ஆயிரம் தான் சொல்லுங்கள்...! மீண்டும் ஜாதகத்தை
தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா...? கெட்ட நேரம் வருகின்றதா...? என்ற நிலைகளைத்தான்
தேடிச் செல்ல முடியும்.
நல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது...!
1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத்
தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத்
தூண்டிக் கொண்டிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்
கொண்டிருக்கும்
4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்
5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும்
நிலைகளாகத் தான் வரும்.
மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக
இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான்
செல்ல நேரும்.
ஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப்
போக்க வேண்டுமே தவிர இருளை சேர்த்திடுதல் கூடாது.
மனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக்
காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.
நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள்
மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின்
தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.
1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட
உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும்
நிலைகள் பெறவேண்டும்
3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.
அதனை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று
தான் இதைச் சொல்கின்றேன்.
செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு
செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக
உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின்
மலமே உடலாக உருவானது.
ஆக... இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில்
வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு... வாடிய உணர்வுகள் பலவும் உண்டு
அருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு
கொண்டு... அவருடன் நிலை கொண்டு... அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின்
தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.
விவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை
வளமாக வளர்க்க... எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப்
புது வித்துகளை உருவாக்குகின்றனரோ... இதைப்போலத்தான்
1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த
உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.
நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின்
நிலைகளை அறிந்து... அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து... தீமைகளைப்
பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி
இன்றும் ஒளியாக இருக்கின்றார்.
1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின்
உணர்வுகளை நினைவு கொண்டு
2.உங்களுடன் இணைத்து... இணைத்து... இணைத்து...
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக
இணைப்பதே என்னுடைய வேலை...!