ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2020

உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்ற நாம் செய்ய வேண்டிய பயிற்சி


இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.

அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.

அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

ஏனென்றால்…
1.காற்றில் இருக்கும் அதே விஷமான உணர்வுகள்
2.எதனுடன் கலந்து எதை நம்முடன் சேர்க்கின்றதோ
3.அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.