மனிதனின் வாழ்க்கையில் வேதனை… சலிப்பு… என்ற நிலையில் கஷ்டம்… நஷ்டம்… என்று
பேசிக் கொண்டிருந்து அதன் உணர்வையே நாம் செயலாக்கத் தொடங்கினால் கேட்போரையும் அது சோர்வடையச்
செய்கிறோம்.
அவர்களுக்கும் நம்மை அறியாது விஷத்தை ஊட்டுகின்றோம். அறியாமலே கஷ்டங்கள் அவர்களுக்குள்ளும்
ஊடுருவுகின்றது.
அவ்வாறு ஆகாதபடி தடுக்க.. நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள்
ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கையை எப்படி அருள் வழியில் நடத்த
வேண்டும்…? என்று உணர்ந்து அதனைக் கடைப்பிடித்து வாருங்கள்.
அனைவரும் வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை நீக்கிடும் சக்தியைப் பெற்று பார்வையால் சொல்லால்
செயலால் எல்லாவற்றையும் நல்லதாக்க வேண்டும்.
இப்படிக் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு
1.“அனைவரும் உயர வேண்டும்…” என்ற நிலையில்
2.தாய்மார்கள் இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் அந்த உயர்ந்த சக்திகளைப் பரப்பிப் பழகுங்கள். உலக
மக்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பெற்ற அருள் ஞானத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
வெறுமனே சொல்லக் கூடாது… சாமியைப் (குரு) பார்த்துப் புகழ் பாடுவது கூடாது…!
உங்களுக்குள் அருள் சக்தியை வளர்க்கப்பட்டு அடுத்தவர்களிடம் அதைப் பேசும்
பொழுது நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்டு நலமானால் அதை எடுத்துச் சொல்லலாம்.
இதைப் போன்ற நிலைகளை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும்.
1.நம் பார்வை அவர்களின் குறைகளை நீக்கியது
2.நம் பார்வை அவர்களை உயர்த்தியது
3.நம் பார்வை நோய்களை நீக்கியது
4.நம் பார்வையும் சொல்லும் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட உதவியது என்ற
5.இந்த உயர்ந்ததைக் கேட்டு மகிழ வேண்டும்… இந்த நிலை நமக்குள் வர வேண்டும்.
உதாரணமாக ஒரு கடும் நோயாக இருந்தாலும் கூட கணவனும் மனைவியும் இதைப் போன்று
செய்து சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ கேன்சரோ இதைப் போன்ற நிலைகளை மாற்றி
அமைக்கும் சக்தி கொண்டு செயல்படுத்த வேண்டும்.
கணவன் மனைவி இருவருமே இந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டால்
1.இந்த உயர்ந்த சக்தி கொண்டு உயர்ந்த சக்தி வளர
2.தீமை என்ற நிலை அகல
3.அருள் ஞானம் வளர… மெய் பொருள் காணும் சக்தி நமக்குள் கூடி
3.உலக மக்களையும் மெய்ப் பொருள் காணும்படிச் செய்ய முடியும்.
ஆக… உங்கள் உணர்வுகள் அனைவரையும் மகிழச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அதைக்
கண்டு நீங்கள் மகிழ்ந்திட வேண்டும்.
ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் ஐயோ… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே…!
என்று மற்றவரையும் சோர்வடையச் செய்து… அவர்களுடன் இதை நாம் பகிர்ந்து கொண்டு… மீண்டும்
மீண்டும் சோர்வை வளர்த்து… நோயை வளர்ப்பதல்ல…! (இது மிகவும் முக்கியமானது)
ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளைப் பெற்று நமக்குள் இருக்கும் இருளை அகற்றி மெய்ப்
பொருள் காணும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குரு அருள் துணை கொண்டு இந்தத் தியானத்தின் மூலம் வலு பெற்ற நிலையில் நீங்கள் “துணிவுடன்”
சொல்லலாம்.
உங்களுக்கு ஆஸ்த்மா நோய் இல்லை..
சர்க்கரை நோய் இல்லை…
இரத்தக் கொதிப்பு இல்லை
கேன்சர் இல்லை…
இருதய நோய் இல்லை என்று சொல்லலாம்…!
உங்கள் வாக்கு அங்கே பலிதமாகும்…!