சினேகிதரிடம் அதிகமாகப் பழகி இருப்பார்கள். அவரிடம் நட்பாக
இருக்கும் பொழுது வீட்டிலோ அல்லது வேறொரு இடத்திலோ வெறுப்பாக இருந்தது என்றால்
இரண்டு பேருக்கும் கடுமையான சண்டை ஆகிவிடும்.
தமாஷாக விளையாடுபவர்கள் கதி, கடைசியில் பெரும் எதிரியாக
மாறிவிடுவார்கள்.
விளையாட்டு என்றைக்குமே கூடாது. கிண்டல் பேசுவதோ கேலி பேசுவதோ கூடாது.
ஒரு அர்த்தத்துடன் இந்த மாதிரி நன்றாக இருக்கும் என்று சொன்னோம் என்றால் எதையும் மாற்றி அமைக்கலாம்.
எப்பொழுதுமே நமது தியானவழி அன்பர்கள் கேலி பேசுவதோ, கிண்டல்
செய்வதோ, சிரிக்க வைக்கவோ, அந்த வழிக்குப் போகக் கூடாது.
ஏனென்றால் இதே உணர்வுகள் மற்றவர்களிடம் பேசும்பொழுது
எதிரியாக மாற்றிவிடும். இதே உணர்வுகள் சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.
யாராவது வேதனையாக இருப்பார்கள் நாம் அவர்களைக் கிண்டல்
செய்வோம். உடனே நம்மிடம் சீறிப் பாய்வார்கள்.
1.இப்படி நம்மை அறியாமலேயே
2.நம் உணர்வுகளை நமக்குள் எதிரியாக மாற்றி,
3.கடும் பகையை உண்டாக்கி சிந்தனையைக் குறையச் செய்து
4.அசுர உணர்வுகளை வளர்க்கச் செய்து,
5.உடலில் கடுமையான நோயாகி உடலைவிட்டுப் போகின்றோம்.
இந்த மாதிரி நேரங்களில் அது வளராது தடுக்க வேண்டும்.
அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்வது. எந்த
நிமிடத்திலும் இந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்பதற்குத்தான் ஆழமாக உபதேசித்து
அந்த துருவ
நட்சத்திரத்துடன் இணையச் செய்து
உங்களுக்குள்
ஊழ்வினையாக பதிவு செய்வது.