகவும்.. பகைமை உணர்வுகள் தோன்றாது பாதுகாக்கவும் இது உதவும்.