மெய்ஞானியின் உணர்வை
- குருவை நீங்கள் எண்ணும் பொழுது
இந்த உணர்வு குருவாக வந்து
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறு வந்தாலும்
அதைப் பிளக்கும் நிலை உங்களுக்குள் வரவேண்டும்
என்பதற்குத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.
குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) எவ்வாறு
தீமைகளிலிருந்து அந்த இருளைப் போக்கி, உணர்வின் தன்மையை
ஒளியாக மாற்றிச் சென்றாரோ அந்த குரு
அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்
என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.
குருநாதர் எனக்குள் எவ்வாறு தெளியச் செய்தாரோ,
அதைப் போல உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள்
மீள்வதற்கும்
தீமைகள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து
நீங்களே அறிந்திடும் நிலையாகவும்,
நீங்களே அந்தத் தீமைகளை
அகற்றிடும் நிலையாகவும்
நீங்கள் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் உங்களையறியாது
வரும் தீமைகளை நீங்கள் நீக்கிடும் நிலை வலு பெருகும் பொழுது, உங்களில் எமது குருவை (ஈஸ்வராய குருதேவரை) நான் காணமுடியும்.
ஏனென்றால், தீமைய அகற்றிய அந்த உணர்வின் ஆற்றல்
உங்களுக்குள் விளைகின்றது.
நமது குருநாதர் எமக்கு அன்று காட்டிய நிலைகளை உங்களிடம்
நான் காணும் பொழுது, உங்கள் எண்ணத்தால் தீமைகளை
அகற்ற முடிந்தது என்ற எண்ணங்கள் வந்து
தீமைகளை அகற்றிய மகிழ்ச்சியான சொல்களை
நீங்கள் சொல்லும் பொழுது
குரு அருளை நான் அங்கே பெறுகின்றேன்.
மகிழ்ச்சி பொங்கும் உணர்வைக் கொண்டு,
என்னையறியாது வந்த தீமைகளை அகற்றினேன் என்ற அந்த உணர்வின் தன்மையை என்று நீங்கள்
சொல்கின்றீர்களோ அங்கே குரு
அருளை உங்களிடமிருந்து நான் பெறுகின்றேன்.
ஏனென்றால், குருவின் அருள் உணர்வுகள் உங்களுக்குள்
பதிவாகின்றது. பதிந்த உணர்வுகள் உங்களை
அறியாது வந்த தீமைகளை நீக்குகின்றது. உங்களுக்குள் இருக்கும் நல்ல
உணர்வை வெளிப்படுத்துகின்றது.
குருநாதர் கண்ட பேரான்ந்த நிலையான ஒளியின் சரீரத்தை இருளைப்
போக்கிடும் உணர்வு அவருக்குள் விளைந்தது. அதைப் போன்று,
எனக்குள்ளும் அந்தத் தெளிந்திடும் நிலையாக உருவாகும் என்று அவர் அன்று அதைக்
காட்டினார்.
அந்த நிலைகளை உங்களிலே காண இந்தத் தெளிந்திடும் நிலையை
அந்த ஆற்றல்கள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று
மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை
யாம் உணர்த்திக் கொண்டு
வருகின்றோம்.